தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday, 6 March 2016

அரசியல் மேடை - 9

புதிய கூட்டணி அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், "அப்துல் கலாம் வி.ஐ.பி. கட்சி" என்னும் புதிய கட்சியைத்  தொடங்கியுள்ளார். வெவ்வேறு துறைகளில் உள்ளவர்கள் அரசியலுக்கு வருவது நல்லதுதான். ஊழல் ஒழிப்பு எங்கள் இலக்குகளில் ஒன்று என்று கூறியுள்ளார். அதுவும் நல்லதுதான். இப்போது அப்படிக் கூறுவது ஒரு 'நாகரிகமாக' (fashion)  ஆகிவிட்டது என்பது வேறு. பொன்ராஜ் கூறுவது உண்மையாக இருக்கட்டும்.


ஆனால் அவரைப் பற்றி ஒரு செய்தி அல்லது வதந்தி உலவுகின்றது. அவர் பெங்களூரு சாமியார் ரவிசங்கருடன் நெருங்கிய தொடர்பு உடையவர் என்கின்றனர். சாமியார் தன்னுடைய  பார்ப்பனச் சாதிப் பற்றைத்  துறக்காதவர் என்பது உலகறிந்த செய்தி. அவர் பிறந்தது நம் ஊர் பாபனாசத்தில்தான்.  பிறகு பெங்களூருவில் போய்  ஆசிரமம் அமைத்தார். சோ சாமி, சு.சாமி, ரவிசங்கர் சாமி எல்லோரும் ஒருவரோடு ஒருவர் தொடர்புடைய சாமிகள்.

எனவே பொன்ராஜ் போன்றவர்கள் அந்தச் சாமிகளோடு தொடர்பற்றவராக இருந்தால் நல்லது. இந்த வாரம் ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள அவரது பேட்டியிலும், 'உங்களுக்கு ஆர்.எஸ்.எஸ்.உடன் தொடர்பு உண்டா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அவர் இல்லை என்று மறுத்துள்ளார். நாமும் நம் சந்தேகத்தைச் சொல்லி வைத்தோம்.

இப்போது அவர் புதிய கூட்டணி ஒன்றையும் அமைத்துள்ளார். தமிழருவி மணியன் தலைமையிலான காந்திய மக்கள் இயக்கம் 25 இடங்களிலும், அப்துல்  கலாம் கட்சி  மீதமுள்ள 209 இடங்களிலும் போட்டியிடப் போவதாக அறிவிப்பு வந்துள்ளது.

தமிழருவி மணியன் தனி வாழ்வில் நேர்மையானவர்தான். ஆனால் திராவிட இயக்க எதிர்ப்பு அவர் ரத்தத்தில் ஊறியது. 'கிங்' ஆளுவதை விட குவின் ஆளுவதை விரும்புபவர். (குவீனுக்கும், திராவிட இயக்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் அவர் ஜெயலலிதா ஆட்சியை மறைமுகமாக ஆதரிக்கின்றார்).  அவரோடு பொன்ராஜ் கூட்டணி வைப்பது மீண்டும்  ஐயத்தை உருவாக்குகிறது.

பார்ப்பனர்களின் ஒரே நோக்கம், திராவிட இயக்கத்தை அழிப்பதும், அதன் முதல் கட்டமாகத் தி.மு.க. வை வீழ்த்துவதும்தான். அதற்குப் பொன்ராஜ் போன்றவர்கள் காய்களாகப் பயன்படுத்தப் படுகின்றனரோ என்ற எண்ணம் எழவே செய்கிறது!   


8 comments:

 1. ஐயா, திமுக-வே ஊழலுக்கு எதிரான பிரச்சாரம் செய்யும் இவ்வேளையில் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க அனைவரும் தார்மிக அந்தஸ்து பெற்று விடுவார்கள். எடியூரப்பவே இப்போது ஊழலுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றாராம். திமுக என்ற அமைப்பு உள்ளவரை திராவிட கொள்கைகளை குழி தோண்டி புதைக்க வேறு எதிரி தேவையில்லை. அதிமுகவில் தொண்டர்கள் சுய மரியாதையை இழக்க நிர்பந்த படுத்துகிறார்கள். ஆனால் திமுகவிலோ அதை பெரும் தொண்டர்கள் விருப்பத்தோடு இழந்து விடுகிறார்கள். ஏன் திராவிட இயக்கமே தலைமையின் தவறை சுட்டி காட்டவோ விமர்சிக்கவோ முயற்சிப்பதில்லை.
  திமுகவின் அனைத்து கட்ட தலைவர்களும் பொதுமக்களிடம் இருந்து எட்டா தூரத்திலே உள்ளனர். அனைத்து பதவிகளுக்குமே வாரிசுகளே முன்னிறுத்த படுகின்றனர். எனவே இனி கொள்கை தொண்டர்களுக்கு கட்சியில் கடைசி வரை தொண்டர்களாகவே இருக்கும் சூழ்நிலை தான் நிலவுகிறது. கட்சியின் பேட்சாளர்களோ கொள்கைகளையோ கோட்பாடுகளையோ முன்னிறுத்தி பேசுவதே இல்லை. தனி மனித விமர்சனமும் இல்லையெனில் தனி மனித துதி பாடல்களும் தான் உள்ளது. ஆனால் அதிமுகவோடு ஒப்பிடும் போது ஓரளவுக்கு பரவாயில்லை. அங்கு அம்மா அம்மா என்று ஒற்றை புலம்பல் என்றால், இங்கு தலைவர் , தளபதி என்ற இரட்டை புலம்பல்கள். இன்னும் சில வருடங்களில் இங்கு உதயநிதி என்ற பெயர் மட்டும் தான் இனைய இயலும். இவ்வளவு பெரிய கொள்கை கட்சியில் வெறும் 2 பெயர்கள் தான் உள்ளனவா?? உண்மை பல வேளை கசக்க தான் செய்யும்..

  ReplyDelete
 2. Correctly judged about the new political seed

  ReplyDelete
 3. திமுக வை வீழ்த்தி விட்டால் மற்ற திராவிட இயக்கங்கள் சர சர வென்று சரிந்து விடும் தமிழ்நாடு ஆரிய கோட்டையாக ஆக்கி விடலாம் என்று தெரிந்து தான் எதிர்ப்பு அணிகளை அமைக்கிறார்கள்
  திமுக வை ஆதரித்து வெற்றி பெற செய்தால் தான் தமிழ்நாட்டில் தமிழினம் தழைக்கும் இல்லையேல் ஆரிய வலையில் சிக்கிக் கொள்ளும். மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்

  ReplyDelete
 4. Respected Subavee Sir! People like you who always think twice before expressing anything and not just speculating rumours, should not just talk like this. Especially the king and queen comment about Gandhia Makkal Iyakkam leader, the purest politician of contemporary TN - #ThamizharuManiyan Ayya. Just because you are DMK loyalist, I didn't expect from you that you will label even the uncorrupted leaders with your wild imaginations. I request you to please refrain from doing these kind wild allegations without any logical proofs.Dravidian party was started with some good principles but has got completely forgetten over the years. DMK/ADMK are deserved to be eliminated if they are not inline with their own fundamental principles.

  ReplyDelete
 5. ஊழல்,மாற்றம், என்ற வார்த்தைகள் இன்றைய தமிழக. அரசியலில் இப்போது அதிகம் பயன்படுத்தபடுகிறது!! திமுகழகம் மீது அருவிகள் வசைமாரி பொழிவதை இந்த பார்பன ஊடங்கள் பெரிதுபடுத்துவதும் திராவிட இயக்கத்தை வீழ்த்தவேண்டும் என்ற பாசிச சிந்தனையே தவிர வேறு ஒன்றும் இல்லை!!

  ReplyDelete
 6. அப்துல்கலாமுக்கு இறுதிமரியாதையை முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் சென்று செய்யாததால் கோபத்திலுள்ள பெரும்பான்மையான அப்துல் கலாமின் ஆதரவு இளைய சமுதாய வோட்டுக்களெல்லாம் நிச்சயம் அ திமுகவுக்கு விழாது என்று நினைத்து சுபவீயின் இந்த அரசியல் மேடை -9 கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி ரவிசங்கர்ஜி மூலம் பொன்ராஜை வைத்து புதிய கட்சி தொடங்குவதன் மூலம் திமுக ஆதரவு வோட்டுக்களை சிதறடிக்க இப்படியும் ஒரு திட்டமாக இருக்கலாம் திடு திப்பென்று பொன்ராஜ் கட்சியை தொடங்குவதிலிருந்தே சந்தேகம் எழத்தான் செய்கிறது அதிலும் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலம் தெரிகிறது ரவிசங்கர்ஜியுடன் நல்ல நட்புடன் உள்ள முக ஸ்டாலின் தான் இதுபற்றி யோசிக்கவேண்டும்

  ReplyDelete
 7. Dravidian movement is in the blood of every Tamilian no power on earth can destroy the light lit by than th ai Periyar

  ReplyDelete
 8. மறைந்த மதிப்புக்கு உரிய ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் ஒரு அரசியல் வாதி அல்ல என்றுதான் இதுவரை கருதப்பட்டு வந்துள்ளது. ஆனால் அவர் ஒரு அரசியல்வாதி என்பதை பொன்ராஜ் நிருபிக்க முயல்கிறார் என்று கருதுகிறேன்.
  ஒரு ஜனாதிபதியாக இருந்தவர் குஜராத் கலவரத்தால் பாதிக்கபட்ட தனது மக்களுக்காக ஒரு நாளும் குரல் எழுப்பியவர் அல்ல. அந்த நேரங்களில் அவர் என்ன வீணையா வாசித்து கொண்டிருந்தார்? (அவருக்கு வீணை வாசிகக் தெரியும்)
  ஒரு சிந்தனாவாதி என அறியப்படும் தலைவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஏதேனும் குரல் எழுப்பி இருக்கிறாரா என்பது தெரியவில்லை?

  தெற்காசியாவில் அணு ஆயுத போட்டியை முன்னோக்கி நகர்த்தியதில் அவருக்கு பங்கு இருக்கிறதா தெரியவில்லை?
  சோனியா அம்மையார் பிரதமர் ஆவதை அவர் தடுத்ததாக கூறபடுவது உண்மையா? அப்படியாயின் அது ஏன்?
  குஜராத் கலவரம் நடந்து கொண்டிருந்த காலங்களில் அவர் அது பற்றி எதாவது கவலையாவது தெரிவித்திருக்கிறாரா?
  எப்படி பார்த்தாலும் பாஜகவின் good book இல் அவர் எப்போதும இருந்திருக்கிறார்.
  அதிலும் அவர் பாஜகவின் இஷ்ட தேவதையாக இருக்கிறார். அவர்களுக்கு மட்டுமே!

  அதனால் அவரின் பெயரை சங்பரிவார் பயன்படுத்தவதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் அதில் வெற்றி பெறமாட்டார்கள்.

  ReplyDelete