தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday 10 April 2016

அரசியல் மேடை - 23

வைகோ பேச்சும் மன்னிப்பும்

சில நாள்களுக்கு முன்பு ஊடகவியலாளர் சந்திப்பில், மதிமுக வின் பொதுச்செயலாளர் வைகோ, தலைவர் கலைஞர் அவர்கள் பிறந்த சாதியைக் குறிப்பிட்டு, மிகத் தரம்தாழ்ந்தும் தன்நிலை மறந்தும் பேசினார். அடுத்த சில மணி நேரங்களிலேயே அது குறித்துத் தன் மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டார்.

உடனே அவருக்குப் பாவமன்னிப்பு வழங்கி விட்டனர், படித்தவர்கள் பலர். " அடடா என்ன மாதிரியான மன்னிப்பு அது..... ஏனோ தானோ என்று கூறப்பட்ட ஒன்றில்லை, விரிவான மன்னிப்பு அது" என்று வைகோ வைச்சிலாகித்தனர். தொலைக்காட்சி யில் உரையாடிய தோழர் அருணன் ," வைகோ வுக்கும் பேசிய பின் எவ்வளவு மன உளைச்சல் இருந்திருக்கும்" என்று எண்ணிக்கவலைப் பட்டார்.இதனால் "பேசு பொருள்" மாறிவிட்டதே என்றும் வருந்தினார்.
நமக்கும் கூட ஒரு அய்யம் ஏற்பட்டது. எதனால் வைகோ திடீரென்று "மனம் திருந்திய மைந்தர்" ஆனார் என்று எண்ண வேண்டியதாயிற்று.
மற்ற நேரங்களில் எல்லாம் வழக்குப் போட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லும் வழக்கமுடையவர் அவர். யார் யார் பெயரிலோ குற்றச்சாட்டு, அவர் மூன்று கோடி வாங்கிவிட்டார், இவர் ஆறு கோடி வாங்கி விட்டார் என்று மனம் போன போக்கில் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதும், ஆதாரம் எங்கே என்று கேட்டால், ' நீதி மன்றத்தில் கூறுகிறேன்' என்பதும் அவருடைய 'அஞ்சாத சிங்கம் அண்ணன் வைகோ' என்னும் பிம்பத்தை கட்டி எழுப்ப முயன்றது.
இதே வேளையில் உங்களுக்கு இவ்வளவு கோடி கை மாறியுள்ளதாமே என்று ஒரு தொலைக்காட்சியில் கேட்டால், நேர்காணலைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு வெளியேறுவதும் அவர் போக்காக உள்ளது. 'கேள்வி கேட்டாலே கற்பு போய்விடும்' என்னும் உலகமகா அதிசய முற்போக்குச் சிந்தனையை வேறு அவர் வெளிப்படுத்தினார். மற்றவர்களின் கற்பு பற்றி மட்டும் அவர் எப்போதும் கவலைப்பட்டதில்லை. எல்லாம்" எனக்கு வந்தால் ரத்தம், உனக்கென்றால் தக்காளிச்சட்டினி" தத்துவம் தான்.
இப்படிப்பட்ட வைகோ இப்போது மட்டும் ஏன் இப்படி உடனடி மன்னிப்புக் கேட்டார் என்பது எண்ணிப்பார்க்கத் தக்கதுதானே!.
வேறொன்றுமில்லை மற்ற குற்றச் சாட்டுக்களுக்கெல்லாம் வழக்குப் போட்டால் அது விசாரணைக்கு வந்து, தீர்ப்பு சொல்லப்பட்டு, பிறகு மேல் முறையீட்டிற்க்குச் சென்று, இறுதி முடிவு வருவதற்குள் எல்லோருக்கும் வயதாகிவிடும்.

     ஆனால் சாதி குறித்த இந்தப்பேச்சு அப்படிப்பட்டதன்று, தேர்தல் ஆணையத்திடம் உடனே யார் வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம். தேர்தல் நேரம் என்பதால், தேர்தல் ஆணையம் தானாகவே வழக்கை எடுத்துக்கொள்ளலாம். அப்படி ஏதேனும் நடந்தால், இந்தத் தேர்தலிலேயே ம.தி.மு.க. விற்குச் சிக்கல் வந்துவிடும். மிகக் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். அதனால் தான் அவசரம்,அவசரமாக, ஐந்து, ஆறு மணி நேரத்திற்குள்ளாகவே, கண்ணீர் விட்டுக்கலங்கி, ஒரு மன்னிப்பு அறிக்கை வெளியாகி உள்ளது என்று தோன்றுகிறது. மன்னிப்பு அறிக்கை ஒரு கவசமாக இருக்குமல்லவா!

15 comments:

  1. Diversion tactics sir. People have "very" short memory. Hence no one will have time (due to diversions) to remind people about the ADMK misrule. I wonder why do NOT the ADMK party and it's staunch supporters (please read Mr. Cho and on) regard the people of Tamil Nadu high. Perhaps we deserve such treatment. Alas.

    ReplyDelete
  2. உண்மை அய்யா.

    ReplyDelete
  3. Vaiko has not only lost his balance but also all semblance of it. Arunanan has an agenda of his own and he hides it in his scholarship. Political campaign has already hit a new low at rock bottom;no sooner than it has started.

    ReplyDelete
  4. மறைமுகமாக மட்டுமே அமைந்த பேச்சுக்கு வெளிப்படையாக மன்னிப்பு கேட்டிருக்கிறார். அவர் மன்னிப்பை விட்டுத் தள்ளுங்கள். வழக்கு என்று வந்தால் அது சட்டபடி உபயோகமாக இருக்குமா இல்லையா என்பதை பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.
    அவர் பேசிய பேச்சுக்கு உண்மையில் சட்டபடி நடவடிக்கை எடுக்க முடியுமா, முடியாதா என்று நீங்களே முயற்சி செய்து பாருங்கள். அது தான் தினம் தினம் வழக்குகளைச் சந்திக்க, திமுகவில் ஏகப்பட்ட வக்கில்கள் இருக்கின்றனரே. கேட்டுபாருங்கள்.

    அவர் பேச்சில் ஜாதியை வெளிப்படையாக எங்குமே குறிப்பிடவில்லையே...! எதன் அடிப்படையில் வழக்குத் தொடர்வீர்கள்? கலைஞருக்கு நாதஸ்வரம் வாசிக்கத் தெரியும் என்று சொன்னதற்கா...? நாதஸ்வரம் என்பது ஜாதியா?

    இன்னொன்றும் கேட்டுவிடுகிறேன்.... வைகோவின் அந்த பேச்சை மட்டும் வைத்து வழக்கு நடத்த முடியும் என்று கூற முற்பட்டீர்கள் எனில், வழக்குத் தொடர முடியாத வைகோவின் பிற பேச்சுகளினை தவறாக திரித்து இங்கு குறிப்பிட காரணம் என்ன..? அவருடைய சுயத்தை கலங்கம் கற்பிக்கும் முயற்சியை தானே மேற்கொள்கிறீர்கள்...! இந்த பிழைப்பு உங்களுக்குத் தேவையா...?

    இந்த முறை வைகோ கூற வேண்டியதில்லை... நானே கூறுகிறேன்... வைகோவின் பேச்சை வைத்து முடிந்தால் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளியுங்களேன்...? தைரியம் இருக்கிறதா? உங்களின் வாதத்தை நிரூபிக்க தயாரா...???

    ReplyDelete
    Replies

    1. வைகோ சாதிவெறிப் பேச்சின் வரலாற்று பின்னணி: மன்னிக்க முடியுமா?

      http://arulgreen.blogspot.com/2016/04/Vaiko-Karunanidhi-casteist-reference.html

      Delete
    2. வைகோவும் கலைஞரும் ஒரு சம்பவமும்……..
      http://amudhavan.blogspot.com/2016/04/blog-post.html

      Delete
  5. சத்யா11 April 2016 at 00:03

    வைகோவின் கருத்தை ஸ்டாலினின் நயவஞ்ச திட்டத்தோடு திமுகவினர் ஜாதிப் பார்வையோடு அணுகியதைக் கண்டவுடன் என் வாழ்நாளில் எப்போதுமில்லாதபடி உடல் நடுங்கியது என்று கூறி கண்ணீரோடு மன்னிப்புக் கேட்ட வைகோ ஒரு உயர்ந்த மாமனிதர்!.அதை பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்ளாத கலைஞரும்,அவர் உடல் நடுங்கி மன்னிப்புக் கேட்ட பின்பும் அவரைப் பற்றி அவதூறு பேசும் நீங்களும் இழிவான மனிதர்கள்!!.

    ReplyDelete
  6. K.எழிலரசி11 April 2016 at 00:13

    கடந்த நாற்பதாண்டுகளாக தமிழக அரசியல் சூழலை கவனித்து வருபவன் என்ற முறையில் அழுத்தமாக சொல்ல விரும்புகிறேன் தமிழகத்தில் வேறு எந்தத் தலைவரும் தன் தவறான பேச்சுக்காக இப்படி உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டதேயில்லை.வைகோ அரசியல் நாகரீகத்துக்கு ஒரு நல்ல முன்னுதாரணம் ஏற்படுத்தியிருக்கிறார். இந்தப் பக்குவம் அவருக்கு நீடிக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.தமிழகத்தில் பிற தலைவர்களும் அதைப்போன்ற அரசியல் நாகரீகத்தை கடைபிடிக்க விரும்புகிறேன்.
    தீப்பொறி ஆறுமுகமும்,வெற்றி கொண்டானும் பேசிய பேச்சுகளை விடவா இனி தமிழகம் இழிவான பேச்சுகளை கேட்டு விடப் போகிறது.
    இதற்கு யார் காரணம்?
    கொசுறு:முரசொலியில் இவர்களின் பயணப் பட்டியல் கட்டம் கட்டி போடப்படும்

    ReplyDelete
  7. மன்னிப்பு கேட்பது அதுவும் சில மணி நேரத்தில் கேட்டது ஒரு பெரிய மனிதத்தன்மை என்று ஒரு பக்கம் ‘நடுனிலை’ கட்ட பஞ்சாயத்தாரெல்லாம் தீர்ப்பு சொல்லி முடித்து விட்டனர்.இவர்கள் இப்படி சொல்லி வைகோ பெருமகனாரை வியந்தோதும் அதே வேளையில் அந்த பெருமானின் தொண்டரடிப்பொடி ஆழ்வாரகள் எல்லாம் முகனூல் பக்கங்களில் வைகோ சொன்னதில் என்ன தவறு என்று வெறியேற்றிக் கொண்டிருந்தார்கள்.அதனை அந்த பெருமகன் கண்டுகொள்ளவில்லை.என்னை பொறுத்தவரை வைகோ ஒரு நியாயமான இன்னும் சொல்லப் போனால் தன் அடி மனதின் அழுக்கிற்காக மனம் வருந்தி இந்த மன்னிப்பை கேட்கவில்லை என்பதே உண்மை.அந்த மன்னிப்பிற்கான அறிக்கையில் ”பெருங்குற்றம்” என்கிற வார்த்தையை தவிர்த்து விட்டு பார்த்தால் அப்படி பெருங்குற்றம் செய்த ஒருவர் ”தவறாக பொருள் கொள்ளுமளவிற்கு ஒரு நிலை” தனக்கு நேர்ந்ததற்காக சுய பச்சாதாபம் கொள்கிறாரேயன்றி தன் மனமறிந்து சொன்னதற்கு வருந்தவே இல்லை.எல்லோருமே சொல்லி வருவதைப்போல அவர் வாயிலிருந்து அவசர கதியில் தவறி விழுந்த வார்த்தைகள் அல்ல அவை. ஆத்திரமும் வன்மமும் நிறைந்திருந்த போதிலும் மிகவும் நிதானமாக கவனமாக எல்லோருக்கும் நன்றாக புரியவைக்கின்ற தெளிவோடு பிறந்த வார்த்தைகள் அவை.அதை அவர் நல்ல புரிதலோடு தான் சொன்னார்.பிறகு எப்படி பழிவந்துவிடுமோ என்று பரிதவிப்பதைப் போல இப்படி ஒரு “உடல் நடுங்கும்” நடிப்பு? நான் ஏற்கனவே சொல்லியபடி ஒரு உலகமகா முழு நேர நடிகன் அவர். அவர் போட்டிருக்கின்ற கருப்பு சால்வைக்கு பதிலாக காவி ஜிப்பாவோ துண்டோ போட முழுதகுதியை அவர் அடைந்துவிட்டார்.

    ReplyDelete
  8. இந்த பிரச்சினையில் வைகோ மட்டுமே பொறுப்பாளி என்று நான் குறுக்கி பார்க்க வில்லை.வைகோ அவ்வாறு ஒரு பேட்டியை கொடுத்துக் கொண்டு இருந்த போது இரண்டு இடதுசாரித்தலைவர்களும்,திருமாவும் எவ்வித சலனமும் இன்றி ஒரே சீரான மற்றும் சாதாரண முகத்தோற்றத்துடனும் வீற்றிருந்தனர்.அவர்களில் ஒருவரும் அத்தகைய சாதி வெறி பேச்சினை நிறுத்த வேண்டும் என்று முனையவில்லை.திருமாவோ முத்தரசனோ வைகோவின் கையையோ தோள்களையோ தொட்டு அழுத்தும் ஒரு சிறு எதிர்ப்பு பதிவு கூட அங்கு நடக்கவில்லை.அதுமட்டுமல்ல அந்த சமயத்தில் அங்கே கூடியிருந்தவர்களின் ”நகைச்சுவை” உணர்வு அதாவது உயர்சாதி ஆதிக்க கொண்டாட்ட சிரிப்பொலி அங்கே வழிந்து கொண்டிருந்தது. அதனை வெளிப்படுத்தியவர்கள் பத்திரிக்கையாளர்களா அல்லது “மாற்று” சிந்தனைப்புகழ் கொண்ட ம ந கூட்டணி அடுத்தகட்ட தலைவர்களா என்பதை அங்கிருந்தவர்களில் மனசாட்சியுள்ளவர்கள் தான் வெளிப்படுத்த வேண்டும். அருணன் போன்றவர்கள் தொலைக்காட்சி நேரடி விவாதத்தில் சீமானிடம் எவ்வளவு சீக்கிரமாக உணர்ச்சிவயப்பட்டு எதிர்வினையாற்றினார் என்பதை அவராகவே நினைத்து பார்க்க வேண்டும்.கலைஞர் அதுமாதிரி எந்த ஒரு கருத்தினையும் சொல்லி நிலைமையை மோசமாக்காமல் ஒரு கனத்த மவுனத்தை மட்டுமே தன் பதிலாக தந்தது அவர் எவ்வளவு பெரியவர் என்பதைத்தான் காட்டியது.இடதுசாரிகளும், சிறுத்தைகளும் சாதி ஆதிக்கம் நிறைந்த கிராமங்களில் நடக்கின்ற கட்ட பஞ்சாயத்துகளைப் பற்றி நன்கறிந்தவர்கள்.எந்த ஒரு குற்றத்திற்கும் உயர் சாதி ஆண்டைக்கு என்ன ’தண்டனை’ தருவார்கள், அதே ஒரு ஒடுக்கப்பட்டவருக்கு அங்கு என்ன கிடைக்கும் என்கிற ‘விபரம்’ புரிந்தவர்கள் தான் அவர்கள்.அந்த ’விபரம்’ தான் தன்னுடன் இணைந்து தேர்தல் உடன்பாடு கொண்டிருக்கின்ற நட்பு சக்தியும் கோமானுமான வைகோவிற்கு மெல்லிய இறகால் வருடுகின்ற முறையில் அவர் கருத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை என்கிற செல்லமான சிணுங்கல்.இவர்கள் தான் மாற்று அரசியலை முன்னெடுத்து தமிழகம் தலைநிமிர செய்யப்போகிறவர்கள் என்றால் அது ஒரு ஏமாற்று வேலை என்பதை விளக்கவும் வேண்டுமா?
    ஒரு நல்ல பேச்சு திறன் கொண்ட இளைஞனாக இருந்த வைகோவை ஒரு பஞ்சாயத்து சேர்மன் மட்டத்திலோ ஒரு தலைமைக்கழக பேச்சாளராகவோ மட்டறுத்தி விடாமல் டெல்லி ராஜ்ய சபாவின் நியமன உறுப்பினராக 18 ஆண்டுகாலம் வைத்து அழகு பார்த்த தன் முன்னால் தலைவனுக்கு வைகோ தந்தது ஒரு சூத்திரப்பட்டத்தை தான்.உண்மையில் வைகோ கலைஞரை அவமானப்படுத்தி விட்டதாக நான் கருதவில்லை.அவர் தான் தன்னை சிறுமைப்படுத்திக் கொண்டார்.ஒரு சூத்திரனாக பிறந்ததற்காக யாருமே இங்கே தன்னை தாழ்த்திக் கொள்ள வேண்டியதில்லை என்பதையே நான் நம்புகிறேன்.பிறப்பால் உயர்வோ தாழ்வோ இல்லை என்று நம்புகின்ற யாருமே இந்த கருத்தையே கொண்டிருப்பர்.
    ஆனால் திருமா போன்றவர்கள் தேர்தல் முடிந்த பின்னரேனும் இந்த மனிதரை விட்டகல வேண்டும்.அது அவர்களின் தன்மானத்திற்கு நல்லது.நல்ல நட்புடன் பழகிக் கொண்டே தான் உயர்சாதிக்காரன் என்று மனதிற்குள் மமதையுடன் திரிபவர்களுடன் எத்தனை நாட்கள் தான் நட்பாக இருந்துவிட முடியும்?

    ReplyDelete
  9. திருவாளர் வை.கோபால்சாமி அவர்கள், ஒரு ரூபாய் பணத்திற்கு இரண்டு ரூபாய் அளவிற்கு நன்றாக நடிக்கிறார் & திருப்திபட வேண்டியவர்கள் அதீத திருப்திபடும் அளவிற்கு வெளுத்து கட்டுகிறார்.

    யாரெல்லாம் கலைஞர் அவர்களை தூற்றுகிறார்களோ, தூற்றுகிறவர்கள், 50 சதவீத சக்தியை இழந்து விடுகிறார்கள். இழந்த 50 சதவீத சக்தி கலைஞருக்கு சென்று விடுகிறது என்று பரவலாக பேச்சு உண்டு.

    இது ஒரு மூட நம்பிக்கையாக இருப்பினும், கடந்தகால வரலாறு இதைத்தான் / இப்படித்தான் பிரதிபலிக்கிறது.

    ReplyDelete
  10. S.செல்வராஜ்11 April 2016 at 23:53

    வைகோ பேசிய பேச்சுக்கு உடனே உடல் நடுநடுங்க மன்னிப்பு கேட்டுவிட்டார்.அந்த மன்னிப்பு கோரலை கலைஞர் ஏற்காதது அதிர்ச்சியளிக்கிறது.உணர்ச்சி வசப்பட்டு தன்னிலை மறந்து slip of the tongueஆல் சொல்லியதை சுபவீ அவர்கள் அணுகிய விதத்திலிருந்தே வைகோ மீது அவருக்குள்ள வன்மம் நன்கு வெளிப்படுகிறது!

    ReplyDelete
  11. சு.ப.வீ அய்யா அவர்கள் உடன் இருக்க தி.மு.க வின் இரண்டாம் கட்ட(தர) பேச்சாளர் சேலம் சுஜாதா , சேகர் பாபு அவர்கள் தலைமையிலோ நடைப்பெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய காட்சி

    https://www.youtube.com/watch?v=zrJ6gnf0v0A

    வை.கோ அவர்களைப் பற்றி பேசும் சு.ப வீ அய்யா அவர்கள், நிச்சயமாக சுஜாதா அவர்களுக்கு தகுந்த,'அறிவுரை' வழங்கி இருப்பார் என்று நம்புகிறேன். தி.மு.க வும் ஆ.தி.மு.கவும் வேறு என்று கூறும் அய்யா அவர்கள், இரண்டு கட்சிகளின் பேச்சாளர்களும் ஒன்று என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. உண்மையிலும் உண்மை ரகு அவர்களே.

      Delete
    2. வைகோவை இந்த அளவுக்கு சுஜாதா என்ற மூன்றாம் தர பேச்சாளருடன் ஒப்பிடும்போதே அவருடைய அந்த பேச்சு எப்படிப்பட்டது எவ்வளவு தரம் தாழ்ந்தது என்பதை நீங்களே ஒத்துக்கொண்டதற்கு நன்றி!

      Delete