தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 21 May 2016

சட்டமன்ற ஜனநாயகம் நிலைநாட்டப்படுமா?

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்படப் பேசு  நிகழ்ச்சியில் 20-05-2016 அன்று " சட்டமன்ற ஜனநாயகம் நிலைநாட்டப்படுமா?" என்கிற விவாதத்தில் சுபவீ

4 comments:

  1. 2006ல் அதிமுக மட்டும் 60+(+பாமக, +கம்யூனிஸ்ட்டுகள்)தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்த போது என்ன பெரிய கஷ்டங்கள் வந்துவிட்டது? 5 ஆண்டுகள் நிறைவு செய்யவில்லையா என்ன?.இப்போதும் கிட்டத்தட்ட அதே நிலைதான். ஆனால் மக்களவையில் 545ல் வெறும் 45 எம்பிக்களை வைத்துக் கொண்டு காங்கிரஸால் ஆட்சிக்கு திருகு வலி கொடுக்க முடிகிறதே எப்படி?.Answer is very simple அதை இங்கு செய்தால் புளி மூட்டை போல வெளியில் தூக்கி எறியப்படுவார்கள்!.ஆகவே MLAக்கள் 30தோ, 60தோ,100ரோ முக்கியமில்லை வெளியில் தூக்கி எறியப்படுவார்களா இல்லையா என்ற சபாநாயகரின் நிலைப்பாடுதான் முக்கியம்.என்ன MLAக்களை புளி மூட்டை போல வெளியில் தூக்கி எறிய மேலும் இரண்டு அல்லது மூன்று மடங்கு சபைக் காவலாளிகள் தேவைப்படுவார்கள் மற்றும் அவர்களின் பணிச்சுமையும் கணிசமாக அதிகரிக்கக்கூடும்!. அதையும் மீறி வீம்பு,கலாட்டா செய்யும் MLAக்களுக்கு Suspended till the end of the session என்ற அச்சுறுத்தல் வேறு காத்திருத்திருக்கிறது!. மக்களவையில் உள்ளது போல Live TV Relay இல்லாதது சபாநாயகருக்கு,ஆளும் கட்சிக்கு மேலும் ஒரு ப்ளஸ் பாயிண்ட்.

    ReplyDelete
  2. சபையின் நாயகனான சபாநாயகரையே காலில் விழ வைத்தவர்.... இங்கே யார் காலில் விழுவதில் நெகிழ வைகிறார்கள் என்ற போட்டி தான் நடக்கிறது..

    ReplyDelete
  3. தாங்கள் கூறியது போல உண்மையில் இந்த தேர்தல் முடிவுகள் நீண்ட கால அடிப்படையில் திராவிட முன்னேற்ற கழகத்துக்கு பெரிய ஒரு கடைமையை அல்லது வாய்ப்பை வழங்கி இருக்கிறது என்றுதான் கருதுகிறேன்.
    மக்களுக்கு சுயமரியாதையை பற்றிய புரிந்துணர்வு இன்னும் தேவைப்படுகிறது . திமுக ஆதரவாளர்கள் மக்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்யவேண்டும். அதுதான் நீண்ட காலத்துக்கு தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் நன்மை பயக்கும்.
    சக மனிதர்களை தனது காலில் விழவைத்து ரசித்து புளகாங்கிதம் அடையும் ஒரு நபர் மீண்டும் மக்களால் தெரிவு செய்யப்பட்டு இருக்கிறார். காலில் விழுந்தாலும் அதை பெரிது படுத்த தேவை இல்லை அவர் நல்ல சேவைகளை மக்களுக்கு நல்கி இருக்கிறார் என்றால் அவரை தெரிவு செய்த மக்களை விமர்சிக்க முடியாது. ஆனால் அவர் செய்த சேவை என்ன? சேதுசமுத்திரத்தை முடக்கியது. மதுரவாயில் பறக்கும் சாலையை முடக்கியது. அண்ணா அறிவாலையத்தை முடக்கியது. புதிய தலைமை செயலத்தை முடக்கியது. உழவர் சந்தையை முடக்கியது... எழுதினால் இங்கு அடங்காது.
    இங்கே நடந்திருப்பது ஒரு மனித சமுக கலாசார வீழ்ச்சி அல்லவா?
    சக மனிதரை தனது காலில் விழவைத்து அதை ரசிக்கும் பாசிச மனநிலை பார்பனீயத்தின் நீட்சிதானே?
    சகமனிதர்களை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தும் ஜெயலலிதா என்ற பெண்மணியை தமிழக மக்களில் கணிசமான பகுதியினர் கண்ணை மூடி கொண்டு ஆதரிக்கிறார்களே?
    தங்கள் சுதந்திரத்தை தங்கள் சுயமரியாதையை எள்ளவும் மதிக்காத ஒரு சமுதாயம் எப்படி தலை நிமிர்ந்து நிற்க முடியும்? அதிமுகவின் தொழுமின் சீரழிவை நிறுத்த எழுமின் விழுமின்!

    ReplyDelete
  4. இயலாமை, தள்ளாமை, கேளாமை, அறியாமை என பல்வேறு ஆமைகள் கொண்ட குற்றச்சாட்டுக்களை தேர்தல் நேரத்தில் கூறப்பட்டது.

    தேர்தல் நாளன்று ஆமை போல் நடந்து வாக்களிப்பு நடந்தேறியதை ஊடகங்கள் மூலம் கண்டோம்.

    தற்போது அரசியலில் ஆரோக்கியம் மிக மிக அவசியம். இல்லையேல் தன் வினை தன்னைச் சுடும்.

    ReplyDelete