தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Monday, 29 August 2016

சுயமரியாதை - 14


தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளை என்னிடம் கொண்டு வந்து சேர்த்தவர்கள் இரண்டு சுப்பையாக்கள். ஒருவர் என் அப்பா காரைக்குடி ராம சுப்பையா. இன்னொருவர் சுவரெழுத்து சுப்பையா. இருவருமே பெரியார் மீது அளவு கடந்த பற்றும், மதிப்பும் உடையவர்கள். அன்றும் இன்றும் பெரியாரிடம் மாறாத பற்றுக் கொண்ட 'முரட்டுப் பற்றாளர்கள்'  பல்லாயிரவர் உண்டு.  அய்யா இறந்தபின்னும், நடந்த ஒரு நிகழ்ச்சியைத் தோழர் விடுதலை ராஜேந்திரன் ஓரிடத்தில் பதிவு செய்துள்ளார்.  


"பெரியார், கூட்டங்களில் மாலைகளைப்  போடும் சடங்குகளை வீண் விரயம் என்று கூறினார். அதற்குப் பதிலாக நிதி தரும் வழக்கம், திராவிட இயக்க மேடைகளில் அறிமுகமானது. பெரியாருக்கு, மாலைக்குப் பதிலாக ஒரு ரூபாய் நிதி அளிக்கும் தோழர்கள் ஏராளம். பெரியார் மறைந்து உயிரிழந்த நிலையில் சென்னை அரசினர் தோட்டத்திலுள்ள ராஜாஜி அரங்கில் இறுதி மரியாதைக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. நீண்ட கியூ வரிசையில் பலமணி நேரம் காத்திருந்து உடல் அருகே வந்து ஒரு கருஞ்சட்டைக்  கிராமத்துத்   தோழர்  குழந்தையைப் போல் தேம்பி அழுது, தனது சட்டைப்பைக்குள் இருந்த ஒரு ரூபாய் நோட்டை எடுத்துப்  பெரியாரின் காலடியில் வைத்து, 'ஐயா, மாலைக்குப் பதில் ஒரு ரூபாய்' என்று கதறிய காட்சி என் நினைவை விட்டு நீங்காத ஒன்று" என்கிறார் ராஜேந்திரன். இப்படிப்பட்ட தொண்டர்களில் ஒருவர்தான் சுவரெழுத்து சுப்பையா. சுவர்களில் தார் கொண்டு அவர் எழுதிய எழுத்துகள் எனக்குள் பல வினாக்களை எழுப்பின. அப்போது நான் காரைக்குடியில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். பள்ளி செல்லும் வழியில் உள்ள சுவர்களில் எல்லாம் அவருடைய 'தார் இலக்கியம்' என்னை ஈர்க்கும். 

"சக்தியுள்ள சாமியின் கோயிலுக்குச் சாவியும் பூட்டும் ஏன்?"  என்று அவர் எழுப்பியிருந்த கேள்வி பல நாள்கள் என்னைச் சிந்திக்கத்  தூண்டியது.   நண்பர்களிடம் விவாதத்தை உருவாக்க அது வழி செய்தது. கடவுள் நம்மைப் பாதுகாப்பார் என்று சொல்கின்றனர். ஆனால் நாமல்லவா கோயிலைப் பூட்டி வைத்து அவரைப் பாதுகாக்க வேண்டியுள்ளது என்ற ஐயம் வரும். 

பெரியாரின் கருத்துகள்தாம். ஆனாலும், அவற்றை மிக எளிமையாகவும், சுருக்கமாகவும் ஊர் ஊராக மக்களிடம் கொண்டு சென்ற பெருமை சுப்பையாவைச் சேரும். "போவது யாத்திரை, போடுவது மாத்திரை"  என்று எழுதி வைத்திருப்பார். யாத்திரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் என்றால் , பிறகு ஏன் அவர்கள் மாத்திரை உட்கொள்கின்றனர் என்ற வினா எத்தனை நியாயமானது.

குப்பைத் தொட்டிகளையும் அவர் விடுவதில்லை. "புராணங்களை இதில் போடு" என்று குப்பைத் தொட்டிகளில் எழுதி வைத்திருப்பார்."அண்டாவில் இருந்தால் தண்ணீராம்,, அதையே கிண்டியில் கொடுத்தால் தீர்த்தமாம். என்னே பார்ப்பனர் புரட்டு"  என்று அவர் எழுதி வைத்திருந்த வரிகள் இன்றும் என் நினைவில் உள்ளன.  என்னை மட்டுமில்லை, என் போன்ற அன்றைய சிறுவர்கள் பலரையும் அவர் தன்  எழுத்தால் கவர்ந்திழுத்தார். பகுத்தறிவுச் செய்திகளை பகிர்ந்தளித்தார். 
யார் அந்தச் சுவரெழுத்து சுப்பையா?  அப்போது எனக்கும் அவர் குறித்து யாதொன்றும் தெரியாது. அப்பாவிடம் கேட்டபோது ஒரு  சில செய்திகளை அறிந்தேன். பின்பு, 2010 ஆம் ஆண்டு, அவர் இறந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு, கோவையிலிருந்து பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்ட "சுவரெழுத்துப் புரட்சியாளர் சுவரெழுத்து சுப்பையா சிந்தனைப் பொறிகள்"  என்னும் நூலைப் படித்தபின்தான் அந்தக் கருப்பு கெழுவத்தியைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டேன். 

சுயமரியாதை இயக்கம் எத்தனை சோதனைகளைக் கடந்து, எத்தனை தொண்டர்களை இழந்து முன்னேறியிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள சுவரெழுத்துக்காரரைப் பற்றி நாம் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும். 


                                                                                                              (தொடரும்)
                                                                                  

நன்றி: நக்கீரன்

8 comments:

 1. I have a question. You want a caste-less society. Is that possible? Why I am asking is, every caste is linked with a language in India (mainly TN). Tamil Nationalists like maniarasan are classifying who is tamil and who is not tamil based on their caste. So caste becomes the basic denomination for a tamilian, but at the same time they say caste should be removed. It is contradictory.

  In USA, hispanics or jews who are born and brought up there are considered as Americans. Same way in Singapore. So there a person of any caste or race or ethnicity can become an American. But here to become a Tamilian, a person needs to be born within a certain list of castes. Can you give a clear explanation on whether "caste" and "tamilian" are inseparable.

  ReplyDelete
 2. மதிப்பிற்குரிய சுபவீ அவர்களுக்கு,

  எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் இருந்துவருகிறது, நான் பல நூல்களை படித்தும், உங்களுடைய சிறப்பான விவாதங்கள் உட்பட பல்வேறு சொற்பொழிவுகளை கேட்டும்கூட அந்த சந்தேகம் தீர்ந்தபாடில்லை.

  நான் ஒரு ஆதி திராவிட வகுப்பை சேர்ந்தவன், நான் அயோத்தி தாசர் எழுதிய சில ஆய்வு கட்டுரைகளை படித்துள்ளேன். எங்கள் வகுப்பை சார்ந்தவர்கள் பூர்விக பௌத்தர்களென்றும் எங்களை ஆரியர்கள் நயவஞ்சகத்தால் தீண்டத்தகாதவர்கள் என்று அடக்கி,ஒடுக்கி கடந்த 2000 ஆண்டுகளாக அடிமைகளைவிட கேவலமான நிலையில் இந்த சமூகத்தில் வைத்திருப்பதாக அயோத்திதாச பண்டிதர் கூறுகிறார்.எனக்குள்ளிருக்கும் கேள்வி ஆரியர்களின் படையெடுப்பிற்கு முன்பு எங்கள் வகுப்பினர் கல்வியில் மேம்பட்டிருந்தார்களா? பொருளாதாரத்தில் மற்றவர்களுக்கு இணையாகவோ அல்லது உயர்ந்த நிலையிலோ இருந்ததுக்கான ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா?

  உங்களுடைய மேலான விளக்கங்களை வேண்டுகின்றேன்.
  ReplyDelete
  Replies
  1. Gautham Buddha never came to south. Only during Ashoka rule Buddhism spread to some parts of south India and in Sri Lanka. Only because of ashoka empire sinhalese became Buddhists. In TN, saivism didn't allow the spread of Buddhism. Buddha himself was an aryan by race. Pali language is an indo-aryan language. Aryan doesn't mean brahmin. It is misunderstood only in TN. Most of the north indians are aryans by race. You can see many north indians having the word "Arya" in their name. Even sinhalese claim themselves as Aryans in MahaVamsa. Don't mix up varna, caste and race.

   Delete
  2. தமிழ் பேசும் தேவரும் கவுண்டரும் தன் சாதி மற்றும் பிராமணர் தவிர்த்து மற்ற தமிழ் சாதிகளை நேசிக்காமல் ஏன் வெறுக்கிறார்கள். தெலுங்கு பேசும் தலித்துகள் கூட ஆரிய வம்சம்தான் என்று சொல்லுவது போல இருக்கிறது நீங்கள் சொல்லுவது. மொழியை வைத்து விளையாட வேண்டாம். மொழி பிராமணர்கள் மற்றும் ஷத்ரியர்கள் இணைந்து உருவாக்கினார்கள். அந்த மொழியை எல்லாரும் பேசும் கட்டாயம் இருந்தது. புத்தருக்கும் இருந்து இருக்க வேண்டும். ஆரிய அரசர்களும் இந்து மதம் என்ற பகவத் கீதையும் சேர்ந்து செய்த வினையால் திராவிடர்களுக்கு இது நேர்ந்தது. நாங்கள் அடித்து கொண்டோம் . ஆரியம் வாழ்ந்தது.

   Delete
  3. You are completely wrong. Gautam Buddha himself was born in Kshatriya community. Kindly read about him. Also, dravidan means brahmin in the south of vindhya hills. It is a sanskrit word. Tamil word doesn't start with "thra" pronunciation. Various brahmin castes of south are together known as Pancha Dravida Bramanas. Before 1900, you can't see any person in tamilnadu using "dravid" in his name. It is a brahmin surname.

   Delete
 3. மு. சந்தோஷ் குமார்29 August 2016 at 19:39

  சுவரெழுத்து சுப்பையா அவர்களின் படத்தை அடுத்த நக்கீரன் பதிவில் இடம் செய்யவேண்டும்.

  ReplyDelete
 4. தண்ணீர் தீர்த்தம் மட்டுமல்ல;நீங்கள் கொடுத்தால் சோறு,கஞ்சி அவர்கள் கொடுத்தால் பிரசாதம்;நீங்கள் கொடுத்தால் பூ அவர்கள் கொடுத்தால் புஷ்பம்;நீங்கள் தொட்டால் புல் அவர்கள் தொட்டால் தர்பை;உங்களுக்கு வருவது இறப்பு அவர்களுக்கு வருவது முக்தி இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்... இன்று ஐரோப்பிய, அமெரிக்க வெள்ளையர்கள் மூன்றாம் நாடுகளின் ஊழைப்பை உரிஞ்சு value addition செய்து கொடுப்பதை[உ ம் poor african coccoa to costly chochlate like kitkat,cadburys, poor asian cheap cotton to luxury allensolly,louie phillip shirts etc.,] மூவாயிரம் வருடங்கள் முன்பே செய்திருக்கிறார்கள்.Like american outsourcing they outsource all skilled and unskilled labour works to natives.[eg you make statues but they give life to it and upgrade to God for 3000 yrs]

  ReplyDelete
 5. சாதிகளை பற்றி பேசும்போது இங்கே சலுகை என்ற விஷயம் பற்றி மிக விரிவாக பேச வேண்டி இருக்கிறது .இது தற்போதய கால கட்டத்தை பற்றியது . இன்று சலுகை கொடுத்து சலுகை பெற வேண்டிய கால கட்டம். முதலில் எல்லாருமே தலித்துகளின் சலுகையை பெற விரும்புகிறார்கள். கவுண்டர் சமூகத்தால் தலித்துகளுக்கு கஷ்டம் இருக்கிறது . ஆனால் திரையில் அதே சமூகத்தை சார்ந்த சூர்யா கார்த்தி தலித்துகளின் படங்களில் நடித்து தங்களை நல்லவர்களாக காட்டி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ரஜினி சார்ந்த சிவசேனா மராட்டி சமூகம் செய்யும் அராஜகங்கள் மஹாராஷ்டிராவில் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் இவர் இங்கு தலித்துகளின் படங்களில் மட்டும் நடிக்கிறார். ஒரு காலத்தில் தேவர் சாதி கார்த்திக் இப்படி நடித்தார். இவ்வாறு எல்லாருமே தலித்துகளின் சலுகை பெற காத்து இருக்கிறார்கள் . இவை தலித்துகள் சார்ந்தவை. மேலும் ஒரு சலுகை லிங்க் ஒன்று சொல்ல விருப்ப படுகிறேன். முதலில் பிராமண சமூகம் பிராமண சமூகத்தை பயன் படுத்துகிறது. அதனால்தான் நீதி தோற்று பொய் ஜெயலலிதா இன்று வெளியே இருக்கிறார். பிறகு ப்ராமண சமூகம் தேவர் சாதிக்கு சலுகை தருகிறது. தேவர் சமூகம் கள்ளர் சமூகத்திற்கு சலுகை தருகிறது . கள்ளர் சமூகம் கட்ட பஞ்சாயத்து மற்றும் பிசினெஸ் செய்து தங்களை மேம்படுத்தி கொள்ள இவர்களை பயன் படுத்தி கொள்கிறார்கள். அதே போலவே நாயுடு சமூகம் பிள்ளை மற்றும் தலித் சமூகத்திற்கு சலுகை தருகிறது. இதன் மூலம் தங்கள் பிசினஸ் மேம்படுத்தி கொள்ள முடிகிறது. தங்களை இந்த சமூகங்களின் தோழன் என்பது போல காட்டி கொள்கிறார்கள். எல்லாவற்றிலும் ஒரு பொய் ஒளிந்து இருக்கிறது. திருமாவளவன் இவர்களை பயன் படுத்தி கொள்வதாக கூறுகிறார். உண்மையில் யார் யாரை பயன் படுத்தி கொள்கிறார்கள் என்பதை அவர் தெரிந்து வைத்து இருக்கிறாரா என்பது எனக்கு சந்தேகம்தான். அந்த சமூகத்தை சார்ந்த ஜோக்கர் படத்தை எடுத்த ராஜு முருகன் போன்ற அறிவாளிகளை அவர் பயன் படுத்தி கொள்ள வேண்டும். ராஜு முருகனை எல்லாருக்கும் பிடிக்கிறது. வன்னியர்களும் (படத்தில் வரும் அரசியல் சமூகம் யார் என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை) அவரை பாராட்டுகிறார்கள் என்பதை இங்கே கூற விரும்புகிறேன். ஆகவே இவர் போன்றவர்களை திருமாவளவன் அவர்கள் பயன் படுத்த வேண்டும்.

  எல்லாரும் சமம் மற்றும் தலித்துகளும் நம்மை போல மனிதர்கள்தான், அவர்கள் முதலில் மனிதர்களாக என்னை போலவே நடத்த பட வேண்டும் என்று நினைக்கும் அன்பும் இரக்கமும் உண்மையும் நிறைந்த திராவிட சமூகம் போலி வார்த்தைகளையும் சலுகைகளும் தராமல் ஆனால் அவர்களை தங்கள் பக்கம் இணைய வைக்கும் செயல்களை செய்யாமல் இருக்கிறார்கள். முதலில் நன்றாக அவர்களையோடு பேசுவது என்பதே அவர்களுக்கு நாம் தரும் முதல் சலுகை ஆகும். மனதால் இணைவது என்பதே அவர்களுக்கு போதுமானது. ஆனால் இதனை கூட இந்த திராவிட சமூகம் செய்யாமல் இருக்கிறது. இதனால் போலிகள் சுலபமாக அவர்களோடு இணைகிறார்கள். சலுகை அரசியல் ஆரம்பம் ஆகிறது.

  ReplyDelete