தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday, 5 August 2016

சுயமரியாதை - 6

வேர்களைத் தேடிய பயணம்! 

சமத்துவம்தான் பெரியாரின் அடிப்படை நோக்கம் என்றால், அந்த வேலையைப் பார்க்காமல், ஏன் கடவுள் மறுப்புப் பரப்புரையில் அவர் இறங்கினார்? ஏன் மதங்களுக்கு எதிராக - குறிப்பாக இந்து மதத்திற்கு எதிராக - காலம் முழுதும் எழுதியும், பேசியும் வந்தார்? இப்படித்தான் பலரும் கேட்கின்றனர். 


சாதி, மதம், கடவுள் எல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருந்ததுதான் அதற்கான காரணம். அதிலும் இந்து மதம் என்பது வருண-சாதி பிரிவுகளின் உற்பத்தித் தளமாக  இருக்கின்றது. அதனால்தான் இந்து மதம் வேர் கொண்டுள்ள இந்தியாவிலும், இந்தியாவாக இருந்த நாடுகளிலும்  மட்டுமே ஜாதி உள்ளது.

வேறு மதங்களிலும் பிரிவுகள் உள்ளன. ஆனால் அவற்றிற்கும் ஜாதிக்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது. கத்தோலிக்கம், புராடஸ்டண்ட் ஆகிய பிரிவுகளும், சன்னி, ஷியா போன்ற பிரிவுகளும் இந்து மதத்தில்  உள்ள சைவம், வைணவம் போன்றவை. பிறப்பால் தீர்மானிக்கப் படுபவை அல்ல. ஜாதி என்பது பிறப்பின் அடிப்படையிலானது. 

'ஜா' என்றாலே பிறப்பு என்றுதான் பொருள். அதனால்தான், பத்மஜா (தாமரையில் பிறந்தவள்), வனஜா (வனத்தில் பிறந்தவள்) என்றெல்லாம் பெயர்கள் வைக்கப்படுகின்றன. சைவத்திலிருந்து வைணவத்திற்கு மாற முடியும். சமயத்திலிருந்து அப்பர் சைவத்திற்கு மாறவில்லையா? ஆனால் அருந்ததியர் ஒருவர் முதலியாராகவோ, கோனாராகவோ மாற முடியுமா? அவர் மட்டுமின்றி, அவருடைய பரம்பரையில் கூட எவர் ஒருவரும் தன் ஜாதியை மாற்றிக் கொள்ள முடியாது.

அவ்வாறு மாற்றிக் கொள்ளவே முடியாத ஒரு ஏற்றத்  தாழ்விற்கு வழி வகுக்கும் வருண சாதிப்  பிரிவுகளுக்கான வேர்கள்  இந்துமத வேதத்திலேயே காணக்  கிடக்கின்றன. 

இந்து மதத்தின் அடிப்படை ஸ்ருதியும், ஸ்மிருதியும்தான். சுருதி என்றால் தெய்வத்தால் அருளப்பட்டது, மனிதர்களால் கேட்கப் பட்டது  என்று ஆகும். ஸ்மிருதி என்பவை நினைவில் கொள்ளத்தக்கவை அல்லது வழி வழியாக வந்தவை எனப் பொருள்படும். அவை மனிதர்களால் இயற்றப்பட்டவை. 

வேதங்களும், உபநிடதங்களும் கடவுள் அருள் பெற்ற   ரிஷிகளால் அருளப்பெற்ற ஸ்ருதிகள் என நம்பப்படுகின்றன. அவற்றுள் ரிக் வேதமே ஆதி வேதம். அந்த வேதத்தின் பத்தாவது இயலான புருஷ சூக்தம்தான் வருண வேறுபாட்டை  'எடுத்தருள்கிறது.'  அந்த வருண அடிப்படையில், பிற்காலத்தில் ஒவ்வொரு வருணத்திற்குமான "தருமம்" கூறப்படுகிறது. இந்து மதத்தைப் பொறுத்தமட்டில் 'தருமம்' என்றால் அறம், நீதி என்றெல்லாம் பொருள் இல்லை. அவரவர் வருணத்திற்கு ஏற்ப விதிக்கப்பட்ட கடமைகளைச்  செய்வதே அறம்.

சூத்திரனுக்கு விதிக்கப்பட்ட தருமம், "பலனை எதிர்பார்க்காமல் மற்ற வருணத்தாருக்கெல்லாம் தொண்டூழியம் செய்ய வேண்டும்  என்பதே ஆகும். ஆக, , ஏற்றத்  தாழ்வைப் பரம்பரை பரம்பரைக்கும்  உறுதி செய்கிறது இந்து மதம். . பிறகு அதனை விட்டுவிட்டு ஜாதியை எப்படி எதிர்ப்பது. ஜாதியை எதிர்க்காமல் சமத்துவத்தை எப்படிப் பெறுவது? சமதத்துவம் இல்லாத இடத்தில் சுயமரியாதை எங்கிருந்து வரும்? 

அதனால்தான் பெரியார் சொன்னார், "நான் ஜாதி என்கிற நச்சு மரத்தைப் போட்டுப் பொசுக்கத்தான் புறப்பட்டேன். உன் மதம் புனிதமானது என்றால், ஜாதியை விட்டு மதத்தைப் பிரித்து எடுத்துக் கொண்டு போ. முடியாது, இரண்டும் சேர்ந்தேதான் இருக்கும் என்றால் நான் அதனையும் சேர்த்தே ஒழிக்க வேண்டும். அப்படிச் செய்கிறபோது உன் கடவுள் உனக்குப் புனிதம் என்றால், இவைகளை விட்டுத் தனியாக எடுத்துக் கொண்டு போய்விடு. இல்லையில்லை, ஜாதி, மதம், வேதம், கடவுள் எல்லாம் ஒன்றோடு ஒன்று பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்து கிடக்கிறதென்றால், கடவுளையும் போட்டுப் பொசுக்குவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை".

பெரியாரின் கடவுள் மறுப்பு இதுதான்! இந்த நோக்கில்தான் 'கடவுளை மற, மனிதனை நினை' என்கிறது பெரியாரியம்!

                                                                                                              (தொடரும்)
                                                                                  

நன்றி: நக்கீரன்

15 comments:

 1. ஹிந்துமதம் என்றால் வர்ணம் என்று அதை சுருக்குவது சரியா?. வர்ணம் என்பது எனக்கு தெரிந்து கிதையில் மட்டும் தான் குறிப்பிட பட்டுள்ளது. பெரியாரிஸ்டுகள் வர்ணம் பிறப்பால் ஆன அடுக்குமுறை (vertical divide ) என்கிறார்கள், சிலர் அது தொழிலால் பிரிக்கப்பட்டது (horizontal divide) என்கிறார்கள். நீங்கள் சொல்லுவது படி அது பிறப்பால் சொல்லப்பட்டதாகவே ஒத்துக்கொள்வோம். ஆனாலும் அது மட்டும் இந்து மதம் அல்ல. அதை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லா மதங்களிலும் இந்த சிக்கல் உண்டு. இன்றைய காலத்திற்கு பொருந்தாத சில விஷயங்கள் அதில் இருக்கும், அதை தவிர்த்துவிட்டு செல்வது தானே சரி.

  திருக்குறளில் கூட ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் ஒரு குரல் உள்ளது -
  //மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
  பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.//
  - இந்த குரலுக்கு ஒவ்வொருத்தரும் அவர்களின் வசதிக்கேற்ப வெவ்வேறு பொருள் தருகின்றனர். சிலர் (பார்ப்பான்) அது சாதி எங்கின்றனர், சிலர் அதை குணம் என்கின்றனர். இந்த குரலை பற்றி திராவிட இயக்கத்தினர் பேசி நான் இது வரை பார்த்ததில்லை.

  ReplyDelete
 2. சாதி என்பது தொழில் வேற்றுமையால் தொடங்கி காலபோக்கில் பிறப்பு அடிப்படையில் மாறிவிட்டது என்பது அனைவரும் அறிந்ததே.

  சாதி ஒழிய வேண்டும் என்பதில் உங்களுடன் நூறு சதவிகிதம் உடன் படுகிறேன். அது கல்வி, பொருளாதார, சிந்தனை மாற்றங்களலும் - காதல் அடிப்படையில் நிகழும் சாதியை மீறிய திருமனங்களாலும் தானாகவே நிகழ்ந்து வருகிறது. இன்னும் நான்கு அல்லது ஐந்து தலைமுறைகளுக்குப் பின்னல் சாதி முழுமையாக மறையும் என்று நான் நம்புகிறேன்.

  அதே நேரம் ( சாதியோடு தொடர்புடையதால் ) இந்து மதத்தை ஒழிப்பேன் என்று பெரியார் சூளுரைத்தது எதி மறையானது. அது முழுத் தோல்வியில் முடிந்து விட்டது என்பது மட்டுமல்ல அவரது வழித் தோன்றல்களான திராவிட இயக்கத்தினரே இதனைக் கை விடத் தொடங்கி விட்டனர். இன்று ஊடகங்களில் வந்துள்ள திருமாவளவன் அவர்களது கருத்தை (http://www.vikatan.com/anandavikatan/2016-aug-10/politics/121927-stalin-is-another-jayalalithaa-thirumavalavan.art) , சுபவீ அய்யா நிச்சயம் கவனித்து இருப்பீர்கள்.

  தமிழகத்தின் எதிர்கால அரசியலில் முக்கிய பங்கு வகிக்கப்போகும் திரு. ஸ்டாலினின் இந்த மன மாற்றம்தான் சாதி மத வெறுப்பு அரசியல் பரிபூரணமாக தோல்வி அடைந்ததின் வெளிப்பாடு.

  ReplyDelete
 3. மு. சந்தோஷ் குமார்5 August 2016 at 19:03

  பல பாகங்கள் கொண்டா நூலாக வளர அதிக வாய்ப்புள்ள தொடர் இது.
  பெரியாரை சரியாக இன்றைய தலைமுறைக்கு புரியவைக்கும்.

  ReplyDelete
 4. In a nut shell, all this "JA" business created to differentiate and using that differentiation for personal gain.

  One can say it denotes birth, others can argue it is based on social structure, few others can portray that it is based on the family business. At the end of the day, it is used as an ugly tool to oppress the vulnerable.

  Just dont have this myopic point of view. Every religion has it. What about Christianity with the protestant and catholic war, Islam with Shia and Sunni conflict (almost exploding everyday).

  Have you lived in Syria to know what it means to be a non-conventional person ? If I were you, I would be fair and treat every religion equally and condemn their attitudes towards differentiating people by birth / caste and plainly killing innocents because they come from a different belief or even worse, a different school of thought.

  Just talk about one thing if you really, 'REALLY' believe in human equality. write about the Slavery practised and advocated in Islam and wars advocated by popes then people will take this blog seriously. Just One Blog on a non-hindu religion.. !

  ReplyDelete
  Replies
  1. In all other non-hindu religions, any person can become religious leader of his religion.

   But in Hindu religion, any well deserved person cannot become the highest spiritual leader. There the “JA” ( ஜா) business partial differentiation will be done purely for personal gain through subtle integration.

   In Hindu religion, lot of confusions persist from Gods level to service level. These confusions were known to every tall leaders whoever lived in those periods. They kept quiet and gave cold shoulder.

   Thanthai Periyar only took lot of pain to remove the people’s ignorance and enlighten them through his intellectual & shrewd speeches and explanations.

   On the presbyopic ( far sighted) view, does the Hindu Religion has got any future plans through rituals to convert a Sudra person to Brahmin? If yes, pl share with us.

   Syria and other countries issues can be addressed once we settle our local social problems.

   Delete
  2. """In all other non-hindu religions, any person can become religious leader of his religion.
   But in Hindu religion, any well deserved person cannot become the highest spiritual leader""

   Who is currently the highest spiritual leader of Hinduism? What is his name and he belongs wot which caste?

   Delete
  3. Let him whoever be. But the person will be well recognised / acknowledged with the heredity background such as the pedigree of Brahma's head birth.

   Delete
  4. This is not a direct answer. I can understand that you would n't be able to give one.

   Delete
 5. சாதிய கட்டமைப்பு பின்வருமாறு உருவாகியிருக்கலாம் என்று நான் கருதுகிறேன்.
  • ஆதி காலம் தொன்றுதொட்டு, நம் நாட்டை பொறுத்தவரை, மனிதர்கள் கூட்டம் கூட்டமாக ஒவ்வொரு தலைமையைக் கொண்டு, அதனதன் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப பல்வேறு நாடுகளாக பிரிந்து வாழ்ந்திருக்க வேண்டும்.
  • மனிதர்களைப் பொறுத்தவரை, பிறப்பு, வாழ்தல், (வாழ்தலில் – தன் போன்று உற்பத்தி என்பது கிளை), பின் மறைதல் என மூன்றாக பிறித்துக் கொள்வோம்.
  • இந்த மூன்று நிலைகளில், ஆனந்தம், வாழ்வியல் நெறிமுறை, சோகம் என்ற மூன்று அம்சங்கள் உள்ளன.
  • இந்த மூன்று அம்சங்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே, மனிதர்கள் தொழில்ரீதியில் சாதி வாரியாக தங்களுக்குள்ளே பிரிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது மனித அறிவின் வளர்ச்சியின் தன்மைக்கு ஏற்ப மனிதர்களே பிரிந்திருக்கலாம் / பிரிக்கப்பட்டுருக்கலாம்.
  • அக்காலம், எதிர் கேள்வி கேட்க முடியாதக்காலம். ஒவ்வொரு நாட்டு சட்டங்கள், பிரிவிற்கான் காரணங்களை அறிய முடியாதவாறு இருந்திருக்கலாம்.
  • பிரிக்கப்பட்டதில் சமச்சீராக பிரிக்காமல், அடுக்கு அடுக்காக பிரித்துதான் மனிதர்களுக்கு நேர்ந்த மிகப் பெரியக் கொடுமை. இங்கு பொருளாதாரம் முக்கிய பங்கு வகித்திருக்கலாம்.
  • பின்னாளில், நான்கு வகை சாதிகளாக பிரித்து நியாயப்படுத்திக்கொண்டது அதனினும் மிகப் பெரியக் கொடுமை.
  • தந்தை பெரியார் அவர்கள், கேள்வி கேட்க முடியாதக்காலத்தில் பிறந்திருந்தால், அவரால் சமூக புரட்சி நடத்தியிருக்க முடிந்திருக்கமா என்ற சந்தேகம் தோன்றுகிறது.
  • பிராமணர்கள், மனிதர்களின் ஆனந்த தேவைகளான குழந்தை பிறப்பு, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். ஏனெனில் ஆனந்த தேவைகளுக்கான தெளிவான பாடத்திட்டம் பல்லாயிரம் ஆண்டுகளாக, பிராமணர்கள் பார்வையில், மந்திரங்களாக, பிராமணர்களிடம் உள்ளது என்பது பொதுவான கருத்து.

  ReplyDelete
 6. To: Anonymous

  In all other non-hindu religions, any person can become religious leader of his religion.

  But in Hindu religion, any well deserved person cannot become the highest spiritual leader. There the “JA” ( ஜா) business partial differentiation will be done purely for personal gain through subtle integration.
  In Hindu religion, lot of confusions persist from Gods level to service level. These confusions were known to every tall leaders whoever lived in those periods. They kept quiet and gave cold shoulder.

  Thanthai Periyar only took lot of pain to remove the people’s ignorance and enlighten them through his intellectual & shrewd speeches and explanations.

  On the presbyopic ( far sighted) view, does the Hindu Religion has got any future plans through rituals to convert a Sudra person to Brahmin? If yes, pl share with us.

  Syria and other countries issues can be addressed once we settle our local social problems.

  ReplyDelete
 7. “சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்” அதாவது, நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன் என்று பகவத் கீதையில் பெருமை பீத்துகிறான் மாயக் கண்ணன். பல்லாயிரம் சாதிகளை உள்ளடக்கிய நான்கு பிரதான வர்ணங்களும் பிரம்மாவின் எந்தெந்த உறுப்புகளில் இருந்து பிறந்தார்கள் என்று பட்டியலிடுகிறது புருஷ ஸூக்தம். பிராம்மண, ஷத்ரிய, வைஸ்ய மற்றும் ஷூத்ர என்ற நான்கு வர்ணங்களால் வடிவமைக்கப்பட்ட சமுதாய அமைப்பிற்கு வெளியே இருந்த பழங்குடியினர் பற்றி ரிக்வேதத்தில் குறிப்புகள் உள்ளன.

  மனு உள்ளிட்ட ஸ்மிருதிகள் வர்ணங்களின் கீழ் வருவோருக்கான தெளிவான சட்ட விதிமுறைகளை வகுத்துக் கொடுத்துள்ளன. சமூகத்தை மேலோர் கீழோர் என்று கோடு கிழித்துப் பிரித்துப் போட்டதோடு அல்லாமல், யாரை யார் மணக்கலாம், யார் செத்தால் யார் தூக்க வேண்டும், யார் கைப்பட்ட உணவு தீட்டு என்பது வரையிலும் தெளிவான வரையறைகளை மனு ஸ்மிருதி வகுத்துக் கொடுத்துள்ளது.

  மனு உள்ளிட்ட ஸ்மிருதிகள் வர்ணங்களின் கீழ் வருவோருக்கான தெளிவான சட்ட விதிமுறைகளை வகுத்துக் கொடுத்துள்ளன.

  ”இருபிறப்பாளர் சாதிப் பெண்ணோடு உடலுறவு கொண்ட ஒரு சூத்திரனின் ஆண்குறியை சிதைத்து விட வேண்டும், அவனது பொருட்கள் மற்றும் நிலத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் (VIII 374)” என்கிறது மனுஸ்மிருதி. இன்றைய தைலாபுரத் தோட்டத்து மாம்பழங்களின் விதைகள் எங்கேயிருந்து வந்தவை என்பது புரிகிறதா?

  ”புனிதமான திருமண பந்தத்திற்கு சொந்த சாதிப் பெண்ணே ஒரு பிராமணனுக்கு பரிந்துரைக்கப்படுகிறாள். ஆசைக்காக இதர மூன்று சாதிகளிலிருந்து மனைவியைக் கொள்ளலாம். அவளின் மதிப்பு மரியாதை என்பது சாதியைப் பொறுத்திருக்கும் (III 12)” – ஜெயேந்திர விஜயேந்திர தேவநாத மைனர் பொறுக்கித் தனங்கள் அந்தரத்தில் தொங்கும் மாங்காய்கள் அல்ல, பிரம்மாவின் மகனான மனுவே தெளிவாக ரூட்டுப் போட்டுக் கொடுக்கிறார்.

  என்னதான் சூத்திரச்சி அழகாக இருந்தாலும், ஆசைப்பட்டு வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளலாமே தவிர அதிகாரபூர்வ தகுதியைக் கொடுக்க நினைத்தால்? அதற்கும் மனுவின் சட்டம் உள்ளது.

  ”கஷ்டமான காலத்தில் கூட ஒரு பிராமணனோ அல்லது ஒரு ஷத்ரியனோ (சட்டப்பூர்வமாக) ஒரு சூத்திர மனைவியை மணந்ததாக வரலாறு இல்லை. ஆசை என்னும் போதை வசப்பட்டு ஒரு தாழ்ந்த சாதிப் பெண்ணை மணக்கும் ஓர் இருபிறப்பாளன் தன்னையும், தனது ஒன்பது தலைமுறை பரம்பரையையும் சூத்திரர்களாக தரம் தாழ்த்திக் கொள்கிறான்(III 14-15)”

  சூத்திரனான சம்பூகன் தவமியற்றியதைக் கண்ட ராமன் அவனது தலையை துண்டித்து தர்மத்தை நிலைநாட்டினானாம்

  விஷ்ணு புராணம் சாதிப் படிநிலையை மட்டுமின்றி, தீட்டு போன்ற தீண்டாமையின் நுணுக்கமான அம்சங்களை வரையறுத்துள்ளது. “இரு பிறப்பாளனின் சவத்தைச் சுமக்க ஒரு சூத்திரனை அனுமதிக்க கூடாது. அதுபோல, ஒரு சூத்திரனின் சவத்தை ஓர் இருபிறப்பாளன் சுமக்கக் கூடாது. தந்தை அல்லது தாயின் சவத்தைப் பிள்ளைகள் சுமக்க வேண்டும். இறந்தவர் தங்களது தந்தையே என்றாலும் அந்த இரு பிறப்பாளனின் சவத்தை சூத்திரர்கள் சுமக்கக் கூடாது(XIX 1-4)” என்கிறது விஷ்ணு புராணம்.

  வேதங்களும், ஸ்மிருதிகளும் காட்டிய வழியில் பீடு நடை போட்ட ராமனின் ராஜ்ஜியத்தை மீண்டும் கொண்டு வர நினைக்கிறார்கள் இந்துத்துவ பாசிஸ்டுகள். ராமனை தேசிய நாயகனாக ஏற்காதவர்களை விபச்சார விடுதியில் பிறந்தவர்கள் என்கிறார் ஒரு மத்திய அமைச்சர். இவர்கள் ராமனைப் போற்ற வேண்டிய தேவை ஏன் வந்தது? அதற்கு பல்வேறு இந்துத்துவ அரசியல் உள்நோக்கங்கள் இருந்தாலும், ராமன் இவர்களின் அன்றைய வடிவமாகவே இருந்திருக்கிறான்.

  கிருதயுகத்தில் (சத்யுகம்) பிராமணர்களுக்கும், திரேதா யுகத்தில் பிராமணர்கள் மற்றும் ஷத்ரியர்களுக்கும், திரேதா யுகத்தில் பிராமண, ஷத்ரிய, வைசிய குலத்தவர்களுக்கும் தவம் செய்யும் உரிமை உள்ளது என்கிறது ராமாயணம். கலியுகத்தில் சூத்திரர்களும் தவம் செய்யலாமாம். சத்யுகத்தில் ஒழுங்காக இருந்த தர்மம், பின்னர் ஒவ்வொரு யுகமாக பிற வருணத்தவர் தவத்தில் ஈடுபட ஈடுபட குறைந்து கடைசியாக கலியுகத்தில் சூத்திரன் தவம் செய்யத் துவங்கியதும் முற்றிலுமாக குலைந்து போகும் என்கிறது ராமாயணம். இதை ராமனிடம் சொல்பவர் நாரதர்.

  இந்த விளக்கங்களின் அடிப்படையில், தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் சூத்திரனான சம்பூகன் தவமியற்றியதைக் கண்ட ராமன் அவனது தலையை துண்டித்து தர்மத்தை நிலைநாட்டினானாம். இது தான் ராம ராஜ்ஜியத்தின் சிறப்பு. இந்த ராஜ்ஜியத்தைக் கொண்டு வர வேண்டும் என்பது தான் மோடி உள்ளிட்ட இந்துத்துவ பாசிஸ்டுகளின் உள்ளக் கிடக்கை.

  தாங்கள் பேசும் மகத்தான பொற்காலம் குறித்து யோக்கியத்தோடு சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை என்ற நிலையில் வரலாற்றை தாங்கள் திருத்தி எழுதி வருகிறார்கள் ஸ்ரீராம் போன்ற இந்துத்துவ பாசிஸ்டுகள்.


  இப்போது சொல்லுங்கள் ஒழிக்கப்பட வேண்டியது முதலில் பார்பனீய இந்துமதமல்லவா?

  ReplyDelete
 8. சமூக நீதிப் பாதையில் பயணித்து போராடி தனது பல இரத்த சொந்தங்களை இழந்த தியாகம் செய்த ஒரே தலைவர் தமிழகத்தில் டாக்டர் ராமதாஸ் அய்யா மட்டுமே!.சமூகநீதி மண் தமிழ் மண் என்று 'திராவிடங்கள்' பேசலாம்.ஆயிரம் பொய்கள் உரைக்கலாம்.என்றாலும்,இட ஒதுக்கீடு என்னும் சமூகநீதி உரிமைப்போருக்கு உயிர் கொடுத்த 23 பேரும் 'தமிழர்கள்' தானே.குருதியின் சுவடுகளில் விருட்சங்களாக முளைத்துக்கிடக்கின்றன தமிழர்கள்/வன்னியர்களின் எண்ணங்கள்.
  எனக்கு ஒரே ஒரு கேள்விதான்,எந்த திராவிடனாவது,
  இட ஒதுக்கீடு என்கிற சமூகநீதிக்காக உயிர் விட்டிருக்கிறானா...?
  'வண்ணான் இறங்கிய படித்துறை உருப்படாது' என்கிற பழமொழியை ஒரு வண்ணானாக இருந்து பார்த்தால் தான், அதன் வலி புரியும். இது புரட்சியளர்கள் பார்வை.
  இதையே கொஞ்சம் மாற்றி, 'கொங்கு வெள்ளாள கவுண்டராக இருந்து பார்த்தால் தான், மாதொருபாகனின் இழிவு புரியும்' என்று சொன்னால்,நவீனா போன்ற நல்ல குடும்பங்களைச் சார்ந்த பெண்களாக இருந்து பார்த்தால் தான் செந்திலைப் போன்ற ஈனக்காலிகளால் ஏற்படும் இழிவு புரியும் என்று சொன்னால் எந்த புரட்சியளராக நடிக்கும் திராவிட பாசிஸ்ட்டுகளுக்கு புரிவதில்லையே,ஏன்?.

  ReplyDelete
 9. மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
  பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.


  குறள் விளக்கம்
  கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.

  திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
  134 ஓத்து மறப்பினும் கொளலாகும் - கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ் வருணம் கெடாமையின் பின்னும் அஃது ஓதிக்கொள்ளலாம், பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்.- அந்தணது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும். (மறந்தவழி இழிகுலத்தனாம் ஆகலின், மறக்கலாகாது என்னும் கருத்தான், 'மறப்பினும்' என்றார். சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.)

  ReplyDelete
 10. போதுமா ஸ்ரீகாந்த்ஐயரே குறளுக்கான விளக்கம்!வள்ளுவர் வாழ்ந்த காலத்திலிருந்து ஒழுக்கமில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் பார்ப்பனர்களிடம் போய் காட்டுங்கள் இந்த குறளுக்கான விளக்கத்தை.இரண்டாயிரம் வருடங்களாக திருந்தாத பார்ப்பனர்கள் இனிமேலா திருந்தபோகிறார்கள்!பார்ப்பனியத்தை ஒழித்தால் மட்டுமே பார்ப்பனர்கள் திருந்துவதற்கான ஒரே வாய்ப்பு! வாருங்கள் பார்ப்பனர்களே பார்ப்பனியத்தை ஒழிப்போம்!

  ReplyDelete
  Replies
  1. Boss... நா ஸ்ரீகாந்த் இல்ல ஸ்ரீராம்."பிறப்பொழுக்கம்" - என்று சொல்லும் பொழுது சாதி அங்கே வந்துவிட்டது. பிறப்பால் ஒழுக்கம் இல்லை என்றாலும் - அது சாதி குறியீடு தான், பிறப்பால் ஒழுக்கம் வரும் என்றாலும் - அது சாதி குறியீடு தான். பிறப்பால் வருவது சாதி. "பிறப்பால்" is the keyword. சோ.. வள்ளுவர் பார்ப்பனர்கள் ஒழுக்கமாக இருக்க கடமை பட்டுள்ளவர்கள் என்று சொன்னதே எங்களுக்கு பெருமை.

   Delete