தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday, 4 September 2016

யாருடைய ஆளுநர் ?


4 comments:

 1. ஆளுனர் அரசாட்சி செய்பவரன்று,அது ஒரு ceremonial post.அரசு விழாக்கல் முதல்வரால் அமைச்சர்களால் துவக்கி வைக்கப்படும் அதனால் ஆளுனர் தேவையில்லை.இவ்வளவு தொகை விமானத்திற்கும்,தொலைபேசிக்கும் வரிப்பணத்திலிருந்து செலவு செய்தததை பார்த்தால் வரிகட்டும் ஒவ்வொரு குடிமகன் வயிறும் எரியும். ஆனால் வரிகட்டும் குடிமகனுக்கு சாதரண சிகிச்சை கூட கிடைக்காத இந்நாட்டில் முரசொலி மாறனுக்கு Air-Ambulanceல் அமெரிக்கா சென்று அரசின், வரிகட்டும் குடிமகனின் வரிப்பணத்திலிருந்து 200கோடி செலவு செய்தததை பார்த்த போது வரிகட்டும் ஒவ்வொரு குடிமகனின் வயிறும் எப்படியெல்லாம் எரிந்தது.வரிகட்டும் குடிமகனுக்கு நாற்றம் அடிக்கும்,அவர்களை நாய்களை விட கேவலமாக நடத்தும் மருத்துவர்,செவிலியர் உள்ள மருத்துவமனை இவர்களுக்கு இராமசந்திரா மருத்துவமனை,தேவகி மருத்துவமனை,Brooklyn மருத்துவமனை,Methodist மருத்துவமனை என்ன விதமான சமூகஅநீதி இது?.இதைப் பற்றியும் எழுதுங்களய்யா.

  ReplyDelete
 2. முரசொலிமாறன் தமிழ்சமூகத்தின் சொத்து.அவரின் அறிவுப் பணி என்பது அளவிடற்கறியது.மாநிலசுயாட்சி என்கிற நூலும்,தில்லி அரசில் தமிழகத்தின் முக்கியத்துவத்தையும் ஏற்படுத்திய செயலுமே சாட்சி முரசொலிமாறனுக்கு அரசுசெலவில் சிகிச்சையளித்ததை விமர்சிக்கும் நண்பரே,முரசொலிமாறனின் செயல்பாடுகள் இந்த சமூகத்தல் எப்படிபட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை தெரிந்துகொண்டு விமர்சியுங்கள்,அவரின் செயல்பாடுபோல் இந்திய அரசியலில் அவருக்கு முன்பு யாராவது தமிழகத்தை முதன்மைபடுத்தியிருக்கிறர்களா என்பதை என்னிபாபாருங்கள் ....

  ReplyDelete
 3. முரசொலி மாறன் அவர்களைப்பற்றி தாங்கள் எந்த அளவிற்க்கு உணர்ந்துள்ளீர் என்பது நமக்கு தெரியாது.

  எனினும் தெரியப்படுத்துவது தமிழர் கடமை என நினைக்கிறேன்.


  முரசொலி மாறனின் சகாப்தம்

  இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர், தமிழ் வளர்த்த ‘முரசொலி’ எனும் முதுபெரும் நாளேட்டின் ஆசிரியர், இளம் பிராயம் தொட்டு பொதுப்பணியிலே ஆர்வம் கொண்டு, அயராது பொதுத்தொண்டு ஆற்றியவர்.

  தமது 35 ஆண்டு காலத்திற்கும் மேலான நாடாளுமன்ற அனுபவத்தால், நாடாளுமன்ற ஜனநாயக முறைகளை பழுதற உணர்ந்த, பேணிய பண்பாளர், பொருளாதாரப் பிரச்சினைகள் குறிப்பாக தொழில் மற்றும் வர்த்தகக் கொள்கை சீர்திருத்தங்களை அலசி ஆராயும் அளவிற்கு ஆழ்ந்த பேரறிவு வாய்க்கப் பெற்றவர், இலக்கியத் துறையில் இன்பத் தமிழ்க் காவியங்கள் ஏராளம் படைத்தளித்தவர் முரசொலி மாறன் வரலாற்றில் தனக்கென தனியிடம் பதித்த தகைமையாளர்.

  திராவிட இயக்க வரலாறு நூலினை எழுதியவர்

  இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர், தமிழ் வளர்த்த ‘முரசொலி’ எனும் முதுபெரும் நாளேட்டின் ஆசிரியர், இளம் பிராயம் தொட்டு பொதுப்பணியிலே ஆர்வம் கொண்டு, அயராது பொதுத்தொண்டு ஆற்றியவர்.

  நீதிக் கட்சி தொடங்கிய காலந்தொட்டு, இன்று கழகம் பாரெங்கும் விரிந்து பரந்து பகுத்தறிவு மணம் பரப்பும் காலம் வரையிலான கழகத்தின் வரலாற்றினை ஒரு பெருந்தொகுப்பாக, திராவிட இயக்க வரலாறு எனும் தீந்தமிழ்க் காவியமாகத் தீட்டியவர் முரசொலி மாறன்.

  எனக்கு அகரம் கற்றுக் கொடுத்தவர், என்னை தமது மார்மீதும் தோள்மீதும் போட்டு வளர்த்தவர், என்னை ஆளாக்கியவர், எனது ஆசான் என தமது உயிருக்குயிரான மாமா தலைவர் கலைஞர் அவர்களைப் பற்றி மாறன் அவர்கள் நன்றியுணர்வோடு நெகிழ்ந்து கூறாத நாட்கள் இல்லை எனலாம்.


  இளம் பிராயத்திலேயே திராவிட இயக்க உணர்வு மிகப் பெற்று கழகக் கொள்கைகளில் ஊறித் திளைத்தவர் மாறன்.

  எழுத்தாளராக, பத்திரிகையாளராக, இலக்கியவாதியாக, திரைப்பட கதாசிரியராக, வசனகர்த்தாவாக, பாடலாசிரியராக, இயக்குநராக, தயாரிப்பாளராக என பட்டியலிட இயலா அளவிற்கு பன்முகப் பரிமாணங்கள் கொண்டவராக விளங்கிய மாறன் அவர்கள், சிறந்த பேச்சாளரும்கூட!

  கழகத்து மேடைகளில் அவர் செய்த கொள்கைச் சங்கநாதம் கேட்டு வீறுகொள்ளாத கழகத்தினர் இல்லை என்னும் அளவிற்கு, தலைவர் கலைஞர்போல வீர முழக்கமிடுவார்.

  1965ஆம் ஆண்டு வாக்கில் தமிழகத்தில் மொழிப்போர்த்தீ கனன்று கொண்டிருந்தபோது, இவர் முரசொலியில் தீட்டிய ஏராளமான கட்டுரைகள், போராட்டக் களத்தில் நின்ற மாணவர்களை மேலும் வீறுகொண்டெழச்செய்தது.

  1976ஆம் ஆண்டு துவக்கத்தில் இந்தியாவெங்கும் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது, ஜனநாயகம் காத்திடும் அந்த மகத்தான போரில் கலைஞர் தமது ஆட்சியையே காவு கொடுத்தார். மிசா காலத்தில் கழக முன்னணியினர் 500க்கும் மேற்பட்டோர் கொட்டடிகளில் அடைக்கப்பட்டு அடித்து துவைத்து துன்புறுத்தப்பட்டனர்.

  கழகத்தவர் வதைபடுவதை கண்டு சகிக்க முடியாத கலைஞர், ஆட்சியாளர்களின் வன்முறை பசிக்கு எனது மருமகன் மாறனையும், மகன் ஸ்டாலினையும் வேண்டுமானால் நான் இரையாகத் தருகிறேன். கழகத்தினரை வதைக்காது, விட்டு விடுங்கள் என்று கோரும் அளவுக்கு சிறைகளில் வன்முறை தலைவிரித்தாடியது. அப்போது மாறன் அவர்கள் போலீசாரால் வன்மையாக தாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார்.

  சிறந்த சமூக ஊழியராக, பொதுநலவாதியாக, பொதுத்தொண்டு புரிபவராக தமது பொதுவாழ்வைத் தொடங்கி கழக கொள்கைகளில் அவர் கொண்ட உரம் கண்டு பேரறிஞர் அண்ணா பெருமகிழ்ச்சிக் கொண்டார். அவரது பேரன்பிற்கு பாத்திரமானார். காயிதே மில்லத், இராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம் போன்ற தமிழகத்தின் மூத்த தலைவர்களோடு நெருங்கிப் பழகிடும் வாய்ப்பைப் பெற்றார்.

  அவர் வகித்த பதவிகளும்,போராட்டங்களும், உழைப்பும் என்னிலடங்காதவை.

  எனவே தமிழர்க்கு சம்பந்தமே அற்ற ஆளுநர்களும், cia பார்ப்பனர்களும் அரசின் பலகோடிகளை விழுங்கி ஏப்பம் விடும்போது இந்த நாட்டின் தொழில்துறை வளர்த்த ஒரு மாமனிதனுக்கு வைத்திய செலவிட்டது நியாயமானதே.

  ReplyDelete
 4. முப்பது ஆண்டுகளுக்கும் மேல் ஆந்திரத்து அமைச்சரா - அதிலும் நிதி அமைச்சராக 16 முறை ஆந்திர பட்ஜெட்டை தாக்கல் செய்து சாதனை படைத்தவர் ரோசையா. தகுதியில் முரசொலி மாறனை விடக் குறைந்தவர் அன்று.

  சுபவீ ஐயா எழுப்பியுள்ள வேறு. அது தனி நபர்த குதி குறித்ததன்று. பொது வாழ்வில் உள்ளோர் அரசுப் பணத்தை செலவிடும் பொது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்ற மரபு குறித்த கருத்து அது.

  ஆனால் எந்த மரபெல்லாம் விடை பெற்று பல்லாண்டுகள் ஆகிவிட்டது. எனவே ரோசையா குற்றவாளி என்றால் அதே அளவுகோல் படி முரசொலி மாறனும் தவறிழைத்தவரே.

  ReplyDelete