தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday 21 October 2016

குறும்பட அறிமுக விழா


1 comment:

  1. இரண்டு குறும்படங்களும் அருமையிலும் அருமை,முதல்படம் பெண்ணுரிமைக்கு விடப்படும் சவால், புகைப்பிடிப்பதிலிருந்து பெண்ணுரிமையை கேள்வி எழுப்புவது விமர்சனத்துக்குறியதே இருந்தாலும்,ஆண் புகைப்பிடித்தால் உடலுக்கு கேடு,பெண் புகைபிடித்தால் ஒழுக்கக் கேடா என்று கேட்கும் கேள்வி உச்சந்தலையில் ஆணியடித்தார்போல் இருந்தது.உண்மையில் எல்லா சூழலிலும் பெண்ணுரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்ததுதான் மீசை படத்தின் தனிச் சிறப்பு. இரண்டாவது படம் காக்கைக் கூடு ஐனநாயகத்தை விரும்பும் ஒவ்வொரு மனிதனும் தனக்கு ஒரு பிரச்சார முறைக்காக கொடுக்கப்பட்ட கொடையாக காக்கைக் கூடு படத்தை கருதுவர். "அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்" குருதி உறவுக்கும்,குருதி உறவு அல்லாத அன்பிற்கும் தொடர்பே இல்லை என்பது ஐனநாயகவாதிகள் மனதில் ஆழப் பதிந்திருக்கிறது அதை வெளிக் கொண்டுவந்து உடம்பிலிருந்து உணர்வை வெளியே உருவியெடுத்து பிற்போக்கு சமுதாயத்தை தலைகீழாக புரட்டிப்போடும் ஒரு அருமையான வெளிக்கொணர்வுதான் காக்கைக் கூடு படம் மொத்தத்தில் இரண்டு படமும் பிற்போக்கு சமுதாயத்திற்கும்,வளர்ச்சியடைந்துவரும் முற்ப்போக்கு சமுதாயத்திற்கும் இடையில் மூட்டப்பட்ட முரண்பாட்டுப் போர். மொத்தத்தில் முரண்பாடுதான் வளர்ச்சி விதி இந்த முரண்பாடு தீர்க்கப்படும் போது அது வளர்ச்சியடைந்த முற்ப்போக்கு சமுதாயமாக மாறும் என்பது நிதர்சனமான உண்மை. படத்தின் கதையாசிரியரின் லட்சியத்தையும்,சமுதாயத்தின் வளர்ச்சிக்காக ஐயா,சுபவீ அவர்களின் தொடர் போராட்ட வடிவங்களில் ஒன்றாக இந்த குறும்படங்களும் அமைகிறது என்பது வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

    ReplyDelete