தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday, 11 January 2017

பொங்கல் விடுமுறை:பா.ஜ.க. ஆடிய ஒருநாள் கூத்து!


எத்தனை எத்தனை  'வியாக்கியானங்கள்!'. தந்தி தொலைக் காட்சி பாண்டே உள்பட எத்தனை பொழிப்புரையாளர்கள்.  தமிழினத்திற்கு எதிரான தங்கள் போக்கை மறைத்துக் கொள்ள எவ்வளவு நாடகங்கள்! எல்லாம் 24 மணி நேரத்தில்  வெட்ட வெளிச்சமாகி  விட்டன. 


மத்திய அரசின் ஊழியர் ஒருங்கிணைப்புக் குழுதான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறதாம். கட்டாய விடுமுறைகள் எவை, விருப்ப விடுமுறைகள் எவை என்பதை அவர்கள்தாம் தீர்மானிப்பார்களாம்  மத்திய அரசு அதில் தலையிட முடியாதாம்.  அப்படியானால், இப்போது எப்படித் தலையிட்டு முடிவெடுத்தார்கள்? கிராமங்களில் சொல்லுவார்கள் - 'மெதுவாக வாலை  விட்டுப் பார்ப்பது, அடி  விழுந்தால் சுருட்டிக் கொள்வது"  என்று. 

எது கட்டாய விடுமுறை (ஆண்டுக்கு 14 நாள்கள்). எது விருப்ப விடுமுறை (3 நாள்கள்) என்பதை ஒரு அதிகாரிகளின் குழு முடிவு செய்கிறது என்பது சரிதான். ஆனால் அந்தக் குழுவில் யார் இருக்கின்றார்கள்? மத்திய அரசின் முதல் நிலை அதிகாரிகள்தான் (Class I officers) அந்தக் குழு உறுப்பினர்கள்.  அவர்கள் யாராக இருப்பார்கள் என்று சின்னக் குழந்தைக்குக் கூடத்   தெரியுமே! சமூகத்தில் நூற்றுக்கு 3 பேராக இருக்கும் பார்ப்பனர்கள்தானே முதல் நிலை அதிகாரிகளாக 97% இருப்பார்கள். அவர்கள் அப்படித்தானே முடிவெடுப்பார்கள்!

அரசு இதிலெல்லாம் தலையிடுவதில்லை என்பது நம்பமுடியாத நாடகம்.  ஒருவேளை, தீபாவளியை விருப்ப விடுமுறையாக அவர்கள் முடிவு செய்தால் மத்திய அரசு மெளனமாக இருந்து விடுமா? 

மத்திய அரசின் கவனத்திற்கு வரவில்லை என்பதும் உண்மையன்று. பட்டியல் வெளியானவுடனேயே, அனைத்திந்திய மத்திய அரசு ஊழியர்கள் பெருங் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் துரைப்பாண்டியன் 28.12.2017 அன்றே, இது குறித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். பிரதமருக்கும், மத்திய அரசின் ஊழியர் நலத் துறை இணையமைச்சர் சர்மாவிற்கும் கடிதங்கள் சென்றுள்ளன. அப்போதெல்லாம் அரசுக்குக் கேளாக்  காதாக இருந்தது.ஜனவரி 9ஆம் தேதி மாலை, தி.மு.க.வின் செயல் தலைவர் தளபதி ஸ்டாலின் கண்டன ஆர்ப்பாட்ட அறிவிப்பைக் கொடுத்த பின்னும், தமிழகத்தின் பல்வேறு காட்சிகள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்த பின்னும்தான் மத்திய அரசு அசைந்தது. 24 மணி நேரத்திற்குள்ளாகத் தங்களின் முடிவை மாற்றிக் கொண்டனர்.


தமிழ், தமிழ்ப் பண்பாடு ஆகியனவற்றிற்கு எதிராக வாலை  நுழைத்துப் பார்க்கும் வேலையை இனிமேலாவது பா.. நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் தமிழ்நாட்டில் அரசியல் நடத்தும் தகுதியை அக்கட்சி இழந்துவிடும்.

8 comments:

 1. மு. சந்தோஷ் குமார்11 January 2017 at 19:05

  உணர்வு பொங்கிற்று!!!
  உடனடியாக...

  ReplyDelete
 2. ‌தீபா என்ற அந்த ஜெயலலிதாவின் உறவினரை இயக்குவது இந்த பான்டே என்று தகவல் வருகிறது. இது உண்மை கள நிலவரம, நண்பர்கள் மூலம் தெரிய வந்தது். பார்ப்பனருக்கு பார்ப்பனர் உதவுகிறார். அரசியலில் திராவிடர் என்ற சொல்லி ஒருவரை தலைவராக தேர்ந்து எடுக்கிறோம். ஆனால் அவர் பணககாரராக நாம் உதவுவதாகவே தெரிகிறது. நானும் திராவிடன் நீயும் திராவிடன். நான் பணம் சேர்த்தால் நீ சேர்த்த மாதிரி. ஆகவே நான் பணக்காரணாக வாழ்வதை பார்த்து நீ சந்தோசப்படு என்கிறார்கள். சினிமாவை பயன்படுத்தி எந்த சாதியை வேண்டுமானாலும் தவறாக காட்டலாம். அதற்கு பெரிய நடிகரை பயன்படுத்தி கொள்ளலாம். ஏனெனில் அவரும் திராவிடர் என்று சொல்லி பணம் சேர்ப்பவர். பாடல்கள் வன்முறை உணர்வை தூண்டுவதை முதன் முதலில் பார்க்க முடிகிறது.ரசிகனாக இருந்த நான் அந்த நடிகரின் படங்களை பார்க்காமல் இருக்க உறுதி மொழி எடுத்து கொண்டேன். தன்னை பற்றி உண்மை யாராவது சொன்னால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று அவர்கள் எண்ணத்தை உணர முடிகிறது. இங்கே தமிழன் என்றும் திராவிடன் என்றும் யாராவது சொன்னால் அது முற்றிலும் பொய் என்பது தெளிவாக தெரிகிறது. இந்த சாதிக்காரன் அல்லது அந்த சாதிக்கு கிளை சாதிக்காரன் என்று சொல்லி கொள்ளுங்கள். பார்ப்பணர்களை விட இவர்களின் நடவடிக்கைகள் மோசமாகிக் கொண்டிருக்கிறது. ஆகவே தமிழன் திராவிடன் என்று சொல்லாதீர்கள். உங்கள் அடையாளமாக உங்கள் சாதிகளை சொல்லுங்கள். தமிழகத்தில் இரு பெரிய கட்சியில் இருந்து இன்னும் நூறு வருடம் இவர்கள் மாற்றி மாற்றி ஆட்சி செய்தால் உடையார் பள்ளர் பறையர் நாடார் செட்டியார் முத்தரையர் அருந்தியர் மற்றும் சில சாதியில் இருந்து முதல்வர் வர வாய்ப்பே இல்லை. இன்னும் நூறு வருடம் கழித்து தமிழகத்தின் எல்லா சொத்து பத்துகளும் ஆளும் சாதிகளுக்கு அரசியல் என்ற ஒன்றை பயன்படுத்தி மாறி இருக்கும். அவர்களோடு சேர்ந்து கொண்டு மோஸ்ட் ஹேட்டட் நீக்ரோ என்று அழைக்க படக்கூடிய ஜால்ராக்கள் நன்கு வாழ்வார்கள். மற்றவர்கள் மானமுள்ளவர்கள் சாவார்கள். நாம் இப்படியே இருக்க இதுதான் தமிழகத்தின் நாளைய நிலை.

  ReplyDelete
 3. மாநில உரிமைகளில் மெல்ல மூக்கை நீட்டப்பார்த்த மோடி கும்பலின் எண்ணம் தவிடுபொடியாகிப்போனது. மகிழ்ச்சி.
  நிற்க எப்படி அந்த துணிச்சல் அக்கூட்டத்தினருக்கு வந்த்து, அதில் தமிழனத்தின் தன்மான உணர்வல்லவே இரண்டரக்கலந்து கிடக்கிறது. பெரியாரின் மண்ணில் கால்வைக்கிற துணிச்சல் வந்திருக்கிறது என்றால் நரம்பு புடைக்கவைக்கும் தமிழால் தமிழகத்தை கட்டியாண்ட தமிழ் மகன் படுக்கையில் இருப்பதால் மெல்ல சுரண்டிப்பார்ப்போம் சுரனையோடுதான் இருக்கிறார்களா அல்லது மயக்கத்தில் திளைக்கிறார்களா என்று தட்டிப்பார்க்க நினைத்தன் விளைவு அவர்கள் கையை சுட்டுக்கொண்டது.
  அய்யா கணவான்களே விழித்தவண்ணம் இருங்கள் இல்லை எனில் மோடிக்கும்பல் நம்மையும் சேர்த்து விற்றுவிடுவார்கள்.தமிழகம் இந்தி எதிர்புப்போர் போல இன்னொரு போர்க்களத்தனை எதிர்பார்க்கும் தொலைவில் இல்லை.
  தோழமையுடன்..
  சோலைஅழகு இளஞ்சேரன் ஆ

  ReplyDelete
  Replies
  1. U.ஜெகதீசன்13 January 2017 at 23:24

   இன்னொரு போர்க்களம் அமைந்தால் 2009ல் இலங்கைத் தமிழர் படுகொலையை கண்டித்து எழுந்த எழுச்சியை கலைஞரால் அடக்கி ஒடுக்கப்பட்டது போல,2015ல் மதுவிலக்கை அமலாக்காததை கண்டித்து எழுந்த எழுச்சியை ஜெயாவால் அடக்கி ஒடுக்கப்பட்டது போல அடக்கி ஒடுக்கப்படும்!.சோலை அழகு இளஞ்சேரனின் (சுபவீ போன்ற தூண்டி விடுபவர்களுக்கு அல்ல)முட்டி முகவாய் உடைந்து பல மாதங்கள் படுத்த படுக்கையில் காலம் தள்ள வேண்டும் அல்லது குண்டடி பட்டு சாக நேரிடும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு((சுபவீ போன்ற தூண்டி விடுபவர்களுக்கு அல்ல அவரைப் போன்றவர்கள் 90+ வயது வாழ்ந்து ஆண்டு எல்லா சுகங்களையும் அனுபவிப்பார்கள்{உ.ம்.இந்தி எதிர்ப்புப்போரில் மாண்டவர்கள் வேறு ஆண்டு சுகங்களை அனுபவித்தவர்கள் வேறு>அண்ணா, கலைஞர்,எம்ஜிஆர்,ஜெயா,இனி சசிகலா,ஸ்டாலின்...} மாண்டவர்கள் குடும்பங்கள் நடுரோட்டில் நின்றது என்பதையும் மனதில் வைத்துக் கொண்டு))தாராளமாக குதியுங்கள் சோலைஅழகு இளஞ்சேரன் அவர்களே.

   Delete
 4. தமிழர்களை வஞ்சிக்கும் வேலையை தான் மத்திய அரசு எப்பவும் செய்கிறது, நமக்கு தண்ணீர் கூட தர மறுக்குகிறார்கள்,இப்போது ஜல்லிக்கட்டு பிரச்சனை ஒட்டு மொத்த தமிழ்நாடையே கொந்தளிக்க வெய்திருக்கிறது ,தமிழ் சமுதாயம் ஒன்றாக போராடுகிறார்கள் பெரியாரியவாதிகளை தவிர அதில் சாதிய அடையாளம் இருப்பதால் அதனை எதிர்க்கிறார்கள்,, பழத்தில் உள்ள கெட்டு போன பகுதியை வெட்டி எடுத்து பழத்தை உன்கிற மாதிரி, ஜல்லிக்கட்டு போட்டியில் நடக்கும் தவறுகளை மட்டும் நாம் செறி செய்ய பார்க்க வேண்டும்,,

  ReplyDelete
 5. ஒரு காலத்தில் பரதநாட்டியம் நடனம் தேவதாசிகளுக்கு கற்று கொடுக்கப்பட்டது,, அந்த நடனமே பெண்கள் ஆண்களை கவர கூடிய நடமாக இருந்தது, தேவதாசி பெண்களும் சாதிய அடிப்படையில் தான் இருந்தார்கள்,,,இன்று நாம் அதிலிருந்தது விடுப்பட்டுவிட்டோம்,, பெரியரியவதிகள் கூட பரதநாட்டியம் நடனத்தை ஆதரிக்கிறார்கள்,, அந்த பார்வையில் ஜல்லிகட்டயும் பார்க்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து,,,

  ReplyDelete
 6. எந்த உரிமையும் இல்லாமல்தான் காந்தி பிறந்தநாளுக்கும் இயேசு பிறந்தநாளுக்கும் விடுமுறையை ரத்து செய்ய பார்த்தா நடுவன் அரசு?

  ReplyDelete
 7. 10 வருடங்கள் முன்பு கெசட் நோட்டிபிக்கேசன் செய்த விடயத்தை(ஒணம்,பொங்கல்,விநாயகர் சதுர்த்தி,தசரா etc... are restricted holidays)என்ற உண்மை தெரியாமல் இன்றுள்ளவர்களை குறை கூறுவது நாணயமற்றது.சுபவீயிடம் இதைத்தான் எதிர்பார்க்க முடியும்.

  ReplyDelete