தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday, 18 January 2017

பெரிய பாராட்டும் சின்ன நெருடலும்


இன்றைய இளைஞர்களின் சமூக அக்கறை, போர்க்குணம், அர்ப்பணிப்பு ஆகியன நம்மை வியக்க வைக்கின்றன. சமூக வலைத்தளங்களின் வலிமையை நாடே இப்போது உணர்ந்து கொண்டுள்ளது. சல்லிக்கட்டிற்கு ஆதரவாகத் தமிழக இளைஞர்கள் எல்லா ஊர்களிலும் இன்று ஒன்று திரண்டு நிற்கின்றனர். எந்த அடக்கு முறைக்கும் அஞ்சாமல் நிற்கின்றனர்.


சல்லிக்கட்டு பற்றிய நம் பார்வை நிலையானது. சங்க காலத்தில் ஏறு தழுவுதல் என்று   அழைக்கப்பட்ட அந்த வீர விளையாட்டு, நாயக்கர்கள் காலத்திற்குப் பிறகு சல்லிக்கட்டு ஆயிற்று. காளை  மாடுகளின் கொம்புகளில் சல்லிக் காசுகளைக் கட்டி அனுப்பியதால் அது சல்லிக்கட்டு ஆனது.  

        "கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையிலும் 
         புல்லாள் ஆய மகள்

என்று சொல்லும் நம் பழந்தமிழ் இலக்கியமான முல்லைக் கலி அந்த வீர விளையாட்டில் விலங்குகள் வதை ஏதுமில்லை. காளைகளின் கொம்புகள் குத்தி நம் இளைஞர்கள் பலர் ஆண்டுதோறும் காயப்படுகின்றனரே என்பதால் அதுகுறித்த மறு ஆய்வு தேவை என்பதே நம் கருத்து. இன்று பல பாதுகாப்பு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதாலும், ஒட்டுமொத்த மக்களின் விருப்பம் அதுவாக இருப்பதாலும் நாமும் அதனை மதிப்பதே சரியானது.

ஏறு தழுவுதல் என்பது வீர யுகத்தின் விளையாட்டு. இன்று நாம் கணினி யுகத்தில் வாழ்கிறோம். ஆனால், இன்றைய பிள்ளைகளே, அன்றைய விளையாட்டை விரும்புகின்றனர் என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. ஆழ்மனத்தில் நம்மை அறியாமலே படிந்து கிடக்கும் தொன்மை, மரபு ஆகியனவற்றில் ஓர் இனத்திற்கு இருக்கக்கூடிய ஈடுபாட்டின் வெளிப்பாடே  இது.  மேலும், எங்கள் பண்பாட்டில் கைவைக்க வேறு எவருக்கும் உரிமையில்லை என்ற போர் முழக்கமும் இப்போராட்டத்தின் உள்ளடக்கமாக  இருப்பதைப்   பார்க்க முடிகிறது. இவை வரவேற்கப்பட வேண்டிய உணர்வுகளே

இந்தப் போர்க்குணம், 'நீட்' தேர்வு, புதிய கல்விக் கொள்கை போன்றனவற்றை எதிர்ப்பதிலும் வெளிப்பட வேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பு. கல்வியை, மத்தியப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்


இந்த சூழலில், என் போன்றவர்களுக்கு இருக்கும் சிறு நெருடலையும் இங்கு வெளிப்படுத்துவதே நேர்மையானது. எங்கள் போராட்டத்திற்கு எந்த அரசியல்வாதியும் வரவேண்டாம் என்று அந்த இளைஞர்களில் சிலர் கூறுகின்றனர். அனைத்து இளைஞர்களின் கருத்தும் அதுதானா என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் அது அவர்களின் உரிமை. அதில் நாம் குறுக்கிட முடியாது. ஆனாலும் ஒரு ஐயம் எழவே செய்கிறது. மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள், பொறுப்பாளர்கள் வரும்போது தங்கள் எதிர்ப்பைக் காட்டும் இளைஞர்கள், சீமான் வரும்போது மட்டும் ஏன் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை? அவர் அரசியல்வாதி  இல்லையா?.அல்லது அதற்குள் வேறு அரசியல் ஏதேனும் உள்ளதா


13 comments:

 1. யாம் காசுக்கு கூடிய கூட்டமில்லை,
  எம்மில் எள்முனையளவும் அச்சமில்லை,
  சட்டத்தை மதித்தே எம் போராட்டம்
  காந்திய வழி எம் போராட்டம்.
  எம் விளையாட்டுக்காக விளையாட்டாய் ஆரம்பித்தோம்,
  உம்மால் விளையாட்டையும் வரலாறாய் மாற்றிவிட்டோம்,
  பாய்து வரும் எம் காளையை அடக்க
  சட்டத்தை மதித்து அடங்கி நின்றோம்
  அடங்கிநின்றது பயந்து அல்ல.

  சூழ்ந்திருக்கும் இவ்விருள் போலே விடிந்தால் ஜல்லிக்கட்டு தடை நீங்கும் தன்னாலே!!!

  ReplyDelete
 2. அடுத்து ஆட்சிக்கு வரும் உயரத்தில் ஸ்டாலின் தான் இருக்கிறார் என்பதால் அவருக்கு அரசியல் இலாபம் இருப்பதாக கருதியிருக்கலாம்.மற்றவர்கள் அப்படியில்லையே

  ReplyDelete
 3. ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. நாட்டு மாடுகள் இனம் அழிவதற்கு நாமே காரணமாக இருந்து விட்டு வேற்று நாட்டவரை பழி போடுவதாக நாளிதழில் பார்க்க நேர்ந்தது. நாட்டு மாடுகள் பராமரிப்பு செலவு அதிகம் என்று அரசு அறிமுகப்படுத்திய ஜெர்சி மற்றும் எச்.எப் எனக்கூடிய கறுப்பு வெள்ளை நிறத்திலான கலப்பின பசுக்களை பயன்படுத்த ஆரம்பித்தோம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. சில சாதிகள் நடத்தும் ஜல்லிக்கட்டை ஒட்டு மொத்த தமிழர்களின் பிரச்சினையாக பார்க்கலாமா என உங்கள் பதிவிலேயே ஏற்கெனவே சையத் அவர்கள் தனது கருத்தாக கேட்டுள்ளார்.

  அதனை விடுத்து முக்கிய பிரச்சனைகளும் உள்ளன. விவசாயிகள் கொத்து கொத்தாக உயிரை மாய்த்து கொள்ளாதது இதுவரை தமிழகம் பார்க்காது. இதற்கு இந்த இளைஞர்கள் சக்தி ஏன் சேர வில்லை. வயிற்றுக்கு உணவு முதலா அல்லது தோளுக்கு வீரம் முதலா என்பதை தமிழர்கள் முடிவு செய்ய வேண்டும். தமிழன் உணர்வு பூர்வமான பிரச்சனைகளில்தான் ஒன்று சேர்கிறான் போராடுகிறான். நாம் அறிவு பூர்வமாக இனையும் காலம் வரவேண்டும்.

  ReplyDelete
 4. "அரசியல்", எவ்வளவு பெரிய மேதையையும் சாக்கடையாக்கிவிடும். அதனால்தானோ என்னவோ தந்தை பெரியார், அதை உணர்ந்த பின், எப்போதும் அரசியலில் ஈடுபடவில்லை!! வாழ்க பெரியார்!! வாழ்க அவர் தொண்டு!!

  ReplyDelete
 5. It is because we know how Dravidian parties will ride on protesters back and will try reaping the yield !

  I hope and I dont pray, that Seeman will not do it !

  ReplyDelete

 6. கவனத்தில் கொள்ளவேண்டிய விடயம் !

  ReplyDelete
 7. மு. சந்தோஷ் குமார்18 January 2017 at 18:10

  உங்கள் ஐயம் கவனிக்க படவேண்டிய ஒன்று

  ReplyDelete
 8. I Support Jallikattu, at the same time i an ready to protest of Farmer's Death, Free education and again NEET exam. Seeman can't be the only reason for protests, there are other sources for student's feeling..

  ReplyDelete
 9. மிகவும் நுட்பமாக கவனிக்க வேண்டிய விடயம் அய்யா. அதிமுக மக்களில் இருந்து வெகுதூரம் உள்ள ஒரு கம்பனி போன்ற அமைப்பு. திமுகவிலும் அதுபோன்ற ஒரு காப்பரெட் தன்மை வந்துகொண்டிருக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது. மக்களோடு மிகவும் நெருங்கிய தொடர்புகள் திமுக தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் ஒரு காலத்தில் இருந்தது. தற்போது திமுகவின் CEO போன்று ஸ்டாலின் இருக்கிறார். ஏனைய கட்சிகள் போல திமுக ஒரு அரசியல் கட்சி அல்ல. அதன் தளம் என்பது சுயமரியாதை, பகுத்தறிவு திராவிட இயக்கம் சார்ந்தது. திமுகவின் அடித்தட்டு ஆதரவாளர்கள் அந்த கொள்கையின் காரணமகதான் திமுகவை ஆதரிக்கிறார்கள். ஆனால் அன்மைக்காலமாக அந்த தளத்தில் இருந்து இன்றைய திமுக கொஞ்சம் தூரததே விலகி செல்வது போல ஒரு தோற்றம் ஏற்படுவது கவலைக்கு உரியது. இப்போது உள்ள இரண்டாம் தலைவர்கள் எல்லாரும் ஸ்டாலின் ஆதரவாளர்கள் போல தெரிகிறது. அங்கு ஒரு கொள்கை சார்ந்த ஜனநாயகம் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இன்னும் சரியாக சொல்லப்போனால் குஷ்பூ,அழகிரி போன்றவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் மக்கள் மத்தியில் எப்படிப்பட்ட கருத்தை உருவாக்கி இருக்கும்? அழகிரியாலேயே ஸ்டாலினுக்கு எதிராக ஒரு கருத்தை கூற முடியவில்லை என்றால் திமுகவின் அடிநாதமான ஜனநாயகம் எங்கே என்ற கேள்வி எழுகிறதல்லவா? குஷ்புவை ஏன் விரட்டினார்கள்? குஷ்புவின் செல்வாக்கு யாரை பயமுறுத்தியது? கன்மொழி ஒருவர்தான் அங்கு இப்போதும் கொஞ்சமாவது சுயமரியாதை கொள்கை பற்றியும் திராவிட இயக்க விழுமியங்களையும் கொஞ்சமாவது ஏற்று கொண்டவராக இருக்கிறார்.அதுவும் எத்தனை நாளைக்கோ?
  நீண்ட வரலாற்றை கொண்ட திராவிட முன்னேற்ற கழகம் வெறும் துதி பாடிகள் கூட்டமாக.. இன்னும் சரியாக கூறவேண்டுமானால் இன்னொரு அதிமுகாவாக மாறவேண்டுமா? நிச்சயமாக இனி அதிமுகாக்களுக்கு இடம் இல்லை என்றே தோன்றுகிறது. ஜல்லிகட்டு போராட்டத்தில் மக்கள் அரசியல் கட்சிகளை விட்டு வெகு தூரம் சென்றுவிட்டார்கள் போல தெரிகிறது.

  ReplyDelete
 10. It shows the trust that youngsters and village people having on seeman and distrust that people have on current dravidian parties and other parties,Sir btw i only cannot understand one thing about you,i watched all your speeches and read most of your posts and wanting to read your books,but despite being an intellect how can you support DMK ?!!! and in this protest,you can clearly see periyar's dream came true,people of tamilnadu have united in this protest as tamil's not as an caste or religion !

  ReplyDelete
 11. Mr/Ms anonymous, please look at seeman's career in politics. Initially, started as a Dravidian supporter, then went behind JJ. When the flood problem came into picture, he misjudged that he may surpass dmk and admk. But what happened? Not just seat, lost deposit in every place. Challenged directly with CPM in a tv debate that he will dissolve the party, if he gets lesser votes than cpm in at least one place. But got last place in every place, then went silent about the challenge. He gets sensitive info from Facebook and then talks about it in stage

  ReplyDelete
 12. But he is different !

  ReplyDelete
 13. மாணவர்களின் இந்த எதிர்ப்பு தவறான அனுகுமுறை அரசியல் இல்லாத பொது வாழ்வும் போராட்டமும் கிடையாது ஆட்சியை பிடிப்பதும் கட்ச்சி நடத்துவதும் மேட்டுமே அரசியல் கிடையாது என்பதையும் பெரியார் பின் பற்றிய பொது வாழ்வும் அரசியல் தான் என்பதை மாணவர்களும் இளைஞர்களும் விரைவில் புரிந்து கொள்வர்

  ReplyDelete