தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday 8 March 2017

வலி 2 – தேசத்தின் அவமானம்



ஜெய்பீம் மன்றம் சார்பில், எழுத்தாளர் ஜெயராணியின் அழைப்பை ஏற்றுச் சில மாதங்களுக்கு முன், சென்னை அண்ணா நகரில் ஒரு பள்ளியில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சிக்குச் சென்றபோது, அதன் முழுப் பரிமாணத்தை நான் அறிந்திருக்கவில்லை. அங்கே தோழர்கள் புனித பாண்டியன், மருத்துவர் தாயப்பன் உள்ளிட்ட நண்பர்கள் சிலரும், 20, 22 வயதில் ஏறத்தாழ 50 இளைஞர்களும், சில குறைந்த வயதுப் பிள்ளைகளும் இருந்தனர்.

மேலும் படிக்க
வலி 2 – தேசத்தின் அவமானம்

9 comments:

  1. வேதனையளிக்கும் ஒரு பதிவு. மனது கனக்கிறது. இத்தகைய கொடுமையிலிருந்து இந்தத் தலைமுறையிலாவது இம்மக்களுக்கு விடுதலை தேவை. அரசு , கட்சிகள், பொதுமக்கள் என அனைவரும் இணைந்து இந்த அவமானத்தை களைய இயன்றதை செய்ய வேண்டும்.

    ReplyDelete
  2. அவர்களது வாழ்க்கையில் ஒளி ஏற்றும் கருத்துக்கள் கூறி உள்ளீர்கள் அய்யா. இந்த எழுத்துகளை ஒவ்வொரு துப்புரவு தொழிலாளரும் படிக்க வேண்டும்.

    ReplyDelete
  3. கோவை ஆட்சியர் அலுவலக அறிவிப்பு குறித்து எழுதி இருக்கிறேர்கள். இதையும் கொஞ்சம் பாருங்கள்.

    -----------------------------------------------------
    பொது கழிப்பிடத்தை கைகளால் தூய்மை செய்து கவனம் ஈர்த்த ஐஏஎஸ் அதிகாரி பரமேஷ்வரன்!

    YS TEAM TAMIL
    MARCH 07, 2017

    0
    FACEBOOK
    TWITTER
    LINKEDIN
    REDDIT
    TUMBLR
    பரமேஷ்வரன் ஐயர், மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் செயலாளர். அண்மையில் அவர் கங்காதேவிப்பள்ளி என்ற வாரங்கல் மாவட்டத்தில் இருக்கும் பகுதியை பார்வையிடச் சென்றார். அங்கு இருந்த ஒரு பொது கழிப்பிட பள்ளத்தில் இருந்த மலக்கழிவை தன் கைகளால் அப்புறப்படுத்தி அந்த பகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் பரமேஷ்வரன்.


    பொதுவாக நம் நாட்டில் மலம் அள்ளுவோர் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களாகத் தான் இருக்கவேண்டும் என்றும் அவர்கள் பெரும்பாலும் கீழ் ஜாதி அல்லது ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற மனநிலையே இன்றும் உள்ளது. கைகளால் மலக்கழிவை அள்ளுவது சுகாதாரக் கேடான செயலாக கருத்தப்பட்டும், பரமேஷ்வரன் மக்களின் மனநிலையை மாற்றவே இந்த செயலை செய்ய முடிவெடுத்தார்.

    ’ஸ்வச் பாரத்’ திட்டத்தின் ஒரு பகுதியாக கங்காதேவிப்பள்ளிக்கு சென்ற பரமேஷ்வரன், பிப்ரவரி 18-ம் தேதி தன்னுடன் 40 அதிகாரிகளை உடன் அழைத்து சென்றார். அதில் UNICEF மற்றும் ஊரக மேலாண்மை துறைத் தலைமை செயலாளர்களும் அடங்குவர்.

    இந்த குழு அந்த இடத்தில் உள்ள இரட்டை குழி தொழில்நுட்பத்தை பற்றி ஆய்வு செய்ய அங்கு சென்றனர். இந்த தொழில்நுட்பமானது, மனித கழிவை, குறிப்பிட்ட காலத்தில் உரமாக மாற்றுவதன் மூலம் திறந்தவெளி கழிவுகளை தவிர்க்கமுடியும். அதிகாரிகள் அங்குள்ள மக்களிடம் இந்த தொழில்நுட்பத்தை பற்றி விளக்கினர். ஒவ்வொரு டாய்லெட்டிலும் இரண்டு பள்ளங்கள் தோண்டப்பட்டு, சிமெண்ட் செய்யப்படும். முதல் குழியில் மனித கழிவு நிரம்பியதும் அதை கிராமத்தினர் மூடிவிட்டு அடுத்த குழியை பயன்படுத்தவேண்டும். அந்த சமயத்தில் முதல் குழியில் இருக்கும் கழிவு, காய்ந்து, உளர்ந்து உரமாக மாறிவிடும். பின்னர் அந்த குழி ஆறு மாதங்களில் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் உபயோகத்திற்கு வரும். இந்த தொழில்நுட்பம் கங்காதேவிப்பள்ளியில் கடந்த 16 ஆண்டுகளாக பழக்கத்தில் உள்ளது.

    இதை பற்றி அறிந்த பரமேஷ்வரன், அதைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆவல் ஆனார். இது பற்றி ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் பேசிய இணை கலெக்டர் ப்ரஷாந்த் ஜீவன்,

    “நாங்கள் இந்த தொழில்நுட்பத்தை விளக்கிக் கொண்டிருந்த போது திடீரென பரமேஷ்வரன் அந்த குழி எவ்வாறு சுத்தம் செய்யப்படுகிறது என்று கேட்டார். குழியின் மூடியை திறந்து அதில் இறங்கி, காய்ந்து கிடந்த கழிவுகளை, உரமாக மாறியுள்ள அதை மண்வாரியால் அள்ளத்தொடங்கினார். எல்லாருக்கும் அதைக் கண்டு ஆச்சர்யம் ஆனது. பின் நாங்களும் அவருடன் கழிவை சுத்தம் செய்யும் பணியில் இறங்கினோம்,” என்றார்.

    பரமேஷ்வரன் செயலில் முதலில் இறங்கி எல்லாருக்கும் எடுத்துக்காட்டாய் இருந்து கழிவுகள் அள்ளுவதை எவர் வேண்டுமானாலும் செய்யலாம் என உணர்த்தியுள்ளார். நானும் அந்த உரமாகிப் போன கழிவை என் கைகளால் எடுத்தேன், அவமானப்படவில்லை என்றார் அவர் மேலும்"



    கட்டுரை: Think Change India
    ------------------------------------------------------
    இதே செய்தி குறித்த HINDUSTHAN TIMES செய்தி ஆங்கிலத்தில்

    htp://www.hindustantimes.com/india-news/senior-ias-officer-leads-by-example-cleans-toilet-pit-in-telangana-village/story-OC4foo7SB9uDcyfIgJxQjP.html

    ------------------------------------------------------

    ReplyDelete
    Replies
    1. மகேஷ் என்ன சொல்ல முயற்சிக்கறீங்க?

      Delete
    2. பல செய்திகள் நண்பரே.

      தூய்மை இந்தியா திட்டம் மூலம் கிராமப் பகுதிகளில் உள்ள உலர் கழிப்பறைகளை அகற்றி , நவீன கழிப்பறைகளை அமைக்க முயற்சி செய்யப் படுகிறது. இது முழுமை அடையும்போது மனித மலத்தை மனிதன் அகற்றும் இழிவு மாறும்.

      கோவை ஆட்சியர் அலுவலக அறிவிப்பு அதிகார வர்கத்தின் ஒரு முகத்தை வெளிப்படுத்துகிறது என்றால் , அதற்க்கு நேர் எதிரான அரசு அதிகாரிகளும் இந்த நாட்டில் இருக்கிறார்கள்.

      முன்னது 50 ஆண்டு திராவிட இயக்க ஆட்சி நடக்கும் நம் மாநிலத்தில். பின்னது தொடர்பற்ற வேறு மாநிலத்தில்.

      அதிகாரியின் பெயர் மூலம் தெரிய வரும் அவரது பின்னணி குறிப்பிடத் தக்கது. ஐயா தொடர்ந்து கட்டமைக்க முயலும் ஒரு பிம்பம் முற்றிலும் சரியல்ல என்பதற்கு இது ஒரு ஆதாரம்.

      ஐயாவைப் போன்ற அறிவாற்றலும் , கருத்துக்களை தெளிவாக எடுத்துரைக்கும் வல்லமையும் கொண்டவர்கள் , வெறும் எதிர் மறைக் கருத்துக்களை மட்டுமே பதியாமல் நேர்மறையாக நடக்கும் நிகழ்வுகளையும் பதிய வேண்டும் . இது அவருக்கு என்னுடைய பணிவான வேண்டுகோள்.

      Delete
    3. தனியார் அலுவலகங்களில் தமிழர்களை டேலண்ட் இல்லாதவர்கள் என்பது போல ஒரு மாயையை உருவாக்கி வெளி மாநிலத்துக்காரர்களை வளர்த்து விடும் பார்ப்பணர்களை தமிழனாக மாறச்சொல்லுங்கள் பிறகு பார்க்கலாம். எப்போதும் அவாளிடம் ஒரு தமிழ் திராவிட வெறுப்பு இருந்து கொண்டே இருப்பது உண்மை.

      Delete
    4. மகேஷ் அவர்கள் ஜோக்கர் திரைப்படத்தை பார்க்க வேண்டும். இதுபோன்ற ஆய்வு செய்ய உயர் அதிகாரிகளோ அ்சியல்வாதிகளோ வரும்போது என்ன நடக்கிறது என்பது தெளிவாக காட்டப்பட்டுள்ளது.
      நீங்கள் சொல்வது போல அந்த பார்ப்பண ஆட்சியர் கை கொண்டு மலத்தை அள்ளவில்லை. மாறாக, மண்வெட்டி கொண்டு உரமாகிப்போன மலத்தை அள்ளுகிறார். பேராசிரியர் சொல்வது, சாக்கடைகளை சுத்தம் செய்வது. நேரில் கண்ட அனுபவம் எனக்கு உண்டு. 20 அடி தூரத்தில் கூட என்னால் நிற்க முடியாத போது, அந்த துப்புரவு தொழிலாளர் அனாயாசமாக மலக்குட்டைபோலிருந்த பாதால சாக்கடையில் இறங்கி வெருங்கையால் அடைப்பை நீக்கினார். தன்வீட்டு கழிவரையை சுத்தம் செய்யவே "தோட்டிய கூப்பிடு" னு சொல்றவங்களுக்கு அவர்களின் வலியும் வேதனையும் புரியாது.

      Delete
  4. Azad பேராசிரியர் அவர்கள், சாக்கடை சுத்தம் பற்றி மட்டும் இல்லாமல், Dry latrine குறித்தும் எழுதி உள்ளார்.

    திரைப்படத்தை சுட்டுகிறீர்கள். நாம் நேரில் பார்ப்பது என்ன?

    50 ஆண்டு திராவிட ஆட்சி நடக்கும் நமது மாநிலத்தில் எத்தனை அதிகாரிகள் - மண்வெட்டி வைத்து என்றே எடுத்துக்கொள்ளுங்கள்- இது போன்ற செயலை செய்ய தயாராக இருப்பார்கள்?

    கீழ்க்கண்ட செய்தியையும் பாருங்கள்.

    http://www.thenewsminute.com/article/mother-all-solutions-karnataka-wants-legalise-manual-scavenging-avoid-deaths-58606

    இதற்கும் , திரு. பரமேஸ்வரன் அவர்களின் அணுகுமுறைக்கும் உள்ள வேறுபாடு புரியும்.

    ReplyDelete
  5. Ayya neengal thaivu seithu unnagaludaiya karuthugalai unnum unavai
    Pol ! annavaridamum kondu serungal naanum athai seiya murpadukiren ippadikku 22 vaiyathu ungaludaiya manavan !!!

    ReplyDelete