தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday 16 March 2017

இரோம் ஷர்மிளாவின் தோல்வியும் குற்றப் பின்னணியினரின் வெற்றியும்

     
2000 ஆம் ஆண்டு நவம்பர் 2 - 

        மணிப்பூர் மாநிலத்தில்  உள்ள மலோம்  என்னும் சிற்றூரில், காரணமின்றியும், கண்மூடித்தனமாகவும் பொது மக்களின் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிலர் இறந்து போனார்கள். அந்த மாநிலத்தையே அந்த நிகழ்வு உலுக்கியது. எனினும் சில நாள்களில் பலரும் அதனை மறந்து போனார்கள்.  ஆனால் ஒரு 28 வயதுப் பெண்ணால் அதனை மறக்க முடியவில்லை. அங்கு நடைமுறையில் இருந்த, இன்றும் இருக்கின்ற  ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் 1958 தான் காரணம் என்பதை உணர்ந்து, அதனை மத்திய அரசு திரும்பப்பெறும் வரை பட்டினிப்போர் நடத்துவேன் என்று சொல்லி, அவர் உண்ணாநிலைப் போராட்டத்தில் இறங்கினார்.  அந்த தியாகப் பெண்மணிதான் இரோம் ஷர்மிளா


     ஓராண்டு, ஈராண்டு அல்ல, மக்களுக்கான அந்த வீர மங்கையின் போராட்டம் 16 ஆண்டுகள் தொடர்ந்தது . மூக்கு வழியாகச் செலுத்தப்பட்ட திரவ உணவில் மட்டுமே உயிர் வாழ்ந்தார். போராட்டத்திற்கு அரசுகள் அசைந்து  கொடுக்காததால், மக்களைச் சந்திக்க முடிவெடுத்தார். நடந்து முடிந்த மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.  

       தங்களுக்காக 16 ஆண்டுகளாய்த் தன் இளமை, சுகம் எல்லாவற்றையும் துறந்து போராடும் அவருக்குப் பேரளவில் மக்கள் செல்வாக்கு இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் வாக்குகள் எண்ணப்பட்டபோது, அவர் 90 - வெறும் 90 - வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். இது ஷர்மிளாவின் தோல்வியன்று, மணிப்பூர் மக்களின் தோல்வி

       சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில், தனி மனிதர்களைப்  பார்க்காமல், கட்சி சார்ந்தே வாக்குகள் அளிக்கப்பட வேண்டும் என்பது சரியானதுதான். ஆனாலும், இரோம் ஷர்மிளா போன்றவர்களைத் தனித் தட்டில் வைத்தே எடை போட்டிருக்க வேண்டும்.

      இது ஒருபுறமிருக்க, குற்றவியல் பின்னணி கொண்ட பலரை மக்கள் தங்களின் தொகுதிகளில் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதும் வேதனைக்குரியதாகவே உள்ளது.  அண்மையில் வெளிவந்த புள்ளிவிவரம் ஒன்று, 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 186 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன என்று கூறுகின்றது. கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், பாலியல் வன்முறை போன்ற வழக்குகள் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் 63 பேர் பா... கட்சியையையும், 8 பேர் சிவசேனாவையும் சேர்ந்தவர்கள் என்கிறது அந்தக் குறிப்பு.   


      தமிழ்நாட்டில்,  பொதுவுடமைக் கட்சி வேட்பாளர்களில் கூட, குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள  தளி ராமச்சந்திரன் வெற்றி பெற முடிகிறது. மக்களால் பாராட்டப்படும் அய்யா நல்லகண்ணு வெற்றிபெற முடியவில்லை.,   

7 comments:

  1. இரத்தினவேல்16 March 2017 at 12:05

    விழிப்புணர்வு இல்லாத மக்கள் இனம் வீழ்ச்சியடையும்.

    ReplyDelete
  2. This is called mockery of democracy.To win election one badly in need of talent of crookedness.Mere good character and service knowledge are not sufficient to over come the public

    ReplyDelete
  3. மக்கள் இன்னும் முதிர்ச்சி வெற வேண்டும். ஓட்டுக்குக் காசு வாங்கும் வழக்கத்தை மாற்றிக் கொள்வது அவசியம். இளைஞர்கள் நோட்டா வுக்குப் போடுவதையும், ஓட்டுப் போடாமல் தவிர்ப்பதையும் நிறுத்தி தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு ஓட்டுப் போடவேண்டும். யாரையும் பிடிக்கவில்லை யெனில் சுயேட்சைக்குப் போட்டு அவரை ஊக்குவிப்பதே கூட நல்லதுதான்.

    ReplyDelete
  4. கறி கடைக்்காரரைத்்தான்் ஆடு நம்்பும்்.

    ReplyDelete
  5. Enge pogirathu naadu.. Nam makkalatchiyum kooda..

    ReplyDelete
  6. விழிப்புணர்வு ஏன் மக்களுக்கு வர மாட்டேன் என்கிறது. உலக விஷயங்களை தெரிந்து கொள்ளாமல் என்டெர்டெயின்மென்டிற்கு முக்கியத்துவம் தருகின்ற மக்கள் அதை ஊக்குவிக்கிற தொலைக்காட்சி சானல்கள் இருக்கிற வரை நம் மக்கள் இப்படித்தான் இருப்பார்கள். சீரியல் பின்னாடி போகும் பெண்களும் கிரிக்கெட் பின்னால் போகும் ஆண்களும் எப்படி இரோம் சர்மிளா மாதிரியானவர்களை தேர்ந்தெடுப்பார்கள். எல்லா தொலைக்காட்சி சானல்களும் பேசி வைத்துதான் அறிவு சார்ந்த யோசனையை தூண்டுகிற நிகழ்ச்சிகளை தர கூடாது என்று சொல்லி வைத்து பொழுது போக்கு நிகழ்ச்சிகளை வழங்குகிறார்களா என்று யோசித்தது உண்டு. சன் சானல்கள் எல்லாம் என்டெர்டெயினமெயன்ட் சானல்கள். அறிவு சார் நிகழ்ச்சிகளை என்டெர்டெயின்மென்ட் ஆக வழங்க முடியும். அதனை தொடங்கியது புதிய தலைமுறை. ஆனால் ஒரு அளவோடு அந்த சானல் நிறுத்திக்கொண்டது. என்டெர்டெயின்மென்டும் தராமல் அறிவுசார் நிகழ்ச்சிகளும் இல்லாமல் எதற்குமே லாயக்கில்லாத வசந்த் தொலைக்காட்சி மாதிரி சானல்கள் உண்டு. எவ்வளவோ வெளிநாடுகளில் இருந்து பாடம் கற்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. நீர் மேலாண்மை, குப்பைகள் மேலாண்மை, பிளாஸ்டிக், போக்குவரத்து மேலாண்மை, உட்கட்டமைப்பு, சாலைகள் திட்ட வடிவம் இப்படி பல உள்ளன. இந்த விஷயங்கள் எல்லாம் அடுத்த தலைமுறைக்கானவை. இவற்றை மக்கள் பார்த்தால் மேல்நாடுகள் போல நாமும் இதை எல்லாம் பெற வேண்டும என்று யோசிப்பார்கள். ஒரு வீட்டிற்கு 150 சானல்கள் வருகின்றன. ஒரு தமிழ் சானல் கூட இம்மாதிரி நல்ல விஷயங்களை சொல்லுவதில்லை. டிஸ்கவரி ஹிஸ்டரி சானல் நிகழ்ச்சிகளை என்று நம் மக்கள் பார்க்க ஆரம்பிக்கிறார்களோ அன்றுதான் இரோம் சர்மிளா போன்றவர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    ReplyDelete
  7. திராவிட தேசத் தந்தை பெரியார் அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை ஆதரித்தது இல்லை என்று நான் அறிந்த தகவல். அவர் தெளிவான கொள்கை வகுத்து மக்களிடம் சென்று அவர்களிடம் படாத பாடு பட்டு அவர்களை அணிசேர்த்து இயக்கம் கட்டி போராடினார் வென்றார். அதைப்போல மக்களிடம் ஒரு சங்கதியை கொண்டு சேர்க்கும் விதம் முக்கியமானது. காந்தி உண்ணாவிரதம் இருந்தால் நாடே கொந்தளிக்கும். அதற்கு முக்கிய காரணமாக நான் கருதுவது காந்தி புகழ்பெற்ற தலைவராக இருந்ததே. அதனால்தான் அவர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினால் பெரிய சங்கதியாக அது அன்று ஆனது. ஆனால் இரோம் ஷர்மிளா அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தோடு மேலும் மக்களிடம் பர்மாவின் ஆன் சான் சூ கி போலவோ மேற்கு வங்காள மமதா போலவோ பிரச்சனையை மக்களிடம் பேசி போராட்டம் நடத்தியோ ஒரு தெளிவான இயக்கம் நடத்தியோ போராடி இருந்திருந்தால் பெரும் அளவு மக்கள் செல்வாக்கு கிடைத்திருக்கும். அவர் தனக்கு ஆதரவாக மற்ற மாநில தலைவர்களையும் மக்களையும் காஷ்மீர் தலைவர்களையும்கூட சென்று சந்தித்து பேசி ஆதரவு தேடி இருந்திருந்தால் ஆதரவு பெருகி இருக்கும். அந்த குறிப்பிட்ட ராணுவ சட்டம் ஒழிய ஆதரவு தரும் கட்சிகளுக்கு அவர்கள் வெற்றி பெற நான் பிரச்சாரம் செய்வேன் என்று இறங்கி இருந்து இருக்க வேண்டும். தனி நபராக உண்ணாவிரதமிருந்து போராடியதை மக்கள் ஏற்க வில்லை. இரோம் ஷர்மிளா அவர்களின் உண்ணாவிரத போராட்ட வடிவம்தான் தொற்று உள்ளது. இலக்கு தோற்றதாக இரோம் ஷர்மிளா நினைத்து தேர்தலில் நிற்பதில்லை என்று முடிவு செய்தது தவறு. தனக்கு ஓட்டு போட்ட தொண்ணூறு பேருக்கு நன்றி தெரிவித்து அவர்களை அடையாளம் கண்டு ஓர் இயக்கமாக அவர்களை அரவணைத்து சாலையில் இறங்கி போராடவேண்டும். அவருக்கு துணையாக போராட நம்பகமான போராட்ட வீரர்களை உருவாக்கி இருக்க வேண்டும். வெளி மாநிலத்தினரானாலும் அவர்களையும் உடன் அழைத்து தனது இயக்கத்துக்கு வலு சேர்த்து போராடவேண்டும். ட்ரெண்ட் செய்து போராடவேண்டும். ஒரு குறிப்பிட்ட சங்கதிக்கும் மாத்திரமில்லாமல் சமூகத்தில் தீப் பற்றக்கூடிய வேறு சங்கதிக்கும் போராடவேண்டும். உலக அளவுக்கு ஆதரவு தேடும் வண்ணம் போராட்ட உத்தி வகுத்திட வேண்டும். அப்புறம் பாருங்க. மயிலே மயிலே என்றால் இறகு போடாது அல்லவோ.

    ReplyDelete