தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday, 7 April 2017

வலி 6 – அவர்கள் ‘சின்ன’ மனிதர்கள் இல்லை!


ஒரு கிராமத்திற்கு, ஒரு நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தபோது, என் உரை தொடங்குவதற்கு முன், சின்னச் சின்னக் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அவை தேர்ந்த கலைஞர்களால் நடத்தப்படவில்லை என்பதால், சிலருடைய பாடல்கள், நடனங்கள் ஆகியவை பெரிய அளவில் பாராட்டக்கூடியனவாக இல்லை. ஏதோ பரவாயில்லை என்னும் நிலைதான். ஆனால் ஒருசிலர் மிக நன்றாகவே தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். அவர்களில் ஒருவர் பெண். இயல்பான உயரத்தை விட மிகக் குறைவாக இருந்தார். 4 அடிக்கும் குறைவு. முதலில் சிறிய பெண் என நினைத்தேன். அருகில் அழைத்துப் பாராட்டியபோதுதான் அவருடைய வயது கூடுதலாக இருக்கும் என்பதை உணர முடிந்தது. நல்லா பாடுனேம்மாஎன்று சொல்ல வந்தவன், வயதைப் புரிந்துகொண்டு, “நல்லா பாடுனீங்கம்மாஎன்றேன். பாராட்டில்  அவர் மனம் மகிழ்ந்தாலும், சட்டென்று மாறியது. எங்க சார், என்னதான் நல்லா பாடுனாலும், என்னைப் பாடகின்னு யாரு சொல்றா, அதோ குள்ளச்சி போறான்னுதான் சொல்றாங்கஎன்றார். இந்த நிகழ்வு நடைபெற்றுச் சில ஆண்டுகள் ஆகிவிட்டன.  ஆனால் அந்தப் பெண்ணின் வலி நீண்ட நாள்களாக என் நெஞ்சில் தங்கிக் கிடக்கிறது.

மேலும் படிக்க


5 comments:

  1. அருமையான கருத்துகள். அன்பால் சுற்றி உள்ள மனிதர்களை பார்க்கும் உங்களை போன்றவர்களை பற்றி தமிழக மக்கள் பேசாமல் நடிகர்களை பற்றியே எப்போதும் பேசுகிறார்கள்.அவர்களது எல்லா இன்றைய வருங்காலத்திய துன்பங்களுக்கும் காரணம் அதுவே ஆகி விடுகிறது.உங்களை போன்றவர்கள் பெரும் தலைவர்களாக இல்லாமல் இருப்பது தமிழர்களுக்கு இழப்பே

    ReplyDelete
  2. கண்களுக்கு புலப்படும் உருவத்தை அழைப்பது , சிந்தனையால் அவர்களின் திறனை பார்ப்பதை விட , பல பேருக்கு எளிமையாக இருப்பதால் வரும் விளைவுகள் ...

    ReplyDelete