தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 15 April 2017

தரமற்ற தாக்குதல்கள்

தமிழகத்தில் கடந்த 50 வருடங்களாக அரசியல் சீரழிந்து விட்டது, அரசியல் நாகரிகம் அற்றுப் போய்விட்டது என்று குற்றம் சாற்றுவது இப்போதெல்லாம் ஒரு பழக்கமாக ஆகிவிட்டது. ஐம்பது என்னும் ஆண்டுக்கணக்கில் ஓர் அரசியல் இருப்பதை நாம் அறிவோம்.அறிஞர்  அண்ணா முதல்வராகப் பதவியேற்று 50 ஆண்டுகள் ஆகின்றன என்பதை வைத்தே இந்தக் கணக்கு சொல்லப்படுகின்றது. அதாவது திராவிடக் கட்சிகள்தான் சீரழிவிற்குக்  காரணம் என்பது இதன் உட்பொருள். இதனைப் பல இடங்களில் பா...வினர் முன்மொழிகின்றனர், போலித் தமிழ்த் தேசியர்கள் வழிமொழிகின்றனர்.


'வடநாட்டில் எல்லாம் அப்படியில்லை' என்று வேறு இடையிடையே சொல்லிக் கொள்கின்றனர். அங்குதான், மம்தா பேனர்ஜி தலைக்கு விலை வைக்கிறார் ஒருவர்.பாரத மாதாக்கி ஜே  என்று சொல்லவில்லையானால் தலையை வெட்டி விடுவேன் என்கிறார் ஒரு பா. சட்டமன்ற உறுப்பினர். நாகரிகமான அரசியலின் அடையாளங்கள் இவ்வரிகள்.  

தமிழ்நாட்டில் இவர்கள் காலூன்றினால் மிகக் கொடுமையான, வன்முறை நிறைந்த அரசியல்தான் வளரும். அண்மைக்காலமாக டுவிட்டரில் எனக்கு வருகின்ற மிரட்டல்கள், நாகரிகமற்ற வசை மொழிகள் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்ள வேண்டிய  தேவை உள்ளது. ஏதோ ஒரு பெயரில் அனுப்புகின்றனர். எனினும் அவர்களின் மின் அஞ்சல் முகவரிகள் உள்ளன. காவல்துறை நினைத்தால் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள ஒரு கட்சியைச் சார்ந்தவர்கள் மீது அப்படியெல்லாம் ஏதும் செய்துவிட மாட்டார்கள் என்பதால், அவர்களிடம் போவதை விட, மக்களிடம் செல்வதே பயனுள்ளது என்று கருதுகின்றேன். 



அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளன்று, "இந்துவாகப் பிறந்தேன், இந்துவாகச் சாக மாட்டேன் என்ற தன் உறுதியை நிறைவேற்றிய சமூக நீதிப்  போராளி அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் வாழ்த்துகள்" என்று நான் ஒரு பதிவை விட்டிருந்தேன். அதற்கு வந்துள்ள  பின்னூட்டங்களில் சிலவற்றை  அவர்களின் பெயர்களோடு கீழே தருகின்றேன். 

1. ஹரிஹரன் முத்து - யோக்கியனாய்ப் பிறந்தேன், அயோக்கியனாய்த்தான் சாவேன். இப்படிக்கு திராவிடக் குஞ்சுகள் 

2.ரமேஷ் பழனிச்சாமி - சமூக நீதி காத்த வெங்காயங்களே, நீங்க சோறுதான் திங்கிறீங்க கிறது உண்மைதானா? 

3. சோழன் - சொரியாரிஷ்டா பொறந்தவனே, இந்துவாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டுருக்கான். இதுக்கு நாலு பேரோடத வாங்கி மடக்கு மடக்குன்னு.....(இதற்கு கீழே அய்யா ஆசிரியரின் படம்)

4.அருண் -  டேய் பொட்ட, change your name to suba.pee   

5. முத்தையா பாலன் - அவர் சொன்னது வேற ஏதும் ஞாபகம் வல்லையா  எச்சக்கட நாயே...

 மேலே உள்ளவை சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. ஒவ்வொரு முறை நான் பதிவிடும்போதும் இது போன்ற வசைமொழிகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. இவற்றைத் தாண்டி அம்பேத்கர் பிறந்தநாள் வாழ்த்துகளுக்கு எதிர்வினையாக,  , இளம்பரிதி என்னும் ஒருவர், "உன்னுடைய சாவுக்காக காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.  அவருடைய பெயருக்கு அருகில் அவருடைய படத்திற்குப் பதிலாக ஒரு காவிக்கொடி பறக்கிறது. 



இவர்களின் வசைமொழிகளைக் கண்டு அச்சப்பட்டு இவற்றை இங்கு நான் வெளியிடவில்லை. திராவிடக் கட்சிகள்தான் அரசியல்  நாகரித்தைக் கெடுத்துவிட்டன என்று  குற்றம் சாற்றுவோரின் 'நாகரிகம்' என்ன என்பதை எடுத்துக் காட்டவே இப்பதிவு! அரசியலற்ற அநாகரிக, வன்முறை நிறைந்த இந்த  நிலை, பா.ஜ.க வின் வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்தது என்பதை விளக்கவும் இப்பதிவு பயன்படும். 

என் சாவுக்குக் காத்திருக்கும் நண்பருக்கு ஒரு செய்தி - எனக்குச் சாவு வரும்போது உங்களுக்கு என் நண்பர்கள் கண்டிப்பாகச் செய்தி அனுப்புவார்கள். உங்களுக்கு எப்போதேனும் வாழ்வு வந்தால் எங்களுக்குச் சொல்லி அனுப்புங்கள்.  -சுபவீ  

23 comments:

  1. Sir
    Don't worry. Don't let down at any movement. You are the representative of lakhs and lakhs people like me. You are a great social reformer. You are a real social fighter. You are not a coward like these kind of idiots. You are a genius. You are a great inspiration and reference for the future generation. So keep doing your good work and keep rocking...
    சாமியையும், வானதியையும், எச் ராஜாவையும் ஓட ஓட விரட்டியடியடித்த வீரர் நீங்கள்...
    I LOVE YOU SIR....

    E. KUMAR,
    CHENNAI,
    9176692765.

    ReplyDelete
  2. வன்மையாக கண்டிக்கின்றோம்.
    பேராசிரியர் சுபவீ அவர்கள், மிகவும் பழுத்த திராவிட கருத்தியலை பொதுமக்களிடம் பரப்புவதிலும், சமூகநீதி கோட்பாட்டை தாங்கிப்பிடிப்பதிலும் இடைவிடாது உழைப்பவர், தி.க. வையும் தி.மு.க வையும் இரு கண்களாய் பார்ப்பவர் இவரை தமிழ்நாட்டில் தெரியாதவர்கள் யாருமிலர்...
    இவரின் கருத்துக்களுக்கு இணையதளத்தில் கொச்சையாகவும் ,கேவலமாகவும் , நாகரீகமற்ற, பதில்களாக சிலர் பதிவிடுகின்றனர் இது மிகவும் கண்டிக்கத்தக்கது.. ஒரு சமூக போராளியிடம் கருத்தியலாக மோதுவதில் தவறில்லை. ஆனால் அநாகரீகமற்ற வார்த்தைகளால் தாக்குவது அறம் சார்ந்த செயலன்று, அவரின் பேச்சுக்களில் ஒரு தன்மை இருக்கும் , "யாகாவராயினும் நா காக்க" என்ற ஐயன் வள்ளுவன் குறளிற்கு ஏற்ப எப்போதும் யாரையும் காயப்படுத்தாது பேசுவார். அனைவரிடமும் அன்போடுதான் உரையாடுவார், ஆனால் அவரினுள் ஒளிந்திருக்கும் போர் குணம் பலபேருக்கு தெரியாது, இன்று ஈழத்தில் போர் முடிந்து பல வருடங்களாகிறது ஈழத்தை பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம் தவறில்லை.. ஆனால் தமிழகத்தில் ஒரு காலத்தில் ஈழத்தை பற்றி யாரும் பேச இயலாது. அப்போதே அவர் விடுதலை புலிகளுக்கு ஆதரவாய் குரல் கொடுத்து பொடா வில் சிறைவாசம் அனுபவித்தார், தொலைக்காட்சி விவாதங்களில் இவரிடம் பலரும் தோர்ப்பதை, நாம் வாடிக்கையாக பார்க்கலாம், பொருக்கி சுப்பிரமணியசாமி போன்ற பா.ஜ.க தலைவர்களையே ஓடவைத்தவர்..
    திராவிட இயக்கங்கள் ஆரம்பித்த போது தமிழ்நாட்டில் கருத்து சுகந்திரம் என்பது அறவே இல்லை, தந்தை பெரியார் மேல் செறுப்பு வீசப்பட்டது நாம் அனைவருக்கும் தெரியும், அதே போல் எம்.ஆர்.ராதா, பட்டுக்கோட்டை அழகிரி, தலைவர் கலைஞர் வரை எப்போதும் எதிர்ப்புகளை நோக்கியே பயனம் செய்தவர்கள் ஆனால் இன்றைய நிலை அப்படியல்ல கருத்து சுதந்திரமென்பது அனைவருக்கும் இருக்கிறது, யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசலாம், வசைபாடலாம் என்ற அளவிற்கு இருக்கிறது, இனையதளத்தில் நம்முடைய அடையாளம் தெரியாதென்பதால் எவர்வேண்னுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வசைபாடலாம் என்று ஆகிவிட்டது போல ,. இதோ பேராசிரியரின் மேல் டிவிட்டரில் வசைமாறி பொழிந்ததில் ஒருசில
    1. ஹரிஹரன் முத்து - யோக்கியனாய்ப் பிறந்தேன், அயோக்கியனாய்த்தான் சாவேன். இப்படிக்கு திராவிடக் குஞ்சுகள்

    2.ரமேஷ் பழனிச்சாமி - சமூக நீதி காத்த வெங்காயங்களே, நீங்க சோறுதான் திங்கிறீங்க கிறது உண்மைதானா?

    3. சோழன் - சொரியாரிஷ்டா பொறந்தவனே, இந்துவாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டுருக்கான். இதுக்கு நாலு பேரோடத வாங்கி மடக்கு மடக்குன்னு.....(இதற்கு கீழே அய்யா ஆசிரியரின் படம்)

    4.அருண் - டேய் பொட்ட, change your name to suba.pee

    5. முத்தையா பாலன் - அவர் சொன்னது வேற ஏதும் ஞாபகம் வல்லையா எச்சக்கட நாயே...

    இதையெல்லாம் தான்டி , இளம்பரிதி என்னும் ஒருவர், "உன்னுடைய சாவுக்காக காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். இதே போல் தான் சில மாதங்களுக்கு முன்பு சீமான் இவரை கத்தியால் குத்துவேன் என்று கூறியிருந்தார் .....,,, எங்கள் சுபவீ ஐயாவை எளிதாக என்னாதீர்கள் பேரறிஞரின் கனிவை காட்டும் அவருக்கு , பெரியாரின் துணிவை கொண்ட மற்றொரு முகமும் இருக்கிறது ..ஆனால் அதற்கு தேவையில்லை அவருக்கு ஆதரவாக தம்பிப்படை எப்போதும் துணை நிற்கும்,. என்னேரமும் "வசவாளர்கள் வாழ்க" என்று கூறவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை..

    - syed

    ReplyDelete
    Replies
    1. கண்டனத்திற்கும் வேதனைக்கும் உரியது. இருப்பினும் இது போன்ற வீணர்களை தாங்கள் பொருட்படுத்த வேண்டாம்.

      Delete
  3. கெட்டுப் போனதிடம் நறுமணத்தையா எதிர்பார்க்கவா முடியும் அதுபோல சிலதுகள்...
    உங்களால் இந்த நாடு பெற வேண்டியவை ஏராளம்

    ReplyDelete
    Replies
    1. அருமையாக சொன்னீர்

      Delete
  4. சுப.வீ.அவர்கள் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதேல்லாம் திராவிட கருத்தியிலை முன்னேடுத்து செல்லகூடியவர் இந்த பதிவும் திராவிட அரசியல் தான் சமுகத்தை சீரழித்தது என்று கூப்பாடு போடுபவர்களுக்கும் அதை அப்படியே வழி மொழியும் ஊடகங்களுக்கும் பதிலாக திராவிட எதிர்பாளர்களின் யோக்கியதையும் , அவர்கள் அரசியலில் கருத்துக்களை எதிர்கொள்ளும் விதத்தை வெளிபடுத்தவே இந்த பதிவை பயண்படுத்தியிருப்பார், மற்றபடி எவறை கண்டும் எத்தகைய விமர்சணங்களை கண்டும் அஞ்சுபவர் அல்ல சு.ப.வீரபாண்டியன் அவர்கள்

    ReplyDelete
  5. இரத்தினவேல்15 April 2017 at 14:37

    அநாகரிகர்கள், அரசியல் நாகரிகம் பற்றிப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. கருத்துக்களுக்கும், விமர்சனங்களுக்கும் முகம் கொடுக்க முடியாதவர்கள், வசவுகள் மூலமும், வன்முறை மூலமும் வாயை அடைக்கலாம் என்று நினைக்கிறார்கள். இதனால் அவர்கள் சமூகத்தின் முன் அம்பலப்பட்டுப் போவதைத் தவிர தமிழ்நாட்டில் வேறெந்த விளைவும் ஏற்படப் போவதில்லை.

    ReplyDelete
  6. Agazhvarai thangum nilampola thammai egazhvar poruthal thalai enra Kural than Niyabagam varuthu.
    If these people are really treating other human being as similar to them,then there won't be these type of differences.These people's superiority culture and conspiracy was so powerful for the fast four thousand years and their bad wings are being tamed by you and your organisation which could not be digested to the wrong doers.Either these rogues have to mend their ways or end their days

    ReplyDelete
  7. அவர்களின் தரம் , தகுதி அவ்வளவு தான் அய்யா , வேலை அற்ற வீணர்கள் மூளையற்ற வார்த்தைகள் அவை

    ReplyDelete
  8. நாகரீகம் தெரியாத முட்டாள்கள் பேசுகிறார்கள் ... கண்டுக்காதீங்க

    ReplyDelete
  9. இது போன்ற செயல்கள் கண்டிக்கத் தக்கவை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் ஏதோ BJP ஆதரவாளர்கள் / தமிழ் தேசிய இயக்கத்தினர் மட்டுமே இதை செய்வது போன்ற தோற்றத்தை நீங்கள் நிறுவ முயற்சி செய்கிறீர்கள்.

    திராவிட இயக்கத்தினர் , BJPயை சேர்ந்த பெண் தலைவர்கள மீது செய்த 'கண்ணியமான' விமர்சங்கள் கீழே தருகிறேன்.

    . இன்னும் சீமான் மற்றும் BJP ஆண் தலைவர்கள் மீது வீசப்படும் இழி சொற்கள் அச்சில் ஏற்றப்பட்ட முடியாதவை என்பதால் நான் இங்கே மீள் பதிவு செய்வதை தவிர்க்கிறேன்.

    .................................................
    LOVE SAINT‏ @LOVESAINTNARUN 23h23 hours ago
    Replying to @drtamilisaibjp
    மொதல்ல போயி மயிரை ஒழுங்கா சீவுடி மயிராயி

    திருந்தாதவன்‏ @m2010_suresneha 20h20 hours ago
    More
    Replying to @VanathiBJP
    புத்தாண்டு வாழ்த்தாம்ல போவியா அங்கிட்டு கக்கூசு போற இடத்துலவந்து கலவரம் பண்ணிகிட்டுருக்க.
    ......................................................
    எனவே சுபவீ அவர்களே, உங்கள் கண்ணிலுள்ள உத்திரத்தை முதலில் எடுங்கள். பிறகு மற்றவர் கண்ணிலுள்ள தூசியைப் பற்றி பேசலாம் .

    ReplyDelete
  10. தரமற்ற முறையில் கேவலமான வார்த்தைகளால் விமர்சனம் செய்பவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு கட்சியின் உறுப்பினர்களாகத்தான் இருப்பார்கள் என்று இல்லை தனி நபர்களும் இது போன்ற தரமற்ற முறையில் விமர்சனம் செய்கிறார்கள். அவர்களுக்கு தனக்கென்று ஓர் எண்ணஓட்டம் கொண்டுதான் இதுபோன்று தாக்குதல்கள் செய்கிறார்கள். அவர்கள் கட்சிக்கு அப்பாற்பட்டு இருந்துதான் இதை செய்கிறார்கள். அவர்கள் யாருக்கும் நண்பர்களில்லை. ஆகவே தரமற்ற முறையில் தாக்குதல் தொடுப்பவர்கள் தங்களிடம் கருத்து சரக்கு இல்லாமையை அதன்மூலம் காட்டிக்கொடுத்துவிடுகிறார்கள் அல்லது சகிப்புடன் பேசும் மனப்பான்மையை கொண்டிருக்காதவர்களாக இருப்பார்கள் அவ்வளவுதான்.

    ReplyDelete
  11. Hi subavee sir, We no need to bother about them who reply those kind of words.. I think they need moral education..

    ReplyDelete
  12. ஒவ்வொருவரும் தங்களிடம் என்ன உள்ளதோ அதைதான் வெளிக்காட்டுவார்கள்! காவிகளிடம் இருந்து நல்லதை எதிர்பார்க்க முடியாது! ஆனால் உங்களைப் போன்ற அரசியல் செல்வாக்கு பெற்ற பிரபலங்கள் கூட இவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்னும் நிலையில் தான் இந்திய ஜனநாயகம் இருக்கிறதென்பது வருத்தமளிக்கிறது!!! உங்களுக்காக இல்லாவிட்டாலும் கண்டபடி பேசினால் தண்டனை கிடைக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தவாவது இவர்களுக்கு தண்டனை வாங்கி தாருங்கள்!!!

    ReplyDelete
  13. வணக்கம் ஐயா.

    அவர்களின் அறியாமையை நினைத்து வருந்துகிறேன்.

    ReplyDelete
  14. பிணம் தின்னும் ஓனாய்களிடம் வேற என்ன எதிர்பக்க முடியும்.

    ReplyDelete
  15. எதிலும் எதிர்மறையாக சிந்திக்கும் சிலர் இப்படி செய்கிறார்கள். எதெற்கெடுத்தாலும் அடுத்தவர் மேல் குறை சொல்லும் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் ஒன்று மாற்றி ஒன்று என்று போய்க்கொண்டே இருக்கிறார்கள். யாரிடமும் நேர்மறை விஷயங்களோடு அனுகுவதே நல்லது. ஒவ்வொரு இயக்கத்திடம் இருந்தும் நல்ல கெட்ட விஷயங்கள் இருக்கின்றன. இந்த இரண்டையும் பேசிவிட்டு போவதுதான் ஆரோக்கியமான மனநிலை உடையவர்களுக்கு அழகு. நல்லதை பாராட்டியும் தனக்கு ஒத்து வராததை ஆரோக்கியமான விமர்சனம் செய்து விட்டு என்ன செய்யவேண்டும் என்ற தங்கள் எண்ணத்தை எழுதலாம். ஆனால் அவர்கள் அப்படி செயவதில்லை. யாரையாவது குறை சொல்லியே பழகி விட்டார்கள். இவர்கள் திருந்துவதற்கு நாளாகும். நாம்தான் இவர்களை அடையாளம் காண வேண்டும் . பிறகு இவர்கள் இப்படித்தான் செய்வார்கள் என்று ஒதுங்கி விட வேண்டும்.

    ReplyDelete
  16. ஐயா ,

    இவர்கள் எல்லாம் ஜாதி வெறி & மத வெறி புடித்த மிருகங்கள் ....நாம் மனிதர்களை பற்றி கவலை படுவோம், இந்த மாதிரி அசிங்கம் ....பிடித்தவர்களை நாம் வளர விட கூடாது ...

    Paul

    ReplyDelete
  17. Ayya, I agree that it's to be condemned to use filthy language against anyone in the cultured society. But please maintain your balance too. You're trying to name anyone who uses such filthy language are from BJP or an Hindu. I'm not supporter of BJP either. But you should not become too narrowed to blame blankly. Ambedkar was a legend and it doesn't mean that whatever he did was beyond questions. I respect you always for your poetry and sensible talks. You are free to be an athiest. But, it's better and good for your stature by not insulting whoever an thiest. Ambedkar did so many great things. But you selectively picked the conflicting one with the intention of belittling the people who believe in Hinduism. This is absurd! Anti-Hindutva is as bad as pro-Hindutva.

    ReplyDelete
  18. Modi said:Valmikis clean human wastes willingly on their own thinking the job is the service to the entire society and gods.They must continue it.Is Modi pro hinditwa or anti hindutwa

    ReplyDelete
  19. I remember the film song
    ... kannagi ingu vanthal kannadikkum koottamunga... pl leave it.

    ReplyDelete
  20. போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித் தூற்றுவார் தூற்றட்டும். தங்களின் செயற்கரிய தொண்டினை விடாது தொடர்ந்து கொண்டிருங்கள்.

    ReplyDelete
  21. மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆனால். நாம் சரியாக பயணிக்கிறோம் என்பது புரிகிறது. கருத்துகளுக்கு பதில் சொல்ல த்ராணியற்று, வெற்று கூச்சல். இச் சொற்கள் உங்களுக்கு வலிக்காமல் இருக்கலாம். நாங்கள் இன்னும் பக்குவப்படவில்லை, அதனால், இன்னும் தீவிரமாக எங்களை தயாற்படுத்திக்கொள்வோம்

    ReplyDelete