தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday, 27 August 2017

ஏ......தாழ்ந்த தமிழகமே!


பழங்காலத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் குறித்துப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், 

           "பரமசிவன் அருள்புரிய வந்துவந்து போவார் 
           பதிவிரதைக்கு இன்னல்வரும் பழையபடி தீரும்" 

என்று கேலியாக எழுதுவார். இன்று தமிழ்நாட்டின் அரசியல் நிலை அப்படித்தான் இருக்கிறது. தமிழகத்தின் ஆளுநர், ஆளுங்கட்சிக்கு அருள்புரிய அவ்வப்போது வந்து வந்து போகின்றார்.   பி எஸ் - பி எஸ் ஆகிய பதிவிரதைகளுக்கு அவ்வப்போது இன்னல் வருகிறது. பழையபடி தீர்கிறது!


ஒருவரைப் பார்த்து ஒருவர் 420 என்று தீட்டித் தீர்த்துக் கொள்கிறார்கள். இது ஊழல் ஆட்சி என்கின்றனர். மறுநாளே இது அம்மாவின் ஆட்சி என்று கூறுகின்றனர். (இரண்டும் ஒன்றுதான்  என அவர்களுக்குத்  தெரியும்தானே!)

சட்டமன்ற உறுப்பினர்கள் சுற்றுலா விடுதிகளில் வெளியூர்களில் தங்க வைக்கப்படுகின்றனர். அன்றாடம் ஒரு சட்டமன்ற உறுப்பினராவது அணி மாறுகிறார். பெரும்பான்மையை இழந்து ஆட்சி இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் சட்டமன்றத்தைக் கூட்டுங்கள் என்று எதிர்க்கட்சிகள் எழுப்பும் கோரிக்கை எவர் காதிலும் விழுவதில்லை.

முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லை என்று ஆளுநரிடம் சொன்னதற்காக, 19 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்கிறார் ஆளுங்கட்சிக் கொறடா. அவர் பொழுதுபோகாத நேரத்தில் சட்டமன்ற விதிகளை ஒருமுறை படித்தால் நல்லது. 

இத்தனை குழப்பங்கள் நாட்டில் நடந்து கொண்டுள்ளன. தமிழகம் தாழ்ந்து தாழ்ந்து போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் நம் பிரதமர் மோடி சொல்கிறார், "தமிழகம் சரியான பாதையில் போய்க் கொண்டிருக்கிறது. இனிமேல் தமிழகம் வளர்ச்சியின் உச்சத்தை எட்டும்."

ஐயோ, இதற்கு மேலும்  வேறு உச்சம் இருக்கிறதா? 


3 comments:

 1. பார்ப்பணர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்ட சாதிகளை அல்லது ஒரு சாதியிலேயே எந்த பிரிவு அப்படி இருக்கிறது என்று தமிழக மக்கள் அறிய வேண்டும். திருமாவளவன் ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் மத்திய அரசின் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள் என்கிறார். குறிப்பாக பன்னீர்செல்வம் ஆட்சியிலும் கட்சியிலும் கிட்டத்தட்ட தலைமைப்பொறுப்பில் இருக்கிறார். இவரை வைத்துதான் தமிழகத்தை பாலைவனமாக்கும் நாசகார திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு துடிக்கிறது. இந்த நேரத்தில் தினகரனின் செயல்பாடுகளை மற்ற கட்சிகளின் கருத்துகளை நாம் பார்க்க வேண்டும். திருமாவளவன் அவர்களின் பேட்டியை பார்க்கும் போது எந்த அளவுக்கு அவர் தினகரன் அவர்களின் அரசியல் வரவை எதிர்பார்க்கிறார் என்பது புரியும். ஒரு தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று எந்த தமிழகத்தை சேர்ந்த தலைவரும் சொன்னது கிடையாது. இது இந்திய அளவில் ஒரு புதிய வழியை காட்டி இருக்கிறது. ஆனால் திருமாவளவன் அவர்களுக்கும் தெரிகிறது அது சந்தர்ப்பவச பேச்சுதான் என்று. இருந்தாலும் அவர் தினகரனை வரவேற்கிறார். ஏனென்றால் தலித் முதலமைச்சர் வர வேண்டும் என்ற தினகரனின் துணிவு இதுவரை எந்த தலைவருக்கும் இல்லை. அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றுகிறேன் என்று சொல்லி கட்சி ஆரம்பித்து அவர்களை ஓட்டு வங்கியாக பயன்படுத்தும் ஏமாற்றுக்காரர்களை விட தினகரன் எவ்வளவோ உயர்ந்து விட்டார். மாபியா என்று ஜெயலலிதாவால் பழிச்சொல் உருவாக்கப்பட்ட அந்த குடும்பம் தமிழகத்தை சீர்பட வழிநடத்தும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. ரவிகுமார்30 August 2017 at 23:56

   திராவிடகட்சிகளின் ஆதரவான சகுனிக்கள் ஒரு தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று மூச்சு கூட (உளப்புர்வமாக) விடமாட்டார்கள்!.அதே போல திமுக தலைவராக,செயல்தலைவராக, பொதுச்செயலராக,பொருளாளராக வந்ததும் இல்லை! வரப்போவதும் இல்லை!!.இந்துத்வா பேசும் 1984ல் வந்த பாஜகவில் கூட தேசிய,மாநில தலைவராக(பங்காரு,கிருபாநிதி) 15 ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டார்கள்; இப்போது குடியரசு தலைவராகவும் ஆக்கி விட்டார்கள்!.ஆனால் திராவிடத்துவா பேசும் 1948ல் வந்த திமுகவில் இன்று வரை அது நடக்காதது வேதனையானது.பாஜகவின் Tokenism என்று சுபவீ வாதம் செய்து ஒதுக்கி தப்பித்துக்கொள்ளக்கூடும்.70ஆண்டுகள் பழமையான திமுகவில் அதே Tokenismக்காக கூட அது நடக்காது அய்யா!.

   Delete
 2. "உ" விற்கு பதில் "எ" - சரியான எழுத்தாக இருக்கும்.

  ReplyDelete