தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday, 17 September 2017

26 ஆண்டுகளுக்குப் பின் கூடு திரும்பியுள்ளது ஒரு பறவை!


பேரறிவாளன் - 26 ஆண்டுகளுக்குப் பின் தன்  வீட்டிற்கு வந்துள்ளார். அதுவும் நிரந்தரமாக இல்லை, ஒரு மாத விடுப்பில்! தன் இளமைக் கால வசந்தம் முழுவதையும் சிறை நெருப்பில் சிதைத்துவிட்டு, இன்னும் முழு விடுதலை பெறாமல், பரோலில் தன் சொந்த ஊரான சோலையார்ப்பேட்டை வந்துள்ள பேரறிவாளனை, 14.09.2017 காலை,  தி.இ.த. பேரவையின் பொதுச்செயலாளர் சுபவீ, துணைப்பொதுச்செயலாளர் சிங்கராயர்,  அவைத் துணைத் தலைவர் மா.உமாபதி, எழுத்தாளர் இரா. உமா ஆகியோர் சென்று சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக உரையாடினர். 


காலம் மாறும், சிறைக் கதவுகள் நிரந்தரமாகத் திறக்கும், முழு விடுதலை பெற்று வீடு திரும்புவார் பேரறிவாளன் என்ற நம்பிக்கையோடு விடைபெற்றனர்!

No comments:

Post a Comment