தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday 12 November 2017

என்ன நடக்கிறது இங்கே?


ஆளும் கட்சி எதிர்க்கட்சிகளை மிரட்டுவதும், வருமானவரிச் சோதனைகள்  அதில் ஒரு பகுதியாக இருப்பதும் இந்தியாவில் புதிதன்று. ஆனாலும்ஒளிவு மறைவின்றியும், கொஞ்சம் கூடக் கூச்சமே இன்றியும் இப்படி நடந்ததாக இதுவரையில் இல்லை


சசிகலா, தினகரன் குழுவினர் ஏராளமாகச் சொத்து சேர்த்து வைத்துள்ளனர் என்பது இங்கு அனைவரும் அறிந்த உண்மை. அதன் பயனாகவே, இன்று சசிகலா, இளவரசி உள்ளிட்டோர்  சிறையில் உள்ளனர். தினகரன் மீதும் பல வழக்குகள் உள்ளன. ஆனால் இவற்றிற்கெல்லாம் மூல  காரணம் யார்? யாருடைய நிழலில் இருந்துகொண்டு இவர்கள் இந்தத் தவறுகளைச்  செய்தார்கள் என்பது மத்திய  அரசு உட்பட எவருக்குமே தெரியாதா?

அனைத்து  ஊழல்களுக்கும்  காரணமாக இருந்த ஜெயலலிதாவை, மோடியம், பாஜக வும் கொண்டாடினர். 2015 ஆகஸ்ட் முதல் வாரம், சென்னையில் அரசு விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்த பிரதமர் மோடி, நேராக ஜெயலலிதா இல்லம் சென்று மதிய  விருந்துண்டாரே, அப்போதெல்லாம் ஜெயலலிதாவின் மீது எந்த ஒரு சந்தேக நிழலும் படியவே இல்லையா?

 தேவையென்றால் அல்லது வேண்டியவரென்றால் வீட்டுக்குப் பிரதமர் வருவார். வேண்டாமல் போனால், வீட்டுக்கு வருமானவரித் துறை வருமா?

இன்றைய முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் மீதெல்லாம் வருமானவரித்  துறைக்கு எந்த சந்தேகமுமே இல்லையா?அவர்களிடம் உள்ள ஒவ்வொரு காசும் உழைத்து உழைத்துச் சேர்த்த காசா? ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோது, அன்றைய தலைமைச் செயலாளர் அலுவலகத்திலும். வீட்டிலும் நடந்த வருமானவரிச் சோதனைகள் என்னாயின? அவரிடமும், சேகர் ரெட்டியிடமும் கட்டுக் கட்டாக புதிய 2000 ரூபாய்த் தாள்கள் கைப்பற்றப்பட்டனவே, அவை அவர்களுக்கு எப்படி வந்தன? எங்கிருந்து வந்தன? ஏதேனும் விசாரணை உண்டா? கரூர் அன்புநாதன் என்ன ஆனார்? அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையின் முடிவு பற்றி ஏன் எந்த அறிவிப்பும் இல்லை? ஒருவேளை, இவர்களில் யாராவது  தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தால் அந்த அறிவிப்புகளும், அவற்றின் மீதான நடவடிக்கைகளும் வெளிவருமோ என்னவோ!

இவை எல்லாம் ஒருபுறமிருக்க, தினகரன் வீட்டில் நடந்த சோதனை, வேடிக்கையான ஒரு பக்க விளைவை ஏற்படுத்தியுள்ளது. நேற்று உரையாடிக் கொண்டிருக்கும்போது ஒருவர்,  "இவ்வளவு நெருக்கடிக்குப் பிறகும், ஊடகங்களிடம் சிரித்துக்கொண்டும், துணிவாகவும் தினகரன் பேட்டி கொடுத்தது எனக்கு மிகவும் பிடித்தது" என்றார்


பாஜக அரசு மிகவும் பாடுபட்டு, தினகரனை ஒரு 'ஹீரோவாக' ஆக்கிக் கொண்டிருக்கிறது

5 comments:

  1. தமிழர்கள் வேறு ஒரு தளத்தில் இணைவார்கள் என்று தோன்றுகிறது.
    இக்கால இளைஞர்கள் சாதி பார்ப்பது இல்லை. டெக்னாலஜி
    இணைத்து இருக்கிறது. எனக்கும் அப்படி பார்ப்பது பிடிக்காது. ஆனால் எங்கே நல்லவர்கள் இருக்கிறார்கள் என்ற தேடல் தந்த உந்துதலின் விளைவுதான் இம்மாதிரி எழுத வைக்கிறது.

    நல்லவர் ஆனாலும் சாதி வெறியர் என்றால் என்ன. நல்லவர் என்பவர்கள் ஊழலை ஒழிக்கவேண்டும் என்பார்கள். உதவும் மனப்பான்மை கொண்டவர்களாக கூட இருப்பார்கள். ஆனால் சாதிவெறி உள்ளே உறங்கி கொண்டிருக்கும்.

    சாதி வெறியின் உச்சத்தை தொட்டவர்களை நான் கண்டு பிடிக்கும் வழிமுறையை இங்கே கூற விரும்புகிறேன். அவர்கள் பாராட்டும் முறையை வைத்து கண்டு கொள்ளலாம். அவர்கள் எப்போதும் தான் விரும்பும் சாதியை சேர்ந்தவரைதான் பாராட்டுவார்கள். இது ஒன்றே அவர்களை அறியும் வழி. மேலும் தான் விரும்பாத சாதிகள் மேலே வருவதை விரும்ப மாட்டார்கள், திறமைசாலிகள் இருப்பினும் கண்டு கொள்ள விரும்ப மாட்டார்கள்.

    தமிழர்களில் கடந்த தலைமுறையை சேர்ந்தவர்கள் நல்லவர்கள் கூட சாதி வெறியர்கள்தான். ஜெயலலிதாவை ஏமாற்றி பல ஆயிரம் கோடி காசு சம்பாதித்தார்கள் சசிகலா குடும்பத்தினர் என்று ஒரு அதிமுக வைச்சேர்ந்தவர் கூறியுள்ளார். பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் அடுத்த நிலையில் இருந்தவர். அவரது சேகர் ரெட்டி தொடர்பு மற்றும் வெளிமாநிலங்களுக்கு தமிழக மணலை விற்பனை செய்ததெல்லாம் எல்லாருமே அறிந்தது. அப்படியென்றால் அவரும் ஜெயலலிதாவை ஏமாற்றிதான் கொள்ளை அடித்தாரா. அப்படி செய்தார் என்றால் ஏன் அவரை ஏற்றுக்கொண்டீர்கள். சசிகலா ஜெ யின் தோழி என்ற முறையில் அதிகமாக பயன்படுத்திக் கொண்டார். இது மட்டும்தானே உண்மையாக முடியும். நாங்கள் சசி அவர்களின் குற்றத்தை ஒத்துக்கொள்கிறோம். நீங்கள் பன்னீர் அவர்களின் குற்றத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா என்றால் அந்த டாபிக்கை பற்றி பேசுவதற்கு கூட அவர்கள் தயாராக இல்லை. என்னை பொறுத்தவரையில் கம்பெனி ஆரம்பித்து பணம் சேர்த்ததை விட மணலை ஏற்றுமதி செய்து பணம் பார்த்தல் மிகப்பெரிய குற்றம். ஆனால் அவர்கள் அதை காதில் கூட வாங்க மாட்டார்கள். அவர்களை பொறுத்தவரை அவர்கள் கைகாட்டியவர்கள் எல்லாரும் குற்றவாளிகள்.

    இதற்கு காரணம் என்ன திராவிடப் பின்னனியா ஆரியப்பின்னனியா. யார் திராவிடர் யார் ஆரியர். சண்டைகள் போட்டுக்கொண்டாலும் எல்லாம் கலந்த ஒரு நிலைமைதான் இப்போது உலகம் முழுதும் உள்ளது. ஆரிய மனம் உடையவரா (அகங்காரத்தில் ஆரம்பம்), திராவிட மனம் உடையவரா(பணிவில் ஆரம்பம்) என்பதை உற்றுக்கவனித்து நாம்தான் முடிவு செய்ய வேனண்டும்.

    முக்குலத்தோர் என்று சொன்னாலும் கள்ளர் மறவர் என்று திராவிடப்பெருமையோடு வாண்டையார் அவர்களின் வெப்சைட்டில் எழுதி இருப்பார்கள். தேவர் என்றால் பிராமினிசத்தை கடைபிடிப்பவர்கள் என்றும் எழுதப்பட்டிருக்கும். மதுரைக்கு கீழே கூட்டமாக காட்டிக்கொள்ள தேவர் என்று சொன்னாலும் அவர்களில் பிரிவுகள் உள்ளன. ஆனாலும் தஞ்சையில் அது தெளிவாக தெரியும்.

    அதிமுகவில் கிட்டத்தட்ட தலைமை பொறுப்புகளில் இருந்தாலும்
    கள்ளர்களும் படையாச்சியும் இருக்கும் இடத்தில் திமுகதான் தேர்தலில் ஜெயிக்கிறது. அதற்கு காரணம் என்ன என்று அனைவரும் யோசிக்க வேண்டும். எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களைப்போல தமிழர்களுக்கு நன்மை தந்த எழுத்து என்று என்னை கேட்டால் திருக்குறளை மட்டும்தான் ஒப்பிட முடிகிறது.

    மூன்று கூட்டமாக தமிழர்களை பிரித்தால்

    திராவிடப்பின்னனி
    ஐயர்
    கள்ளர்,மறவர் (முக்குலத்தோர்)
    படையாச்சி(வன்னியர்)
    சானார், கிராமணி (நாடார்)
    முதலியார்
    தலித்
    முத்தரையர்களிலும்(பெரும்பாலானவர்கள்)
    செட்டியார்களிலும் (பெரும்பாலானவர்கள்)
    கவண்டர்களிலும்
    திராவிடப்பின்னனி இருப்பதை உணர முடிகிறது

    ஆரியப்பின்னணி
    ஐயங்கார்
    அகம்படியர் (தேவர்)
    வன்னியர், நாயக்கர்( வன்னியர்)
    நெலமைக்காரர்,நாயக்கர் (நாடார்)
    தலித் சகோதரர்களிலும்
    முத்தரையர்களிலும், கவண்டர்களிலும், செட்டியார்களிலும், ஆரியப்பின்னணியோடு இருப்பதையும் உணர முடிகிறது.

    இரண்டுக்கும் பொது
    பிள்ளை( குணத்தால் திராவிடராகவும் மூளையில் ஆரியராகவும் இவர்களை உணர முடிகிறது)

    வடக்கு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தினகரனை வெறுக்கக்காரணம் அவரது சாதிப்பின்னனிதான் என்று நான் நம்புகிறேன். திமுகவின் துரைமுருகன் அவர்கள் பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த போது வரவேற்றதின் காரணம் என்ன.
    முனுசாமி பேசும்போது அல்லது கேசி வீரமணி அவர்கள் தினகரன் குறித்து பேசும்போதும் இந்த வெறுப்பை நன்கு உணர முடிகிறது. எங்கிருந்தோ வந்து தமிழர்களைப்பிரித்த குற்றப்பின்னனியோடு மறைந்த ஜெயலலிதாவைப்போற்றும் இவர்கள் பக்கத்திலேயே இருக்கும் தன் சகோதர் தினகரனை இந்த அளவுக்கு வெறுக்க காரணம் என்ன. குற்றப்பின்னனி மட்டும்தான் என்பது உண்மையான காரணமாக இருக்க முடியுமா என்பதுதான் என் கேள்வி.

    ReplyDelete
  2. Paarpana uzhalkal maRaikkapadum; Soothira adimai suthantiram besinaal adakkapadum, IT raid , Police kanjcha case poduvathu bOla?

    ReplyDelete
  3. இங்குதான் மூன்று மன்றங்கள் உள்ள நிலையில், எல்லையில்லா கால அவகாசம் முடிவு தெரிய - என்ற அமைப்பினால் கவலையே இல்லை.

    ReplyDelete
  4. Really TTV Dinakaran is more composed even during difficult times. He is becoming a leader. Yes. He will shine than others. He is able to handle all questions of the reporters. I can like him alone in AIADMK.

    ReplyDelete
  5. இந்த ரெய்டு நடப்பது வரவேரற்க்கத்தக்கதுதான். இது ரொம்ப காலத்திற்கு முன்பே நடந்திருக்க வேண்டும். ஜெயலலிதா தாக்கல் செய்த சொத்துவிபர அறிக்கைகளில் 2006ல் 24.7 கோடி சொத்தும் 2011 ல் 51.4 கோடி சொத்தும் 2016 ல் 117.13 கோடி சொத்தும் தெரிவித்தபோது இந்த வருமான வரித்துறை,அமலாக்கத்துறை, சி.பி.ஐ. எல்லாம் எங்கே போயின ? அந்த காலகட்டத்திலேயே ரெய்டுகள் கொடநாட்டிலும் போயஸ் இல்லத்திலும் நடைபெற்றிருக்கவேண்டாமா.
    கூட்டணி இல்லை என்று சொன்ன அடுத்தநாளே அன்றைய தி.மு.க. பொருளாளர் வீட்டில் ஒரு ரெய்டு நடைபெற்றதே. அதுதான் இதற்கு முன்னோடி. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்றவ்தரை அடியாட்களாக பயன்படுத்துவதில் காங்கிரஸ் முன்னோடி. அதை இன்னும்கொஞ்சம் விரிவுபடுத்தி செய்கிறது காவிக்கூட்டம். இப்போது ஊடகங்கள், தேர்தல் ஆணையம், நீதித்துறை எல்லாம் கட்டுக்குள் வந்துவிட்டன.
    என் நன்பர் ஒருவர் சொன்னார், இந்த ரெய்டு மூலம் ஜெயலலிதா இமேஜ் பாதிக்கும். அவர் துணையுடன் இத்தனை கோடி கொள்ளையடித்திருக்கிரார்கள் என்று மக்கள் இப்போது புரிந்துகொள்வார்கள் என்று. நான் அப்படி நினைக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு தெரியாமல் அவரிடமிருந்துதான் இவ்வளவு கொள்ளையடித்திருக்கிறார்கள் என்றுதான் நம் மக்கள் நினைப்பார்கள். நம் மக்கள் அவ்வளவு அப்பாவிகள்.
    எனக்கு இரண்டு சந்தேகங்கள். (1) இம்மாதிரி ரெய்டுகளில் கைப்பற்றப்படும் பணம், பொருட்கள் அரசுக்கு பறிமுதல்செய்யப்படுகின்றனவா? அவ்வாறு பறிமுதல்செய்ததன்மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய் விபரம் அரசு வெளியிடுமா? (2) அரசியல் புரோக்கர்கள் திடீரென தொலைகாட்சி சேனல் தொடங்குகிறார்களே அவர்களிடம் ரெய்டு நடக்குமா? வைக்கோ, திருமா, தமிழருவி மணியன், விஜயகாந்த், ராமதாஸ், அழகிரி, ரஜினி, கமல், அமிட்ஷா மகன், நக்மா, நித்யானந்தா, ரவிசங்கர் பாபா, ராம்தேவ் பாபா, அண்ணா கசாரே, கேமமாலினி, ஈஷா சாமியார் இவர்களிடமெல்லாம் எப்போது ரெய்டு நடக்கும்?

    ReplyDelete