விஷக்கிருமி என்ற சொல் 50 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் பாவலாகப் பேசப்பட்ட ஒரு சொல். 1967 ஆம் ஆண்டு திமுக பதவிக்கு வந்ததும், முன்னாள் முதலமைச்சர் பக்தவத்சலம், "தமிழ்நாட்டில் விஷக்கிருமிகள் பரவி விட்டன" என்றார். அது குறித்த கடுமையான விமர்சனங்கள் பல அன்று வெளிவந்தன.
பிறகு பலரும் அந்தச் சொல்லை அல்லது அப்பொருள்படும் சொல்லை அடிக்கடி கையாண்டனர். அண்மையில் சல்லிக்கட்டுப் போராட்டத்திலும், இப்போது தூத்துக்குடியிலும் அந்தச் சொல் பயன்படுத்தப் பட்டது. இப்போது மீண்டும் தூத்துக்குடிப் போராட்டத்தில் விஷமிகள் பரவி விட்டனர் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக முதலமைச்சர் எடப்பாடி ஆகியோர் கூறினர். இப்போது அதே சொல்லையும், கருத்தையும் ஊடக நேர்காணலில் ரஜினி பயன்படுத்தியுள்ளார்.
கொதித்துக் கொந்தளித்து எழுந்த மக்களின் போராட்டத்தை விஷமிகள் நடத்திய போராட்டம் என்று சொல்வது மக்களைக் கொச்சைப்படுத்துவதாகாதா? 99 நாள்கள் அமைதியாக மக்கள் நடத்திய போராட்டத்தை அரசு கண்டு கொள்ளவே இல்லை என்கிறபோது, மக்களிடம் ஒரு கோபம் குடிகொள்ளாதா? அந்தக் கோபம் சற்றுச் சூடேறி வன்முறையில் போய் முடிந்திருக்கிறது. அந்த வன்முறையைப் பற்றி மட்டும் கவலைப்படும் புதிய தேசபக்தர் ரஜினி, அந்த வன்முறையைத் தூண்டிய வன்முறை பற்றி அறிவாரா? மக்களின் உடல்நலம், உயிர்ப்பாதுகாப்பு என எது குறித்தும் கவலை கொள்ளாமல், தனியார் ஆலைக்கு அரசுகள் அளித்த ஆதரவுக்கு என்ன பெயர்? அது வன்முறையில்லையா?
தன் திரைப்படங்களில் 'வேங்கை மகன் ஒத்தையில நின்னு' எத்தனை வன்முறைகளை அரங்கேற்றியிருக்கிறார்! அதுதான் வீரம் என்று எத்தனை படங்களில் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். அவையெல்லாம் வன்முறைக்கான தூண்டுதல்தானே! ஆனால் அவற்றையெல்லாம் நினைப்பில் வைத்தன்று, தங்கள் வாழ்வுக்காக, உயிருக்காகப் போராடிய மக்களிடையே விஷக்கிருமிகளை புகுந்துவிட்டனர் என்பதற்கு என்ன ஆதாரம்? அரசு சொல்வதை அப்படியே திரும்பிச் சொல்வதற்கு ஒருவர் தூத்துக்குடி வரை பயணம் செய்ய வேண்டியதில்லை.எடப்பாடியின் அறிக்கைக்கும், பொன். ராதாகிருஷ்ணன் நேர்காணலுக்கும் கீழே, "அவ்வண்ணமே கோரும்" என்று எழுதிக் கையெழுத்துப் போட்டிருக்கலாம் ரஜினி!
ஆலையை மீண்டும் திறக்க நீதிமன்றம் சென்றால், இனி அவர்கள் மனுஷங்களே இல்லை என்று கூறும் ரஜினிகாந்த்தான், எதுவாக இருந்தாலும் கோர்ட்டுக்குத்தான் போகணும் என்கிறார். என்ன முரண் இது! விஷமிகள் நடத்திய வன்முறை எதிர்ப்புப் போராட்டம்தானே, அதற்காக நாங்கள் ஏன் எங்கள் ஆலையை மூட வேண்டும் என்று அவர்கள் நீதிமன்றம் சென்று கேட்கமாட்டார்களா? மக்கள் போராட்டத்தை விஷமிகள் நடத்திய போராட்டம் என்று திரித்துச் சொல்வதை விட, ஆலை முதலாளிகளுக்கு வேறு எப்படி உதவ முடியும்?
கூட்டத்தை நோக்கிக் கூட இல்லை, குறிபார்த்துச் சுட்டிருக்கின்றனர் காவல்துறையினர். இனிவரும் காலங்களில் எவரும் போராட்டத்தை முன்னெடுக்கக்கூடாது என்னும் ஆகப் பெரிய மிரட்டல்தானே இது! அதனைக் கண்டித்து விட்டல்லவா காவல்துறையினரைத் தாக்கியவர்களைக் கண்டித்திருக்க வேண்டும்?
ஒரு நபர் ஆணையம் மீது நம்பிக்கையில்லை, உளவுத்துறையின் பிழைதான் இது என்று ஒப்புக்குச் சொல்லிவிட்டு, ஒட்டுமொத்தமாய் மக்கள் போராட்டத்தை விஷமிகளின் வன்முறைப் போராட்டம் என்று சொல்லிவிட்டார் ரஜினிகாந்த்!
ஜெயலலிதாவின் இரும்புக்கரத்தைப் பாராட்டும் இவர் போன்றவர்கள் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் இரும்புக்கரங்கள் மட்டும்தான் மிஞ்சும். மக்கள் மிஞ்ச மாட்டார்கள்! கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை போதாது என்பது போலல்லவா உள்ளது அவருடைய நேர்காணல்!
பூனைக்குட்டி வெளியில் வந்தது ஒருவிதத்தில் நல்லதுதான். ரஜினியின் அரசியல் பயணம் தொடங்குவதற்கு முன்பே தோல்வியடைந்துள்ளது!
Super tala,
ReplyDeleteI couldn't think anyone else could have written so clearly succinctly and point blank like you.
இவையெல்லாம் காலா படத்திற்கு விளம்பரம் தேடத்தான் என்ற ஒரு குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் 'வேங்கை மகன் ஒத்தையில நின்னு' என்ற வசனத்தை கூறி நீங்களே அறியாமல் காலா படத்திற்கு விளம்பரம் தேடி தந்துவிட்டீர்களே!
ReplyDeleteவாழ வைக்கும் தமிழ்நாட்டிற்கு ரஜினிகாந்த் செய்துள்ள துரோகம்.
ReplyDeleteரஜினியின் கருத்து பிஜேபியின் குரல்தான். அதில் சந்தேகம் இல்லை. சில மாதம் முன்பு தொலைக்காட்சி சானல்களை மாற்றும்போது சத்யம் தொலைக்காட்சியில் மோகன் சி லாசரஸ் அவர்களின் உரையை பார்க்க நேரிட்டது. ஆளுமையோடு உண்மை கலந்து அன்பாக பேசும் அவரது கருத்துகள் என்னை ஈர்த்தது. எனது கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்த நண்பரிடம் சொன்னேன். அவர் சொன்னார்.. அவரா மிகப்பிரமாதமாக பேசுவார். ஒரு மாதம் பார்த்தால் நீங்களே மதம் மாறிவிடுவீர்கள் என்றார். இது அவர் காமெடியாகத்தான் சொன்னார். இதே போன்ற காமெடியை பொன் ராதாகிரஷ்ணனிடமோ இல கணேசன் அவரர்களிடமோ யாராவது சொல்லி இருக்கலாம். அவர்கள் சும்மா இருப்பார்களா? தூத்துகுடி சம்பவத்திற்கு மோகன் லாசரஸ் மற்றும் திமுக தான் காரணம் என்று இந்துத்துவ சக்திகளால் சொல்லப்படுகிறது. என்ன கொடுமை என்றால் குற்றம் சொல்பவனும் குற்றம் சாட்டப்படுபவனும் ஒரே சமூகமாக இருப்பது.
ReplyDeleteசில நாட்களுக்கு முன்பு ஒரு ரசினி வெறியரிடம் பேசும் நிலை எனக்கு ஏற்பட்டது. என் சகிப்புத்தன்மையின் ஆழம் வரை நான் பயணம் செய்தது அப்பொழுது மட்டுந்தான் என் வாழ்க்கையில். இறுதியில் வாக்குவாதம் ஏற்படும் முன் ஐயா சு. ப. வீ அவர்களின் பொறுமையை மனதில் நினைத்துக்கொண்டு அமைதி காத்துக்கொண்டேன்.
ReplyDeleteஅந்த உரையாடல் முடிந்ததும்...வெறுப்பில் நான் உமிழ்ந்த வரிகள்....
ஒருவன்:
வருகுதையா மறவர் படை
வானுயர பேனர் வெக்க..!
கொடங் கொடமா பாலூத்தி
குளிரவைப்போம் கோமகனை…!
மற்றொருவன்:
கோமகனை புடிச்சி கட்டி
கோமடியில் குருதி கறந்து
கோமகனை குளிரூட்ட
கொட்டுறியே எங்குலக்கொழுந்தே..!
ஒருவன்:
ராசாதி ராசனப்பா
காசிவனுக்கு தூசப்பா
பேசுகின்ற சூரியம்பா
ஏசிடுவோர் எவரப்பா…?
மற்றொருவன்:
வெள்ளித்திரை மன்னவனோ
வெள்ளைமனம் கொண்டவனோ
ஏழைமக்க பசிதீக்க
ஏட்டில் மொளைச்ச சொரக்காயோ..?
ஒருவன்:
பாயும்புலி வம்சமடா..!
பாயும்போது தெரியுமடா..!
பாயும்வரை பதுங்குமடா..!
பரமன் சொன்னா பாயுமடா..!
மற்றொருவன்:
பதுங்கும்புலிடா பேராண்டி..!
பாயுந்தேதி வருமாண்டி..
இமயமலைக்கு அந்தாண்டி..
இருக்கும் பரமன் சொல்வாண்டி..!
ஒருவன்:
எதிர்பாட்டு பாடுறியா..?
என்ன கோவமாக்குறியா..?
எந்தலைவன் வருவாண்டா
என்னுசுரு போகுமுன்னே...!
மற்றொருவன்:
எதிர்பாட்டு பாடலடா
துதிபாடும் தூயவனே
புதிர்போடுறார் உந்தலைவன்
புலி வருகிற கதைபோல...!
கோபிநாதன் பச்சையப்பன்
Unmai jeikum😂😂😂
ReplyDelete