தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday 24 November 2011

பேருந்துக் கட்டணம், பால் விலை உயர்வு



தமிழக
 உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்த உடனே, தமிழக அரசு பேருந்துக் கட்டணத்தையும், ஆவின் பால் விலையையும் மிகக் கடுமையாக உயர்த்தி உள்ளது.

சென்ற தி.மு.கழக ஆட்சியை, மைனாரிட்டி அரசு என்று ஒரு நாளைக்குப் பத்து முறையாவது ஜெயலலிதா கூறிக்கொண்டே இருப்பார். ஆனால் அந்த மைனாரிட்டி அரசு, கடந்த 5 ஆண்டுகளில் ஒரு முறை கூடப் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தவில்லை. எத்தனையோ முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டபோதும், பேருந்துக் கட்டணம் கூட்டப்படவே இல்லை.


தி.மு.. ஆட்சியிலும் ஆவின் பால் விலை உயர்த்தப்படவே செய்தது. ஆனாலும் அதில் இரண்டு முக்கியமான செய்திகள் உள்ளன. ஒன்று, விலையேற்றம் படிப்படியானதாக இருந்தது. இரண்டு, விற்பனை விலையை விடக் கொள்முதல் விலை கூடுதலாக உயர்த்தப்பட்டது. 2007 மார்ச் மாதம் 1.25 ரூபாயும், 2008 மார்ச் மாதம் இரண்டு ரூபாயும், 2009 செப்டம்பர் மாதம் இரண்டு ரூபாயும், ஆக மொத்தம் 5 ஆண்டுகளில் 5 ரூபாய் 25 காசுகள் விலை கூட்டப்பட்டது. அதே நேரம், கொள்முதல் விலையில் பசும்பாலுக்கு 7 ரூபாய் 96 காசுகளும், எருமைப் பாலுக்கு 13 ரூபாய் 50 காசுகளும்  கூட்டப்பட்டன. அதற்கே அந்த அம்மையார் அன்று பொரிந்து தள்ளினார். அறிக்கை மேல் அறிக்கை விட்டார்.

ஆனால் இன்றோ, கொள்முதல் விலையை வெறும் இரண்டு ரூபாய் உயர்த்திவிட்டு, விற்பனை விலையை ஒரேயடியாக 6 ரூபாய் 25 காசுகள் உயர்த்தியுள்ளார் அதே ஜெயலலிதா. என்ன நியாயம் இது?

ஓர் அரசு மெஜாரிட்டி அரசாக இருந்தால் மட்டும் போதாது. அது மக்கள் அரசாகவும் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment