தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday, 7 March 2012

நூற்றாண்டு விழாக் கண்டு புலம்புகிறது பூணூல் மலர்


சென்னை, அறிவாலயம், கலைஞர் அரங்கில், திராவிட இயக்க நூற்றாண்டு விழா நடைபெற்ற நாளில், தினமலர் நாளேடு, அவ்விழாவிற்கு எதிராகப் புனையப்பட்ட செய்தி ஒன்றினை, வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறது. விழாவிற்குத் தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு என்றும், மக்கள் மாநாடு கட்சி கடும்கண்டனம் என்றும், மீண்டும் பத்தாவது பக்கத்தில் தலைவர்கள் கண்டனம் என்றும் பல்வேறு தலைப்புகள் இட்டுத் தன் வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்த்திருக்கிறது.

அந்தச் செய்திகளில் முன்வைக்கப்பட்டுள்ள விவாதங்களைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு, அந்த அறிக்கைகளைக் கொடுத்த மாபெரும் கட்சிகளும், மாபெரும் தலைவர்களும் யார் என்று பார்க்கலாம். முதல் பக்கத்தில், மக்கள் மாநாடு கட்சியின் தலைவர் சக்திவேல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மக்கள் மாநாடு கட்சி என ஒன்று எங்கே உள்ளது என்பது குறித்தும், அதனுடைய தலைவர் சக்திவேல் எங்கே தலைமறைவாக உள்ளார் என்பது குறித்தும் விவரம் அறிந்தவர்கள் நமக்குச் செய்தி அனுப்பலாம். காணவில்லை என்னும் பகுதியில் போட வேண்டிய செய்திகளை எல்லாம் தினமலர் முதல் பக்கத்தில் வெளியிடுகிறது. அந்தப் பகுதியில் கூட காணாமல் போனவரின் புகைப்படத்தை வெளியிடும் பழக்கம் உண்டு. தினமலரில் அவ்வளவு பெரிய தலைவரின் படம் கூட வெளியிடப்படவில்லை. தமிழகத்தின் முன்னாள் கட்சியான ஐக்கிய ஜனதா தளம், முன்னாள் தலைமைநிலையச் செயலாளர் என ஒருவர் என்று அடையாளம் தெரியாத பலரின் பெயரால் அறிக்கைகள் வெளியிடும் மஞ்சள் பத்திரிகையாக மாறிவிட்டது தினமலர்.

தெலுங்கர்களோ, மலையாளிகளோ, கன்னடர்களோ தங்களைத் திராவிடர் என்று சொல்லிக் கொள்வதில்லையாம். தமிழர்கள் மட்டும் ஏன் திராவிடர் என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்று அந்தப் பூணூல் மலர் ஒரு கேள்வியை முன்வைக்கிறது. திராவிடன் என்பதை ஒப்புக் கொண்டால்,  திராவிட மொழிக்குடும்பத்தை ஒப்புக்கொள்ள வேண்டிவரும். அதன்படி, திராவிட மொழிக்குடும்பத்தில் தமிழே மூத்த மொழியும், முதன்மையான மொழியும் ஆகும் என்ற கால்டுவெல்லின் ஆய்வை ஏற்க வேண்டி வரும். அப்படி ஏற்றால் தமிழுக்குப் பின்னால் தான் தங்கள் மொழிகளெல்லாம் நிற்கின்றன என்னும் உண்மையை அவர்கள் ஏற்றவர்கள் ஆவார்கள். அதனால்தான் அவர்கள் யாரும் தங்களைத் திராவிடர் என்று கூறிக்கொள்வதில்லை. அதனை அவர்கள் தங்களுக்குத் தாழ்வு என்று கருதுகிறார்கள். ஆனால் தமிழே மூத்த மொழி என்னும் உண்மையை ஏற்கும் தமிழர்கள் பெருமிதத்தோடு தங்களைத் திராவிடர் என்று அழைத்துக் கொள்கின்றனர். இதுதான் வேறுபாடு. இந்த வேறுபாடு பூணூல்களுக்கும் புரியத்தான் செய்யும். ஆனால் சமற்கிருதமே தேவபாசை என்று பிதற்றிக்கொண்டிருக்கும் அவர்கள், திராவிடர் என்று சொல்வதன் மூலம் தமிழுக்கு வரும் ஏற்றத்தை எப்படித் தாங்கிக் கொள்வார்கள்?

பா.ம.க. நிறுவனர் ராமதாசை வேறு தினமலர் தன் துணைக்கு அழைத்துக்கொள்கிறது. திராவிட இயக்கத்தை யார் கொச்சைப்படுத்தினாலும் அவர்களைப் பார்ப்பனர்கள் பாராட்டத்தானே செய்வார்கள். திராவிடக் கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்று ராமதாசு கூறிவிட்டாராம், திளைத்து மகிழ்கிறது தினமலர். “கருணாநிதி வம்சாவளியினர் ஆந்திராவைப் பூர்விகமாகக் கொண்டவர்கள்” என்பது ராமதாசின் கூற்று என்கிறது தினமலர். எந்த ரத்தப்பரிசோதனை நிலையத்தில் இதுபோன்ற ஆராய்ச்சிகள் எல்லாம் நடக்கின்றன என்பது நமக்குத் தெரியவில்லை. அதனை நம்பி ராமதாசு அப்படிச் சொல்லியிருப்பாரெனில், அவருக்கு ஒன்றை நினைவுபடுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அடுத்த பரிசோதனையில் உங்கள் மூதாதையரைப் பற்றியும் இவர்கள் ஆராய்ச்சி செய்து, உங்களை மராத்தியர் என்று சொன்னாலும் சொல்லி விடுவார்கள்.

திராவிட என்ற போர்வையில் கருணாநிதியும், வீரமணியும் மீண்டும் தமிழர்களை அழிக்கப் புறப்பட்டுள்ளனர் என்கிறார் அந்த மாபெரும் தலைவர் சக்திவேல். திராவிட என்பது நமக்குப் போர் வையோ முகமூடியோ அல்ல. நம் இனமானப் பேராசிரியர், விழாவில் குறிப்பிட்டதைப் போல, திராவிடன் என்பதே நம் முகம். இந்து என்பதும், சூத்திரன் என்பதும்தான் நமக்குப் போடப்பட்ட முகமூடிகள். அந்த முகமூடிகளை, அந்தப் போர்வைகளைக் கிழித்தெறிந்துவிட்டுத்தான் திராவிடர்களாய் மீண்டும் இப்போது அணிவகுக்கத் தொடங்கியுள்ளோம்.

தினமலருக்கும், பார்ப்பனர்களுக்கும்தான் தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் எவ்வளவு அக்கறை. திராவிடர்கள் என்னும் பெயரில் தமிழை அழிக்க வருவதாய் முதலைக்கண்ணீர் வடிக்கும் தினமலர் அறியுமா, தமிழகத்தில் தமிழ் உணர்வை ஊட்டியதே திராவிட இயக்கம்தான் என்பது? 1950களில் ஏராளமான சமற்கிருதப் பெயர்களைத் தமிழில் மாற்றிய இயக்கம் எது? சமற்கிருதப் பேராசிரியர்களுக்கு இணையாய்த் தமிழ்ப் பேராசிரியர்களுக்கும் ஊதியம் பெற்றுத்தந்த இயக்கம் எது? 1911ஆம் ஆண்டு முதல் நீக்கப்பட்டிருந்த தமிழ்ப்பாடத்தை மீண்டும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1926ஆம் ஆண்டு முதல் கொண்டுவந்த இயக்கம் எது?

மேற்காணும் கேள்விகளுக்கு எல்லாம் பார்ப்பனர்கள் விடை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாம் இங்கு அவற்றை எழுப்பவில்லை. தமிழால் பயன்பெற்ற, திராவிட இயக்கத்தால் பயன்பெற்ற தமிழர்களேனும் இந்த உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இங்கே அச்செய்திகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

ஒரு கட்சி அல்லது இயக்கம் தங்களின் நூற்றாண்டைக் கொண்டாடுவதற்கு எவரேனும் எதிர்ப்புத் தெரிவிப்பார்களா? 1985ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தன் நூற்றாண்டைக் கொண்டாடவில்லையா? எங்கோ நடந்த சோவியத் புரட்சியின் வீரவரலாற்றை இங்கே இந்த மண்ணில் நாம்கூட மகிழ்ந்து கொண்டாட வில்லையா? எந்த விழாவிற்காவது எவராவது கண்டனம் தெரிவிக்கும் அநாகரிகம் அரங்கேறி உள்ளதா இன்றுவரையில்?

திராவிட இயக்க நூற்றாண்டிற்கு மட்டும் ஏன் இத்தனை எதிர்ப்பு? எதற்காகப் பார்ப்பனப் பூணூல்கள் படபடக்கின்றன? எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் உள்ளது. திராவிட இயக்கம் கண்டு நடுங்கும் பார்ப்பனர்களின் பயமும் பதற்றமும் இன்னும் அவர்களை விட்டு விலகிடவில்லை. எங்கே மறுபடியும் அந்த இயக்கம் வீறுகொண்டு எழுந்துவிடுமோ, தங்களின் ஏமாற்றுப் பிழைப்பில்  எதிர்காலம் மண்தூவிவிடுமோ என்று அவர்கள் அஞ்சி ஒடுங்குகின்றனர். அச்சமே எதிர்ப்பாய் வேறுவடிவம் எடுக்கிறது.

நச்சுப் பாம்பை அடிக்கத் தடி ஓங்கினால், அது அச்சத்தின் காரணமாய் சீறி விழுவது இயல்புதானே! பெரியாரின் தடி கண்டு இந்தப் பெரும்பாம்புகள் இப்போது சீறுகின்றன.

ஒரு விதத்தில் தினமலருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். அன்றைய விழாவிற்கு வீரியமும் விறுவிறுப்பும் வந்து சேர்ந்ததற்கு அந்த நாளேட்டின் அறிக்கையும் ஒரு காரணம். தினமலரின் பணி தொடர வாழ்த்துகிறோம்.

7 comments:

 1. திராவிடத்தையும், தலைவர் கலைஞரையும் இகழ்ந்துரைக்க யாரை வேண்டுமானாலும் துணைக்கழைக்கும் தினமலர் என்பது உண்மை தான்.

  ஏனெனில் அந்த கட்டுரை பிரசுரமாவதற்கு ஒரு வாரம் முன்பு தான் வன்னியர்கள் பற்றி தாறுமாறாக இந்த பத்திரிகை கிழித்துப்போட.....

  ராமதாஸ் தலைமையில் அந்தக் கட்சியினர் வெகுண்டெழுந்து "தினமலரை இனி தினமலம்" என்று தான் அழைப்போம் என்று பெரிது பெரிதாக போஸ்டர் அடித்து ஒட்டியும், ஆங்காங்கே அந்த பத்திரிகையின் பார்ப்பன சகோதாரர்களுக்கு எதிராகவும் வழக்குகளைத் தொடர்ந்தனர்!

  ஆகையால் ராமதாஸ் & தினமலர் என்ற பொருந்தாக்கூட்டணி திராவிடத்தை அழிக்க புறப்பட்டிருக்கிறது என்றால் கொஞ்சம் நகைமுரணாகத்தான் இருக்கிறது.

  ReplyDelete
 2. சுபவீ அய்யா அவர்களே! முதலில் தினமலத்தை ஒரு பக்கம் வைப்போம். பின்னர் வருகிறேன் தினமலம் பக்கம். முதலில் பா.ம.க. பா.ம.க என்னும் சாதீய ரீதியான கட்சி என்பது இன்று நேற்றல்ல ஆரம்ப காலம் முதல் கலைஞர் எதிர்ப்பு என்னும் ஆயுதத்தை மட்டுமே கையில் ஏந்தி நம் எதிரே நின்றது. நிற்கின்றது. இதில் ஒரு வேடிக்கை என்னவெனில் நம்மோடு கூட்டனி வைத்து கொண்டு கைகொடுக்கும் போதெல்லாம் ஒரு கையில் கலைஞர் எதிர்ப்பு என்னும் கத்தியை முதுகுப்பக்கம் மறைத்து வைத்து கொண்டே தான் மற்றும் ஒரு கையால் கைகுலுக்கியது திமுகவோடு. இதை எங்கள் தலைவர் கலைஞர் உணர்ந்தாரோ இல்லையோ எங்கள் பகுதி திமுகவினர் நன்றாக உணர்ந்தவர்கள். தேர்தல் வேலை செய்யும் போது கூட அந்த பா.ம.க என்னும் ராமதாஸ் விசுவாசிகள் திமுகவினருடன் விசுவாசமாக வேலை செய்தது கிடையாது. ஆனால் எங்களவர்கள் பாமக வேட்பாளர் வெற்றி பெற உயிரை கொடுத்து வேலை செய்வர் ... காரணம் தலைவர் ஆனையிட்டார் என்பதால்.

  பல பாமகவினருக்கு அவங்க தலைவர் ராமதாசால் நெஞ்சில் கலைஞர் எதிர்ப்பு என்னும் விஷம் பாய்ச்சப்பட்டு இருப்பதை நாங்கள் நன்கு உணர்ந்தவர்கள். இப்போது ஒன்றும் புதிதாக அவர்கள் கலைஞர் தெலுங்கர் என கூறவில்லை. இணையத்தில் இருக்கும் பல பாமக உறுப்பினர்கள் அவ்வாரே கூறிவந்தனர். ஆதாராம் கேட்டால் அதை கொடுக்காமல் தனிநபர் தாக்குதல் நடத்துவர் அல்லது தரம் தாழ்ந்து கலைஞரை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பர். அவர்களின் ஒரே நோக்கம் கலைஞர் எதிர்ப்பு என்பது மட்டுமே என எங்களுக்கு நன்கு புரியும்.

  இப்போது அரசியல் அனாதையாகிவிட்ட பின்னர் கலைஞரை எதிர்த்து பேசி பாவம் அந்த வன்னிய இன மக்கள் நெஞ்சில் நஞ்சை வெளிப்படையாக புகுத்தும் முயற்சியில் இருக்கின்றார். அத்தனையே. அவருக்காவது தனிப்பட்ட முறையில் வன்னியர்கள் மீது பாசம் உண்டா என்றால் அதுவும் இல்லை. சுப்ரமணியம், தீரன் , பு தா இளங்கோவன், அருள்மொழி என பட்டியல் போட்டால் அது வேல்முருகன் வரை வந்து நிற்கும். அவர்களை கேட்டால் இவரைப்பற்றி இன்னும் நன்றாக புரியவைப்பார்கள்.

  இனி எந்த காலத்திலும் ராமதாசுடன் கூட்டணி கிடையாது என கலைஞர் திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும். அது மட்டுமே ராமதாசால் நாங்கள் பட்ட மனக்காயத்துக்கு மருந்து என்பதை எங்கள் தலைவர் உணர வேண்டும். இத்தனை வியாக்யானம் பேசும் ராமதாஸ் தன் பெயரை தமிழ் பெயராக மார்றிக்கொள்ள வேண்டியது தானே? அது செல்லாக்காசு அதை பற்றி அய்யா சோலை அவர்கள் இன்னும் எழுதி எழுதி புரிய வைக்க வேண்டும். அடுத்து தினமலம்....

  ReplyDelete
 3. அடுத்து தினமலம். அது தனது பத்திரிக்கை விற்பனையை அதிகரித்து கொள்ள எது வேண்டுமானாலும் செய்யும். அந்த பார்பன பத்திரிக்கையின் தோழர் செங்கொடி தீக்குளித்து மாண்ட போது கள்ளக்காதலால் இளம் பெண் தீக்குளிப்பு என எழுதிய போது எத்தனை தமிழர்கள் வெகுண்டனர் என்பது நாடே அறியும். ஆனால் திரவிட இயக்க நூற்றாண்டு என கொண்டாடினால் அதற்கு முதல் பக்கத்திலேயே தமிழர்கள் கொந்தளிப்பு என செய்தி போடுகின்றது. என்ன காரனம்? பத்திரிக்கை விற்பனை அதிகரிக்க செய்யும் முயற்சி என்ற ஒன்று மட்டும் அல்ல... அங்கே அவர்களின் இன உணர்வும் மிகுதியாக அளவுக்கு மீறி தெரிகின்றது. ஆனால் நமக்கு??? இங்கே தான் விபீஷனர்கள் விலைமலிவாக கிடைக்கின்றனரே? பின்னர் அவர்களுக்கு ஏது கவலை? இருக்கும் ஒரு சில பத்திர்க்கைகள் இன உணர்வாக இருந்தாலும் அவர்கள் மீது பொய்வழக்கு பாய்கின்றதே. அதையடுத்து அவர்களும் அடக்கி வாசிக்க வேண்டிய நிலை. ஆனால் இதே பாப்பன பத்திரிக்கை கலைஞர் ஆட்சியில் இருந்த போது கலைஞரை வைத்து அவர்கள் தினமலத்தின் விழாவை நடத்துவார்கள். ஆனால் இப்போதோ கலைஞருக்கு வைத்தியம் பார்ப்பது பார்ப்பான், ஆடிட்டர் பார்ப்பான் என அளந்து விடுவார்கள். ஏன் நாம் ஆட்சியில் இருக்கும் போதே பல்லை பிடுங்கி இருந்தால் இப்போது இத்தனை வீரியம் இருந்திருக்குமா அந்த பாம்புக்கு? சரி இப்போ ஆட்சியில் இல்லாவிட்டாலும் அடுத்து ஆட்சிக்கு வந்தா நம்மை மீண்டும் பல்லை பிடுங்குவான் இந்த திராவிடன் இப்போது இத்தனை வீரியம் நமக்கு கூடாது என பயப்படுவானா மாட்டானா? நாம் தும்பை விட்டுவிட்டு வாலை பிடிப்பதால் தான் இத்தனை கஷ்டமும்.

  திராவிட இயக்கம் தோன்றி 100 ஆண்டுகளுக்கு பின்னர் கலைஞர் "திராவிட இயக்க நூற்றாண்டு கொண்டாடுவோம்" என சொன்னதுக்கே இந்த குதி குதிக்கிறானுங்களே? அப்படி என்றால் நடேசனார், தியாகராயர் , நாயர் ஆகியோர் நிலை எப்படி இருந்திருக்கும். நாயர் லண்டன் சென்ர போது சாக வேண்டும் என அவர்கள் யாகம் செய்தமைக்கும் இப்போது குதிகுதி என குதிப்பதுகும் எந்த ஒரு வித்யாசமும் இல்லை. ஆனால் நாம் தாம் நம் ஆட்சியில் இருக்கும் போது இந்த உணர்வுகளை மழுங்க அடித்தும் அல்லது மறந்து போயும்... இப்போது அவர்கள் குதிப்பதை ப்பார்த்து ஆதங்கம் அடைகிறோம்.

  இனியாவது நாம் ஆட்சிக்கு வந்ததும் .... தமிழ் வளர்சித்துறை என கொண்டு வந்தோமே அது போல "திராவிட வளர்சித்துறை" என கொண்டு வந்து அதற்கு ஒரு நல்ல திராவிட இயக்க வரலாறு தெரிந்த ஒருவரை அமைச்சராக்கி அழகுபார்க்க வேண்டும்.

  நான் என் நண்பர் திராவிடப்புரட்சி என்பவரிடம் பேசிக்கொண்டு இருந்த போது ஒரு கருத்தை சொன்னார். 'அந்த அம்மாவுக்கு சோ என்னும் பார்பனரால் இப்போது கொடுக்கப்பட்ட ஒரு அஜண்டா என்னவாக இருக்கும் என யூகிக்க முடிகின்றது. எம் ஜி ஆர் ஆரம்பித்து வைத்த கட்சி "அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துக்கு" அதிலே இருக்கும் திராவிட என்னும் வார்தையை அழித்து விட்டு அண்ணா தமிழக முன்னேற்ற கழகம் என இந்தம்மா கண்டிப்பா பெயரை மாற்றும் என்றே யூகிக்கிறேன் என்றார். அது நடந்தாலும் ஆச்சர்யப்பட எதும் இல்லை.

  ReplyDelete
 4. திராவிடம், தமிழ் என்று பேசி ஆட்சியைப் பிடித்த இயக்கம் பிராமணர் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தியது உண்மைதான். ஆனால் ஆட்சிக்கு வந்தபின் முதல் தேர்தலிலேயே ‘ஆரியக் கட்சியான காங்கிரசுடன் கூட்டணி வைத்தது யார்? பிராமணியத்தையும், ஆரியத்தையும் அடிப்படையாகக் கொண்டு, பிற்படுத்தப்பட்ட மக்களின் எழுச்சியை அடக்க வந்த ஆர் எஸ் எஸ்-பிஜேபி ஆட்சியில் பங்கேற்றது யார்? சோதிடத்தை பாடத்திட்டத்தில் சேர்த்தபோது பெரியாரின் சீடர்கள் எங்கே போனார்கள்? தலித் ராஜா ஜாமீன் கேட்காமல் உள்ளே இருப்பது ஆரியர்களுக்கு பயந்தா அல்லது திராவிட இளவல்களுக்கு பயந்தா?

  ReplyDelete
 5. பா.ம.க என்னும் கட்சி தலைமை மது ஒழிப்பு மாநாடு என்று சொன்னாலே அங்கு கூடும் அவரது தொண்டர்கள் மதுவை குடித்தே ஒழிக்கும் பக்குவத்தை ஏற்படுத்தி தந்திருக்கும் ஒரு சாதி கட்சி,

  திராவிடம் என்றால் என்ன? திராவிட இன வரலாறு? தான் பிறந்த இனமே திராவிடம் என்று தெரியாதவரா அவர்?

  தெரிந்திருந்தும் சுயலாபத்திற்கும், பகட்டிற்கும் தன் இன மக்களான ஒரு பிரிவினரை சாதி பெயரை கூறி கட்சி நடத்துவதற்கு என்னவென்று சொல்வது.

  தேவைப்படால் பெரியாருடைய பெயரையும், அவருடைய படத்தையும் போட்டு பேனர் வைக்கும் அளவுக்கு திராவிடத்தை பற்றி அறிய வைத்து கட்சி நடத்தும் அவருக்கு ஒரு சபாஷ் போடலாம்.

  இது ஒரு சாதி கட்சி தானே பின்பு எதற்கு சாதியே இல்லை என்று சொன்ன பெரியார் படம்.

  இந்த லட்சனத்தில் இவர்கள் சேகுவரா படத்தை கூட விட்டுவைக்கவில்லை.

  அப்படி இருக்கும் போது திராவிடத்தை பற்றியும் திராவிட இனத்தை பற்றியும் பேச இராமதாசிற்கு அருகதை இல்லை.

  ReplyDelete
 6. அய்யா தங்களின் மேலான சிந்தனைக்கு :

  http://ponniyinselvan-dravidian.blogspot.com/2012/03/blog-post.html

  ReplyDelete
 7. ஐயா, தின"மலத்தை" தினமலர் என்று சொல்லியதற்கு என் கண்டனங்கள்... பாப்பான் இன்று வரை தமிழனை, தமிழனாகிய திராவிடனை அழிக்க ஒழிக்க அடிமை படுத்த நினைப்பது அவர்களின் அறியாமையே... எங்களை போன்ற இளைங்கர்களுக்கு வரலாறு சொல்லி குடுக்க வரலாற்று ஆசிரியராய் கலைஞர் நீங்கள் பேராசிரியர் போன்றோர் இருக்கும் நியாபகம் இல்லை போல அவர்களுக்கு.... அறிவு கெட்ட முட்டாள் பயலுகள்... இனி ஆரியனால் திராவிடனை தொட முடியாது.. இந்த சந்ததி தெளிந்துவிட்ட சந்ததி.. (ஆனால் இதையும் குழப்ப, பெரியாரை எதிர்க்கும் சீமான் போன்றோரை ஆரியம் இப்போது பயன்படுத்துவது கோபத்தை வரவழைக்கிறது.

  ReplyDelete