தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 14 April 2012

பாரதிதாசன் பற்றி சுபவீ கவிதை


பாட்டுக்கு உரை எழுதிப்
பார்த்ததுண்டு
நீயோ
பெரியாரின் உரைகளுக்குப்
பாட்டெடுத்த பாவின் வேந்தன்!
பாட நூல்களில் நீ வெறும்
‘குடும்ப விளக்கு'
தேர்வுகள் முடிந்து
தெருவுக்கு வந்தபின்
உணர்ந்தேன் உன்னை
‘தமிழச்சியின் கத்தி'யாய்!
புரட்சிக் கவிஞனே,
உன் ‘அழகின் சிரிப்'பைப்
பத்திரப்படுத்தினோம்.
கொடியோர் செயல் அழித்திட நீ
கொடுத்த கொலைவாளை மட்டும்
எங்கோ தொலைத்துவிட்டோம்.

No comments:

Post a Comment