தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 14 April 2012

பெரியார் பற்றி சுபவீ கவிதை

விளக்கை ஏற்றி
வெளிச்சம் தந்தவர்கள் உண்டு
நீயோ
உன்னையே எரித்து
வெளிச்சம் தந்தாய்
எங்களுக்கு நீதான்
எழுதவும் படிக்கவும் அடித்தளமிட்டாய்
நாங்களோ இன்னும்
நன்றி சொல்லவே கற்றுக்கொள்ளவில்லை
எங்களுக்காகவே
நீ வாழ்ந்தாய்
மன்னித்துவிடு தந்தையே
நாங்களும்
எங்களுக்காவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

2 comments:

 1. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
  செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

  பெரியாரை மறந்த அல்லது மறுக்கும் தமிழர்களுக்கு எந்நாளும் உயர்வில்லை.

  பெரியாரை முண்ணெடுத்து செல்லும் உங்கள் பணி சிறப்பாக தொடரட்டும். மிக்க நன்றி.

  R,Jayaprakash.

  ReplyDelete
 2. எங்களுக்கு நீதான் எழுதவும் படிக்கவும் அடித்தளமிட்டாய் நாங்களோ இன்னும் நன்றி சொல்லவே கற்றுக்கொள்ளவில்லை................நிதர்சனமான வரிகள் ஐயா....நன்றி சொல்லவில்லையென்றாலும் பரவாயில்லை....தூற்றுகின்றனரே பல குறைமதியோர்....என்ன செய்வது...

  ReplyDelete