தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday, 3 June 2012

எழுதுவதை நிறுத்திவிட்டது ஒரு பேனா



மூத்த பத்திரிகையாளர் சோலை அவர்கள் 29.05.2012 அன்று காலமானார் என்னும் செய்தி, நம் அனைவரையும் கலக்கத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. சென்ற ஆண்டு இதே மே மாதத்தில் நம் சின்னக்குத்தூசியார் மறைந்தார். இந்த ஆண்டு மே மாதத்தில் எழுத்தாளர் சோலையை நாம் இழந்துவிட்டோம்.

திராவிட இயக்கத்திற்கும், தி.மு.கழகத்திற்கும் ஆதரவாகக் கடந்த சில ஆண்டுகள் மிக அழுத்தமான வாதங்களை முன் வைத்து, எதிர்க் கருத்துடையவர்களோடு எழுத்துப்போர் நடத்திக் கொண்டிருந்தவர்களில் நம் சோலை அவர்களும் முதன்மையானவர்.

அவருடைய இறப்பு, தனி மனித இழப்பன்று. நம் போன்ற இயக்கங்களுக்கும், முற்போக்குச் சிந்தனைக்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பு.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை, அன்னாரின் குடும்பத்தினருக்குத் தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
                                                               -பொதுச் செயலாளர்.
                                                    

1 comment:

  1. யாருக்கும் அஞ்சாத சிங்கம். கழகம் பல்வேறு சோதனைகளை சந்தித்த போது தன் எழுத்துக்களால் உடன்பிறப்புகளை துள்ளி எழ செய்தவர். ஏன் தவறு என்றால் தலைமை கழகத்தையே கேள்வி கேட்க அஞ்சாதவர். திராவிட எழுத்தாளர்களின் முன்னோடி அய்யா சோலை அவர்கள். அண்ணாரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.

    ReplyDelete