தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday, 6 June 2012

என் ஏட்டுக் கணக்கு

என்
ஏட்டின் கணக்கைக்
கூட்டிக் கழிக்கையில்
முன்பின் முரண்கள்
முகங் காட்டுகின்றன

எந்த வெள்ளத்தையும்
எதிர்கொண்டு வென்றும்
சின்னத் தூறலுக்கே
சிலநேரம் கரைந்தும்

ஓடும் செம்பொனும்
ஒக்கவே நோக்கியும்
ஓடிப் பொன்புகழ்
காமம் தேடியும் -

காரிருள் தனிலும்ஒரு
கரும்பூனையைக் கண்டுபிடித்தும்
பட்டப்பகலின் வெட்டவெளியில்
என்னையே நான் தேடியும் -

என்
ஏட்டின் கணக்கைக்
கூட்டிக் கழிக்கையில்
முன்பின் முரண்கள்
முகங் காட்டுகின்றன !

2 comments:

 1. //ஏட்டின் கணக்கைக்
  கூட்டிக் கழிக்கையில்
  முன்பின் முரண்கள்
  முகங் காட்டுகின்றன !//

  பா நயத்திற்கு முரண் அழகு...
  நாணயத்திற்கு முரண் அழகு.
  சுப.வீ. ஐயா தங்கள்
  நா நயத்திற்கும் அதுதான் அழகு....

  ReplyDelete
 2. ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்கியும் ஓடிப் பொன்புகழ் காமம் தேடியும் -.................விளங்கவில்லை ஐயா...சற்று விளக்கம் தர இயலுமா...?

  ReplyDelete