சீமான் பேச்சும் சுபவீ விடையும்
17.08.2012 அன்று,
சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், நாம் தமிழர்
கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் எனக்கு ஒரு விதமான கொலை மிரட்டல்
விடுத்துப் பேசியுள்ளார். அப்பேச்சின் சில பகுதிகளை ஒளி நாடாவிலிருந்து எடுத்து
அப்படியே கீழே தந்துள்ளேன்.
"இந்த சுப வீரபாண்டியனைத்தான் கேக்குறேன்.
கலைஞருக்குப் பிறகு என்ன செய்வே? என்ன செய்வீங்க அப்புறம்? ஸ்டாலின் பின்னாடிப்
போவீங்களா? (ஆவேசமாக) இங்க பாரு....திரளாகத் திரண்டிருக்கிற இன உணர்வும்,மான
உணர்வும் மிக்க என் மக்களிடத்திலே, என் அன்புச் சகோதரர்களிடத்தில்
கேட்கிறேன்....இவ்வளவு பெரிய நாட்டுக்குள்ள இல்லாத முதலமைச்சர், மறுபடி கருணாநிதி
வீட்டுக்குள்ளதான் இருக்கான்னு தேடிப் போனே.....ஒரு பயலை உயிரோட விட மாட்டேன்
உங்களை.
இனி ஒரு தடவை
போனே....(மீண்டும் மிக ஆவேசமாக) டேய்.....அஞ்சு முறை கருணாநிதி முதலமைச்சராக
இருந்து நாட்டை ஆண்டுட்டாரு, ஆண்டுட்டாரு, சாதனை, சாதனை, பெருமை, பெருமைன்னு
பெசிக்கிராதீங்க...........ஓடி ஓடி உழைக்காதே கருணாநிதியையும் அவரு
குடும்பத்தையும் வாழவும் ஆளவும் வைக்கிறதுக்கு. அர்ப்பணிச்சு நிக்காதே.
.......................
இங்க பாரு.....நீண்ட நாளு இப்படிக் கத்திக்
கத்திச் செத்துக்கிட்டிருக்க முடியாது. ஒரு அஞ்சு வருஷம் பாப்பேன். இல்லாட்டிக்
கத்தி எடுத்துக் குத்திடுவேன். இங்க பாரு....ஜனநாயகம் தோக்கும்போது வேற
வழியில்ல..........அதனால உங்க பிள்ளைகள் அந்த நிலைக்கு எல்லாம் போறதுக்கு முன்னாடி நீங்க சுதாரிச்சுக்குங்க.
விழிப்புணர்வு அடையுங்க."
மேலே உள்ள உரை முழுவதும் தம்பி சீமானுடையது. ஒரு எழுத்தைக் கூட
நான் மாற்றவில்லை. முதலில் உள்ள கொலை மிரட்டல் எனக்கு. பிற்பகுதியில் உள்ள
மிரட்டல் மக்களுக்கு. இன்னும் ஐந்து வருடத்தில் நாம் தமிழர் கட்சிக்கு
வாக்களிக்காவிட்டால் என்ன நடக்கும் என்பதை அவர் கூறுகின்றார்.
இம்
மிரட்டல்களுக்கெல்லாம் விடை சொல்ல வேண்டும் அல்லது வழக்குத் தொடுக்க வேண்டும் என்று நண்பர்கள் விரும்புகின்றனர்.
வேண்டாம் நண்பர்களே,
தெளிவும் அரசியலும் அற்ற விவாதங்களில் நாம் சிக்கிக் கொள்ள வேண்டாம்.
வேண்டுமெனில், ஒன்றை மட்டும் சொல்லி வைக்கலாம். தன்னுடன் இருந்த ஒரு தம்பியின்
கைகளால் கொல்லப்படுவதும், தான் மிகவும் நேசிக்கும் தலைவன் வீட்டு வாசலில் உயிர்
பிரிவதும் எல்லோருக்கும் வாய்க்காது. எனக்கு வாய்த்தால் மகிழ்ச்சியே.
எதிர்ப்புகளை தோழர் சுப.வீ எதிர்கொள்ளும் விதமும் அவருடையப் பக்குவமான வார்த்தைகளும் அவருடைய மனோதிடத்தைக் காட்டுகிறது. தெளிவுள்ளவர்கள் கலங்கவும் மாட்டார்கள். உளறவும் மாட்டார்கள்.
ReplyDeleteதெளிவும் அரசியலும் அற்ற விவாதங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்ற வேண்டுகோள் சுபவீ அவர்களின் பண்பை மேன்மையை வெளிப்படுத்துகிறது. ஆனால், " தன்னுடன் இருந்த தம்பி" எனக் குறிப்பிடும் அந்த தம்பி, தங்க கம்பியல்லவே, அறிஞர் அண்ணா சொன்னதுபோல், குஷ்டரோகியின் கையிலுள்ள வெண்ணைக்கு அலையும் தம்பியாக அல்லவா இருக்கிறார்!!
ReplyDeleteஅண்ணன் சுபவீ பற்றி பல செய்திகளை அந்த கூட்டத்தில் சொல்லியிருப்பார் சீமான்.. அதை எல்லாம் அப்படியே அமுக்கிவிட்டு இதை மட்டும் போடும் உங்கள் கள்ளத்தனம் சொல்லும் ஆயிரம் சேதி.. அய்யா சுபவீ நீங்கள் எல்லாம் சீமானை பற்றி பேச கூட தகுதி இழந்தவராகி பல நாள் ஆகிவிட்டது. கொலை மிரட்டலாம்.. ஹஹஹா.
ReplyDeleteஎதிர்ப்புகள் என்ன உங்களுக்குப் புதிதா?
ReplyDeleteஒரு பயலை உயிரோட விட மாட்டேன் உங்களை.Idharkku enna artham Packia?.... ooooo ipadiyae pesi pesi kolluratha sol reengalao?
ReplyDeleteசிநிமாக்காரனுடைய விசிரியாகிவிட்டால் அப்படித்தான் ஹஹஹா என்று சிரிக்கும் மனிதனாகமுடியும்
Deleteதண்ணி போட்டுட்டு பேசுகிறாரா?
ReplyDeleteதண்ணி போடாம பேசமாட்டார்
ReplyDeleteஇவனெல்லாம் அரசியலுக்கு வந்து நாசமாப் போச்சு
ReplyDeleteஇங்கேயிருக்கும் சகத் தமிழர்களையே கொல்லத் துடிக்கும் இவர், எப்படி? பிறநாட்டுத் தமிழர்களை காப்பதற்காக புறப்பட்டவர் போல் தன்னைக் காட்டிக் கொள்கிறார்?
ReplyDeleteஅறிவு கெட்ட சீமான் தான் என்ன பேச வேண்டும் .... மேடை நாகரிகம் என்றால் என்ன ...
ReplyDeleteஎதுவமே புரியாமல் நான் அதிகமாக மதிப்பு வைத்து இருக்கும் என் பேராசிரியரை
பேசி இருப்பது கவலை தருகிறது ..... சீமானுக்கு சுபவீயை பற்றி என்ன தெரியும் ....
அவரோடு தமிழ் அறிவுக்கும் பொது அறிவுக்கும் முன் இவர் எந்த மாத்திம்.....
அவரின் சொல்லாடலின் அழகு வருமா இவருக்கு ... இன்றைய நிலையில் சுபவீயின்
கொள்கைகளோடு சிறிது முரண் பட்டாலும் அவரை எந்த காலத்திலும் விட்டு கொடுக்க முடியாது ...
சீமான் திருந்துவது நல்லது ... இல்லை என்றால் ஒதுங்குவது நல்லது ..... அவர் தன் குடி பழக்கத்தை
நிறுத்திவிட்டாரா என்று யாருனா கேட்டு சொல்லுங்க பா.....
தன்னுடன் இருந்த ஒரு தம்பியின் கைகளால் கொல்லப்படுவதும், தான் மிகவும் நேசிக்கும் தலைவன் வீட்டு வாசலில் உயிர் பிரிவதும் எல்லோருக்கும் வாய்க்காது. எனக்கு வாய்த்தால் மகிழ்ச்சியே.//// உங்கள் பதிலில் உங்கள் உள்ளம் தெரிகிறது! அந்த சீமானின் பேச்சில் அவர் உள்ளம் தெரிகிறது!
ReplyDeleteசுபவீ பதிலில் அவருடைய உள்ளம் தெரிகிறது! அந்த சீமானின் பேச்சில் அவர் கள்ளம் தெரிகிறது!
Deleteஅய்யா சுபவீ எழுதியிருக்கும் கட்டுரையே சீமான் குறித்து அவர் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுக்கு பதிலாக இருக்கிறது. ”திரளாகத் திரண்டிருக்கிற இன உணர்வும்,மான உணர்வும் மிக்க என் மக்களிடத்திலே, என் அன்புச் சகோதரர்களிடத்தில் கேட்கிறேன்...” என்றுதான் சீமான் பேசியதாக சுப.வீயே எழுதி விட்டு அதை தன்னை நோக்கி திருப்பி கொள்வதுதான் அறமா..?
ReplyDeleteஅன்று : விடுதலைப்புலிகளுடன் சேர்ந்துக் கொண்டு வைகோ என்னை கொல்ல முயற்சி-கருணாநிதி
இன்று : சீமான் என்னை கொல்ல முயற்சிக்கிறார் -சுப.வீ .
அய்யய்யோ ..என்னை கொல்றாங்களே என கத்திய தலைவரின் சீடர் அருமையாக கதை அளந்து இருக்கிறார். தலைவன் எவ்வழியோ.. தொண்டரும் அவ்வழி.
17.08.2012 அன்று, சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் எனக்கு ஒரு விதமான கொலை மிரட்டல் விடுத்துப் பேசியுள்ளார். அப்பேச்சின் சில பகுதிகளை ஒளி நாடாவிலிருந்து எடுத்து அப்படியே கீழே தந்துள்ளேன்.//.....என்று தேதி குறிப்பிட்டு ஆதாரத்துடன் சுபவீ குறிப்பிடும் செய்தி கதை அளந்து விடுவதாக சொல்லமுடியாது.முன்னது விடுதலைப்புலிகளுடன் சேர்ந்துக் கொண்டு வைகோ என்னை கொல்ல முயற்சி-கருணாநிதி.//.... வேண்டுமானால் இரண்டு வித யூகத்தின் அடிப்படையில் 1)தன்னுடைய தலைவனுக்கே தெரியாமல் வைகோ ஈழத்தில் பிரபாகரனுடனான சந்திப்பு 2)அல்லது தனக்கு கிடைத்த நம்பகத்தகுந்த இடத்திலிருந்து கிடைத்த செய்தியின் அடிப்படையில் கூறியிருக்கலாம்
Delete@Packia...சீமான் பல விஷயங்கள சொல்லிருப்பரு, சென்சிருப்பரு....அமுக்கிடாங்க என்றெலாம் ஆராய்ச்சி செய்த ஒங்க நேரத்திற்கு நன்றி .உங்களுக்கு புரிகிற மாதிரி வடிவேலு பாஷைல சொன்ன ..ரொம்ப சின்ன புள்ள தனமால்ல இறுக்கு. ஆனா ஒணுமட்டு சரியசொன்னீங்க அய்யா சுபவீ மாதிரி உயர்த்த எண்ணம் உள்ளவர்கள் சீமான் மாதிரி அறிவில்லதவர்களை பற்றி பேசத்தகுதியற்றவர்கள்தான்.
ReplyDeleteவைகோ நெடுமாறன் மற்றும் சீமான் இவர்கள் அனைவரும் வேடதாரிகள் பிரபாகரன் என்ற மனிதன் இருக்கும்போது இல்லாதவர்கள் இறந்த போது இருந்தவர்கள் இவர்கள் இப்படித்தான் பிதற்றுவார்கள்
ReplyDeleteகலைஞரோடு இருக்கிறார் என்பதை தவிர வேறன்ன குறை காணமுடியும்
ReplyDeleteசு ப வீ ஐய்யா போன்ற ஆழ்ந்த அறிவு , தொலைநோக்கு சிந்தனை , நல்ல தமிழ் உரையாடல் , கருத்து முரண்பாடு உள்ளவர்களயும் மதிக்கும் பண்பு... இப்படி அவரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் , இன்றைய தமிழகத்தில் எத்தனைபேர் இருக்கிறார்கள் ?
சு ப வீ ஐய்யாவின் அனுபத்திற்கு முன்னாள் இந்த சீமானெல்லாம் எம்மாத்திரம்?
தொண்டையை அடைத்துக்கொண்டு உரக்க கத்தினால் போதுமா?
தம்பி சீமான் வராற்றை ஒருமுறை தெளிவாக படிக்க வேண்டும்