தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday, 4 September 2012

செப்டம்பர் 5 - யாருடைய பிறந்த நாள்?



நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப் படுவதைப் போல, மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5 ஆசிரியர் தினமாக நினைவு கூறப்படுகின்றது. அதே நாளில்தான் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யும் பிறந்தார்.ஆனால்  அவருக்கு எந்தச் சிறப்பும் இம்மண்ணில் வழங்கப்படவில்லை. 

 இதில் வேடிக்கை என்னவென்றால், டாக்டர் ராதாகிருஷ்ணன் எந்த விடுதலைப் போராட்டத்திலும் கலந்து கொண்டு ஒரு நாள் கூடச் சிறை சென்றவர் இல்லை. இந்திய விடுதலைக்காக ஒரு மேடையிலும் பேசியதில்லை. ஓர் எழுத்தைக் கூட எழுதியதில்லை. இவ்வளவு ஏன், அவர் விடுதலை வரும் வரை காங்கிரஸ் கட்சியில் உறுப்பினரே இல்லை. ஆனால் அவரைக் குடியரசுத் தலைவர் பதவி வரையில் அமர வைத்து அழகு பார்த்தது நாடு.

                         வ.உ.சி., நம் நாட்டின் விடுதலைக்காக தன் சொத்து, சுகம் அனைத்தையும் இழந்து, ஆறு ஆண்டுகள் கடும் சிறையில் வாடியவர். நாட்டுக்காக அவர் பட்ட துன்பங்கள் பல. ஆனால் அவரை இந்திய அரசு கொண்டாடவில்லை. குறைந்தது தமிழர்களாவது இனிமேல், செப். 5 என்பதை வ.உ.சி.யின் பிறந்த நாள் என்று சொல்லிப் பழகுவோம். ஏன் இந்த வேறுபாடு என்பதையும் எண்ணிப் பார்ப்போம். ராதாகிருஷ்ணன் திருத்தணியில் தெலுங்குப்  பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவர். வ.உ.சி.யோ 'சூத்திரனாய்ப் பிறந்தவர். வேறுபாடு இதுதானே? 

2 comments:

  1. ஒரு ஆசிரியர் என்ற முறையில் ஆசிரியர் தினத்தினைப் பெருமையாக நின்ப்பவன் நான். ஆனால், தங்களது பதிவைப் பார்த்த பிறகுதான் இன்று செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களின் பிறந்த நாள் என்பதை அறிந்து கொண்டேன். இது நாள் வரை வ.உ.சி. அவர்களின் பிறந்த நாளும் இன்றுதான் என்பதை அறியாததற்காக வெட்கப் படுகிறேன். இன்று முதல், ஒவ்வொரு ஆண்டும், எனது வகுப்புகளில் வ.உ.சி அவர்களின் பிறந்த நாளினையும் கொண்டாடுவேன் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  2. தங்களின் பதிவை பார்த்ததால்,ஆசிரியர் தினக் கொண்டாட்டத்துடன், கப்பலோட்டியத் தமிழனின் பிறந்த நாளினையும் வகுப்பில் சிறப்புடன் கொண்டாடினேன் என்பதைத் தங்களுக்கு அறியத் தருகின்றேன்.வ.உ.சி அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு, ஒரு ஓவியப் போட்டியினை நடத்தினேன். மாணவியர் வரைந்த ஓவியங்கள் அருமை. முதற் பரிசு பெற்ற ஓவியத்தை எனது வலைப் பூவில் வெளியிட்டுள்ளேன்.

    ReplyDelete