தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday, 26 September 2012

எப்படி மறப்போம்?வாழும் வயதில் சுகங்கள் மறந்து 
ஈழம் காண இறந்து போனாய் 
வீடு வாசல் எல்லாம் துறந்து 
நாடு காக்க நல்லுயிர் இழந்தாய் 
கனவிலும் ஈழம் காணத் துடித்து 
உணவும் நீரும் ஒருங்கே மறுத்து 
பத்து நாள்கள் பட்டினிப் போரில் 
செத்து மடிந்த தியாகத் திலீபா 
கடந்து போனது கால்நூற் றாண்டு
உடைந்து போன உள்ளத் துடன்தான் 
இன்றும் நாங்கள்! ஈழம் காண 
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?
(திலீபன் மறைவு - 26.09.1987)

1 comment:

 1. திலீபா
  சூலாயதத்துடன் சிவனும்
  வேலோடு முருகனும்
  வாளோடு காளியுமான
  எங்கள் மண்ணில்
  அகிம்சையை ஆயுதமாக்கியவனே

  ReplyDelete