தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday, 18 October 2012

இன்றைய ஜெயலலிதா ஆட்சியில்......சேதுக் கால்வாய்த் திட்டத்திற்கு ஊதிவிட்டார் சங்கு!
சிறுவர் பெரியோர் எல்லோருக்கும் பரவுதடா டெங்கு!
ஏது சொல்வேன் விலைவாசி ஏறுது வான்தொட்டு 
இருள்கிறது நாடெல்லாம் எங்கும் மின்வெட்டு!
சூது வாது  கொலை கொள்ளை தொடர்கிறது நாட்டில்
சாகின்றார் மீனவர் சிங்களத் துப்பாக்கிச் சூட்டில்!
நாதியற்றுப் போனதுவோ நமது தமிழ்ச் சாதி 
நற்றமிழர் கொதித்தெழுந்தால் பின்தெரியும் சேதி!
                                                                                                      - சுபவீ 

2 comments:

  1. Sivakumar Paramasivam19 October 2012 at 06:44

    I read this Kavithai - Arumai and Simply beautiful....

    ReplyDelete
  2. நற்றமிழர் கொதித்தெழுந்தால் பின்தெரியும் சேதி!
    தமிழர்கள் கொதித்தெழ வேண்டும் என்பது அண்ணன் சுபவீயின் ஆசை, ஆனால் அவர்கள் விழித்தெழும் நாள் எப்போது ? என்று நாம் கவலையோடு காத்திருக்கிறோம். அண்ணன் சுபவீ அவர்களின் கவிதை அருமை. தமிழர்களின் உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி எடுத்துச் சொல்லும் கவிதை இது

    ReplyDelete