தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday 17 February 2013

இது விபச்சாரத்தை விட இழிவானது




                குமுதம் ரிப்போர்ட்டர்' இதழைக் கண்டித்து சுபவீ உரை 

               கருத்துச் சுதந்திரம் வேண்டும் என்னும் கருத்துடையவர்கள்தாம் நாம். ஆனால் அநாகரிகமாகவும், அருவெருக்கத்தக்க வகையிலும் எழுதுவது கருத்துச் சுதந்திரம் ஆகாது. இப்போது வெளிவந்துள்ள குமுதம் ரிப்போர்ட்டர் என்னும் குப்பை இதழ் ஒன்று, நம் தலைவர் கலைஞர் அவர்களையும், குஷ்பூவையும் தொடர்பு படுத்தி, மனம் புண்படும் வகையில் எழுதியுள்ளது. இன்னொரு மணியம்மை என்று தலைப்பிட்டு, தன் வக்கிர புத்தியை வெளிப்படுத்தியுள்ளது

             ஒரு பெண் நடிகையாய் இருந்தால்  அவரைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாமா? இந்தப் இதழின் ஆசிரியர் வரதராஜனைப் பார்த்துக் கேட்கிறேன், உங்கள் வீட்டுப் பெண்களைப் பற்றி இப்படி நாங்களும் எழுதட்டுமா? அரசியல் எழுது, ஆயிரம் விமர்சனங்களை வை, வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால் ஆபாசமாகவும், அருவருப்பாகவும் எழுதித்தான் பணம் சேர்க்க வேண்டுமா? இதனை விட நீ வேறு பிழைப்பு நடத்தலாமே

               மணியம்மையின் வரலாறு தெரியுமா உனக்கு? 1957ஆம் ஆண்டு சட்ட எரிப்புப் போராட்டத்தில் தந்தை பெரியார் கைது செய்யப்பட்டுச் சிறையில் இருந்தார். நம் ஆசிரியர் வீரமணி அவர்கள் அப்போது சட்டக் கல்லூரி மாணவராக இருந்தார். அந்த நேரத்தில், திருச்சி சிறையில், போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றிருந்த, மணல்மேடு வெள்ளைச்சாமி. பட்டுக்கோட்டை ராமசாமி ஆகிய இருவரும் சிறையிலேயே இறந்து போனார்கள். இருவரின் உடல்களையும் அதிகாரிகள் சிறையிலேயே புதைத்து விட்டனர். உடனே மணியம்மையார்தான், நடிகவேள் ராதாவின் காரில் சென்னை வந்து, அன்றைய முதலமைச்சர் காமராஜர் அவர்களைச் சந்தித்து வாதாடி, மீண்டும் பிணங்களைத் தோண்டி எடுக்க வைத்தார். அந்தப் பிணங்களை ஏந்தியபடி திருச்சி முழுவதும் மாபெரும் ஊர்வலத்தை நடத்தி, அய்யா இல்லாத போதும் கட்சிக்குப் புதிய வலிவை ஊட்டியவர் மணியம்மையார்தான். இந்த வரலாறெல்லாம் வரதராசன்களுக்கு எங்கே தெரியப் போகிறது

         கண்டதையும் எழுதிக் காசு சேர்ப்பது, பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசுவதைப் போலக் கொடுமையானது. விபச்சார விடுதி நடத்துவதை  விட இழிவானது

(16.02.2013 அன்று மாலை, சென்னையை அடுத்துள்ள மேடவாக்கம் பகுதியில் சுப. வீரபாண்டியன் ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதி மேலே தரப்பட்டுள்ளது. பேசியபடியே, அந்த இதழை அவர் மேடையில் கிழித்து எறிந்தார்)

2 comments:

  1. குமுதம் ரிப்போர்ட்டரில் வெளி வந்த செய்தி மிகவும் கண்டிக்கத் தக்கது.

    ReplyDelete
  2. kushpu vai மணியம்மை yudan compar paniayathu thavaruthan

    ReplyDelete