தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Monday 18 November 2013

மீசை குறும்படம்

சுபவீ எழுதி தேவி வார இதழில் வெளியான சிறுகதை, மீசை எனும் குறும்படமாக வெளிவந்துள்ளது.


11 comments:

  1. மிக மிக அருமையான குறும்படம் 1.படத்தின் கருத்து ஆணாதிக்கத்திற்கு சவுக்கடி. 2. உடல்நலத்திற்கு தீங்கான செயலை ஆண் செய்தால் ஆரோக்கிய் கேடு..பெண் செய்தால் ஒழுக்கக்கேடா..இதுதான் இந்திய இந்துத்துவ மனநிலை..3.11 நிமிடத்தில் மிக நேர்த்தியான பதிவு.குறும்பட க்குழுவினர்க்கு பாராட்டுக்கள்..உங்கள் முயற்சியை அயற்சியின்றி தொடருங்கள்..

    ReplyDelete
  2. தங்களின் எண்ணத்தில் எழுத்தில் உருவான குறும்படம் பார்த்தேன் ஐயா. ஆண்கள் செய்தால் உடலுக்குக் கேடு, அதையே பெண்கள் செய்தால் ஒழுக்கக் கேடு.
    முகத்தில் அறைந்தார் போன்ற வரிகள் ஐயா.
    நன்றி

    ReplyDelete
  3. அருமையான கதைக் கரு. மாறுபட்ட கதையமைப்போடு சொல்லப்பட்டுள்ள பெண்ணியச் செய்தி. ஆணாதிக்கத்தை அடித்து நொறுக்காமல் பெண் விடுதலையை முன்னெடுக்க முடியாது என்பதை கடைசிக் காட்சி நெத்தியடியாகச் சொல்லிவிடுகிறது.
    படக் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள்.
    வேகமாக விரிவடைந்து வரும் இணையப் பரப்புகளில் இது போன்ற குறும்படங்கள் பரப்புரைப் பணிக்கு பெரிதும் உதவும். பன்முகத் திறன் கொண்ட அண்ணன் சுபவீ அவர்களின் அனைத்து பணிகளும் எழுச்சியுடன் தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. செ.பழனியப்பன், 2/63, சிவாய நகர்,11th கிராஸ், சேலம்-636004

    ஆணாதிக்கத்திற்கு ஒரு சூடு.
    புகை பழக்கமும் குடிபழக்கமும் ஒவ்வொருவரும் இளைஞராக இருந்தபோது விளையாட்டகக் கற்றுக் கொண்ட படங்களே- ஒரு உதாரணம்.
    பெண் ஒழுக்கம் ஆண் ஒழுக்கத்தை சார்ந்ததே என்ற நற்செய்தியை நாசூக்காக சமூகத்துக்கு விளங்க வைக்கிறது இந்த குரும்படம்.
    அண்னன் தங்கை உறவை காட்டிய விதம் நன்று.
    சுபவீ. அவர்களின் இத்தகைய சமுதாய சீர்திருத்த முயற்சிக்கும், இம்முயற்சிகள் தொடரவும் வழ்த்துகள்

    ReplyDelete

  5. குறும்படம் சிறப்பாக இருந்தது .கெடுதலை செய்வதில் சமத்துவம் வேண்டுமா

    ReplyDelete
  6. simply superb, one more feather to subavee profile.......

    ReplyDelete
  7. பெரியாரிய பெண்ணிய சிந்தனையாளர்களுக்கே உரிய கோணத்தில் அமைந்த கதைக்கரு.பெண்ணுரிமை என்றால், ஆணுக்கு என்னென்ன உரிமை உண்டோ அவையனைத்தும் பெண்ணுக்கும் உண்டு என்று மிக எளிமையாக விளக்கத்தை அய்யா பெரியார் மட்டுமே கொடுக்கமுடியும்.கதையின் நோக்கம் பெண்ணும் ஒழுக்ககேட்டில் இணை என்பதை காட்டிலும், ஒரு செயலின் அளவு கோல் இருபாலருக்கும் வெவ்வேறு விதமாக இந்த சமூகம், சாதீயத்தின் நீட்சியாக பெண்களையும் இழிவு படுத்தியுள்ளது. எங்களின் பத்து பொதுக்கூட்டங்களும், ராதா அவர்களின் ஒரு நாடகமும் சமம் என்று, சினிமாவை அய்யா பெரியார் ஒப்புகொண்டதை போல, திரைத்துறையும் இப்படி பட்ட படங்களை எடுக்குமேயானால், இந்த சமூகம் இன்னும் வேகமாக வளர்ச்சி அடையும்.
    இதனை ஒளிகாட்சியாக ஆக்கியவர்கள் கண்டிப்பாக பாராட்டுக்குரியவர்கள் தான். Every frame has been carefully taken without disturbing the spirit of the theme.
    நல்ல முயற்சி அய்யா

    ReplyDelete
  8. S, Gajendiran, Puducherry27 November 2013 at 00:37

    Avalin chinna seyal moolam PERIYA (RIN) seithi...

    Nandri

    ReplyDelete
  9. http://tamizachi.com/articles_detail.php?id=347

    அய்யா உங்கள் கவனத்திற்கு

    ReplyDelete
  10. அருமையான முயற்ச்சி.

    நான் இதில் இரண்டு விசயம் பார்கிறேன்.

    1) பெண் புகைபிடித்தால் தவறு ஆண் செய்தால் தவறில்லை என்ற கருத்து நிலவுகிறது. சரிதான். ஒன்றை எல்லோரும் மறந்து விட்டோம். பல பெண்கள் புகையிலையை வெற்றிலையுடன் உட்கொள்ளும் பழக்கம் உடையவர்கள். அதை யாரும் பொருட்படுத்துவது கிடையாது. ஏன்?

    2) புகையிலை பழக்கம் என்பது ஒரு நோய். அதை குணப்படுத்துவது எளிதல்ல. 95% மக்கள் சாகும் வரை இந்த நோயால் அவதிப்படுகின்றனர்.

    ஏழு மாதங்களுக்கு முன் வரை நானும் இந்த நோயால் அவதிப்பட்டேன்.

    பிறகு புகைபிடிப்பதை நிறுத்தியுள்ளேன்.

    எப்படி என்ற முறையை, ஆங்கிலத்தில் எழுதியுள்ளேன். யாராவது இதை தமிழில் மொழிபெயற்க வேண்டுகிறேன்.

    தயவுசெய்து உதவுங்கள்.

    https://www.linkedin.com/today/post/article/20141120182316-6217174-quit-smoking-and-become-ceo

    அன்புடன்
    விரு

    Ps: I was waiting for more than a year to comment on this blog post video. Now I am able to comment after writing an article about how to quit smoking. Thanks to you too Sp.V sir.

    ReplyDelete