1. முள்ளி வாய்க்கால்
முற்ற இடிப்பைத் தொடர்ந்து அய்யா நெடுமாறன் கைது செய்யப்பட்டார்.
22.11.13 அன்று அவர் பிணையில் வெளிவந்தவுடன் சிறை வாசலில் அளித்த பேட்டியில்
"தமிழக முதல்வருக்குத் தெரியாமல் அதிகாரிகள்
இந்தச் செயலில் ஈடுபட்டிருந்தால், அவர்கள்
மீது
முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்"
என்கிறார்.
நமக்கு ஒரு சந்தேகம், 'எந்த முதல்வருக்குத் தெரியாமல்...?'
மணிப்பூர் முதல்வருக்கா,
மராட்டிய முதல்வருக்கா? எப்படியாவது ஜெயலலிதாவைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று துடிப்பது
நமக்குத் தெரிகிறது. ம்ம்ம்....எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறார்கள்!
2. புதிய தலைமுறை
நிகழ்ச்சியில், ராஜீவ் கொலை வழக்கில் மறு விசாரணை வேண்டும் என்று சொன்னவுடன், முன்னாள்
சி.பி.ஐ. இயக்குனர் கார்த்திகேயன் மிகவும் கோபப்பட்டார். விசாரணை என்பது என்ன விளையாட்டா
என்று கேட்கிறார். 'பேரறிவாளனின் உயிர் மட்டும் என்ன விளையாட்டா? நீதிமன்ற முறைகளை
மதிக்க வேண்டுமாம். நல்லது.....நீதியை மதிக்க வேண்டாமா?
This comment has been removed by a blog administrator.
ReplyDelete