தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday, 28 November 2013

மாவீரர் நாள் நினைவுக் கூட்டம்


தாயகக் கனவினில் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளேஎன்னும் பாடல் ஒலிக்க, இருள் சூழ்ந்த ஓர் அரங்கில் ஈகச் சுடரை எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் ஏற்ற, வரிசையில் வந்து அனைவரும் மாவீரர்களின் அடையாளப் படத்திற்கு மலர்களைத் தூவ-27.11.2013 மாலை, சென்னை, வடபழனி, நூறடிச் சாலையில் உள்ள விடுதலைச் சிறுத்தைகளின் அலுவலகத் திடலில் மாவீரர் நாள் நினைவுகூரப்பட்டது.

மண் காக்க, மானம் காக்க மரணித்த மாவீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், அந்நிகழ்வை உணர்வுகளோடு ஒன்றி நடத்தினர் விடுதலைச் சிறுத்தைகள்.விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர்  தொல். திருமாவளவனும், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியனும் நிறைவுரையாற்றினர்.

1 comment:

  1. தாயகக் கனவினில் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளுக்கு எனது வணக்கம்

    ReplyDelete