தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday 18 December 2013

சின்னச் சின்னதாய்... 

7. "காங்கிரசோடு கூட்டணி இல்லை என்று தி.மு.க. அறிவித்திருப்பது, காங்கிரசுக்குக் கிடைத்துள்ள புத்தாண்டுப் பரிசு"                  -   ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்    

அந்த அறிவிப்பு, தி.மு.க. தொண்டர்களுக்குக் கிடைத்துள்ள வாழ்நாள் பரிசு! தூக்கிச் சுமந்த தோள்களுக்கு அல்லவா வலி தெரியும்!

8. "தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி விடுதலை இயக்கம் என்பதால், அது தேர்தலில் போட்டியிடாது!"                - தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், டிசம்.16-31,2013  

 நல்ல வேளை .....அக்கட்சி மட்டும் விடுதலை இயக்கமாக இல்லாமல், தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவெடுத்திருந்தால், இந்நேரம், தி.மு.க., அ.தி.மு.க. போன்ற பெரிய கட்சிகள் எல்லாம் தேர்தலில் கட்டுத் தொகையைக் கூட இழந்து, நடுநடுங்கிப் போயிருக்கும்! 

3 comments:

  1. அய்யா நீங்க பயப்படாதிங்க. தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி போட்டியிட்டாலும் நம்ம கட்சிக்கு கவலையில்லை. காசை கொடுத்து ஜெயிக்கிற திருமங்கலம் பார்முலா இருக்கிறவரை நம்ம கட்சியை யாரால் ஜெயிக்க முடியும்.

    ReplyDelete
  2. அய்யா சுபவீ அவர்களின் தா.தே.பொ.க வை மேற்கண்டவாறு கிண்டலடித்திருப்பது அவர் மீது மதிப்பு வைதத்திருக்கின்ற என் போன்றோரை வியப்பில்ஆழ்த்துகிறது. நமது சுபவீ, இப்படி ஒரு பதிவை ஏற்றியிருப்பாரா என்ற ஐயம் எழுகிறது . அது அவருடைய தகைமைக்கு தக்கதல்ல எனக் கருதுகிறேன் .

    ReplyDelete
  3. தமிழகத்தின் ஒரு பெருங்கூட்டம் இளைஞர்களிடம் வெறும் உணர்ச்சிகளை மட்டும் தூண்டிவிட்டு சமுதாய ஒழுக்கத்தையே கெடுத்துக் கொண்டிருக்கிறது. தி. மு. க. தலைவர் கலைஞர் அவர்களையும் அண்ணன் சுபவீ அவர்களையும் மிகவும் இழிவாகவும் கீழ்த்தரமாகவும் மணியரசன் உள்ளிட்டவர்கள் விமர்சனம் செய்வதை சிறு தவறாகக் கூட பலர் கருதுவதில்லை. ஆனால் கலைஞரோ, அண்ணன் சுபவீ அவர்களோ நகைச்சுவைக்காக சிலவற்றை சொல்லும்போது கூட அது பெருங்குற்றமாகத் தெரிகிறது. கலைஞரோடு இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக அண்ணன் சுபவீ அவர்கள் மீது வைக்கப்படும் மிகக் கேவலமான விமர்சனங்களோடு ஒப்பிடும்போது, இந்தக் கிண்டலுக்காக வருத்தப்பட ஒன்றுமில்லை .

    ReplyDelete