தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday, 21 January 2014

சின்னச் சின்னதாய்...

11. "(முள்ளிவாய்க்கால்) முற்றத்தை இடித்த அதிகாரிகளை எனக்குத் தெரியும். அவர்களை இந்தத் தமிழக அரசு தண்டிக்காமல் மமதையில் இருக்கிறது. அவர்கள் என் கையில் சிக்குவார்கள்.நான் அப்போது நசுக்குவேன்."    
                         -ம.நடராசன், ஜூனியர் விகடன், 22.01.14

       அதிகாரிகளை நசுக்கப் போகும் நடராசன் அவர்களே, இடிக்கச் சொன்ன அரசை என்ன செய்யப் போகிறீர்கள்? அம்புக்குத் தண்டனை.....எய்தவர்களுக்கு.....?

12. எல்லாவற்றிற்கும் உடனுக்குடன் விடை, பதிலுக்குப் பதில் என்று எழுதித்  தள்ளக்கூடிய தோழர் மணியரசன், உங்களின் திறந்த மடலுக்கு ஒரு மாதமாகியும் ஏன் எந்த விடையும் எழுதவில்லை என்று நண்பர்கள் கேட்கின்றனர். 
 
      என் மடலின் இறுதிப் பகுதியில்   உள்ள வினா ஒன்றிற்கு (முற்றத் திறப்பு விழாவிற்கு  ஜெயலலிதாவை அழைத்ததற்கு என்ன காரணம்?) விடை  சொல்வதில் ஏதேனும் கொள்கைச்  சிக்கல் இருக்கலாம். மேலும் இதற்கெல்லாம் விடை சொல்லிக் கொண்டிருந்தால், பிறகு தமிழர்-திராவிடர் என்னும் இல்லாத சண்டையை உருவாக்கிப்  பார்ப்பனர்களை யார் காப்பாற்றுவார்கள்?

1 comment: