தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 1 February 2014

நதியோடும் பாதையில்...(31)

மகா புருஷர் எச். ராஜா
பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா, ‘ஹிந்து தர்ம பாதுகாப்பு இயக்கம்என்னும் அமைப்பின் சார்பில் ஆற்றியுள்ள அநாகரிகமான உரையொன்றை இணையத்தளத்தில் (You Tube) ஒளிப்படமாகப் பார்த்தேன். அது குறித்து, இதழாளர் ஞாநியும் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
எந்த ஒரு கட்சியிலும், மூன்றாம் தர, நான்காம் தரப் பேச்சாளர்கள் இப்படிப் பேசுவதுண்டு. கட்சியின் முதன்மைப் பொறுப்புகளில் உள்ளவர்கள் பொதுவாக இப்படிப் பேசுவதில்லை. ஹெச்.ராஜா பேசியிருக்கிறார்.
அவருடைய பேச்சு முழுவதும், இந்துக் கடவுள்களைத் தாக்கிப் பேசியதாகக் கூறி, நாம் தமிழர் இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை நாகரிகமற்ற சொற்களால் வசைபாடுவதாக உள்ளது. இந்துக் கடவுள்களைப் பற்றி, சைமன் (சீமான்) என்னும் கிறிஸ்தவன் எப்படிப் பேசலாம் என்று கேட்டு, அருவருக்கத்தக்க வகையில் அவர் பேசியிருக்கிறார். அந்தப் பேச்சின் இடையிடையே அய்யா பெரியார் அவர்களை இழிவுபடுத்தும் வகையில், மிகுந்த ஆணவத்தின் வெளிப்பாடாய்ச் சில வரிகளைக் கூறியுள்ளார். அவ்வரிகள் நாகரிகமற்றவை. அவர் எடுத்துக்காட்டியுள்ள நிகழ்ச்சி உண்மைக்கு மாறானது.


இப்போதெல்லாம் பெரியாரை இழிவுபடுத்த முயல்வதும், திராவிட இயக்கத்தை ஒழிக்காமல் விடமாட்டோம் என்று வீர சபதம்எடுப்பதும், பார்ப்பனர்களுக்கு மட்டுமின்றித் தமிழ்த்தேசியத் தலைவர்கள் சிலருக்கும் வழக்கமாகி விட்டது. இன்று நேற்றன்று, கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக, இவர்கள் திராவிட இயக்கத்தை ஒழித்துக் கொண்டேதான்இருக்கிறார்கள், பாவம்!

இராமர் படத்தைச் செருப்பால் அடித்த, அந்த ஈ.வெ.ரா. நாயக்கனை, அன்றே ரெண்டு பேர் செருப்பால் அடித்திருந்தால்...என்று போகிறது, ஹெச். ராஜாவின் பேச்சு. அதே பாணியில் நம்மாலும் திருப்பி விடை சொல்ல முடியும். ஆனால் அதே தரத்திற்கு நாமும் இறங்குவது, அரசியலை மேலும் அநாகரிகப்படுத்துவதில்தான் முடியும். எனவே ஹெச். ராஜாவைப் பற்றிக் கவலைப்படாமல், இக்கட்டுரையைப் படிக்கும் மக்களைக் கவனத்தில் கொண்டு, சில வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்த வேண்டுமென்று கருதுகின்றேன்.
இராமர் படத்தைப் பெரியார் செருப்பால் அடித்தார் என்று பல ஆண்டுகளாக, நடக்காத ஒன்றை, ‘இராமபக்தர்கள்கூறிக்கொண்டே இருக்கிறார்கள். ஒருவேளை, அது அவர்களின் உள்மன விருப்பமாக இருக்கலாம்.
நடந்தது என்ன என்பதை நம் அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும்.
1971ஆம் ஆண்டு தொடக்கத்தில், திராவிடர் கழகம் சார்பில், சேலத்தில் ஒரு பெரிய மாநாடும், பேரணியும் நடைபெற்றன. அந்தப் பேரணியில் பெரியார் ஓர் ஊர்தியில் அமர்ந்து ஊர்வலமாக வந்து கொண்டிருந்தார். பின்னால் வந்த இன்னொரு ஊர்தியில், ‘இதுதான் இந்துக் கடவுளர்களின் கதைஎன்பதை விளக்கும் சித்திரங்களைக் கொண்ட வெட்டுருக்கள் வந்து கொண்டிருந்தன.
பேரணி வந்த பாதையில், ஜனசங்கம் (இன்றைய பா.ஜ.க.) கட்சியைச் சேர்ந்த சிலர், அய்யாவிற்குக் கறுப்புக் கொடி காட்டினர். அவர்களுக்கு அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. அன்று ஆட்சியிலிருந்த, கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசுதான், ஜனநாயக அடிப்படையில் கறுப்புக் கொடிப் போராட்டத்திற்கு அனுமதி அளித்திருந்தது. வன்முறை ஏதுமின்றி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளலாம் என்று காவல் துறை அனுமதித்திருந்தது. காவிக் கொடி களைக்  கீழே போட்டுவிட்டு, நம் கொடியான கறுப்புக் கொடியை ஏந்தி நின்ற ஜனசங்கத்தினரைப் பார்த்துப் புன்னகைத்தபடி ஊர்வலம் சென்று கொண்டிருந்தது.
அப்போது, அக்கூட்டத்திலிருந்து ஒருவன், அய்யா பெரியாரை நோக்கித் தன் செருப்பை வீசினான். அது குறி தவறி, பின்னால் வந்த, கடவுளர்கள் படம் வைக்கப்பட்டிருந்த ஊர்தியில் போய் விழுந்துவிட்டது. அந்த வாகனத்தில் இருந்த தொண்டர்கள், அவர்கள் வீசிய செருப்பை எடுத்து, அவர்கள் கடவுளையே அடித்தார்கள். முன்னால் சென்று விட்ட பெரியாருக்கு, இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததே தெரியாது.
வன்முறையைத் தொடங்கியவர்கள் யார் என்பதை இப்போது உணர்ந்து கொள்ளலாம். பிறகு அவர்களே நம்மீது வழக்கும் போட்டார்கள். அது ஒன்றுமில்லாமல் போய்விட்டது. நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது. ஆனால் ஹெச். ராஜாக்கள் இன்னும் அதனைத் தள்ளுபடி செய்யாமல், இராமர் செருப்பால் அடிபட்ட கதையைத் திரும்பத் திரும்ப அடுத்த தலைமுறைக்குச் சொல்லிக் கொண்டுள்ளனர்.
அந்த மாநாட்டையொட்டி இன்னொரு வழக்கும் நடைபெற்றது. அது இந்துஏட்டின் மீது திராவிடர் கழகம் தொடுத்த வழக்கு. மாநாட்டுத் தீர்மானம் ஒன்றைத் திரித்து வெளியிட்டதாகக் கூறி வழக்குத் தொடுக்கப்பட்டது. இன்றைய தி.க. தலைவர், ஆசிரியர் வீரமணி அவர்களே நீதிமன்றத்தில் வாதாடினார். அந்த நாளேடு வருத்தம் தெரிவித்துக் கொண்டதால், வழக்கு கைவிடப்பட்டது.
அப்போதே செய்தியைத் திரித்து துக்ளக்ஒரு கேலிப்படம் வெளியிட முயன்றது. இராமர் படத்தைக் கலைஞர் செருப்பால் அடிப்பது போலவும், அருகில் நின்று பெரியார் கைகொட்டிச் சிரிப்பது போலவும் கேலிப்படம். ஆளாளுக்குச் செருப்பால் அடிப்பதைப் போல் அவர்களே கற்பனை செய்து கொண்டார்கள் போலும்!
இந்நிகழ்ச்சி நடைபெற்ற சில வாரங்களிலேயே, பொதுத் தேர்தல் நடைபெற்றது. சேலம் நிகழ்ச்சி ஏற்படுத்திய தாக்கம், தேர்தலில் தி.மு.க.விற்குப் பெரும் சரிவை ஏற்படுத்தும் என்று ஏடுகள் பல எழுதின. அவ்வளவுதான், தி.மு.க. ஆட்சி என்று ஆரவாரக் குரல்கள் எழுந்தன.
எதிர் அணியில் கைகோத்து நின்ற காமராசர், ராஜாஜி அணியின் வெற்றியை இனி எவரும் தடுக்க முடியாது என்று பலரும் கருதினர். இந்துக் கடவுளைச் செருப்பால் அடித்த கட்சிக்கா, உங்களின் ஓட்டு?’ என்று ஊர் ஊராகக் கேட்டனர். நிகழ்ச்சி நடந்தது என்னவோ, சேலத்தில் மட்டும்தான். ஆனால காங்கிசாரும், சுதந்திராக் கட்சியினரும் தமிழ்நாடு முழுவதும் பரப்பிவிட்டனர். இவ்வளவு செய்தும், கடவுள் அவர்களை ஒன்றுமே செய்யவில்லையே, கடவுள் என்று எவரும் இல்லை என்று பெரியார் சொல்வதுதான் உண்மையோஎன்று பக்தர்களுக்கே சந்தேகம் வந்துவிட்டது.
கவிஞர் கண்ணதாசன், ஜெயகாந்தன், சோ மூவரும் ஓர் அணியாகப் பயணப்பட்டு தமிழகம் முழுவதும் சுற்றியலைந்து, தி.மு.க.விற்கு எதிராகத் தேர்தல் பரப்புரை செய்தனர். தமிழக நிலைமைகளைக் கவனித்த, ஒரு மூத்த காவல்துறை அதிகாரி, தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்பே, வெளிப்படையாகக் காமராஜரைச் சந்தித்து, ‘அடுத்த முதல்வர் நீங்கள்தான்என்று கூறிப் பூங்கொத்தைக் கொடுத்தார்.
இத்தனை கூத்துகளுக்கும் சேலம் நிகழ்ச்சிதான் காரணமாக இருந்தது. ஆனால் 1971ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவோ, வேறு மாதிரியாக இருந்தது.
1967 தேர்தலில் 138 இடங்களில் வென்ற தி.மு.க., 1971 தேர்தலில் 183 இடங்களில் வெற்றிபெற்றது. பெரிய வேடிக்கை என்னவென்றால், எந்த சேலத்தில் அந்நிகழ்ச்சி நடைபெற்றதோ, அந்த சேலத்தின் இரண்டு தொகுதிகளிலுமே தி.மு.கழகம்தான் வென்றது. வெற்றி பெற்றவர்களின் பெயர்கள், இப்போதும் சிலருக்கு நினைவிருக்கலாம். ஒருவர் ராஜாராம், இன்னொருவர் ஜெயராம். ஆமாம், அந்த இராமர் சிக்கல் மக்களிடையே எடுபடாமல் தோற்றுப் போய், இந்த இராமர்கள் இருவரும் வெற்றிபெற்றனர்.
ராஜாஜி மனம் நொந்து, ஒரு வார ஏட்டில், “தமிழ்நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதியற்ற நாடாகிவிட்டது. மகா புருஷர்கள் எல்லோரும் நாட்டைவிட்டே புறப்படத் தயாராகிவிட்டனர்என்று எழுதினார். சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற நன்றியறிவிப்புக் கூட்டத்தில் பேசிய நாவலர், தனக்கேயுரிய குறும்புடன், “மகா புருஷர்கள் எல்லாரும், சொல்லாமல் கொள்ளாமல் புறப்பட்டு விடாதீர்கள். தேதியைக் குறிப்பிட்டால், நாங்கள் அனைவரும் வந்து வழியனுப்பி வைக்கிறோம்என்றார்.
இன்னமும் புறப்பட்டுப் போகாமல் இருக்கின்ற மகாபுருஷர்களில்ஒருவரான ஹெச்.ராஜா போன்றவர்கள், சாதாரணப் புருஷர்களைப் போலவேனும் பேசப் பழக வேண்டும்.
நண்பர் சீமானுக்கும், நமக்கும் கூடப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உண்டு. அவரும் மேடைகளில் நாவடக்கம் இன்றி ஒருமையில் பேசுகின்றவர்தான். ஆனால் அவரையும்கூட, ஹெச்.ராஜா அவர்கள், ‘மானங்கெட்டவன், தறுதலை, ஜந்து, மானங்கெட்ட ஜன்மம்என்றெல்லாம் பேசியிருப்பது, ‘அரசியல் கூட்டங்களுக்கே இனி செல்லக்கூடாதுஎன்னும் எண்ணத்தைத்தான், பொது மக்களிடம் ஏற்படுத்தும். (எப்போதும் மேடைகளில், இரண்டு கைகளையும் உயர்த்தியபடி, ‘வீர முழக்கமிடும் - செந்தமிழன் சீமான்’, ஹெச். ராஜாவின் உரை குறித்து இன்று வரை ஏனோ வாயே திறக்கவில்லை!)

ஹெச்.ராஜா

போகட்டும், தந்தை பெரியார் இறந்து 40 ஆண்டுகளுக்கு மேலாகியும், அவர் மீதான் கோபங்கள் அவாளுக்கு இன்னும் குறையவில்லை என்பதையே ஹெச்.ராஜாவின் பேச்சு காட்டுகிறது. எவ்வளவு காத்திரமான தலைவர் பெரியார் என்பதையும் நம்மால் உணர முடிகிறது. இன்னம் பலநூறு ஆண்டுகளுக்கும் கூட அவர் குறித்த இசையும் வசையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஏனெனில் அவர்தான் உண்மையான மகாபுருஷர்’.

 (சனிக்கிழமைதோறும் சந்திப்போம்)

17 comments:

  1. பெரியார் என்றென்றும், வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்,இருக்கிறார்

    ReplyDelete
  2. I am not bother about seeman,what about so called periyar follower viko did he tell anything ehere will not since he is busy with making modi as PM of this country,if he reallyhas selfrespect he should contempt or else do not wear Blackwater thundu no more

    ReplyDelete
  3. பெரியார் பற்றிய புரிதல் அப்படி...! ஹெச். ராஜா அவர்கள் உட்பட பலரும் அறிந்து கொள்ள, உணர வேண்டியது பல...

    ReplyDelete
  4. அருமையான தகவல்.மிக்க நன்றி.

    ReplyDelete
  5. The cheapest fellow does the cheapest things --- its shows Mr.Raja’s Speech, he should learn first how to speak in stage and if he reads some about Periyar books, I hope he would amend his attitude.----- Er. Senthil kumar. Tambaram

    ReplyDelete
    Replies
    1. We cannot expect those people read Ayyaya's book our people has to change to praise those people then everything will change.Bala from south africa

      Delete
  6. தகவலுக்கு நன்றி அய்யா..

    ReplyDelete
  7. வரலாறு கூறி அவர்களிடம் நீதி கேட்க முடியாது, ஏனெனில் வரலாறு முழுவதுமே அவர்களின் அநீதியும், அவதூறுகளும் நிரம்பி வழிகின்றனவே! நீங்கள் சொன்னபடி மக்களிடம்தான் நாம் பேசவேண்டியுள்ளது. மிகச்சிறந்த பதில் என் மேடைகளில் உங்களுக்கு நன்றி கூறி இந்தக் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வேன். தங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் இப்படி எழுதுவதும், எழுதுவதுபோலவே பேசுவதும் தொடரட்டும். (உங்கள் கம்பீரக் குரலில், நீங்கள் பேசுவதாகவே கட்டுரையைப் படித்துப் பார்த்தேன்) நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஐயா, மீண்டும் வணக்கம். நான் சொன்னது போலவே நம் திண்டுக்கல் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் எச்.ராஜாவின் தவறான தகவல் மற்றும் புரிதல் பற்றித் தங்களின் இந்த வலைத்தகவலையும் பகிர்ந்துகொண்டு, தங்கள் வலைபற்றிய தகவலையும் பகிர்ந்தேன். நன்றி (நேரமிருக்கும்போது எனது வலையில் பார்க்க-http://valarumkavithai.blogspot.in/2014/02/blog-post_8.html)

      Delete
  8. 1967 தேர்தலில் 138 இடங்களில் வென்ற தி.மு.க., 1971 தேர்தலில் 183 இடங்களில் வெற்றிபெற்றது. /////

    அப்புறம் என்னாச்சு... தோல்வி, தோல்வி,தோல்வி, படுதோல்வி,... ராமரை ஜெயிக்க முடிந்தது. ராமச்சந்திரனை ஜெயிக்க முடியலயே.

    ReplyDelete
    Replies
    1. ராமரை வென்ற தி.மு.க.வால் ராமச்சந்திரனை வெல்லவே முடியவில்லை என்பது உண்மை யில்லை. 1980ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தி.முக கூட்டணி . 40இல் 38 இடங்களை வென்றது. எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க., சிவகாசி, கோபி ஆகிய இரண்டே இரண்டு இடங்களில் மட்டும்தான் வெற்றி பெற்றது.

      Delete
  9. பேசட்டும், தொண்டையில் நீர் தீரும்வரை பேசட்டும். தீட்டத்தீட்டத்தான் வைரம் மெருகு ஏறும். பெரியார் வைரம், சாதாரண வைரமல்ல ஒளிறும் வைரம், வழிகாட்டும் வைரம். அதன் ஒளி குன்றிவிடக்கூடாது. இப்படிப் பேசுவதால் அவாளின் தரம் தெரிகிறதே...! ஓய்.. இன்னும் நான்னா பேசும்ஓய்! நீர் சாக்கடையிலிருந்து குரைப்பது நன்னா தெரியுதுன்னோ......

    ReplyDelete
  10. தோழரே, நம்மவர்களுக்கு இன்னும் புத்தி வரவிலையே! காசு, பதவி என்றால் எதுவும் செய்கின்றானே! பெயர்தான் ராஜா. தரமற்ற பேச்சு.

    ReplyDelete
  11. தோழரே, பெரியாரைக் குறைகூறி பிழைப்பு நடத்துகிறார்கள். நம்மவர்களும் இதுபோன்ற பேச்சுக்களை கேட்டு 'உம்' கொட்டுகிறார்கள். சிந்திக்க மறுக்கிறார்கள். என் செய்வது, இவர்களுக்கு மூளை உள்ள இடத்தில் வயிறு இருக்கும்போல் உள்ளது.

    ReplyDelete
  12. பேச்சு முழுக்க மதக் காழ்ப்புணர்ச்சியை தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார். மிகவும் தரம் தாழ்ந்த பேச்சு! அவர் பேசும் போது சுற்றி இருக்கும் கூட்டம் மத போதையில் "ஜெய் ஸ்ரீராம்" என்றும் "பாரத் மாதாகி ஜெய்" என்று கூச்சல் போடும் போது தமிழ்நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது என்கிற பேரச்சம் எழுகிறது!

    ReplyDelete
  13. வரலாறு கூறி அவ..ளிடம் நீதி கேட்க முடியாது, ஏனெனில் வரலாறு முழுவதுமே அவர்களின் அநீதியும், அவதூறுகளும் நிரம்பி வழிகின்றன. மக்களிடம்தான் நாம் பேசவேண்டும் .
    உங்களுக்கு நன்றி..
    தங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் இப்படி எழுதுவதும், பேசுவதும் தொடரட்டும். நன்றி.
    கர்ணன்

    ReplyDelete
  14. எச் (சி) ராஜாக்கள் இப்படி பேசுவது நமக்குஆச்சரியத்தை ஏற்ப்படுத்தவில்லை.
    நம் தி முகழகத்தில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட விழுக்காடு தோழர்கள் இன்னும் அண்ணாவையும் புரிந்துகொள்ளவில்லை, பெரியாரின் தொண்டினை, அவர்தம் கொள்கையை இன்னமும் புரிந்துகொள்ளாமல் இருக்கின்றனர். காரணம்அவர்களுக்கு, இந்த இயக்கத்தின் தேவைக் கருதி சேரவில்லை. அனால் சென்ற தலைமுறை இயக்கத்தின் தேவை காரணமாக கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். இயக்கத்தில் பெரிய பொறுப்பில் இருக்கும் தோழர்களின் நிலையும் இதுதான். இல்லைஎன்றால் ஆசிரியரின் பங்களிப்பையும், தங்களின் வழிகாட்டுதலையும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் தோழர்கள் நிறைய திமுகவில் உண்டு. இதை தாங்களும் அறிவீர்கள். எனவே, வேர்களை பலப்படுத்த நாம் திட்டமிட்டு செயல்படுத்தவேண்டியது அவசியமாகிறது. கடந்த 30-01-2014 அன்று என் பெரியப்பா அவர்கள் மறைந்த போது, மரியாதை செலுத்த வந்த ஒரு மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர், மேனாள் அமைச்சர் ஊடே ஆசிரியரையும், அய்யாவின் கொள்கைகளையும் கொச்சைப்படுத்தும் விதத்தில் கருத்து தெரிவித்தது, எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. இது என் போன்றோரின் உள்ளக்குமுறலே தவிர தங்களுக்கு உரைக்கும் ஆலோசனையோ, அறிவுரையோ இல்லை அய்யா

    நல்லையன் நடராசன்

    ReplyDelete