தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday, 29 January 2014

சின்னச் சின்னதாய்...

13. தனித் தமிழிலேயே தன் வாழ்நாள் முழுவதும் எழுதியும் பேசியும் வந்தவர் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள். அவர் பெயரிலான திரு.வி.க. விருதை இவ்வாண்டு தமிழக அரசு, எழுத்தாளர் அசோகமித்திரனுக்கு வழங்கியுள்ளது. அவர் பத்துக்கு ஆறு பழுதில்லாமல் சமஸ்க்ரிதம் கலந்து எழுதுபவர். இதனை விடத் திரு.வி.க.விற்கு என்ன பெருமை வேண்டும்? 1953ஆம் ஆண்டே இறந்து போய் விட்ட திரு.வி.க. விற்காக மீண்டும் ஒருமுறை ஒரு நிமிடம் எழுந்து நிற்கலாம்!






14. மு.க. அழகிரிக்காக இன்று ஊடகங்கள் பல கண்ணீர்விட்டுக் கலங்குகின்றன. தி.மு.க.வில் சிறு சலசலப்பு ஏற்பட்டாலும், உடனே இவர்கள் கண்களில்தான் எத்தனை ஆனந்தக் கண்ணீர்! அ.தி.மு.க.வில் அணுகுண்டே வெடித்தாலும், என்ன  புகைகிறது என்றல்லவா கேட்கிறார்கள்! 

6 comments:

  1. இராமகிருஷ்ணன்29 January 2014 at 22:57

    சமஸ்க்ரிதம் என்ன எதிரி மொழியா? இன்றும் 90% தமிழர்களின் பெயர்கள் அம்மொழியில்தானே உள்ளது!(ஏன் பெரும்பாலான திராவிடக்கட்சிகளின் தலைவர்களின் பெயர்களும் அம்மொழியில்தானே உள்ளது!),அதைத்தானே தமிழர்கள் பெருமையாகக் கருதுகிறார்கள்! எவராவது தங்கள் பிள்ளைகளுக்கு ஔவையார்,காக்கைபாடினியார்,காயசண்டிகை,சீத்தலை சாத்தனார்,அமூர் மல்லன்,ராவணன் etc..,(அப்பெயர்களைக் கொண்ட முன்னோர்களில் பலர் மதிப்பிற்கும்,மரியாதைக்குறியவர்கள் என்ற போதிலும்)போன்ற பெயர்களை வைப்பார்களா? அப்பெயர்களை பிறர் கேலி செய்ய மாட்டார்களா? மேலும் பல தமிழ் சொற்கள் negative senseல் உபயோகப்படுத்தப்படுகிறது (உ.ம். மூஞ்சி Vs முகம், சோறு Vs சாதம் etc.,)என்பதை கவனிக்கவும்.

    ReplyDelete
  2. இராமகிருஷ்ணன்29 January 2014 at 23:19

    மேலும் திரு.வி.க.என்ற பெயரே சமஸ்க்ரிதப் பெயர்தானே? தமிழிப் பெயரில்லையே!

    ReplyDelete
  3. முத்தழகன்30 January 2014 at 00:02

    அங்குதானே அகண்ட குடும்ப அரசியலும்,ஆழமான இமாலய ஊழலும் [இலட்சம், கோடியல்ல, இலட்சக்கோடிகளில் லட்சியங்களோடு(அவர்களின் 100 தலைமுறை செழிப்புற)நடை பெறுகிறது]. Increase personal wealth through corruption/bribery என்ற புதிய சித்தாந்தத்தோகடு தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் இயங்குவதால்(ADMK வையும் சேர்த்துதான் but may be little lesser degree) தமிழ் நாடு காஞ்ச மாடு கம்பங் கொல்லையைப் பார்த்தக் கதையாகிவிட்டது. மற்றும்அன்றே திரு.பக்தவத்சலம் திரு.அண்ணாதுரை ஆட்சியைப் பிடித்த போது சொன்ன வார்தையான இந்த மாநிலத்தை நச்சுக் கிருமிகள் பிடித்துள்ளது என்பது உண்மையென்று நிருபணமாகிறது. அதனால்தான் சிறு சலசலப்பு ஏற்பட்டாலும் பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கப்படுகிறது&ஊடகங்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வடிக்கப் படுகிறது!.

    ReplyDelete
  4. இரத்தினவேல்30 January 2014 at 12:42

    அவாள் எப்போதுமே அப்படித்தான். தமிழர்கள் விழிப்புணர்வு பெறுவது எப்பொழுது?

    ReplyDelete
  5. அய்யா, இன்றைக்கும் தனித்தமிழில் எழுதி,திரு வி க பரிசு பெரும் அளவு தகுதியுடைய எழுத்தாளர்கள் யார் என அறிந்துகொள்ள விரும்புகிறேன்

    ReplyDelete
  6. அதனால் தவறு என்ன ? தமிழில் நடிக்கும் வட நாட்டு நடிகைகளுக்கு தமிழ் நாட்டின் விருதுகள் வழங்குவதில்லையா? வெளி நாட்டில் சாதனை படைக்கும் இந்திய வம்சாவளி தமிழ்ர் என்றால் நாம் பெருமிதம் அடைவதில்லையா?

    ReplyDelete