தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 25 January 2014

நதியோடும் பாதையில்...(30)

புத்தர் - புரட்சித் திராவிடர்!


புத்தர் - புரட்சித் திராவிடர்!
(தோழர் எழில். இளங்கோவன், “பவுத்தம் - ஆரிய திராவிடப் போரின் தொடக்கம்என்னும் அரிய தொடர் ஒன்றினைக் கருஞ்சட்டைத் தமிழர் மாதமிருமுறை இதழில் எழுதி வந்தார். அத்தொடர் இப்போது அதே பெயரில் நூலாகி, இன்னும் சில நாள்களில் வெளிவரவுள்ளது. அந்நூலுக்கு நான் எழுதியுள்ள முன்னுரையினை இவ்வாரம் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.)
புத்தர், அரச மரபில் வந்த சத்திரியர்.
புத்தருக்குப் பின், இரண்டாகப் பிரிந்த பவுத்தத்தின் ஒரு பிரிவுக்கு ஹீனயானம்என்று பெயர் சூட்டப்பட்டது.

ஒரு நோயாளி, ஒரு முதியவர், ஒரு பிணம் என உலக உண்மைகளைப் புத்தர் தன் 29ஆவது அகவையில்தான் முதன் முதலில் பார்த்தார். அதனால்தான் அவர் துறவு பூண்டார்.
- இவ்வாறாகவும், இன்னும் பல்வேறு வழிகளிலும் புத்தரைப் பற்றியும், பௌத்தம் பற்றியும் பல தவறான செய்திகள், பாடநூல்கள் உள்ளிட்ட பல நூல்களில் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தையும் உரிய சான்றுகளுடன் உடைத்துப் போடுகிறது இந்நூல்!
புத்தர், ஓர் இனக்குழுத் தலைவரின் மகனே அன்றி, அரசர் வழித் தோன்றிய சத்திரியர் அல்லர். உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர். பார்ப்பன மொழியில் சொன்னால், அவரும் சூத்திரரே!
வரலாற்றுப் பார்வையில் அவர் ஒரு திராவிடர். அவருடைய தாய்மொழி பாலி. அம்மொழி, திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது.
அவர் திராவிடர் என்பதாலேயே, பார்ப்பனர்களும், பார்ப்பன அடிவருடிகளும் இன்று வரை அவரையும், அவர் வழித் தோன்றிய பௌத்தத்தையும் கடுமையாக எதிர்க்கின்றனர். இவ்வாறு பௌத்தம் பற்றிய சரியான பார்வையை இந்நூலில், நூலாசிரியர் தோழர் எழில். இளங்கோவன் எடுத்து வைக்கின்றார்.
அதேபோல, மஹாயானம் (பெருவழி), ஹீனயானம் (சிறுவழி) என்பதெல்லாம், பார்ப்பனர்கள் சூட்டிய பெயர்கள் என்னும் உண்மையையும் உரைக்கின்றார். உழைக்கும் மக்கள் நம்பும் கடவுளர்களுக்கு சிறுதெய்வங்கள்என்று பெயர் சூட்டியதைப் போல!
புத்தர் சொன்ன பௌத்தத்தைச் சிறுவழிஎனக்கூறிச் சிறுமைப்படுத்த முயலும் பார்ப்பன முயற்சியைத் தகர்த்து, அதனைத் தேரவாதம்என்றே அழைக்க வேண்டும் என்கிறார். மஹாயானம் என்பது கூடப் பொருத்தமான பெயர் அன்று. பௌத்த மதத்திற்குள் புகுந்து, அதன் அடித்தளத்தையே ஊடாடிக் கெடுக்க முயன்ற வழி, எப்படிப் பெருவழியாக இருக்க முடியும்? நாகார்ஜுனன் என்னும் பார்ப்பனரால் கூறப்பட்ட அந்த  போலிப் பௌத்தத்தை நாகர்ஜுனவாதம்என்றுதான் கூற வேண்டும்.
புத்தரின் துறவு பற்றிய கட்டுக்கதையையும் நூலாசிரியர் அழுத்தமாய் மறுக்கின்றார்.
ரோகினி ஆற்றுச் சிக்கலில், இரண்டு இனக் குழுக்களுக்கு இடையே எழுந்த மோதலில், தண்ணீருக்காக ரத்தம் சிந்தும் மனிதர்களைக் கண்டு, அறியாமையின் அடிப்படையில் எழும் ஆசையே துன்பங்களுக்கான தோற்றுவாய் என உணர்ந்து, துன்பத்தை நீக்கும் வழியை உலகிற்குச் சொல்ல வேண்டித் துறவு பூண்டவரே புத்தர். இந்தச் செய்தியைத் தக்க சான்றுகளுடனும், விளக்கமாகவும் அறிந்து கொள்ள இந்நூல் உதவும்.
ஆரியத்திற்கு அடித்தளமிட்ட வேத, உபநிடதங்களை ஆசிவகம், சாருவாகம் ஆகியன கடுமையாக எதிர்த்தன. அவற்றைத் தொடர்ந்து சமணமும், பௌத்தமும் அவைதீக மதங்களாக இம்மண்ணில் எழுந்தன.
ஆனால் சமணம் கூட, ‘ஆன்மாபோன்ற ஆரியக் கொள்கைகளை ஏற்றது. அழிவற்ற நோக்கு (அனந்த சயனா), அழிவற்ற அறிவு (அனந்த ஞானா), அழிவற்ற ஆற்றல் (அனந்த வீர்யா), அழிவற்ற அருள் (அனந்த சுகா) ஆகியனவற்றை நான்கு நெறிகளாகச் சமணம் முன் வைத்தது. அழிவற்றஎன்னும் கோட்பாட்டினையே பௌத்தம் ஏற்கவில்லை. துன்ப இருப்பு, துன்பத்தின் தோற்றுவாய், துன்ப நீக்கம், அதற்கான வழி என நான்கினை முன்வைத்த பௌத்தம், ‘அநித்ய, அனான்மவாதங்களை வெளிப்படுத்தியது.
உலகில் நிலையானது எதுவுமில்லை, ஆன்மா என்று ஒன்றும் இல்லை என்பதே அவ்வாதங்கள். ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றில், ஒரே நீரில் இரண்டாவது முறையாக மூழ்கி எழுவது இயலாத செயல் என்றார் புத்தர். எல்லாம் இயங்கிக் கொண்டே உள்ளன. எதுவும் நிலையானதில்லை என்னும் பொழுது, அழிவற்றது, நிலையானது எனக் கூறப்படும் ஆன்மாஎன்பது வெறும் கற்பனையே என்று 2500 ஆண்டுகளுக்கு முன்பே அழுத்தம் திருத்தமாய்க் கூறிய புத்தர் ஒரு புரட்சியாளர். புரட்சித் திராவிடர்!
திராவிடஎதிர்ப்பு மிகப் பழையது. ஆனால் திராவிடக் கோட்பாடு மிக வலிமையானது. அது சமத்துவத்தையும், பகுத்தறிவையும் உள்ளடக்கியது. அதனால்தான், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, எல்லாவிதமான எதிர்ப்புகளையும் தகர்த்து நொறுக்கி, இன்றும் இளமை மாறாமல் எழுந்து நிற்கிறது.
மற்ற மதங்கள் எல்லாம், இறப்புக்குப் பிந்திய உலகம் பற்றிப் பேசிக்கொண்டிருந்த பொழுது, இன்னும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, பௌத்தம் மட்டுமே நாம் வாழும் உலகம் பற்றியும், உலகில் உள்ள மக்கள் சமூகம் பற்றியும் கவலைப்பட்டுப் பேசியது.
சமயத்தைப் பரப்புவதற்காக அன்றி, சமூகத்திற்குத் தொண்டு செய்வதற்காகவே, சங்கமும், பிக்குகளும் பௌத்தத்தில் உருவாக்கப்பட்டனர். மக்களைப் பற்றி மட்டுமே கவலைப்பட்ட மார்க்கம், பௌத்தம். அன்பை, அன்பை மட்டுமே போதித்தவர் புத்தர்!
அதனால்தான் போதிசத்துவம்பெற்றுவிட்ட பின்னரும், ‘பாரடங்கலும் பசிப்பிணி அறவேண்டும் என்ற நோக்கில், அமுதசுரபியோடு மக்களை நோக்கி வந்தாள் மணிமேகலை.
மானமும் அறிவும் உடையவர்களாக, மக்களை ஆக்குவதே பௌத்தத்தின் நோக்கம். அதுவே திராவிட இயக்கத்தின் அடிநாதம்.
ஆரிய & திராவிடப் போரை அன்று புத்தர் தொடக்கி வைத்தார். இன்றும் அது ஓயவில்லை. அந்த வரலாற்றை இந்நூல் எடுத்துரைக்கின்றது.
இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும், தோழர் எழில். இளங்கோவனின் ஆழ்ந்த படிப்பையும், அயராத உழைப்பையும் நம்மால் காண முடிகிறது. இந்நூல் தொடராக வெளிவந்து கொண்டிருந்த போதே படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததெனினும், முழு நூலையும் ஒரு சேரப் படிக்கும் போது, மேலும் தெளிவும் விரிவும் எனக்குக் கிடைத்தது.
தோழர் எழில். இளங்கோவனைப் பாராட்டி மகிழ்கிறேன். அவரோடு இணைந்து, கடந்த ஏழு ஆண்டுகளாகப் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பை எண்ணிப் பெருமைப்படுகிறேன்.
தமிழ்க்கூறு நல்லுலகம், இந்நூலைப் படித்துப் பயன்பெற வேண்டும் என்பதே என் பெருவிருப்பம்!


(சனிக்கிழமைதோறும் சந்திப்போம்)

16 comments:

 1. தொடராக வெளிவந்து கொண்டிருந்த போதே படிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனினும் முழுமையாகப் படிப்பது முழுமை தரும். அய்யா சுப.வீ. அவர்களின் நல்ல முன்னுரை. தோழர் எழில். இளங்கோவன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்..புத்தகம் சிறப்பாக வர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. தங்களின் முன்னுரையே நூலினைப் படிக்கத் தூண்டுகிறது ஐயா. அவசியம் வாங்கிப் படிக்கின்றேன்.தோழர் எழில். இளங்கோவன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்..புத்தகம் சிறப்பாக வர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. Thank you for introduction about this book which make me to buy and read ---- Senthil kumar

  ReplyDelete
 4. சுப்பிரமணியம்26 January 2014 at 20:47

  தமிழனைக் கொன்று குவித்த கொடிய/கொலைகார பௌத்தன் கடைபிடிக்கும் புத்த மதத்தைப் (பர்மாவிலும் இதே அக்கிரமம் தான்) பாராட்டுவதன் மூலம் உனனுடைய தீய புத்தியை பரிந்து கொள்ள முடிகிறது!. ராமசாமி நாய்க்கன் வழியைக் கடைபிடிப்பவர் என்று குறுபவர்தானே நீங்கள்,அதனால்தான் உங்களிடம் இந்த திராவிட(தமிழனைப் படுகொலை செய்தவர்களின் கொள்கை/மதத்தை)ஆதரவு மற்றும் தமிழர் விரோத/எதிர்ப்புணர்வை உங்களிடம் காண்பதில் உண்மையான தமிழர்களுக்கு ஆச்சரியம் ஒன்றுமில்லை!
  மற்றும் பாலி என்பது Middle Indo-Aryan language என்பது எல்லாம் தெரியும் எனக்கு என்ற எண்ணமுடைய உங்களின் (சூத்திர) மூளைக்கு தெரிய வாய்ப்பில்லைதான்!!. ( Reference Oxford dictionary language tree flow chart மற்றும் internetல் wikipedia @ http://en.wikipedia.org/wiki/Pali )

  ReplyDelete
  Replies
  1. This book is not talking about followers of Buddha,you also say I Hindu but you guys are doing all unwanted things in this country so we cannot say Hindu's are supporting tamilans, first understand point and replay,try to behave as a man when writing in public blog.I knew we cannot expect from you since you have papaan attitude. Bala from southafrica

   Delete
  2. Even if you don't agree first part it is up to you, go behind Buddhist and Buddha Bikkus and get lost!, but don't carried away by false information given by half baked [knowledge] persons like Mr.Su Ba Vee..→ {he is like any prototype Dravidian leader who got amused by other eulogies about himself, whistling, shouting and hand clapping crowds with no much real depth of knowledge and if it is for Dravidian political parties these people come for Biriyani and peg of Alcohol!} ..→who unleashes half truth and full lie, for example he wrote Pali is a Dravidian language [IT IS A ARYAN LANGUAGE ,Pali is a literary language of the Prakrit language family and was first written down in Sri Lanka, Scholars like A.C. Woolner believe that Pali is derived from Vedic Sanskrit, but not necessarily from Classical Sanskrit. Further formal Sinhala is more similar to Pali. Ref see Wikipedia] and Gautama Buddha or Siddhartha is a Dravidian?! ( the name itself, his mother/step mother,wife and son names signifies that his origin is not Dravidian)

   Delete
  3. விஸ்வநாதன்2 February 2014 at 16:09

   உங்களை பொய்யர் என்று மேலே எழுதியுளளனர்,அதற்கு உங்களிடமிருந்தும் எந்த பதில்/மறுப்புமில்லை,மற்றும்
   Wikipediaவை verify செய்து பார்த்ததிலும் அந்த கூற்று உண்மையாகவே உள்ளது.எனவே நீங்கள் ஒரு உண்மையான பொய்யர்தானா? நீங்கள் இதுவரை எழுதியதெலலாம் இதுபோல...........?

   Delete
  4. “பவுத்தம் ஆரிய திராவிடப் போரின் தொடக்கம்” - என்ற என் நூலுக்குத் தோழர் சுப. வீரபாண்டியன் அவர்கள் ஓர் அணிந்துரை வழங்கி, அதை அவரின் வலைப்பூவில் வெளியிட்டார். சுப்பிரமணியம் என்பவர் அது குறித்துத் தன் கருத்தில் பாலி என்பது Middle Indo - Aryan Language என்பது சுபவீயின் சூத்திர மூளைக்குத் தெரிய வாய்ப்பில்லை என எழுதியிருந்தார். அறிவுடையோர் காய்தல் ஒதுக்கிக், கனி இருக்கக் காய் உண்ணமாட்டார்கள்.
   “தமிழ் அல்லது திராவிடம் என்பது தென்னிந்தியாவின் மொழியாக மட்டுமே இருக்கவில்லை. மாறாக அது ஆரியர்கள் வருவதற்கு முன்னர் இந்தியா முழுவதன் மொழியாகவும் இருந்தது” என்று சொல்லும் டாக்டர் அம்பேத்கர், டாக்டர் கால்டுவெலை மேற்கோள் காட்டி பலுசிஸ்தானத்தில் பேசப்பட்ட பிராகுவி மொழி திராவிட இனத்தவர்களால் பேசப்பட்ட மொழி என்கிறார் (தொகுதி :14 ). டாக்டர் ஹட்சன் இம்மொழியையும் நேபாள (பாலி) மொழியையும் திராவிட (மொழிக்) குழுவுடன் சேர்த்தார் என்பதை உரிய சான்றுகளுடன் டாக்டர் மு. வரதராசனார் குறிப்பிட்டு இருக்கிறார்.
   டாக்டர் மு.வ.வின் மொழியாய்வில் அவர், “வடமொழியில் உள்ள மூன்று அகர ஒலிகளுக்கு ஈடாக பாலிமொழியில் தமிழில் இருப்பதுபோல ஒன்றே உண்டு. தமிழில் உள்ளவாறு, மெய்யெழுத்துகள் வருமொழி முதலெழுத்துக்கு ஏற்பத் திரியும் திரிபுகள் மிகுதியாக உண்டு. வடமொழிபோல் அரிய ஒலிகளுடன் சொற்கள் முடியாமல், தமிழ்போல் எளிய ஒலிகளே சொற்களின் ஈற்றில் அமையும். வடமொழியில் உள்ள இருமை பாலிமொழியில் இல்லை. திராவிட மொழிகளில் உள்ள ஒருமை பன்மை ஆகிய இரண்டே பாலியிலும் உண்டு. வடமொழியில் இல்லாத எகர ஒகரக் குற்றுயிர்கள் பாலிமொழிக்கு இன்றியமையாதவை. பின்னண்ண மெய்களாகிய டகர, ணகரங்களும் பாலி மொழியில் பயின்றுள்ளன. இவை அனைத்தும் திராவிட மொழிக் கூறுகளே” என்று விளக்குகிறார் தன் “மொழி வரலாறு” ஆய்வு நூலில்.
   சுப்பிரமணியம் படிப்பது நல்லது.
   - எழில். இளங்கோவன்

   Delete
  5. விஸ்வநாதன்9 February 2014 at 17:14

   தென்னிந்தியாவின் மொழியாக மட்டுமே இருக்கவில்லை மற்றும் பலுசிஸ்தானத்தில் பேசப்பட்ட பிராகுவி மொழி திராவிட இனத்தவர்களால் பேசப்பட்ட மொழி என்கிறார்கள் என்பன ஏற்புடயதே,ஆனால் இங்கு வாதப் பொருள் அதுவல்ல பாலி எந்த மொழிக் குடும்பத்தைச் செர்ந்தது என்பதுதான்! அதை பார்க்கும் போது அகர ஒலிகளையும்,மெய்யெழுத்துகள் வருமொழி முதலெழுத்துக்கு ஏற்பத் திரியும் திரிபுகளையும்,எளிய ஒலிகளே சொற்களின் ஈற்றில் அமையும் மற்றும் ஒருமை பன்மைகளையம் மட்டுமே வைத்து ஒரே மொழிக் கும்பத்தைச் செர்ந்தது என்ற முடிவுக்கு வரமுடியாது,ஏனெனில் இந்த வித்தியாசங்கள் ஒரெ மொழிக் கும்பத்தைச் செர்ந்தத வெவ்வேறு மொழியிகளிலும் உள்ளது!.அதை விட ஒரு மொழி எந்த மொழிக் கும்பத்தைச் சேர்ந்தது என்பதை Lexicon(Virtually every word in Pāḷi has cognates in the other Prakritic Middle Indo-Aryan language)ஐ வைத்தும்,Etymology&Phonologyஐ வைத்தும் பார்க்கும் போது பாலி Indo-Aryan language என்பது தெளிவாகும்.

   Pali and Sanskrit are very closely related and the common characteristics of Pali and Sanskrit were always easily recognized by those in India who were familiar with both. Indeed, a very large proportion of Pali and Sanskrit word-stems are identical in form, differing only in details of inflection!.

   Technical terms from Sanskrit were converted into Pali by a set of conventional phonological transformations. For Examples

   Vowels and diphthongs

   *Sanskrit ai and au always monophthongize to Pali e and o, respectively

   Examples: maitrī → mettā, auṣadha → osadha

   *Sanskrit aya and ava likewise often reduce to Pali e and o

   Examples: dhārayati → dhāreti, avatāra → otāra, bhavati → hoti

   *Sanskrit avi becomes Pali e (i.e. avi → ai → e)

   Example: sthavira → thera

   *Sanskrit ṛ appears in Pali as a, i or u, often agreeing with the vowel in the following syllable. ṛ also sometimes becomes u after labial consonants.

   Examples: kṛta → kata, tṛṣṇa → taṇha, smṛti → sati, ṛṣi → isi, dṛṣṭi → diṭṭhi, ṛddhi → iddhi, ṛju → uju, spṛṣṭa → phuṭṭha, vṛddha → vuddha

   *Sanskrit long vowels are shortened before a sequence of two following consonants.

   Examples: kṣānti → khanti, rājya → rajja, īśvara → issara, tīrṇa → tiṇṇa, pūrva → pubba

   Consonants

   Sound changes

   *The Sanskrit sibilants ś, ṣ, and s merge as Pali s

   Examples: śaraṇa → saraṇa, doṣa → dosa

   *The Sanskrit stops ḍ and ḍh become ḷ and ḷh between vowels (as in Vedic)

   Example: cakravāḍa → cakkavāḷa, virūḍha → virūḷha
   etc., etc.,(only if you want)

   Delete
 5. சுப்பிரமணியம்26 January 2014 at 21:22

  Addendum : மற்றும் formal Sinhala is more similar to Pali என்ற உண்மையை wikipedia வில் @ http://en.wikipedia.org/wiki/Sinhala_language பாரா Affinities to neighbouring languages வில் பார்க்கவும்.

  ReplyDelete
 6. அய்யா ,நம்மை மானம் உள்ளவர்களாக மாற்ற புத்தர் ஆரியத்தை எதிர்த்து போர் தொழில் செய்துள்ளார் ,ஆனால் இன்று உள்ளவர்கள் தலித் மக்களின் வீடுகளை, marklist கல்வி சான்றுதிழல், சொத்து பத்திரம் ,மதிப்பெண் சான்று ,மரம் சொத்துகளை சேதம் செய்வது கொளுத்துவதுதான் போர் தொழில் என்று மேடை போட்டு மார்தட்டுகேறர்கள் " அதற்க்கு பெயர் நாங்கள் போர் தொழில் செய்கேற ஜாதி "என்கேறர்கள், ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் யார் யார் எல்லாம் பார்பனியத்தின் பின்னல் செல்கேறர்களோ அவர்களின் கடைசி காலம் அழிவில் போய்தான் முடியும் .

  ReplyDelete
  Replies
  1. இளையராஜா27 January 2014 at 20:26

   Marklist, கல்வி சான்றிழதழ், சொத்து பத்திரம், மதிப்பெண் சான்றிழதழ் போன்ற வற்றை அங்குள்ள தீயவர்களே கொளுத்தி விட்டு (எளிதில் Duplicate வாங்கிவிடலாம் என்ற காரணத்தால் ) பிற ஜாதி இந்துக்கள் மீது வீண் பழி போடுகிறார்கள் என்று பெரிய / சின்ன DOCTOR கள் (திராவிடக்கட்சித் தலைவர்கள் போல் ருபாய் 2000 க்கும் 3000 க்கும் doctor பட்டம் வாங்கியவர்களல்ல! 6 வருடங்கள் இரவு பகலாய் திறமையாகப் படித்து FAIL ஆகாமல் வாங்கியது) மற்றும் பல சமுதாயத்தைச் சேர்ந்த நல்லவர்கள் கூறுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.

   Delete
  2. நான் கும்பகோணம் வட்டம் இன்னம்பூர் என்ற கிராமத்தை சேர்த்தவன் ,அதன் அருகில் 4 K.M ொலைவில் இருப்பது குடிதாங்கி கிராமம் அங்கை தான் சாதி கலவரம் உண்டானது வன்னியர்கள் அதிகம் பாதிக்க பட போகிறார்கள் என்று தெரிந்த உடன் தலித் பிணத்தை தூக்கி அடக்கம் செயும் வரை உடன் இருந்தார், அதன் மறுநாள் மிக பெரிய சாதி கலவரம் உண்டானது எங்கள் கிராமத்துக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்லை அனால் 23 வீடுகள் எரிக்கபட்டது என் வீடும் ஒன்று அப்பொழுது எனக்கு வயது 10, நாங்கள் அல்லது நான் என் கிராமத்து மக்கள் என்ன தவறு செய்தார்கள் ? அரசிடம் இருந்து நிதி நிதி பெறுவதற்காக நாங்கள் வீட்டை கொளுத்தினோம் ? இவரை நாங்கள் நம்புவதற்கு தயாராக இல்லை. இவர் தமிழன் என்று பயன்படுத்துவது ஒட்டு அரசியலுக்குதான் !!! இவர் உண்மையான தமிழன் என்றால் ஏன் தலித் மக்களுக்கு நிதி பெற்று கொடுக்கலாமே !

   Delete
  3. மிக எளிமையாக மாற்றுச் சான்றிதழ் பெற்றுவிடலாம் என்பதால் தான் நீங்கள் குறிப்பிடும் தீயவர்கள் தங்களுக்கு தாங்களே கல்வி சான்றிதழ்களை, சொத்து பத்திரங்களை எரித்து கொள்கிறார்கள் என்றால் மிக மிக நல்லவர்களான நீங்களும் ஒரே ஒரு முறை அந்த வேலையை செய்து விட்டு பின் எளிதாக மாற்று சான்றிதழ்களை பெற்று கொள்ள முயன்றுபாருங்களேன்
   அடுத்து 2000, 3000 கொடுத்து திராவிட கட்சி தலைவர்கள் டாக்டர் பட்டம் வாங்கினார்கள் என்று சொல்லியுள்ளீர்கள் “ திராவிட கட்சி தலைவர்கள்” என்றால் இந்த நிமிடம் வரை இருவர்தான் ஒருவர் அண்ணா மற்றொருவர் கலைஞர் யேழ் பல்கலைகழகத்தால் பாராட்டப்பட்டு “பெல்லோசிப்” விருது பெற்றவர் அண்ணா கலைஞருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாமா என்று எவருக்காவது சந்தேகம் வருமென்றால் அவன் தமிழை எழுத்துகூட்டி படித்து கொண்டிருக்கிற பேர்வழி என்று தான் நாகரீகமாக சொல்ல தோன்றுகிறது.
   (பின் குறிப்பு : திராவிட இயக்கத் தலைவர்களென்று எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, விஜயகாந்த் போன்றோர்களையெல்லாம் நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல
   இளையராஜா கொஞ்சம் அண்ணா கலைஞர் எழுதிய நூல்களை எல்லாம் வாங்கி படிப்பா …. தட்டையா விமர்சனம் பண்ணுவது அறிவுக்கு அழகல்ல)

   Delete
  4. அவர்[கலைஞர்]9ஆம் கிளாஸ் பெயில், அம்மையார் SSLC pass,அவ்வளவுதான் வித்தியாசம்!.அதுதான் DOCTOR பட்டம் பெற அவ்விருவருக்கும் இருக்கும் அதீதத் தகுதிகளா?

   Delete
  5. தொல்காப்பியப்பூங்காவிற்கே முனைவர் பட்டம் தரலாமே

   Delete