தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Monday, 3 February 2014

மீண்டும் தோழர் மணியரசனுக்கு...

அன்புள்ள தோழருக்கு,

வணக்கம். முள்ளிவாய்க்கால் முற்றமும், முக்காடு நீக்கிய தமிழின வெறுப்பும்என்னும் தலைப்பின் கீழ் நீங்கள் என் மீது கடுமையான விமர்சனத்தையும், வசைபாடல்களையும் முன்வைத்திருந்தீர்கள். அதற்குரிய விடைகளை நான் கூறியிருந்தேன். அதில் இறுதியாக உங்களிடம் ஒரே ஒரு வினாவை மட்டும் தொடுத்திருந்தேன். கடிதம் எழுதியும், திரு தா. பாண்டியன் மூலமாகவும், முள்ளிவாய்க்கால் முற்றத்தைத் திறந்திட, முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அழைப்பு விடுத்ததாகத் திரு வைகோ தொலைக்காட்சியில் கூறினார். ஜெயலலிதா எந்த விதத்தில் ஈழ ஆதரவாளர் என்று கருதி, அழைத்தீர்கள் என்று நான் கேட்டிருந்தேன்.

இப்போது, நலங்கிள்ளி என்பவரின் பெயரில், உங்களின் இதழான தமிழ்த் தேசத் தமிழர் கண்ணோட்டம் இதழில் (2014, பிப் 1& 15), நான் கேட்ட வினாவிற்கு எந்தத் தொடர்பும் இல்லாமல், ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது.

அன்புத் தோழர் அவர்களே, அவைக்கு எந்தத் தருமியையும் அனுப்பி வைக்க வேண்டியதில்லை. நேர்மை உரம்கொண்ட நீங்களே நேரிடையாக விடை சொல்லுங்கள். அல்லது, விவாதத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து விடுங்கள். நன்றி.

தோழமையுடன்,

சுப. வீரபாண்டியன்


1 comment:

  1. ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வே

    ReplyDelete