தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday 19 November 2014

ஆடு - புலி - அம்மா!


தமிழ்நாடு சட்டமன்றச் செயலாளர் ஜமாலுதீன் அந்தப் பொறுப்பில் இருக்கிறாரா இல்லையா என்பது யாருக்கும் புரியாத  புதிராக உள்ளது. அனைத்து நாளேடுகளிலும் அது பற்றிய செய்தி கேள்விக்குறியாகவே வெளிவந்துள்ளது.

அவருடைய பதவிக்காலம் 2012இல் நிறைவடைந்தது. எனினும் 5 ஆண்டுகள் அவர் பதவியைத் தமிழக அரசு நீட்டித்தது. இப்போது அப்பதவியிலிருந்து அவர் விலக்கப்பட்டு விட்டார் என்பது போலச் செய்திகள் கூறுகின்றன. ஸ்ரீரங்கம் தொகுதி வெற்றிடமாக உள்ளது என்று 40 நாள்களுக்குப் பிறகு அறிக்கை விட்டதுதான் அவர் செய்த குற்றம் என்கின்றனர். குன்ஹா மீது காட்டமுடியாத கோபத்தை ஜமாலுதீன் மீதாவது காட்ட முடியுமா என்று பார்க்கின்றனர் போலும்! பாவம் அந்தப் பலியாடு!


சென்னை வண்டலூரில் ஒரு புலி இருக்கிறதா, தப்பிவிட்டதா என்பதும் மர்மக் கதை போல நீள்கிறது. இருக்கிறது என்று ஒரு நாளும், தப்பி விட்டது என்று மறு நாளும் அறிக்கைகள் வருகின்றன. அனைத்துப் புலிகளும் பத்திரமாக உள்ளன என்று ஒரு அதிகாரி அறிக்கை விட்ட மறுநாள், தமிழக வன அமைச்சர், "அம்மாவின் வழிகாட்டலில் புலியைத் தேடிக் கொண்டிருக்கிறோம்" என்கிறார். அம்மா என்ன புலி பிடிப்பதில் வல்லுநரா? எது  எதற்குத்தான் அம்மா வழிகாட்டல் என்று கூறுவார்களோ தெரியவில்லை.

வண்டலூரில் புலி இருக்கிறதா, இல்லையா என்று தெரியவில்லை. சட்டமன்றத்தில் செயலாளர் இருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை. கோட்டையில் முதலமைச்சர் இருக்கிறாரா இல்லையா என்றும் தெரியவில்லை. 


4 comments:

  1. sir, i request you to start a FB page which could help many of us to reach you and to find your activities easily..

    ReplyDelete
  2. இந்த பக்கத்துக்கு புதிதாக வருபவர்கள் பழைய பதிவுகளை படிக்க வசதியாக ... வலது பக்கத்தில் வருடம் , மாதம் என்ற வரிசை அடிப்படையில் பதிவுகள் இருந்தால் இன்னும் நன்றாகவும் எளிமையாகவும் இருக்கும்....

    ReplyDelete
    Replies
    1. இடது பக்கத்தில் பிந்தைய செய்திகள் என்ற தலைப்பில் பழைய பதிவுகளை நீங்கள் காணலாம்.

      Delete
  3. 'ஆடு - புலி -அண்ணா,கலைஞர்,எம்ஜிஆர்,அம்மா!, என்று தலைப்பிட்டிருந்தால் இன்னும் பொறுத்தமாக இருந்திருக்கும்!.ஜனநாயகத்தின் விழுமியங்களை, மாண்புகளக் குழி தோண்டிப் புதைத்த மாவீரர்கள்.BJP மதவெறியை தூண்டி அரசியலில் வெற்றி பெறுவதுபோல ஜனநாயக நெறிகளுக்கு விரோதமான இனவெறி,மொழிவெறி, ஜாதிவெறிகளை தூண்டி அரசியலில் பிழைப்பு நடத்தி வெற்றி பெற்றவர்கள். ஜனநாயக நெறிகளை குறுகிய சுயநல வெறிகளால் தோற்கடித்தவர்கள்.அவர்கள் செய்யும் ஊழல்களை காக்கும் கேடையமாக வெறிகளை பயன்படுத்துகின்றார்கள்.

    ReplyDelete