சின்னஞ்சிறு நாடுதான்
இலங்கை. ஆனாலும் எதிர்பாராத திருப்பங்களால் நிரம்பி வழிகின்ற வரலாற்றைக் கொண்டது
அது. இப்போது அங்கு இன்னொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது!
மைத்ரிபால சிறிசேனவின்
வெற்றியில் மகிழ நமக்குப் பெரிதாக ஏதும் இல்லை. எனினும், ராஜபக்சேயின் தோல்வியை
எண்ணி எண்ணி மகிழ ஆயிரம் நியாயமான காரணங்கள் இருக்கின்றன. கொடுமைக்காரரர்களுக்கு
வரலாற்றில் எப்போதும் இடமில்லை என்பதை இலங்கையின் தேர்தல் முடிவுகள் இன்னொருமுறை
மெய்ப்பித்துள்ளன. 27 ஆண்டுகள் சிறையில் இருந்த மண்டேலாவுக்குத்தான் வரலாற்றில்
இடமுண்டு. அவரைச் சிறை வைத்த வெள்ளைக்காரர் யாரென்று யாருக்குத் தெரியும்?
நடந்து முடிந்த இலங்கைத்
தேர்தல், முந்தைய அந்நாட்டின் தேர்தல்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறது. எப்போதும்
அங்கு சுதந்திராக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டுக்கும் இடையில்தான்
கடும் மோதல் நிலவும்.இரண்டில் ஒன்று வெற்றிபெறும். ஆனால் இத்தேர்தல் அப்படி இரு
கட்சிகளுக்கிடையிலான தேர்தலாக இல்லை. அனைத்து எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக
சிறிசேன நிறுத்தப்பட்டார்.
ராஜபக்சே , சிறிசேன ஆகிய
இரண்டு தனி மனிதர்களுக்கு இடையிலான தேர்தலாகவும் அது அமையவில்லை. ராஜபக்சே
பொறுப்பில் நீடிக்க வேண்டுமா, கூடாதா என்பதைத் தீர்மானிக்கும் தேர்தலாக மட்டுமே
அது நடைபெற்றது. மக்கள் தங்கள் தீர்ப்பைத் தெளிவாகக் கூறியுள்ளனர்.
சிங்களர்கள் வாக்குகளும்
இரண்டாகப் பிரிந்துதான் விழுந்திருக்கின்றன. ராஜபக்சேவுக்கு எதிரான, ஜதிக ஹெல
உறுமய போன்ற சிங்கள அமைப்பின் கண்டனங்களும், சிறிசேனவுக்கு மாங்க் கட்சி, வலதுசாரி
ஜே.வி.பி. போன்ற கட்சிகள் கொடுத்த ஆதரவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட
வேண்டியவையே. இருப்பினும், தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகியோரின் வாக்குகளே தேர்தல்
வெற்றியைத் தீர்மானித்திருக்கின்றன.
இரண்டு மாதங்கள் முன்பு
வரையில் சிறிசேன ராஜபக்ஷேவுடன் இருந்தவர் என்பதையும், தமிழின அழிப்பின்போது
பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவரே சிறிசேனதான் என்பதையும் தமிழர்கள்
அறியாதவர்கள் இல்லை. அதே போல, 1970ஆம் ஆண்டு, ஜே.வி.பி.யினர் சிறுபான்மையினர் மீது
தாக்குதல் நடத்தியபோது அதனை ஆதரித்தவர்தான் சிறிசேன என்பதை முஸ்லிம்களும்
அறியாதவர்கள் இல்லை. இருந்தாலும், ராஜபக்சேயை விரட்டியடிக்க வேண்டும் என்ற ஒரே
நோக்கத்தில் தமிழர்களும் சிறுபான்மையினரும் தங்கள் வாக்குகளை அளித்திருக்கின்றனர்.
இரண்டாம் உலகப் போரின்போது,
ஹிட்லரையும் பாசிச சக்திகளையும் முறியடிப்பதற்காகத் தங்களை அடிமைப்படுத்தி ஆண்ட
பிரித்தானியப் பேரரரசையே இந்தியா ஆதரித்த அந்த வரலாற்று நிகழ்வை இங்கு நாம்
எண்ணிப்பார்க்கலாம்.
இந்தத் தேர்தலுக்கு இன்னொரு
சிறப்பும் இருக்கிறது. ஈழத் தமிழர்கள் மூன்று வகையினர் என்பதை நாம் அறிவோம்.
அதனையே தங்கள் தாயகமாகக் கொண்டுள்ள, வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழும் ஈழத்
தமிழர்கள், பதுளை, கண்டி, நுவரெலியா போன்ற பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவழி
மலையகத் தமிழர்கள், வணிக நோக்கில் கொழும்பில் வாழ்ந்துவரும் இந்தியத் தமிழர்கள் என
அவர்கள் மூவகையினர். அனைவரின் வாக்குகளும் ஒரே மாதிரியாக விழுந்துள்ள தேர்தல்
என்றும் இதனைக் கூறலாம். ஈழத் தமிழர்களின் அராசியல் பார்வைக்கும், மலையகத்
தமிழர்களின் அறசியல் பார்வைக்கும் இடையே சில கால கட்டங்களில் கருத்து வேறுபாடுகள்
இருந்தன. ஆனால் இந்தத் தேர்தலில், ஒரே மாதிரியாக வாக்களித்துள்ளனர். திரிகோணமலை,
யாழ்ப்பாணம், பதிலை ஆகிய மூன்று பகுதிகளிலும் , ஏறத்தாழ 80 சதவீத வாக்குகள்
சிறிசேனாவுக்கு ஆதரவாக - அதாவது ராஜபக்சேவுக்கு எதிராக - விழுந்துள்ள காட்சியை
நம்மால் பார்க்க முடிகிறது.
இந்தச் சூழலிலும் கூட,
சிறிசேன தமிழர்களுக்கு உறுதுணையாக இருப்பார் என்று ஒருநாளும் கூற முடியாது.
பேரினவாதம் அவர்களின் குருதியில் கலந்திருக்கிறது. சிங்கள இனவெறியர்களாகவும்,
பௌத்த மத வெறியர்களாகவும்தான் அவர்கள் இருப்பார்கள் என்பது தெளிந்த உண்மை.
அதனால்தான், தன் 100 நாள் திட்டத்தில் கூட, தமிழர்களுக்கு நன்மை பயக்கும் திட்டம்
எதனையும் சிறிசேன முன் வைக்கவில்லை. தமிழர் பகுதிகளில் உள்ள ராணுவத்தைத் திரும்பப்
பெறுவேன் என்னும் உறுதிமொழியையும் அவர் அளிக்கவில்லை.
ராஜபக்சே சீனாவுடன்
ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தங்களைத் தான் ஆட்சிக்கு வந்தால் ஏற்க மாட்டேன் என்று
சிறிசேன கூறியுள்ளார் என்றாலும், அதுவும் அத்தனை எளிதன்று. இன்று இலங்கை என்பது,
சீனாவின் இன்னொரு மாநிலம் என்னும் அளவுக்கு ஆகிவிட்டது. அங்கு நடைபெற்றுவரும்
மேம்பாட்டுப் பணிகள் அனைத்தும் சீனாவின் கைகளில்தான் ஒப்படைக்கப் பட்டுள்ளன.
ராஜபக்சேயின் மகன் நாமல் இன்று சீனாவில்தான் தஞ்சம் அடைந்திருப்பதாகக் கூறப்படுகின்றது.
ராஜபக்சே மீதான இனப்படுகொலை
விசாரணை எதனையும் சிறிசேன நடத்துவார் என்று நாம் கனவு கூடக் காண முடியாது. அப்படி
எதுவும் நடத்தப்பட்டால், பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த சிறிசேனவுக்கும்
அதில் பங்கு உண்டு என்பது வெளிப்படும், எனவே அதற்கும் வாய்ப்பில்லை. இன்னும் சில
மாதங்களில் அங்கு நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதில் வெற்றிபெற
வேண்டுமானால், சிங்களர்களுக்கு நல்ல பிள்ளையாக அவர் நடந்து காட்டியாக வேண்டும்.
ஆதலால் நடந்து முடிந்த தேர்தலால், தமிழர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் ஒன்றும்
வந்துவிட வாய்ப்பில்லை என்றாலும், இத்தேர்தல் முடிவை நாம் அனிவரும் வரவேற்பதே
சரியானது.
அதற்கான இரண்டு காரணங்கள்
உள்ளன. ஒன்று, ஆட்சிக்கு வரும் எவர் ஒருவருக்கும் ராஜபக்சேயின் முடிவு சரியான
எச்சரிக்கையாக இருக்கும். இரண்டாவது, உலக நாடுகளின் பார்வையில், சில மாற்றங்கள் ஏற்படும்.
ஈழ மக்களின் நீண்ட நெடிய
போர், 2009க்குப் பிறகு, மூன்றாவது கட்டத்தை எட்டியுள்ளது என்பதை நாம் மறந்துவிடக்
கூடாது. 1950களில் அறவழியில் தொடங்கி,1970களில் ஆயுத வழியில் பயணித்து, 2009இல்
உலக அரசியல் அரங்கிற்கு வந்துள்ளது. இனி உலக நாடுகளின் அழுத்தமே, ஈழத் தமிழ்
மக்களுக்கான ஒரு நம்பிக்கை வெளிச்சத்தைத் தர இயலும். அதற்கு இந்தத் தேர்தல் முடிவு
உறுதியாய் உதவும்.
தமிழர்களின் வாக்குகள்தான்
தன்னை அதிபர் ஆக்கின என்னும் நன்றியுணர்ச்சி, நாடாளுமன்றத் தேர்தலுக்குப்
பிறகேனும், சிறிசேனவுக்கு ஏற்படுமானால், குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளையாவது
தமிழர்கள் பெற வாய்ப்புண்டாகும்!
தொடர்புகளுக்கு: (subavee11@gmail.com ,
www.subavee.com)
நன்றி: tamil.oneindia.in
தங்கள் பார்வையும் விளக்கமும் மிக அருமை.
ReplyDeleteஇந்தியாவிலும் அண்மை நாடான இலங்கையிலும் புதிய அரசு நிருவப்படிருக்கிறது. வரலாற்று பிழைகளிளுருந்து கற்றுகொண்டு, இரு அரசும், தங்கள் செயல்பாடுகளில் இன, மொழி, நம்பிக்கை (மதம்) அரசியலை கடந்து, மனித மேம்பாடு, கலாச்சாரம், பாரம்பர்யம் , மொழி பாதுகாப்பு, மண் வளம், கருது சுதந்திரம், ஊடகத்திர்கான நியாமான வெளி, அணைத்து மக்களின் நலனை உள்ளடக்கிய கொள்கை போன்றவற்றை வழி நடத்தி செல்ல வேண்டும்.
அதிவேகமாக இயங்கும் இன்றைய வழக்கை சூழலில், தங்களின் எழுத்துக்கள் நம் இன, மொழி, அரசியல் அறிவுக்கு வலிமையும் விவேகமும் சேர்க்கிறது. நன்றி.
தங்கள் பார்வையும், விளக்கமும் மற்றும் விவேகமும் மிக மிக அருமை!
ReplyDeleteஅதிவேகமாக இயங்கும் இன்றைய வாழக்கை சூழலில், தங்களின் எழுத்துக்கள் நம் இன, மொழி, அரசியல் அறிவுக்கு வலிமையும் விவேகமும் சேர்க்கிறது.
நன்றி! நன்றி! நன்றி! நன்றி!
வணக்கம் திரு சுபவீ ,உங்கள் பேச்சாற்றல் எல்லோரையும் போல் எனக்கும் பிடிக்கும் .உங்களுடைய பல கருத்துக்களில் உண்மை இருந்தாலும் ,தனி ஈழம் ,என்ற உங்கள் நிலை பாடு சரியென்று நினைகிரிர்களா ?அங்கு வாழும் தமிழர்களுக்கு உரிமைகளை பெற்று தரவேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது .ஆனால் அது பிரிவினால் சாத்தியம் என்றா நினைகிரிர்கள் .தனி ஈழம் எங்கோ நகர்ந்து போய் விட முடியாது ?.இது தனி தமிழ்நாடு ,தனி தஞ்சை நாடு ,தனி மாயவரம் நாடு என்று கேட்பதுபோல் இல்லையா ?.இங்கும் கேரளாவுக்கும் ,நமக்கும் பிரச்சனை என்றால் இதே நிலைப்பாடு சரியாக வருமா ?அங்கு நடக்கும் பிரச்சனை வேறு ,என்பது புரிகிறது .பிரிவும் பிரச்சனைகளை வளர்க்குமே ஒழிய தீர்த்துவிடும் என்று நினைக்க முடியுமா ?நான் குற்றம் கூறும் மன நிலையில் கேட்க வில்லை .நான் நினைப்பது சரியா ?தவறா ?என தெரிந்து கொள்ளவே கேட்கிறேன்
ReplyDeleteஓரு தேசிய இனத்தின் தனித்துவத்தை பாதுகாக்க தனி நாடு அவசியம்.
Deleteஇலங்கைத் தமிழினம் ஒரு தனித்துவமான தேசிய இனம். அதற்கென ஒரு மொழி, கலாசாரம், பொதுப் பொருளாதாரம் தொடர்ச்சியாக வாழும் ஒரு நிலப்பகுதி எல்லாமே உண்டு.
அவ்வகையில் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதும் வடக்குக் கிழக்கு அந்த இனத்தின் பாரம்பரிய தாயகப் பகுதி என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.காலம் காலமாகவே சிங்கள இன ஒடுக்குமுறையாளர்கள் தமிழ் மக்களின் தேசியத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பதுடன் அதை அழிக்கும் வகையிலான சூழ்ச்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு நாட்டில், ஒரு குடிமகன் தன் அடிப்படை உரிமைக்காக இன்னொரு குடிமகனுடன் போராடினால்தான் கிடைக்கும் (அதுவும் வேறு நாடுகள் தலையிட்டு பெற்றுத்தர வேண்டும்) என்றால், அது எப்படி ஒரே நாடாகும்?
தனி ஈழம் ஒன்றே நிரந்தரத் தீர்வு !
" அங்கு வாழும் தமிழர்களுக்கு உரிமைகளை பெற்று தரவேண்டும் " என்ற உங்கள் கருத்தே, தனி ஈழம் வேண்டும் என்பதன் அடிப்படை காரணம். அடிப்படை உரிமையைக் கூடக் கொடுக்க விரும்பாதவர்களோடு எவ்வாறு சோ்ந்து வாழ்வது?
Delete" இது தனி தமிழ்நாடு ,தனி தஞ்சை நாடு ,தனி மாயவரம் நாடு என்று கேட்பதுபோல் இல்லையா ? "
தனி ஈழம் என்பது ஒரு தேசிய இனத்தின் அடையாளம். மாயவரத்தில் உள்ளவர்களின அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுமானால், போராடியும் கிடைக்க வில்லையென்றால், அவர்களும் தனி நாடோ / தனி மாநிலமோ கேட்பதைத் தவிர்க்க முடியாது.
ஈழத் தமிழர்களுக்கு அவர்களின் உரிமையைப் பெற்றுத் தருவது தற்காலிகத் தீர்வுதான். அவ்வினத்தின் தனித்துவத்தை பாதுகாக்க , தனி ஈழம் ஒன்றே நிரந்தரத் தீர்வு !
நன்றி திரு கணேஷ்வேல் ,ஆரியர்கள் ,மத்திய ஆசியாவில் இருந்து வந்து நம்மை அதிகாரம் செய்தால் வந்தேறிகள் அடித்து துரத்து என்கிறோம் ,தமிழர்களும் இலங்கையில் வந்தேறிகள் தானே ?தமிழர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டால் உரிமைகளை கேட்டு போராடலாம் .மூன்றாம் நாட்டின் தலையிட்டில் உரிமைகளை பெற்றால் தவறு என்ன .ஒரு ஊரில் அண்ணன் தம்பி சண்டை என்றல் ஊர் பெரியவர்கள் தலையிட்டு சமாதனம் செய்வ தில்லையா ? ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது ஏற்படுத்த பட்ட இந்திய -இலங்கை ஒப்பந்தம் ,மாகாண சபை திட்டத்தை ஏற்று கொண்டு இருந்தால் ,இந்த பிரச்சனை அன்றே முடிந்திருக்காதா? ]தமிழர் விடுதலை கூட்டணியும் ,மற்ற போராளி குழுக்களும் ஏற்று கொண்ட போது ,திரு பிரபாகரன் மட்டுமே இதை எதிர்த்தார்] திரு பிரபாகரன் நான் மதிக்கும் சிறந்த போராளி .அவரை குறை கூற விரும்ப வில்லை .ஆனால் அவருக்கு சரியான ஆலோசனை வழங்க பட வில்லையா ?அல்லது அவர் எடுத்த முடிவுதான் சரியா ?என் கேள்வியில் தவறு ஏதேனும் இருந்தால் மன்னிக்கவும் .
Deleteஇரண்டு செய்திகள் :
Delete1) ஆரியா்களை நாம் எதிர்ப்பது அவர்கள் மத்திய ஆசியாவில் இருந்து வந்து குடியேரிய வந்தேரிகள் என்பதற்காக அல்ல.
அவர்கள் நம்மை அடிமைப்படுத்தி, நம் அடையாளத்தை அழித்ததால்தான் நாம் அவர்களை எதிர்க்கிறோம்.
2) தமிழர்கள் இலங்கையில் வந்தேரிகள் என்ற தங்கள் பார்வை வரலாற்றுக்கு புறம்பானது. சரியான புரிதல் இல்லாததால்தான், மெத்தப் படித்தவர்கள் பலரும் இதே கருத்தை கொண்டிருக்கின்றனா்.
தமிழர்கள் இலங்கையில் வந்தேரிகள் என்ற தங்கள் கருத்தை ஆதாரத்தோடு நிறுவினால், நம் விவாதத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லலாம்.
திரு கணேஷ்வேல் இலங்கை தமிழர்கள் வந்தேறிகள் என்பதற்கான அகாடமிக் ப்ருப் ஏதும் எனக்கு கிடைக்க வில்லை .பத்திரிகை செய்திகளும் ,விவாதங்களின் போது மற்றவர்கள் சொன்னதும் மட்டுமே .ஆனாலும் வலைத்தளத்தில் தேடியதில் சில தகவல்களை பெற முடிந்தது .அவற்றிலும் பிரித்தானியர் காலத்தில் தேயிலை தோட்டங்களுக்கு வேலை செய்யவே அழைத்து செல்ல பட்டதாகவும் ,மலையாளிகளில் ஒரு பிரிவினரான ஈழர் என்பதே தமிழ் ஈழர் என்ற பதத்திற்கு முன்னுரை என்றும் உள்ளது .இவை அனைத்தும் விக்கி பிடியாவில் தான் கிடைகிறது .விக்கி பிடியவை யார் வேண்டுமானாலும் எடிட் செய்ய முடியும் என்பதால் அதன் நம்பக தன்மை உறுதி செய்ய முடியாது .சில லிங்க் கலை தந்துள்ளேன் அவற்றில் எனக்கே நம்பிக்கை இல்லை .மலையக தமிழர்களுக்கான உண்மையான ஆதாரங்களை தங்களால் தர முடியுமா ? 1.http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D 2.http://www.nichamam.com/2008/06/blog-post_30.html 3.http://www.namathumalayagam.com/2013/04/blog-post_27.html
Deleteஈழத் தமிழர்களை , மலையகத் தமிழர்களோடு ஒப்பிடுவதே வரலாற்றுக்குப் புறம்பானது.
Deleteமலையகத் தமிழர்களின் வரலாறு வெறும் 200 ஆண்டுகள்தான்.
ஆனால் ஈழத் தமிழர்களின் வரலாறோ 2500 ஆண்டுகளுக்கும் முற்பட்டது (சிங்கள வரலாற்றுக்கும் காலத்தால் முந்தியது ஈழ வரலாறு).
பின் குறிப்பு:
------------------------
நமது சங்ககால இலக்கியங்கள் பலவற்றிலும் 'ஈழம்' என்ற சொல்லாடலைக் காணலாம்.
2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் ஈழம் என்பதற்கு தங்களின் ஆதாரம் என்ன? அத்தனை ஆண்டுகளுக்கு முன் தமிழன் அங்கு எப்படி போனான் .?நீர் வழி போக்குவரத்துக்கு இருந்ததா ?தரை வழி போக்குவரத்துக்கு இருந்ததா ?சிங்களர் காலம் பிந்தையது எனில் அங்கு அத்தனை ஆண்டுகாலம் வாழ்ந்த மக்களின் மொழி கலப்பு இல்லாமல் எப்படி சிங்களம் தோன்றியது ?மிக குறிகிய நிலபரப்பில் அப்படி ஒரு மொழி ,இனம் தோன்ற முடியக்கூடிய சாத்திய கூறுகள் தர்க்க ரீதியாக சரிதானா ?இவற்றிற்கு என்ன ஆதரங்களை வரலாற்று ரீதியாக தருகிறிர்கள் திரு .கணேஷ்வேல்
Deleteஎனது வாதத்தின் ஆதாரம்:
Delete---------------------------------------------------------
சிங்களர்களின் வரலாறே கி.மு 500 ல் தான் தொடங்குகிறது. புத்த மதம் இலங்கைக்குப் போனதே கி.மு 250 ல் தான். (ஆதாரம் : 'மகாவம்சம்' - இலங்கையின் வரலாற்றைச் சொல்லும் சிங்கள நூல்.)
சிங்களர்களுக்கும் முன்னரே அத்தீவில் மனிதர்கள் இருந்திருக்கிறார்கள், அவர்கள் தமிழர்களே !
(ஆதாரம்: 2500 ஆண்டுகளுக்கு முன்பே திராவிடர்களுக்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பு, சமீபத்தில் அங்கு நடந்த அகழ்வாய்வுச் சான்றுகளின் மூலம் அறியப்படுகிறது. அச்சான்றுகளை மூன்று பிரிவாக வகைப்படுத்தலாம்.
1. சிர்கா (Circa-Wintle and Oakley-1972)
குகை ஓவியம்
2. அநுராதபுரத்தைச் சேர்ந்த ""கிடுக்கி'' பகுதி அகழ்வாய்வுகள் ((Gadige-S. Deraniyagala-1972; S.Deraniyagala-1971))
3. பொன்பரப்பி (Ponbarippu) குருகல் கின்னா (Gurugal hinna) கதிரவெளி (Katiraveli) போடியகம்பளை (Podiya Gampala).
இப்பகுதியில் கிடைத்த சான்றுகள் தென்னிந்தியத் தொடர்போடு இலங்கைக்கிருக்கும் நெருக்கத்தை சுட்டிக் காட்டுகின்றன.)
இது ஒன்றே போதும், ஈழத் தமிழர்கள் சிங்களர்களை விட காலத்தால் முந்தியவர்கள் என்பதை நிறுவ.
சிங்களர்கள் யார்?
----------------------------------
சிங்களர்கள் என்பவர்கள் விஜயனின் வம்சாவழியினர். விஜயன் அன்றைக்கு கலிங்க நாட்டினில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு இனக் குழுவின் இளவரசன்.
அவன் இலங்கை என்று இன்று அழைக்கப்படும் தீவிற்கு வந்தப் பொழுது அங்கே ஏற்கனவே தமிழர்கள் ஆண்டுக் கொண்டு இருக்கின்றனர். ஒரு தமிழ் பெண்ணினை மணம் முடிப்பதில் இருந்து தான் சிங்களவர்களின் வரலாறே தோற்றம் பெறுகின்றது.
(விஜயனின் உடன் இருந்த வீரர்கள் பாண்டிய நாட்டுப் பெண்களை மணம் முடித்தனர் என்ற செய்தியும் இருக்கின்றது. வந்தோரை வாழ வைக்கும் தமிழர்கள் விஜய சிங்கனையும் வாழத்தான் வைத்து இருக்கின்றனர்.)
நண்பருக்கு எனது அன்பான வேண்டுகோள்:
Delete----------------------------------------------------------------------------------
தங்கள் கேள்விகளிலிருந்து நான் அறிந்து கொள்வது என்னவெனில், தங்களுக்கு இலங்கையைப் பற்றிய எந்த வரலாறும் தெரியவில்லை என்பதே! அது ஈழத் தமிழர் வரலாறாயினும் சரி , மலையகத் தமிழர்களின் வரலாறாயினும் சரி அல்லது சிங்களர் பற்றிய வரலாறாயினும் சரி !
அதோடு தாங்கள் எழுப்பிய 'போக்குவரத்து' கேள்வி, தங்களின் 'தமிழகத்' தமிழர்கள் பற்றிய வரலாற்று அறிவையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது!
தங்களுக்கு என் தாழ்மையான வேண்டுகோள் என்னவெனில், வரலாற்றைக் கற்று முதலில் நீங்கள் தெளிவடையுங்கள், இரு பக்க (ஈழத் தமிழர் மற்றும் சிங்களா்) வரலாறையும் கற்பது இன்னும் சிறப்பு.
விவாதங்களின் அடிப்படையில் வரலாற்றைக் கற்க முயல்வது சரியான அனுகுமுறை இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.
நன்றி திரு கணேஷ்வேல் ,ஒரே ஒரு இளவரசன் அதுவும் தமிழ் பெண்ணை மணந்து சிங்கள இனம் தோன்றியதாக கூறும் தங்கள் கூற்று எனக்கு பொருத்தமாக படவில்லை .ஆனாலும் எனக்கு சிங்கள வரலாறு தெரியவில்லை என்ற தங்கள் கருத்தை ஏற்கிறேன் .தெரிந்து கொண்டு விவாதத்துக்கு மீண்டும் வருவேன் .நன்றி
Deleteதமிழர்களின் வாக்குகள்தான் தன்னை அதிபர் ஆக்கின என்னும் நன்றியுணர்ச்சி, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகேனும், சிறிசேனவுக்கு ஏற்படட்டும், குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளையாவது தமிழர்கள் பெற வாய்ப்புண்டாகட்டும்
ReplyDeleteநல்லதே நடக்கும் என எதிர்பார்ப்போம்