தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Monday, 16 February 2015

நேரடி விவாதம்! "இன்றைய தேவை திராவிடமா, தமிழ்த் தேசியமா?" என்னும் தலைப்பின் கீழ், தோழர்கள் பெ.மணியரசன், சுப. வீரபாண்டியன் இருவரும் ஒரே மேடையில், மக்கள் முன்னிலையில் இன்று (16.02.2015) நேரடியாக விவாதிக்கின்றனர்.
கூட்ட ஏற்பாடு: சங்கம்4

     நாள்: 16.02.2015 இரவு 07.00 மணி 
     இடம்: திருவாடுதுறை ராஜரத்தினம் முத்தமிழ் அரங்கம், 
              (முன்னாள் சத்யா ஸ்டுடியோ எதிரில்)
              அடையாறு, சென்னை-20
   

அனைவரும் வருக!

14 comments:

 1. அப்படி போடு !!!! இதைத்தான் எதிர்பார்த்தேன் !!! சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க

  ReplyDelete
 2. கணேஷ்வேல் மணிகாந்தி16 February 2015 at 11:09

  நன்றி அய்யா ! ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன் !

  ReplyDelete
 3. சுபவீ அய்யா அவர்களின் கேள்விகளுக்கு மணியரசன்அய்யா அவர்கள் மழுப்பாமல், சுற்றி வளைக்காமல் (சத்தியம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற பழைய விவாதத்தைப்போல் அல்லாமல்), நேரடியாக பதில் சொன்னால் நன்றாக இருக்கும்!

  ReplyDelete
 4. காணொளியை விரைவில் பதிவிடுங்கள் அய்யா

  ReplyDelete
 5. கணேஷ்வேல் மணிகாந்தி17 February 2015 at 12:38

  சபவீ அய்யாவின் உரையை முதல் முறையாக நேரில் காணும் வாய்ப்பை நேற்று பெற்றேன். அருமையான பேச்சு, அரங்கமே எழுந்து நின்று நன்றியைத் தெரிவித்தோம்.

  திரு பெ.மணியரசன் அவர்களின் திராவிட எதிர்ப்பு பெரியார் எதிர்ப்பாகவே தெரிகிறது. அவர் பெரியாரை எதிர்த்து மேற்கோள் காட்டிய அனைத்தும் எந்த சூழலில் பெரியார் அவைகளைக் கூறினார் என்பதை உணராமல் எதிர்க்க வேண்டுமே என எதிர்ப்பதாகவே தெரிகிறது.

  திராவிட இயக்கம் தமிழ் தேசியத்துக்கு எதிரானது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயலும் திரு பெ.மணியரசன் போன்றவர்களின் நிலை தவறானது என்பதை காலம் உணர்த்தும் .

  ReplyDelete
 6. மணியரசன் பெரியாரை எதிர்த்து மேற்கோள் காட்டிய அனைத்தும் எந்த சூழலில் பெரியார் அவைகளைக் கூறினார் என்பதை உணராமல்(அவைகள் எதுவாயிருந்தாலும்&எந்த சூழலிலாயிருந்தாலும்) எதிர்த்தார் என்கிறீர்கள்.50 வருடங்களுக்குள் எப்படி சூழல் மாறிவிட்டது பார்த்திர்களா!.ஆனால் 2000 வருடங்களுக்கு முன் எந்த எந்த சூழலிலில் மனுதர்மம் எழுதப்பட்டது,2500 வருடங்களுக்கு முன் எந்த எந்த சூழலிலில் பிற தர்மங்கள் எழுதப்பட்டது என்பதை நீங்களெல்லாம் ஆராயாமல் எதிர்க்கிறீர்களே.ஒரு சட்டம்,சூழல் 100 வருடங்களுக்குள் தலைகீழாகக்கூட மாறுவதைப் பார்க்கிறோம்.ஆங்கிலேயர் கால IPC,Crpc,Evidence act,labour law,குற்றபரம்பரைச் சட்டம் etc.,எப்படியெல்லாம் மாற்றப்பட்டுள்ளது,even ஒழிக்கப்பட்டுள்ளது!.அன்று காட்டுமிராண்டிகளாக இருந்தவர்களை ஒரு Systemக்குள் கொண்டுவரத்தான் அப்படி சில சட்டங்கள்,தர்மங்கள்...உளி தாங்கும் கல் தானே மண் மீது சிலையாகும்,வலி தாங்கும் மனம் தானே நிலையான சுகம் காணும்,பெரும் வலி கொடுக்கும் அறுவை சிகிச்சை தானே புற்றுநோய்க்கும் தீர்வாகும்!,அதுபோல உங்களுக்கெல்லாம் கடிவாளமாக,அங்குசமாக,கசப்பு மருந்தாக இருந்து சில வலிகளோடு உங்களை வழி நடத்தி,பட்டை தீட்டீ இன்று உங்களையெல்லாம் இந்த உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்ததை நினைத்து மகிழுங்கள்.அதை விட்டுவிட்டு 2000 வருடங்களுக்குப் பின் அவற்றை குறை சொல்வது அறிவற்ற பேடித்தனமாகும்!

  ReplyDelete
  Replies
  1. தோழர் மணியரசனின் பெரியார் எதிர்ப்பு கண்டு மகிழும் திரு அனானிமஸ், மனுநீதிக்கு ஆதரவாகத் தன் கருத்தைப் பதிவு செய்கின்றார். இது இயற்கைதான். மனுநீதியைப் போற்றும்  அனைவரும் சமூக நீதியை எதிர்க்கவே செய்வார்கள்." 

   Delete
  2. கணேஷ்வேல் மணிகாந்தி18 February 2015 at 12:04

   நான் குறிப்பிடும் பெரியாரின் 'சூழல்' என்பது எதுவெல்லாம் தமிழர்க்கு தீங்கிழைப்பதோ அவையனைத்தையும் எதிர்க்கும் பெரியாரின் நேர்மை.

   தமிழர் வளர்ச்சிக்கு எதிராக எது குறுக்கே வந்தாலும் அது தமிழே என்றாலும் அதையும் எதிர்த்ததுதான் பெரியாரின் நேர்மை. தமிழை எதிர்த்தார், ஏன்? சமயத்தின் பிடியில் தமிழ் இருந்ததால் எதிா்த்தாா். மூடநம்பிக்ககையை விதைத்த தமிழ் சமய/புராண நூல்களை எதிா்த்தார். இதுதான் தமிழ் தேசியவாதிகளின் பெரியார் எதிர்ப்பின் பிண்ணனி.

   ஆனால், தாங்கள் குறிப்பிடும் "சூழல்" என்பது கடவுளின் 'Agent' கள் என சொல்லிக்கொண்டு மக்களை மாக்களாக நடத்திய சூழல்.

   மன்னர்களை மயக்கி மனுவைத் திணித்ததுதான் பச்சை பேடித்தனம்.

   உழைக்கும் மக்களை சுரண்டி வயிறு வளர்க்க மனுவில் சட்டமியற்றியதுதான் அசல் பேடித்தனம்.

   மன்னர்கள் எதிர்க்காமல் இருக்க அவர்களை நாயகர்களாக வைத்து 'கதை' களை எழுதியது தான் பேடித்தனம்.

   எப்பபோதெல்லாம் சமூகநீதி பேசப்படுகிறதோ, அப்போதெல்லாம் அதை எதா்ப்பதுதான் பேடித்தனம்.

   "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என சொன்னவன் எங்கள் முப்பாட்டன். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என சொன்னவனும் எங்கள் முப்பாட்டன்தான்.

   ஆனால், "சதுர்வருணம் மயாசிருஷ்டம்" என கடவுளின் பெயரால் மக்களைப் பிரித்து , நான்கு வருணமாகவும், நான்காயிரம் சாதிகளாகும் மாற்றியதுதான் பச்சை பேடித்தனம்.

   இவற்றையெல்லாம் அழித்தொழிக்காமல் சமூக நீதியை அடைய முடியாது என உணர்ந்துதான் அங்கிங்கெனாத படி அனைத்தையும் அடித்து நொறுக்கியவர் எங்கள் 'தந்தை பெரியார்'.

   சாதிக் கோபுரத்தில் இருந்தவர்களை கீழே தள்ளிவிட்டு விட்டார்களே என இதைத் தாங்கமுடியாமல், மனுவையும் வருணத்தையும் இன்றும் ஆதரிப்பதுதான் உண்மையான பேடித்தனம்.

   Delete
  3. சங்கர்20 February 2015 at 15:39

   சாதிக் கோபுரத்தில் உங்களை இணைத்ததின் மூலம் முன்பு நீங்களெல்லாம் உயர்திணை அந்தஸ்து பெற்று கைவினைக் கலைஞர்களாக பல தொழில்களைச் செய்து உயர்வு பெற்றீர்களே&மதிப்போடு வாழ்ந்தார்களே (சாதிக்கோபுரத்திற்கு
   வெளியிலிருந்தவர்களுக்கு இந்த சிறப்பெல்லாம் இல்லாமல் மிருக வாழ்க்கை வாழ வேண்டியிருந்ததே).ஆகவே மனு அன்று உங்களின் வாழ்கையில் ஏற்படுத்திய வீச்சு வேறு,2000 வருடங்களுக்கு பின் இன்றுல்ல நிலையில் மனுவின் வீச்சு வேறு.மேலும் Animal Kingdomத்தில் பரிணாம வளர்ச்சி என்ற ஆராய்சிக்கு Darwinஐ எப்படியெல்லாம் புகழ்கிறீர்கள்,ஆனால் Human(Kingdom)த்தின் பரிணாம வளர்ச்சியாக{சாதிக் கோபுரத்திற்கு வெளியிலிருந்து இன்னல்கள்/இழிவுகள் பல அனுபவித்து,சாதிக் கோபுரத்தில் சூத்திரனாக இணைந்து சேவைகள் பல செய்து,பிறகு வைசியனாகி செல்வத்தால் வாழ்க்கையை அனுபவித்து,பிறகு க்ஷத்திரியனாக ஆட்சி அதிகாரத்தை அனுபவித்து,பிறகு பிரமணனாக தவம், யாகம்,யோகம் போன்றவற்றை செய்து இறைவனுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற தத்துவம்}மனுவின் சாதிக் கோபுரத்தை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்?.மஹாத்மா காந்தியே அந்த தத்துவத்தை ஆதரித்தாரே, சமூக ஒழுக்கத்திற்கு வழிவகுக்குமென்றாரே!

   Delete
  4. கணேஷ்வேல் மணிகாந்தி20 February 2015 at 22:40

   சாதி என்பதே ஒரு இழிவான, கேவலமான உருவாக்கம்.

   சாதிக்கோபுரத்துக்கு வெளியில் இருப்பவர்கள் மிருக வாழ்க்கையா வாழ்கிறாரா்கள்? அப்படியானால் இந்தியாவிலிருக்கும்100 கோடிப்பேரைத் தவிர உலகிலிருக்கும் 700 கோடி பேரும் மிருக வாழ்க்கையா வாழ்கிறார்கள்?

   உங்கள் கருத்து இதுதான் என்றால் என்னைப் பொறுத்தவரை அந்த மிருக வாழ்க்கையே மேல்!

   சாதிக்கோபுரத்துக்கு புது (?) விளக்கம் வேறு! தவம், யாகம் செய்யவேண்டியவர்கள் எல்லாம் 'Computer' ஐ பிடித்தால் இப்படித்தான்.

   தங்கள் கருத்துப்படி, இன்றைய பிராமணர்களின் முன்னோர்கள் அனைவரும் சூத்திரர்களாக இருந்து - மனித மலத்தை தலையில் சுமந்தார்களா? சாக்கடையை சுத்தம் செய்தார்களா? தெரு கூட்டினார்களா? செருப்பு தைத்தார்களா?

   அதேபோல், இன்று, பிராமணர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் யாவும் மேலே கூறிய அனைத்து வேலைகளையும் செய்து சூத்திரனாகி, வைசியனாகி, ஷத்ரியனாகித்தான் பிராமணர்கள் ஆகிறார்களா?

   நான் பார்த்து எந்த ஒரு சூத்திரனும் பிராமணனா மாறின மாதிரி தெரியலியே !

   அப்படியானால் "பிரம்மன் தலையில் இருந்து பிறப்பவன் பிராமணன்னு" எழுதி வைத்தது? பித்தலாட்டமா?

   தங்கள் கருத்து மூலம் நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறீர்கள், "நீங்கள்" அக்காலத்தில் எழுதி வைத்தது எல்லாம் பொய்யும், புரட்டும் என்று !

   மகாத்மா காந்தி என்ன சொன்னார்? மணி அடிக்கறத விட்டுட்டு கீபோர்டுல 'Type' அடிக்க சொன்னாரா? ஒரு பக்கம் கோட்சேக்கு சிலை வைக்கிறது, மறுபக்கம் காந்தியை துணைக்குக் கூப்பிடறது. பார்ப்பனியப் பித்தலாட்டத்துக்கு ஒரு அளவே இல்லையா !

   Delete
  5. சங்கர்21 February 2015 at 15:55

   இன்றைய நிலையில் இந்தியாவிலிருக்கும் 120 கோடியில் 100 கோடி மக்கள் சாதிக் கோபுரத்துக்குள் தான் இருக்கிறார்கள்.ஆனால் நான் சொல்வது 2000 வருடங்களுக்கு முன்பு இன்றல்ல,இன்றய நிலை முற்றிலும் வேறு. வருணாசிரமத் தத்துவப்படி முன்னோர்களிலிருந்து வாரிசாக up-gradationவராது,அவரவர் தர்மங்களைக் கடைபிடிப்பதன் மூலம் அடுத்த பிறவியில்தான் சாதிக்கோபுரத்தில்up-gradationவரும்.சூத்திரர்கள் மனித மலத்தை தலையில் சுமக்கவில்லை,சாக்கடையையும் சுத்தம் செய்யவில்லை,தெருவையும் கூட்டவில்லை,செருப்பும் தைக்கவில்லை. இவையனைத்தும் முன்பு சாதிக்கோபுரத்துக்கு வெளியிலிருந்தவர்களின் வேலை.சூத்திரர்கள் பல தொழில்களை செய்யும் கைவினைக் கலைஞர்கள்/artisians&handi-craft(இதுவும் முன்பு இருந்த நிலை இன்றல்ல).மணி அடிக்கறத விட்டுட்டு கீபோர்டுல'Type'அடிக்கக் கூடாது என்பதிலிருந்தே உங்களையும் வருணாசிரமத் தத்துவம் அன்று மட்டுமல்ல இன்றும் ஆட்டிப் படைக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். அனுபவிக்கும் வரை காலாகாலமாக 2வது, 3வது வருணமாக அனுபவித்து விட்டு இன்று 5வது வருணத்தோடு உறவிலிருப்பது போல ஒரு போலித் தோற்றத்தை ஏற்படுத்துவது பச்சை பித்தலாட்டமாகும்.மனித மலத்தை தலையில் சுமந்தவர்களோடும்,சாக்கடையை சுத்தம் செய்பவர்களோடும்,தெரு கூட்டுபவர்களோடும்,செருப்பு தைப்பவர்களோடும் என்றாவது உங்களோடோ, உங்களுடைய குடும்பத்தோடோ,உங்களுடைய முன்னோர்களோடோ குடும்ப/திருமணத் தொடர்பு வைத்திருந்தீர்களா? வைத்திருந்தார்களா?அல்லது குறைந்தபட்சம் உங்கள் வீட்டில் உங்களோடு தங்குவதற்கு அனுமதிப்பீர்களா?மனசாட்சியோடு பதில் சொல்லுங்கள்.....உங்களுடையத் திராவிடப் பித்தலாட்டங்களுக்கு ஒரு அளவே இல்லையா!.சாதி என்பதே ஒரு இழிவான, கேவலமான உருவாக்கம் என்பதை வாயால் சொல்வதை விட மனித மலத்தை தலையில் சுமந்தவர்களோடு,செருப்பு தைப்பவர்களோடு திருமண,குடும்ப உறவு வைத்துக் கொண்டும், உங்கள் வீட்டில் உங்களோடு தங்குவதற்கு அனுமதிப்பதன் மூலமும் நிருபியுங்களேன்?!. கோட்சேக்கு சிலை வைக்கிறதை ஆதரிப்பவனல்ல நான்.

   Delete
 7. கணேஷ்வேல் மணிகாந்தி23 February 2015 at 13:46

  கோட்சேவுக்கு சிலை வைப்பதை ஆதரிக்கவில்லை என்ற கருத்துக்காக நண்பர் சங்கருக்கு முதலில் என் நன்றி !

  "அவரவர் தர்மங்களைக் கடைபிடிப்பதன் மூலம் அடுத்த பிறவியில்தான் சாதிக்கோபுரத்தில் up-gradation வரும்" என்று சொல்கிறீர்களே, இல்லாத 'அடுத்த பிறவியைக்' காரணம் காட்டி, இருக்கும் மக்களைச்  சுரண்ட ஏற்படுத்தப்பட்டதே வருணாசிரமம் என்பதை ஒப்புக் கொண்டதற்கும் நன்றி.

  நீங்கள் கூறும் வருணாசிரமத் தத்துவம், நீங்கள் கடவுள் எனக்கூறும் பகவான் கிருஷ்ணர் கூறிய வருணாசிரமத் தத்துவத்திற்கு எதிராக உள்ளதே? இதுதான் உங்கள் கடவுள் பக்தியா?

  "இவையனைத்தும் முன்பு சாதிக்கோபுரத்துக்கு வெளியிலிருந்தவர்களின் வேலை" என்று சொல்கிறீர்களே, யார் 'அவர்கள்' என்ற சிறிது வெளிப்படையாகச் சொல்லலாமே? இப்போது அந்த 'அவர்கள்' என்ன ஆனார்கள்?
  இப்போது 'அந்த' வேலைகளைச் செய்பவர்கள் யார்?

  "மணி அடிக்கறத விட்டுட்டு கீபோர்டுல'Type'அடிக்கக் கூடாது" என்று நான் கூறியது 'அந்த' வலியை தங்களுக்கு உணர்த்துவதற்காகத்தான். தாங்கள் கூறிய வருணாசிரமக் கொள்கையைத்தான் 'தங்களை' கடைபிடிக்க சொன்னேன். இப்போது உணர்கிறீர்களா வருணாசிரமக் கொள்கை எவ்வளவு மனிதத்தன்மையற்றது என்று!

  வருணத்தை நிலைநிறுத்தும் மனு சொல்வதைப் பாருங்கள், உங்கள் வருணாசிரம தருமம் எவ்வளவு கேவலமானதென்று உங்களுக்கே தெரியும் !
  ---------------------------------------------------------------------------------

  மனு : அத்தியாயம்-8, சுலோகம்-413:
  ---------------------------------------------------------------
  "பிராமணன் சம்பளங்கொடுத்தேனும் கொடாமலேனும் சூத்திரனிடத்தில் வேலை வாங்கலாம், ஏனெனில் அவன் பிராமணன் வேலைக்காகவே பிரமனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறனவல்லவா."

  அத்தியாயம்-9, சுலோகம்-319:
  -----------------------------------------------------
  "பிராமணர்கள் கெட்ட காரியங்களில் பிரவேசித்திருந்தாலும் சகலமான சுபாசுபங்களிலும் பூசிக்கத்தக்கர்கள் ஏனெனில் அவர்கள் மேலான தெய்வமல்லவா."

  அத்தியாயம்-10, சுலோகம்-122:
  --------------------------------------------------------
  "சூத்திரன் சுவர்க்கத்திற்காவது, ஜீவநத்திற்காகவாவது அல்லது இரண்டிற்குமாவது, பிராமணனையே தொழ வேண்டும்"

  அத்தியாயம்-10, சுலோகம்-129:
  -----------------------------------------------------
  "சூத்திரன் பொருள் சம்பாதிக்கத்தக்கவனாக இருந்தாலும் குடும்பத்திற்கு உபயோகமானதை விட மிகவும் அதிக பொருளை சம்பாதிக்கக் கூடாது. அப்படிச் சம்பாதித்தால் தன்னால் உபசரிக்கத்தக்க பிராமணாளையே ஹிம்சை செய்ய வேண்டி வரும்" 
  -------------------------------------------------------------------------------

  மேலும், நீங்கள் கசைியாக எழுப்பி கேள்வி, நீங்கள் அவர்களை எவ்வளவு கேவலமாக இன்றும் நினைக்கிறீர்கள் எனக் காட்டுகிறது.

  உங்களைப் போன்றோரால் தந்தை பெரியார் காலத்திலும் இதேபோல் கேள்விகள் எழுப்பப் பட்டது. அவர்கள் அந்த வேலைகளை செய்யாவிட்டால் வேறு யார் அதைச் செய்வது என்று.

  தந்தை பெரியாரின் பதில் இதுதான்.

  "அந்தத் தொழில்களை நாம் எல்லோரும் (எல்லா இடத்தில் உள்ளவர்களும்) விகிதாச்சாரம் பங்கு போட்டுக் கொண்டு செய்ய வேண்டும்."

  எனது பதிலும் இதுதான் !

  ReplyDelete
 8. சங்கர்26 February 2015 at 14:50

  அவரவர் தர்மங்களைக் கடைபிடிப்பதன் மூலம் இறப்பிற்குப் பின்&அடுத்த பிறவியில் தான் பலன்கள் வரும்.(இறப்பிற்கு பின்,சொர்க்கம்,நரகமென்ற தத்துவங்கள்,நம்பிக்கைகள் இஸ்லாம், கிறிஸ்துவம் etc.,போன்ற பிற மதங்களும் கொண்டுள்ளன.ஆகவே இதை நம்பவில்லையென்றால் அது உங்கள் விருப்பம்& உரிமை.ஆனால் குறை கூறுவது, விமர்சிப்பதென்றால் குரான்,நபிகள்,பைபிள், ஏசுநாதர் போன்றவர்களையும், போன்றவைகளையும் குறை கூறுங்கள்,விமர்சியுங்கள் பார்ப்போம்!).முனபு சாதிக்கோபுரத்துக்கு வெளியிலிருந்தவர்களென்றால் 4வது வருணத்திற்கு வெளியிலுள்ள 5வது வருணமாகும்.இன்றும் பெரும்பாலும் அந்தத் தொழில்களை அவர்கள்தான் செய்கிறார்கள்,4வது வருணத்தவர்களல்ல!.அந்தத் தொழில்களை நாம் எல்லோரும்(எல்லா இடத்தில் உள்ளவர்களும்) விகிதாச்சாரம் பங்கு போட்டுக் கொண்டு செய்ய வேண்டும் என்பது சரியான வாதம் தான்,ஆனால் அதைச் சொன்ன பெரியார் அந்தத் தொழில்களைச் செய்து பிறருக்கு முன்னுதாரணமாக இருந்து விட்டு பிறகு பிறரை விகிதாச்சாரப்படி பங்கு போட்டுக்கச் சொல்லியிருந்தால் அவர் நேர்மையை மதிக்கலாம்.குறைந்தபட்சம் மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் அவலத்தை எதிர்த்து எந்தப் போராட்டமும் செய்யாத உத்தமர்தான் பெரியார்!. அவர்தான் அப்படி போகட்டும் நீங்களும்,சுபவீயும் அதைச் செய்து தொடங்கி வையுங்களேன் பிறகு பிறரை விகிதாச்சாரப்படி பங்கு போட்டுக்கச் சொல்லுங்களேன்!.

  ReplyDelete
  Replies
  1. கணேஷ்வேல் மணிகாந்தி27 February 2015 at 17:12

   அவரவர் தருமமா?

   மற்றொருவர்க்கு இதுதான் உன் தருமம்  என நிர்ணயிக்க நீங்கள் யார்?

   நான்காது வருணத்தில் இருப்பவரைக் காட்டிலும் முதல் வருணத்திலிருப்பவர் உயர்ந்தவர் என எழுதி வைப்பதற்கு நீங்கள் யார்?

   நான்காவது வருணத்திலிருப்பவரின் உழைப்பைத் திருடி முதல் வருணத்திலிருப்பவர் வயிறு வளர்க்கலாம் என எழுதி வைப்பதற்கு நீங்கள் யார்?

   சொர்க்கம், நரகம் பற்றி பேசும் மற்ற மதங்களனைத்தும், அம்மதத்து மக்களை பிறப்பின் அடிப்படையில் பிரித்தா வைத்திருக்கிறது?

   இஸ்லாமும், கிறித்தவமும் அம்மத நூல்களை படிக்கக்கூடாது என்றும்,
   வேதத்தைக் காதால் கேட்டால்  காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டுமென்றா சொல்கிறார்கள்?

   மற்ற மதங்களின் கடவுள்கள், அம்மதத்து மனிதர்களை நான்கு வருணமாகவும் நான்காயிம் சாதியாகவுமா பிரித்து வைத்திருக்கிறார்கள்?

   மற்ற மதங்களில் பெண்களை இழிவு படுத்தி 'அவர்கள் மனது நிலையற்றது' என்று எழுதியா வைத்திருக்கிறார்கள்?

   மற்ற மதங்கள், அவர்கள் மதத்தில் உள்ள மக்கள் அவர்களின் வழிபாட்டுத் தளத்துக்கு வந்தால் தீட்டு என்றா சொல்கிறார்கள்?

   மற்ற மதங்கள், விலங்குகளைக் கூடத் தீண்டலாம் சொந்த சகோதரர்களைத் தீண்டக்கூடாது என்றா சொல்கிறார்கள்?

   இவையனைத்தையும் செய்யும் மதம் எதுவோ, அதை எதிர்ப்பதுதானே இயற்கை? அதை எதிர்ப்பதுதானே மனிதத்தன்மையுயை ஒவ்வொருவரின் கடமை!

   இருக்கும் நான்கு வருணங்களும் போதாமல் ஐந்தாவது வருணம், ஆறாவது வருணம் என, எம்மதம் தன் சொந்த மக்களையே கூறுபோடுகிறதோ, அம்மதத்தை  எதிர்ப்பதுதானே இயற்கை? அதை எதிர்ப்பதுதானே மனிதத்தன்மையுயை ஒவ்வொருவரின் கடமை!

   கடைசியாக "நீங்கள் அந்த வேலையைச் செய்து தொடங்கி வையுங்கள்" எனச் சொல்கிறீர்கள்.

   இன்னும் உச்சாணியை விட்டு இறங்க மறுக்கிறீர்களே, அனைவரும் சமம் என நமது அரசியல் சட்டம் சொல்கிறது. என்னை விட நீங்கள் எந்த விதத்தில் உயர்ந்தவர்?

   'இந்த' பொறுப்பை நீங்களும் நானும் சேர்ந்தே எடுத்துக்கொள்ளலாமே?

   அதே போல, கோயிலில் மணி அடிக்கும் வேலையையும் நானும் நீங்களும் சேர்ந்தே பார்க்கலாமா?


   குறிப்பு:
   ---------------
   "நீங்கள்" என்றால் நீங்களல்ல. யாரெல்லாம் உயர்ந்தவர்கள் என்று கூறிக் கொள்கிறார்களோ "அவர்கள்".

   'நான்' என்றால் நானுமல்ல. யாரெல்லாம் தாழ்ந்தவர்கள் எனக் குறிக்கப்படுகிறார்களோ "அவர்கள்".

   Delete