தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday 19 February 2015

திராவிடமா, தமிழ்த் தேசியமா? ஓர் அரிய செய்தி!


16.02.2015 அன்று நடைபெற்ற விவாதத்தில் பல செய்திகள் பரிமாறப் பட்டுள்ளன. தவறான செய்திகள் மக்களைச் சென்றடைந்து  விடக் கூடாது என்னும் நோக்கில் கீழ்க்காணும் விளக்கம் தரப்படுகிறது.

தோழர் மணியரசன் தன் உரையில், "அயோத்திதாசரிடம் பின்னாளில் மாற்றம் வந்தது. சென்சஸ் கணக்கு எடுப்பின் போது, 'எங்களைச் சாதியற்ற தமிழர் என்று குறியுங்கள்' என்று மனுப் போட்டார். திராவிடர்ன்னு சொல்லலை" என்று குறிப்பிட்டுள்ளார். 


நண்பர் வாலாசா வல்லவன் அந்தச் செய்தியில் பிழை உள்ளது என்று உறுதிபடக் கூறினார். உடனே, ஞான அல்லோசியஸ் தொகுத்துள்ள அயோத்திதாசர் சிந்தனைகள் இரண்டு தொகுதிகளையும் மீண்டும் எடுத்துப் படித்தபோது,வல்லவன் சொல்லியதே சரி என்பது உறுதியானது. இறுதிவரையில் அவர் திராவிடர் என்னும் சொல்லையே மிகப்  பலவிடங்களில் பயன்படுத்தியுள்ளார். மணியரசன் குறிப்பிடும் மனு, முதல் தொகுதியில் 307-08 ஆம் பக்கங்களில் இடம் பெற்றுள்ளது.அவ்வரிகள் அப்படியே கீழே தரப்படுகின்றன:

 "இத்தேசப் பூர்வ சரித்திரங்களைக் கொண்டும், இத்தேசப் பூர்வ சரித்திரங்களின் ஆதாரங்களைக் கொண்டும், பூர்வ குடிகளை சாதி பேதமுள்ள இந்துக்களினின்று பிரித்து, சாதி பேதமற்ற திராவிடர்கள் என்றே எழுதும்படியான உத்திரவளிக்க வேண்டுகிறோம்."


 இம்மனு 1910 டிசம்பர் 14 அன்று எழுதபட்டுள்ளது. அயோத்திதாசரின் இறுதி ஆண்டுகளான 1913,14 ஆகியவற்றிலும் பல இடங்களில் அவர் திராவிடர் என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளார்.

15 comments:

  1. கணேஷ்வேல் மணிகாந்தி19 February 2015 at 13:30

    நன்றி அய்யா ! உண்மையிலேயே இது மிக அதிர்ச்சியான தகவல்.

    திராவிடத்துக்கு எதிராக தமிழ் தேசியவாதிகள் எதை வேண்டுமானாலும் திரித்து கூறுவார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

    திரு பெ.மணியரசன் அவர்கள் எதற்காக இப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை, அதுவும் சுபவீ அய்யா முன்னிலையில்.

    "தமிழ்" என்ற போர்வையில் எதைச் சொன்னாலும் தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நினைத்துவிட்டார் போலும்.

    ஆனால் என்னசெய்வது, "எதையும் ஆராய்ந்து பார்க்காமல் ஏற்றுக் கொள்ளாதே" என கற்றுக்கொடுத்த திராவிட இயக்கத்துக்கு எதிராகவே இப்படி ஒரு கருத்தை 'திரித்து' தெரிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் தமிழ் தேசியவாதிகள்.

    ReplyDelete
  2. திராவிட எதிர்ப்புக்கு பின்னால் இருப்பது தலித் எதிர்ப்பா ??


    1881 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது
    -----------------------------------------------------------------
    தீண்டத்தகாதவர்கள் தங்களை "சாதியில்லா திராவிடர்கள் " என பதிவு செய்து கொள்ளும்படி அயோத்தி தாச பண்டிதர் அறிவிப்பு செய்கிறார்.

    1885
    -------
    அயோத்தி தாச பண்டிதர், ஜான் ரத்தினம் அவர்களோடு இணைந்து "திராவிட பாண்டியன்" என்ற இதழை தொடங்குகிறார்.

    1891
    ------
    அயோத்தி தாச பண்டிதர் திராவிட மகாஜன சபையை நிறுவுகிறார்.

    1892
    ------
    ஜான் ரத்தினம் திராவிட கழகம் தொடங்குகிறார் .

    1893
    ------
    இரட்டைமலை சீனிவாசன் 1891 ஆம் ஆண்டு தொடங்கிய பறையர் மகா ஜன சபை , 1893 ஆம் ஆண்டு ஆதி திராவிட மகா ஜன சபை என பெயர் மாற்றப்படுகிறது

    1944
    --------
    அதன் பிறகு தான் 1944 ஆம் ஆண்டு தந்தை பெரியார் திராவிடர் கழகம் தொடங்கினார் .

    திராவிட அரசியலை எதிர்க்கிறோம் என்ற பெயரில் திராவிடர் என்கிற அந்த சொல்லின் மீது சிலருக்கு ஏற்பட்டு இருக்கும் வெறுப்புணர்வுக்கு காரணம் , திராவிட / திராவிடர் என்ற சொல்லை இயக்க ரீதியாக முன்னெடுத்ததும் , தங்களை அடையாளபடுத்திகொள்ளவும் தலித்களே முதலில் முன்வந்தவர்கள் என்பது கூட ஒரு முக்கிய காரணமாக இருக்குமா ??

    - அ.அசோக் தமிழன்
    21/05/2014

    ReplyDelete
    Replies
    1. கணேஷ்வேல் மணிகாந்தி19 February 2015 at 19:48

      அருமை அசோக் ! உரத்த சிந்தனை !

      பெரியாரை எதிர்ப்பவர்கள் அனைவரும் போய்ச் சேருமிடம் பார்ப்பனியமே !

      தமிழ் தேசியவாதிகள் என்று கூறிக்கொள்பவர்கள் 'சாதி ஒழிப்பு' பரப்புரையைச் செய்தது போல தெரியவே இல்லையே !

      Delete
  3. இன்றைய தேவை எது? திராவிடமா? தமிழ் தேசியமா? என்ற அன்றைய விவாதத்தில் , திராவிடம் என்பது ஆரியத்தின் எதிர்ச் சொல்லே தவிர, என்றைக்கும் தமிழ் தேசியத்திற்கு எதிரானது அல்ல தமிழ்த் தேசியத்தை உள்ளடக்கியதுதான் திராவிடம். சாதியம் இல்லாத தமிழ்த் தேசியமே திராவிடம். திராவிடம் என்றைக்கும் தமிழ்த் தேசியத்தை வெறுத்ததில்லை. ஆனால் ஒருதலைக் காதல் போல், ஒரு தலை மோதலாக தமிழ்த் தேசியவாதிகள் தான் திராவிடத்தை வெறுக்கவும், வேரறுக்கவும் நினைக்கிறார்கள். என்று சுபவீ மிகத் தெளிவாக விளக்கினார். அதன்பின்னும் தோழர் மனியரசன் தான் தவறான தகவல்களை முன்னிறுத்தி பேசினார். சாதாரணமாக எல்லோராலும் சரிபார்க்க முடியாத அயோத்திதாசரின் நிலை பற்றி எவ்வளவு கொச்சையாகவும் தவறாகவும் விவாதித்துள்ளார் என்பதையும் விளக்கியுள்ள சுபவீ அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  4. சிவகுருநாதன்22 February 2015 at 22:46

    1.பெரியாரைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்ளும் திராவிட இயக்கங்களும்,அவ்வாறு சொல்லாத பிற தமிழ் தேசிய இயக்கங்களும் இங்கு முரட்டுத்தனமான திராவிட இன வெறி,தமிழ் மொழி வெறி,தமிழின வெறிகளை உற்பத்தி செய்வதோடு அதனூடாக சாதி வெறியையும் வளர்த்தெடுக்கின்றன.பரமக்குடி தலித்கள் படுகொலையை இவர்கள் எதிர்கொண்ட முறை சாதிவெறித்தனத்திற்கு தகுந்த சாட்சியாகும்.பல மாதங்களாக நீளும் கூடங்குளம் பகுதி மக்களின் வாழ்வாதாரப் போராட்டமான அணு உலை எதிர்ப்பை, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை, காவிரிப் பிரச்சினை பின்னுக்கு தள்ளிய அரசியல்,பொருளாதார, சமூகக் காரணிகளை நாம் விளங்கிக் கொண்டேயாக வேண்டும்.மக்களை ஒன்று திரட்டுவதற்கும் போராடுவதற்கும் இன்று மென்மையான இலக்கு(soft target) ஒன்று தேவைப்படுகிறது.அதற்கு மொழி,இன உணர்வுகள் மிகவும் வசதியாக உள்ளது.உள்ளூர் தமிழன் அடிப்பட்டு சாகும்போது வாய் மூடி மெளனியாய் இருந்து விட்டு அயலகத் தமிழர்களின் பிரச்சினைகளை மட்டும் ஆரவாரத்தோடு எதிர் கொள்வதை இந்த உளவியல் அடிப்படையில்தான் அணுக வேண்டியுள்ளது. இங்கொன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பது பற்றியோ உலகளவில் எந்தப் பகுதியில் தமிழர்கள் பாதிக்கப்படும் போது அவர்கள் சார்பாக பேசுவதையோ நாம் எதிக்கவில்லை,ஆனால் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பியக்கம்,இருளர் இனப் பெண்கள் 4 பேரில் போலீஸ் அதிகாரிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுதல்,பரமக்குடியில் சுடுபட்டு,அடிபட்டு இறந்த காயம்பட்ட தலித் மக்கள், தர்மபுரி கலவரம்,மாமல்லபுரம் கலவரம் போன்ற எவற்றிற்கும் கிளர்ந்தெழாத மொழி,இன உணர்வு முல்லைப் பெரியாறு,ஈழப் பிரச்சினையில் மட்டும் பீறிட்டு கிளம்பும்போதுதான் பொதுவாக அய்யம் வருகிறது;கூடவே சில கேள்விகளும் எழுகிறது. கூடங்குளத்தில் தங்களது வாழ்வுரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மீனவ மற்றும் தலித் மக்கள்,பரமக்குடியில் சுடுபட்டு,அடிபட்டு இறந்த காயம்பட்ட தலித் மக்கள்,பாலியல் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்ட 4 இருளர் இனப்பெண்கள்,தர்மபுரி கலவரம்,மாமல்லபுரம் கலவரம் போன்றவற்றில் பாதிக்கப்பட்ட தலித்துகள் என நாள்தோறும் வதைபடும் ஆயிரக்கணக்கானோர் தமிழர்களா அல்லது வேற்று மொழியினரா, திராவடர்களா அல்லது வேற்று இனத்தவரா என கேள்வி எழுவது இயல்பானது.அவைகளைச் செய்வோரோடு அரசியல் கூட்டு சேர்ந்த,சேரத் துடிக்கும் திராவிடக் கட்சிகள் மற்றும் தேசியக் கட்சிகளின் செயல் விசித்தரமாகவும், கேவலமாகவுமுள்ளது.
    மொழி–இன வெறியைத் தூண்டி விடுவதில் நமது சினிமாக்காரர்களின் பங்கும் கணிசமானது.‘ஆயிரத்தில் ஒருவனி’ல் செல்வராகவன் fantasy-தனமாக செய்த சில பிரதியெடுத்தல்களை விரிவாக்கியவர் ‘ஏழாம் அறிவு’ ஏ.ஆர். முருகதாஸ். இதற்குப் போட்டியாக செந்தமிழனின் ‘பாலை’யும் களத்தில் இறங்கியிருக்கியது.இவையனைத்தும் பாமரத்தனமான இன–மொழி வெறியை அடிப்படையாகக் கொண்டு காசு பண்ணுவதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டவை. இவர்களின் போலியான இன–மொழிவாதப் போக்கிற்கு தமிழ் தேசிய இயக்கங்களும்,திராவிட இயக்கங்களும், தமிழ் ஆர்வலர்கள் என்று சொல்லிக் கொள்கிற ஒரு கூட்டம் பேராதரவு நல்குகிறது.

    ReplyDelete
  5. சிவகுருநாதன்22 February 2015 at 22:48

    2.டேம் 999 என்ற திரைப்படம், கேரளத்தவர்களின் பரப்புரை போன்றவற்றால் மட்டுமே ஒரு அணைக்குப் பாதிப்பு வந்து விடும் என்று அப்பாவி பொதுமக்களை நம்ப வைத்து வீணான போராட்டத்திற்கு சில இயக்கங்களும் அரசும் தூண்டியுள்ளது.அணை பலவீனமாக இருக்கிறது என்று கேரள அரசு சொல்கின்ற காரணத்தால் மட்டுமே உச்சநீதி மன்றம் அணையை உடன் உடைக்கவும், புதிய அணை கட்டவும் அனுமதி அளிக்கப் போவதில்லை. இந்த பிரச்சாரத்தால் கேரள மக்களும் திரண்டு வந்து அணையை உடைத்து விடப் போவதில்லை.பிறகு ஏனிந்த பதட்டம் உருவாக்கப்படுகிறது? முழுக்க முழுக்க அரசியற் காரணங்களுக்காகவே இன்று இப்பிரச்சினை எழுப்பப்படுகிறது.தமிழகத்தில் திராவிட கட்சிகளும், தமிழ் தேசிய இயக்கங்களும் மொழி – இன வெறியைத் தூண்டி கேரளத்தவர்களின் வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். கேரளாவிற்குச் செல்லும் 13 வழிகளை அடைக்கிறார்கள்.காய்கறி,முட்டை,மீன், இறைச்சி போன்றவற்றை அனுப்பாமல் ஒரு பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும் என்று கூவுகிறார்கள்.எத்தனை நாட்களுக்கு அனுப்பாமல் இருப்பார்கள்? வியாபாரம் நடக்க வேண்டுமல்லவா? தமிழப்பெருமிதமும்,மொழி – இன வெறியும் எவ்வளவு நாட்களுக்கு தாக்குப்பிடித்தது என்பது வெள்ளிமடை. இதே போல ஒரு சூழ்நிலை கேரளாவிலும் ஏற்படுத்தப்பட்டு எல்லையோர கிராமங்களில் தமிழர்கள் மீது தாக்குதல்,சபரிமலை செல்வோர் மீது தாக்குதல் என பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.கேரள காவல்துறையும் தமிழகக் காவல்துறையைப் போன்று இச்சம்பவங்களை வேடிக்கை பார்க்கிறது. ஒப்பீட்டளவில் தமிழகத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் அதிகம் என்றே படுகிறது.இந்திரா காந்தி படுகொலையின் போது தில்லியில் சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட கொடிய வன்முறைகள்,ராஜுவ் காந்தி படுகொலையின் போது கர்நாடகம் போன்ற பிற மாநிலங்களில் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் போன்றவற்றைச் செய்த சமூக விரோதிகளுக்கும் இவர்களுக்கும் ஏதேனும் வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.மொழி – இனப் பெருமிதங்கள் வன்முறையை நோக்கித்தான் செல்லும் என்பது பாலபாடம்.சிங்கள இனவெறியை குறைசொல்லும் அருகதை சீமான்,சுபவீ போன்ற தமிழ்,திராவிட இன வெறியர்களுக்கு கிடையாது.

    ReplyDelete
    Replies
    1. கணேஷ்வேல் மணிகாந்தி24 February 2015 at 11:52

      நண்பா் சிவகுருநாதன் அவர்களே,

      திராவிட உணர்வின் மீதும், தமிழ் உணர்வின் மீதும் ஏன் உங்களுக்கு இவ்வளவு வெறுப்பு? நீங்கள் எதையாவது இழந்து விட்டீர்களா அவ்வுணர்வுகளால் ?

      இதைத்தான் சுபவீ அய்யா அன்றே, அம்மேடையிலேயே மணியரசன் அய்யாவிடம் சொன்னார் - திராவிடத்துக்கு எதிராக பேசுவதாக நினைத்து, நமது பொது எதிரியைத் தப்பவிட்டுவிடாதீர்கள் என்று. அதுதான் இப்போது நடைபெறுகிறது போலத் தோன்றுகிறது.

      நீங்கள் பழித்துப் பேசும் அந்த 'திராவிட' உணர்வால்தான் நாங்கள் இன்று மனிதர்களாக நடமாட முடிகிறது.

      "மனிதரில் நீயும் ஓர் மனிதன்!
      மண் அல்லன்! விழித்துக் கொள்! நன்றாக எண்ணிப்பார்!
      தோளை உயர்த்து! ஒளிமுகம் தூக்கு! மீசையை முறுக்கி மேலே ஏற்று! விழித்துப் பார்க்கும் உன் பார்வையாலேயே உலகுக்கு ஒளிசெய்!
      உரக்கச் சிரி! உலகத்தை நடத்து!"

      என்ற புரட்சி கவிஞா் பாரதிதாசனின் வரிகளுக்கேற்ப, எங்களை மனிதரில் ஓர் மனிதனாக மாற்றிய உணர்வுதான் திராவிட உணர்வு, அதை ஊட்டிய இயக்கம்தான் திராவிட இயக்கம்.

      தங்களின் ஆதங்கம் புரிகிறது, 2000 வருடங்களாக அடிமைப்பட்டுக் கிடந்தவர்கள், இப்படி ஒரு நூற்றாண்டுக்குள் விழித்துக் கொண்டார்களே என்று.
      அதனால்தான், அதற்கு காரணமான திராவிட உணர்வை, 'திராவிட வெறி' என கூறுகிறீர்கள்.

      உங்கள் பார்வையில் அது திராவிட 'வெறி', எங்கள் பார்வையில் அது 'திராவிட உணர்வு'.

      உங்கள் பார்வையில் அது தமிழ் 'வெறி', எங்கள் பார்வையில் அது 'தமிழ் உணர்வு'.

      தங்களின் இந்த 'தூற்றுதலே', நாங்கள் சரியான பாதையில்தான் செல்கிறோம் என்பதை உறுதிப்படுத்துகிறது.

      Delete
  6. வெங்கட்25 February 2015 at 23:31

    உணர்வு என்பது தன்னுடைய மொழி,இனத்தின் மேன்மைகளைச் சொல்வது,அதை நினைத்து பெறுமை அடைவது ஆகும்.அதுவே பிற இனத்தை,மொழியைத் தூற்றும் பொழுது அது வெறி ஆகிறது.ஆகவே தமிழ் நாட்டில் உங்களுக்கெல்லாம்(திராவிட இயக்கங்களுக்கு) உள்ளது நிச்சயமாக இன,மொழி உணர்வைத் தாண்டிய திராவிடப் பேரினவாத இனவெறி என்பதில் உங்களுக்கே சந்தேகம் இருக்க முடியாது.சிங்களப் பேரினவாத இனவெறிக்கு சளைத்தது அல்ல தமிழகத்தில் திராவிட இயக்கங்களுக்கு உள்ள திராவிடப் பேரினவாத இனவெறி.

    ReplyDelete
    Replies
    1. கணேஷ்வேல் மணிகாந்தி27 February 2015 at 14:17

      திராவிடப் பேரினவாதமா?

      உங்களுக்கே சிரிப்பாக இல்லையா இதைக்கூறிய பிறகு? எள்ளளவு கூட வரலாறு தெரியாதவர்களின் கூற்று இது. வரலாறு தெரிந்தும், இவ்வாறு கூறுவது வரலாற்றைத் திரிக்கும் செயலேயன்றி வேறில்லை.

      2000 வருட ஆரிய, பார்ப்பனியத்தின் பேரினவாதத்தை உடைத்து தகா்த்தெரிந்த இயக்கம்தான் திராவிட இயக்கம்.

      திராவிட இயக்கம் என்றாலே 'சமூக நீதி' இயக்கம்தான்.

      பேரினவாதம் என்றால் என்ன எனத் தெரிந்து கொள்ள கீழே படியுங்கள் !

      ---------------------------------------------------------------------

      சென்னைப் பல்கலைக்கழகத்தில் 'தமிழ்' படிக்க 'சமற்கிருதத்தை' தகுதியாக வைத்ததுதான் பேரினவாதம்.

      பெண்கள் தேர்தலில் வாக்களிப்பதையும், போட்டியிடுவதையும் நூறாண்டுகளுக்கு முன் வரை தடுத்து வைத்திருந்ததுதான் பேரினவாதம்.

      மருத்துவக் கல்லூரிப் பட்டப் படிப்பில் சேர 'சமற்கிருதம்' தெரிய வேண்டும் என்று வைத்திருந்ததுதான் பேரினவாதம்.

      கோயில்களின் வருமானத்தை குடும்பத்தோடு கொள்ளை அடித்து வந்ததுதான் பேரினவாதம்.

      பார்ப்பனர் வசிக்கும் தெருவில் மற்றவர்கள் நுழைய தடை விதித்ததுதான் பேரினவாதம்.

      ஒரத்த நாடு, ராஜமாடம் போன்ற இடங்களில் இருந்த தர்மச் சத்திரங்களில் பார்ப்பனர்களுக்கு மட்டுமே சாப்பாடு என்று வைத்திருந்ததுதான் பேரினவாதம்.

      1935 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பேருந்துகளில் “பஞ்சமருக்கு இடமில்லை” என்று எழுதியதோடு டிக்கெட்டுகளிலும் அவ்வாறே அச்சிட்டு இருந்ததுதான் பேரினவாதம்.

      குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை கோவில்களுக்கு பொட்டுக்கட்டி தேவதாசிகளாக வைத்திருந்ததுதான் பேரினவாதம்.

      தேவதாசி ஒழிப்பு மசோதாவை கொண்டுவந்த போது, அதை சத்தியமூர்த்தி அய்யர் போன்ற பெரிய பார்ப்பனத் தலைவர்கள் எதிரத்ததுதான் பேரினவாதம்.

      தேவதாசி மசோதா வந்தபோது சட்டத்தை மீறினாலும் மீறுவேனே தவிர சாத்திரத்தை மீற மாட்டேன் என்று கூறி அந்த மசோதாவை எதிர்த்து தேவதாசி முறையை ஆதரித்துப் சத்தியமூர்த்தி அய்யர் பேசியதுதான் பேரினவாதம்.

      மணிப்பிரவாள நடையைப் புகுத்தி, தமிழ் மொழியை அழிக்க முயன்றதுதான் பேரினவாதம்.

      தமிழ் நாட்டில் வாழ்ந்துகொண்டு, தாம் பார்ப்பனர் என்பதால் சமற்கிருதமே உயர்ந்த தென்று கூறித் தமிழைப் பழிக்கும் செயலைச் செய்வதுதான் பேரினவாதம்.

      சொந்த சகோதரர்களை நான்கு வருணமாகவும், நான்காயிரம் சாதிகளாகவும் பிரித்து வைத்து அவர்களுக்குள் ஏற்றத்தாழ்ழைக் கற்பித்ததுதான் பேரினவாதம்.

      ---------------------------------------------------------------------

      இவையனைத்தையும் திராவிட இயக்கமா செய்தது?

      இவையனைத்தையும் செய்த ஆரிய பாரப்பனியத்தை எதிர்த்து போரிட்டு, சமூக நீதியை நிலைநிறுத்திய இயக்கமன்றோ அது!

      அதனால்தான் தங்களுக்கு திராவிட இயக்கத்தின் மீது இவ்வளவு தீராத வெறுப்போ?

      Delete
    2. வெங்கட்28 February 2015 at 00:55

      15% தமிழர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்ற சிங்களப் பேரினவாதப் பேர்வழிகள் குறைப்பதைப் போலவே நீங்களும் குறைக்க வேண்டாம்.2000 வருட கதையைப் பேசி தப்பிக்க வேண்டாம்.இன்று தமிழகத்திலிருப்பது நிச்சயமாக திராவிடப் பேரினவாதம் தான்,ஆரியப் பேரினவாதமல்ல!. அதுவும் இன்றுள்ள அரசியல் சாசனச் சட்டத்தின் பேரில் உறுதிமொழி எடுத்துக் கொண்டு(திராவிட இனவெறி சாசனச் சட்டத்தின் பேரிலல்ல!)இது போல பேசுவது,நடப்பது வெட்கக் கேடானது.திராவிட இனவெறி பாசிஸ்டுகளிடம் நாகரிகத்தை என்றுமே எதிர்பார்க்க முடியாது.சென்னை மருத்துவக் கல்லூரியில் 1930ல் முதல் வெள்ளையரல்லாத முதல் இந்திய முதல்வராக இருந்தது லெட்சுமணசாமி முதலியார் இருந்தார்,மருத்துவத்துறைத் தலைவராக குருசாமி முதலியார் இருந்தார் ஆரியர்களல்ல!(சந்தேகமிருந்தால் நீங்களே அங்கு போய் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்).பெண்கள் தேர்தலில் வாக்களிப்பதையும்,போட்டியிடுவதையும் நூறாண்டுகளுக்கு முன் வரை இங்குமட்டுமள்ள அமெரிக்கா& ஐரோப்பாவிலும் தடுத்து வைத்திருந்தார்கள் அன்றுள்ள உலக நிலை அப்படி,என்னமோ இங்கு மட்டும் இருந்தது போல அதையும் இனவாத அரசியலாக்க வேண்டாம். அரசாங்கத்துக்கு வரவேண்டிய லட்சங்கோடிகள் வருமானத்தை குடும்பத்தோடு கொள்ளை அடித்துதான் திராவிடப் பேரினவாதம்.இன்றும் (50,100,2000 வருடங்களுக்கு முன் அல்ல) பேருந்துகளில், பேருந்து நிறுத்தங்களில் பெண்களைக் கேவலமாகப் பேசும்,பெண்கள் உடலைச் சீண்டும் சாதாரண திராவிடன் முதல் பெண்களைப் போகப் பொருளாக வைத்திருக்கும் முதலமைச்சர் திராவிடன் வரை நீங்களெல்லாம் எந்த வகையைச் சார்ந்தவர்கள்,அதற்கு உங்கள் பதிலென்ன? இன்றிருக்கும் இக்கேவலத்தைக் கேலி செய்து விட்டு,ஒழிக்க முயன்று விட்டு 50,100வருட பழைய,ஒழிக்கப் பட்ட தேவதாசிக் கதையைப் பேசுங்கள்.பஞ்சமருக்கு இடமில்லை என்று 80%மக்கள் கூறினார்கள் அல்லது குறைந்தபட்சம் அதை எதிர்க்கவில்லை இல்லையென்றால் அதுபோன்ற நிலைமை அன்று இருந்திருக்காது!.அவ்வளவு ஏன் இன்றும் இரட்டைக் குவளை முதல் தர்மபுரி கலவரம் செய்பவர்கள் யார்?ஆரியர்களா?.சரி ஆரியர்கள் தான் நான்கு வருணமாகவும், நான்காயிரம் சாதிகளாகவும் பிரித்து வைத்து அவர்களுக்குள் ஏற்றத்தாழ்ழைவுகளைக் கற்பித்ததுதார்கள்,அதை ஏன் ஏற்றுக் கொண்டீர்கள்?ஆரியர்கள் சோற்றுக்குப் பதில் மண்ணை உண்ணச் சொன்னால் உண்பீர்களா?. அப்படிச் செய்தால் உங்கள் மண்டைக்குள்ளிருப்பது மூளையா அல்லது களி மண்ணா ஆரியர்கள் சொன்னதையெல்லாம் ஏற்றுக்கொள்ள?. அன்று உங்களுக்கும் இனித்தது,சௌகரியமாக இருந்ததது, உபயோகமாக இருந்ததது அதனால் தான் ஏற்றுக் கொண்டீர்கள், அனுபவித்தீர்கள்! ஆரியர்கள் சொன்னார்களென்பதற்காக அல்ல!Don't be a silly,shameful HYPOCRITE!. கஸ்மாலம், நைனா, கியாரா இருக்கு என்ற சென்னைத் திராவிடத் தமிழைவிட,பாதிEnglish பாதி தமிழ் என்ற Tamglishயை விட ஒன்றும் கேவலமானதல்ல மணிப்பிரவாள நடை!. தமிழைப் பழிப்பதாக இருந்தால் அதை தாய் மொழி என்று கூறியிருக்க மாட்டார்கள!. உ.வே.சாவை விடவா நீங்கெல்லாம் தமிழுக்கு கிழித்து விட்டீர்கள்?.உங்களைப் போல மொழியை வைத்துக் கேவல அரசியல் ஆதாயப் பிழைப்பு பிழைக்கத் தெரியாதவர்கள் நாங்கள்!.

      Delete
    3. திரு வெங்கட்டின் கடிதத்தைப் படிக்கும்போது, அதில் எவ்வளவு கோபம் படிந்து கிடக்கிறது என்பதை எவராலும் புரிந்து கொள்ள முடியும். அதற்கு என்ன காரணம்? கடிதத்தின் இறுதி வரியில் விடை உள்ளது. திராவிடர்களைப் பற்றிக் கடுமையாக எழுதும் அவர், இறுதியில், "உங்களைப் போல் மொழியை வைத்துப் பிழைக்கத் தெரியாதவர்கள் நாங்கள்" என்கிறார். தான் ஒரு பார்ப்பனர் என்பதை இதனை விடத் தெளிவாக எப்படிக் கூற முடியும்? பார்ப்பனர்கள் நம் மீது கோபப்படத்தானே செய்வார்கள்! அவர்களின் தரக்குறைவான இந்தக் கோபம் நாம் சரியாக இருக்கிறோம் என்பதற்கான சான்று அல்லவா! ஆரிய திராவிடப் போரின் தொடக்கம் புத்தர் என்றால், தொடர்ச்சி பெரியார்தானே! அது இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பதற்கான அடையாளம்தான் இம்மடல். நன்றி வெங்கட்

      Delete
  7. முடியரசன்3 March 2015 at 13:55

    புத்தர் தோற்றுவித்த பௌத்தம் சிங்கள இலங்கையில் தமிழர்களை வாழவிடாமல் அட்டுழியங்கள் பல செய்து கொண்டுள்ளது.இங்கு பெரியார் பரப்பிய திராவிடம் தமிழகத்தில் அப்பணியை செவ்வனே செய்து கொண்டுள்ளது!.அதனால் தான் தமிழர்களை வாழவிடாமல் ஒழித்த பெளத்தத்தைத் தோற்றுவித்த புத்தரின் தொடர்ச்சி பெரியார் என்று புகழ்ந்து அகமகிழ்கிறார் சுபவீ!.தமிழர்களின் வீழ்ச்சி,துயரம் சிங்கள,புத்த பௌத்தத்திற்கும்,பெரியார் திராவிடத்திற்கும் என்றுமே மகிழ்ச்சிதான்.

    ReplyDelete
    Replies
    1. கணேஷ்வேல் மணிகாந்தி4 March 2015 at 13:18

      பௌத்தம் என்றால் என்ன, அது எதற்காகத் தோன்றியது எனத் தெரியாதவர்களின் கூற்று இது.

      பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மைக்கு எதிராகவும், விகாரமான சடங்குகளுக்கு எதிராகவும், 25 நூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றியது புத்த மதம்.

      இந்திய வரலாறு என்பது பிராமணியத்துக்கும் பௌத்தத்துக்கும் இடையிலான யுத்தங்களின் வரலாறே ஆகும்.
      2500 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் யாரை எதிர்த்துப் போரிட்டாரோ அவர்களையே தந்தை பெரியார் தன் காலத்தில் எதிர்க்கவேண்டிவந்தது.

      வரலாற்றுப் பார்வையில் புத்தர் ஒரு திராவிடர். அவருடைய தாய்மொழி பாலி. அம்மொழி திராவிடமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது.

      அவர் திராவிடர் என்பதாலேயே, பார்ப்பனர்களும், பார்ப்பன அடிவருடிகளும் இன்றுவரை அவரையும், அவர் வழித்தோன்றிய பௌத்தத்தையும் கடுமையாக எதிர்க்கின்றனர்.

      இன்று இலங்ககையில் சிங்களர்கள் பின்பற்றுவது "நாகர்ஜூனன் என்னும் பார்ப்பனரால் கூறப்பட்ட மஹாயானம் என்னும் போலிப் பௌத்தமே, இதை நாகராஜூனவாதம் என்றுதான் கூற வேண்டும்". அதனால்தான் ராஜபக்சேவும், மற்ற இலங்கை அமைச்சர்களும் 'திருப்பதி பெருமாளை' தரிசிக்க இங்கே வருகிறார்கள். இப்போது புரிகிறதா இலங்கை பௌத்தர்களின் பார்ப்பனியப் பாசம்.

      தமிழகத் தமிழர்களை 2000 ஆண்டுகளாக அடிமைப்படுத்தி வாழவிடாமல் செய்தது அசல் பார்ப்பனியம் என்றால், ஈழத் தமிழர்களை கடந்த 100 ஆண்டுகளாக அடிமைப்படுத்தி வாழவிடாமல் செய்தது 'நாகர்ஜூனன் என்னும் பார்ப்பனரால் கூறப்பட்ட மஹாயானம்'.

      பார்ப்பனியத்தை வேறுடன் அழிக்கும் நாள் தொலைவிலில்லை!

      Delete
    2. முடியரசன்7 March 2015 at 01:15

      நீங்களும் சுபவீ போல அக்கப்போர் வாதம் செய்கிறார்கள்.இலங்ககையில் மக்கள், ஆட்சியாளர்கள் கடவுளாக வழிபடுவது புத்தரை மட்டும் தான்,நாகர்ஜூனரை அல்ல!.புத்த மதம் இலங்கையில் ஆசோகர் மகன், மகளால்(நாகர்ஜூனருக்கு முன்)பரப்பப்பட்டது. ராஜபக்சேவும்,மற்ற இலங்கை அமைச்சர்களும் 'திருப்பதி பெருமாளை' தரிசிக்க வருவதின் ரகசியம் அங்கு முன்பு புத்த விகார் இருந்ததாக அவர்கள் நம்புவது தான் காரணம்.நாகர்ஜூனரர் திருப்பதியில் வாழ்ந்ததற்காகவும் அல்ல&அவர் அங்கு வாழ்ந்தவரும் அல்ல(குண்டூர்&விதர்பாவைச் சேர்ந்தவர்).பௌத்தத்தை,பௌத்த பிட்சுக்களை இலங்கைத் தமிழர்கள் முழு மூச்சாக எதிர்க்கிறார்கள்.அவர்கள் புத்தரை ஒருபொழுதும் கடவுளாக அல்ல நெறியாளராக,வழிகாட்டியாகக் கூட ஏற்கமாட்டார்கள்.

      Delete
    3. கணேஷ்வேல் மணிகாந்தி9 March 2015 at 21:02

      புத்தரின் மீது எதற்காக இவ்வளவு காழ்ப்புணர்ச்சி நண்பரே? சிங்களர்களை விட்டு விட்டு, புத்தரைத் தாக்குவதில் ஏன் இவ்வளவு குறியாய் இருக்கிறீர்கள் நண்பரே?

      ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவது போல் பேசி, எதிர் இலக்கை சிங்களர்களுக்கு பதிலாக புத்தரை நிறுத்துவதிலேயே தங்களின் சாயம் வெளுத்துவிட்டது.

      பார்ப்பனியம் என்றுமே ஈழத்துக்கு எதிரானது என்பதை தமிழகத்தில் இயங்கி வரும் பார்ப்பனப் பத்திரிகைகளைப் பார்த்தாலே தெரியும். ஆரியமூலத்திலிருந்து வந்த சிங்களவர்களுக்கு ஆதரவாகத்தானே இருக்கும் பார்ப்பனீயம்.

      ஆரிய மதவெறியர்களான சிங்களர்களுக்குக் கிடைத்த முகமூடிதான் புத்தரே தவிர உண்மையிலேயே அவர்கள் பவுத்தர்கள் அல்ல.

      சிங்களர்களின் பவுத்தம் மஹாயான பவுத்தம். அதாவது உண்மையான பவுத்தத்தை ஒழிக்க ஆரியம் ஊடுருவி உருவாக்கிய பவுத்தம். இது இந்துத்துவக் கலவை. ஆரியத்தை ஒழிக்கப் புறப்பட்ட புத்தரை உள்வாங்கி செரிமாணம் செய்து, அவரையே அவதாரமாக்கி பவுத்தத்தை அழிக்க ஆரியம் செய்த சதி.

      உண்மையான பவுத்தனுக்கு ஜாதி இல்லை; கடவுள் இல்லை. புத்தம் என்பதன் பொருளே அறிவு என்பதுதான். புத்தர் அன்பினை வலியுறுத்தியவர். ஜாதிகளுக்கு எதிரானவர்.

      அன்பைப் போதிக்கும் புத்தரின் போதனைகளை சிங்களவர்கள் உள்ளபடியே ஏற்றிருந்தால் தமிழர்களை கொன்று குவித்திருப்பார்களா? ஒரு புத்த பிக்குவின் போதனையால் போர்களே வாழ்க்கையாய் இருந்த அசோகன் இனி போர் புரியமாட்டேன் எனச் சபதம் ஏற்று பவுத்தம் தழுவினான்.

      இதனால் புத்தரின் கொள்கை உலகில் உயர்ந்தது. புத்தருக்குப் பெருமை சேர்த்தது. ஆனால், சிங்கள புத்த பிக்குகளின் போதனையால் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். மனித மாமிசம் கேட்பவன் எப்படி புத்தரைப் பின் பற்றுபவனாக இருக்க முடியும்? இலங்கை மண்ணில் தமிழர்களின் ரத்தத்தால் புத்தர் களங்கப்படுத்தப் பட்டார். சிங்கள புத்த பிக்குகளின் இனவெறிக்கு புத்தரா பொறுப்பாக முடியும்?

      ஆரிய இனவெறிதான் உலகிலேயே மிகக் கொடூரமானது. மற்ற இனத்தவர் மீது வெறுப்பை உமிழ்வது. வேதங்கள் முழுதும் ஆரிய இன வெறிதானே விரவிக்கிடக்கின்றன.

      அன்றைய இட்லர் ஆரியனே உலகை ஆளப்பிறந்தவன் என்று கொக்கரித்து பல இலட்சம் யூதர்களைக் கொன்றான். இன்றைய இட்லர் ராஜபக்சே சிங்களனே சிறீலங்காவை ஆள்வான் என்று கொக்கரித்து தமிழர்களைப் பூண்டோடு அழிக்கத் திட்டமிடுகிறான். எனவே, ஈழ மண்ணில் நிகழ்த்தப்படும் சிங்கள மயமாக்கலுக்கு புத்தர் பயன்படுத்தப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

      தமிழர்கள் உயிர்களை இழக்கும் போதெல்லாம் கண்டுகொள்ளாதவர்கள், தமிழர்களின் வழிபாட்டுத்தலங்களான இந்துக் கோவில்கள் அகற்றப்படும் போது அலறுகிறார்கள்.

      மனித உயிர்களைக் காப்பாற்றக் குரல் கொடுக்காதவர்கள் மத நிறுவனங்களைக் காக்க குரல் எழுப்புகின்றனர். இந்துக்கோவில்களை அகற்று வதைக் கண்டிக்க மதமற்ற மனிதநேயர்களுக்கு இருக்கும் தார்மீக உரிமையில் ஒரு விழுக்காடாவது இந்துத்துவ வெறியர்களுக்கு இருக்கமுடியுமா? இந்தியாவில் இஸ்லாமியர்களின் பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு சிங்களர்களின் இச்செயலைக் கண்டிக்கும் தார்மீக உரிமைதான் உண்டா?

      சிங்களவர்கள் எனப்படுவோர் இந்தியாவின் வட பகுதியில் இருந்து ஈழ மண்ணில் குடியேறிய ஆரிய வம்சாவழியினர் என்பது தங்களுக்குத் தெரியும். ஸ்ரீ லங்கா என்ற வார்த்தையே சமஸ்கிருத மூலச்சொல்லில் இருந்து பிறந்ததுதான்.

      இந்நிலையில் 'புதிய பார்ப்பன' அடிவருடிகள் மேலும் குட்டையைக் குழப்பி ஈழச்சிக்கலில் மதத்தை நுழைத்து மேலும் சிக்கலை ஏற்படுத்தாமல் இருப்பதே நல்லது.

      சிங்களத்தில் நடக்கும் இனவெறி ஆக்கிரமிப்பை, தவறாக பவுத்தமயமாக்கல் என்ற பெயரால் அழைப்பது புத்தரையே ஆக்கிரமிப்பாள ராகச் சித்தரிப்பதாகும்.

      தமிழக சமூக அரசியல் வரலாறு கடந்த நூறாண்டுகளாக ஜாதி இழிவுக்கு எதிரான போராட்டங்கள் நிரம்பியது. அதில் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஜாதி இழிவுக்கு எதிராக புத்தரே இங்கு முன்னிறுத்தப்பட்டுள்ளார். பண்டிதர் அயோத்திதாசர் தொடங்கி தந்தை பெரியார் வரை பவுத்தநெறியைப் பரப்பி வந்திருக்கிறார்கள்.

      சிங்கள இனவெறியில் புத்தரை சிக்கவைக்க வேண்டாம் நண்பரே !

      Delete