தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday, 5 March 2015

நாடும் மாடும் (2)


மராத்திய மாநிலத்தில் 1995 ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டு நிலுவையில் இருந்த 'விலங்குகள் வதைத் தடைச் சட்டம்'  இப்போது அங்கு நிறைவேற்றப்பட்டு, 3.3.15 அன்று குடியரசுத் தலைவர் ஒப்புதலையும் பெற்றுள்ளது. இச்சட்டத்தின்படி, பசு, காளைகள் ஆகியனவற்றைக் கொல்வது , விற்பனை செய்வது மட்டுமின்றி, மாட்டுக்கறியை ஒருவர் வைத்திருப்பதே கூடக் குற்றமாகும். இக்குற்றம் புரிவோருக்குப் பத்தாயிரம் வரையில்  தண்டமும்,5 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனையும் வழங்க இச்சட்டம் வழி செய்கிறது.  எருமை மாடுகளைக் கொலை செய்வதை இச்சட்டம் குற்றமாகக் கருதவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 


'நாடும் ஏடும்' என்பது அறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற ஒரு சொற்பொழிவின் தலைப்பு. அண்ணா நாடும் ஏடும் எழுதினர். நாம் 'நாடும் மாடும்' பற்றி எழுத வேண்டிய நிலைக்கு வந்துவிட்டோம்.

மேலே உள்ள சட்டத்திற்கு 'விலங்குகள் வதைத் தடைச் சட்டம்' என்று பெயர் கொடுக்கப்பட்டிருந்தாலும்,மற்ற  எல்லா விலங்குகளையும் வதை செய்வதை அது தடுக்கவில்லை. எருமை மாடு தவிர்த்த பிற மாடுகளை வதை செய்வதை மட்டும்தான் தடுக்கிறது. எனவே இதனை மாடுகள் வதைத் தடைச் சட்டம்' என்றுதான் கூற வேண்டும். 

பிற விலங்குகளின் மீதெல்லாம் இல்லாத கருணை, மாடுகளின் மீது மட்டும் ஏன் பா.ஜ.க. விற்கு ஏற்படுகிறதுகாரணம், மிக வெளிப்படையானது. பசு என்பது இந்துக்களின் புனிதமான விலங்காக நம்பப்படுவதே அதற்கான காரணம். எனவே இச்சட்டம் அஹிம்சையின் அடிப்படையில் உருவானதன்று. மதவாதத்தின் அடிப்படையில் உருவானது. இந்துக்களின் மதவாதம் என்பது கூட மிகையானது. ஏனெனில், இந்துக்களில் பெரும்பான்மையோர் மாட்டுக்கறி உண்ணும் வழக்கமுடையவர்களே. குறிப்பாக, உழைக்கும் மக்களும், சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்களும் மாட்டுக்கறி உண்பவர்களாகவே உள்ளனர். குறைந்த விலையில் கூடுதல் புரதம் கொண்ட உணவு மாட்டுக்கறியே! அதனால்தான் அது உழைக்கும் மக்களால் விரும்பப்படுகிறது. எனவே இச்சட்டத்திற்குப் பின்னால், உடல் உழைப்பு இல்லாத பார்ப்பனர்களின் சாதி அடிப்படையிலான இந்து மதவாதம் மட்டுமே உள்ளது. அதிலும் எருமை மாடுகளுக்கு மட்டும் ஏன் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்பது ஒரு முதன்மையான வினா. பசுவின் பாலை விட எருமையின் பாலே கெட்டியானது. நம் நாட்டின் தேநீர்க் கடைகளில் மிகுதியும் பயன்படுத்தப்படுவது. ஏழைகளுக்கு ஏற்றது. ஆனால் அதற்குப் பாதுகாப்பில்லை. ஒருவேளை, அது கருப்பாக இருப்பது காரணமா என்று தெரியவில்லை. பா.ஜ.க. வின் பார்வையில், கருப்பாக இருக்கும் மனிதர்கள் மட்டுமின்றி, கருப்பாக இருக்கும் மாடுகளும் இழிவானவைதாம் போலும்! 

இந்த 'மாட்டு அரசியல்' இந்தியாவில் நெடு நாள்களாகவே நடைபெற்று வருகிறது. காந்தியார், நேரு, அவர்களுக்கும் முன்னால் விவேகானந்தர் என்று பலரும் இது குறித்துக் கருத்துகளைக் கூறியுள்ளனர். காந்தியார், இஸ்லாமிய மக்களின் ஒப்புதலோடு பசு வதைத் தடைச் சட்டம் கொண்டு வரலாம் என்றார். நேரு அந்தத் தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. 19ஆம் நூற்றாண்டு இறுதியில், வட மாநிலங்களில் பெருவெள்ளம் ஏற்பட்டு மனிதர்கள், கால்நடைகள் என எல்லோரும் மாண்ட நேரத்தில், இந்துத்வவாதிகள் சிலர் 'கோ ரக்ஷன் சமிதி' என ஒன்றைத் தொடங்கினர். மனிதர்களைக் காப்பாற்றுவதை விட்டுவிட்டு, மாடுகளைக் காப்பாற்றக் கோரும் அந்த அமைப்பு குறித்து விவேகானந்தர் மிகக் கடுமையான சொற்களால் விமர்சனம் செய்தார். 

காங்கிரஸ் கட்சிக்குள் பசு வதைத் தடைச் சட்டம் குறித்து இரண்டு வகையான கருத்துகள் காலம்தோறும் இருந்துகொண்டே இருந்தன. (காங்கிரஸ் கட்சியில் ஒரே ஒரு கருத்து இருந்தால்தான் அது வியப்புக்குரியது!). நேரு அச்சட்டத்தை எதிர்த்த போதும், அவர் பிரதமராக இருந்தபோதுதான், உ.பி.யில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதலமைச்சராக இருந்த சம்பூர்ணானந் 1955இல் அச்சட்டத்தைக் கொண்டுவந்தார். அது மாநில அரசின் உரிமை என்பதால் தான் தலையிட விரும்பவில்லை என்று நேரு கூறிவிட்டார். பிறகு, பீகார், ம.பி., ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுகளும் அப்போதே அச்சட்டத்தைக் கொண்டுவந்தன.

இந்திரா காந்தி அரசில் உள்துறை அமைச்சராக இருந்த நந்தா, இந்தியா முழுவதும் பசு வதைத் தடைச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற 'சாதுக்களின்' கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும் என்றார். அதனைப் பிரதமர் இந்திரா காந்தியும், காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜரும் ஏற்கவில்லை. 1966 நவம்பர் 2 அன்று தில்லியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் காமராஜர் அதனைக் கடுமையாக எதிர்த்தார். நாடு, மக்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய நேரம் இது, மாடுகளைப் பற்றி அல்ல என்றார். அவர் கூற்று இந்து மதத் தீவிரவாதிகளிடம் பெரும் கோபத்தை உண்டாக்கிற்று. அதனால்தான், நவம்பர் 7 ஆம் நாள் தில்லியில் நடைபெற்ற சாதுக்களின் ஊர்வலம், காமராஜர் தங்கியிருந்த வீட்டை நெருப்பு வைத்துக் கொளுத்தியது. நல்வாய்ப்பாக, காமராஜர் உயிர் பிழைத்தார். அவருடைய உதவியாளர்கள் நிரஞ்சன், அம்பி ஆகியோரும், பாதுகாவலர் பகதூர் சிங்கும் படுகாயமடைந்தனர். 

காமராஜரைக் கொலை செய்தாவது, பசு மாடுகளைப் பாதுகாத்துவிட வேண்டும் என்று கருதிய 'அஹிம்சாவாதிகளின்' அரியதோர் கூடாரம்தான் ஆர்.எஸ்.எஸ். 

இன்றைக்கும் மனிதர்களைப் பற்றிக் கவலைப்படாமல், மாடுகளைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது, மராத்திய அரசு. இந்தியாவிலேயே விவசாயிகள் மிகுதியும் தற்கொலை செய்து கொள்ளும் மாநிலம் மராத்தியம்தான். 15.02.2009அன்றுஅவ்வரசு , மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடித்தத்தில் அங்கு 1.37 கோடி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4800 கோடி ரூபாய் நிதி உதவி வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இப்போதும் அங்கு விவசாயிகளின் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளதென்று, அங்கு ஆட்சியில் பங்கு வகிக்கும் கூட்டணிக் கட்சியான சிவசேனாவே கூறியுள்ளது. ஒரு மாதத்திற்குள்ளாக, 30.01.2015 அன்று, தங்களின் அதிகாரப்பூர்வ ஏடான 'சாம்னா'வில், சிவசேனா அந்தக் குற்றச்சாட்டை வைத்துள்ளது. முதல்வர் பட்நாவிஸ், நிதியமைச்சர் சுதீர் முல்கத்வார் ஆகிய இருவரும் விதர்பா பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தும், அங்கு தொடர்ந்து நடைபெறும் விவசாயிகளின் தற்கொலைகளை அவர்களால் தடுக்க முடியவில்லை என்று குற்றம் சாற்றியுள்ளது. அங்கே சராசரியாக 30 நிமிடங்களுக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார் என்கிறார்கள்.

அது குறித்துக் கவலை கொள்ளாத மராத்தியப் பா.ஜ.க. அரசு மாடுகளைப் பற்றிக் கவலை கொள்கிறது. மாடு புனிதமான விலங்காம். அதுவும் உண்மையில்லை. வேத காலத்தில் மாட்டுக் கறியை விரும்பி உண்டவர்கள் பார்ப்பனர்கள்தாம். நெய்யில் வறுத்து மாட்டுக்கறி உண்பது குறித்து வேத, உபநிடதங்களில் கூறப்பட்டுள்ளது. இராமாயணத்தில், ஆரண்ய காண்டத்தில், இராமனும், சீதையும் மாட்டுக்கறி உண்ணும் காட்சியை வான்மீகி காட்டுகின்றார். மகாபாரதத்தில் மாட்டுக்கறிக்குப் பஞ்சமே இல்லை. பிற்காலத்தில், சமண-பௌத்த மதங்களுக்கு இணையாகத்  தாங்களும் புலால் மறுப்பை ஏற்றார்கள் பார்ப்பனர்கள் என்பதே வரலாறு.

தொடக்கத்தில்,  பார்ப்பனர்கள் வளர்த்த யாகங்களில் மாடு, குதிரை என எல்லா விலங்குகளையும் வெட்டிப் பலி போட்டுள்ளனர். அவற்றை அவர்கள் உண்டும் இருக்கின்றனர். அதனை சங்கராச்சாரியார்  (ஓடிப்போகாத பெரியவாள்), தெய்வத்தின் குரல் (இரண்டாம் தொகுதி) என்னும் தன் நூலில் நியாயப் படுத்துகின்றார். இதோ அவருடைய வரிகள்:

"தர்மத்துக்காகச் செய்யவேண்டியது எப்படியிருந்தாலும் பண்ண            
வேண்டும். ஹிம்சை என்றும் பார்க்கக் கூடாது. யுத்தத்தில் 
சத்ரு வதம் பண்ணுவதை சஹல ராஜ நீதிப் புத்தகங்களும் 
ஒப்புக்கொள்ளவில்லையா?.......அப்படி பசு ஹோமம் 
பண்ணுவதிலும் தப்பே இல்லை."
       
"பிராமணர்கள் செய்வதில் மிகவும் உயர்ந்ததான வாஜ 
பேயத்துக்கும் 23 பசுக்களே கொல்லப்படுகின்றன. 
சக்கரவர்த்திகளே செய்கிற மிகப் பெரிய அச்வ 
மேதத்துக்குக் கூட 100 பசுக்கள்தான் சொல்லியிருக்கிறது."

ஆக, அவர்கள் கொன்றால் அது யாகம். நாம் கொன்றால், அது மிகப் பெரிய குற்றம். 10000 ரூ தண்டம், 5 ஆண்டுகள் சிறை. இன்னும் வாழ்கிறது மனுநீதி என்பதுதானே இதன் பொருள்!     


தொடர்புகளுக்கு: (subavee11@gmail.com , www.subavee.com)


நன்றி: tamil.oneindia.in

30 comments:

 1. மதுவுக்கு கடை,
  மாட்டுகறிக்கு தடை.
  -என்னய்யா அரசு இது?...
  சீனு.வெங்கடேசுவரன்.
  அம்பத்தூர்.

  ReplyDelete
 2. கணேஷ்வேல் மணிகாந்தி5 March 2015 at 11:46

  பசுவைக் கொல்பவருக்கு என்ன தண்டனை? எது கொடுப்பதாக இருந்தாலும் முதலில் இந்துமத வெறியர்களைத்தான் தண்டிக்க வேண்டும். வேத, இதிகாச, புராண உபநிடதங்கள், மனுஸ்மிருதி மற்றும் புத்த – சமண மத இலக்கியங்கள் அனைத்தும் பண்டைய ‘இந்துக்கள்’ மாட்டுக்கறி தின்னும் உலகளாவிய பழக்கத்தைக் கொண்டவர்களே என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றன.

  ரிக் வேத தெய்வமான இந்திரன் டன் கணக்கில் ‘பசு மாமிசம்’ விழுங்கியதாக பல சுலோகங்கள் தெரிவிக்கின்றன. இராமாயணம் எழுதிய வால்மீகி தனது ஆசிரம விருந்தினர்களுக்கு மாட்டுக்கறி விருந்தளிப்பது வழக்கம் என இராமாயணம் தெரிவிக்கின்றது. ‘கோமேத’ யாகத்தில் கொல்லப்படும் மாட்டின் பாகங்கள் பார்ப்பனப் பண்டாரங்களின் சமூக அந்தஸ்திற்கேற்பப் பங்கிடப்பட்டதாக நான்கு வேதங்களும் குறிப்பிடுகின்றன.

  பிரம்மா பசுவைப் படைத்ததே வேள்வியில் கொல்லத்தான் என்று கூறும் மனுஸ்மிருதி, ‘உலக நன்மைக்காக வேள்வியில் கொல்லப்படும் பசுவை பிராமணன் உண்ணலாம்’ என்றும் தெரிவிக்கின்றது. அதிலும் யாக்ஞவல்கியர் எனும் உபநிடத முனிவர், கன்றுக்குட்டி இறைச்சியைப் பற்றி ஆனந்த விகடனின் சாப்பாட்டு ராமன்களைப் போல ரசனையுடன் விவரிக்கிறார். எனவே பசுவதையைத் தடை செய்யுமுன் அதைப் பிரச்சாரம் செய்யும் வேதம், புராணம், மனுஸ்மிருதி அனைத்தையும் தடை செய்ய வேண்டும்.

  ReplyDelete
 3. கணேஷ்வேல் மணிகாந்தி5 March 2015 at 11:46

  கணிப்பொறி வேலைக்காக நம்மூர் அம்பிகள் ஈக்களாய் ஒட்டிக் கொள்ளும் அமெரிக்காவில்தான் சிகாகோ நகரம் உள்ளது. இறைச்சிக்காக நவீன ஆலைகளில் தினமும் பல்லாயிரம் மாடுகள் கொல்லப்படும் இந்நகரம் ‘உலகின் கொலைக்களம்’ என்றழைக்கப்படுகிறது. ஆதலால் கோமாதாவைக் கொலை செய்யும் அமெரிக்காவிற்கு இந்துக்கள் போகக் கூடாது என இந்து முன்னணி தடை போடுமா?

  ReplyDelete
 4. கணேஷ்வேல் மணிகாந்தி5 March 2015 at 11:47

  பசு புனிதமென்றால், மீன் விஷ்ணுவின் மச்சாவதாரம், கோழி முருகனின் அவதாரம், ஆடு கிருஷ்ணன் மேய்த்தது என அனைத்தையும் தடை செய்யலாமா? மாட்டுக்கறி தின்னக்கூடாது என்பவர்கள் கோமாதாவைக் கொன்று தோலை உரித்துச் செருப்பு போட்டு மிதிக்கலாமா? கடவுளே பிள்ளைக் கறியை ஏற்கும்போது, பக்தன் மட்டும் மாட்டுக்கறியைத் தின்னக் கூடாதா?

  ReplyDelete
 5. கணேஷ்வேல் மணிகாந்தி5 March 2015 at 11:47

  பசுவைக் கோமாதா என்றும் அதன் உடலில் 33 கோடித் தேவர்கள் குடியிருக்கிறார்கள் என்றும் கூறுபவர்கள், அது செத்தால் மட்டும் தூக்கிச் செல்வதற்கு தாழ்த்தப்பட்டவர்களை அழைப்பது ஏன்? பூதேவர்களான பார்ப்பனரும், உயர் சாதியினரும், கோமாதா பஜனை பாடும் சங்கராச்சாரியும், இராம.கோபாலனும் – செத்த கோமாதாவைத் தூக்கி அடக்கம் செய்து தமது ‘இந்து’ உணர்வை நிரூபிக்கட்டும்.

  ReplyDelete
 6. கணேஷ்வேல் மணிகாந்தி5 March 2015 at 11:48

  அய்ம்பதிற்கும் மேற்பட்ட விலங்குகள் கடவுளுக்கு பலிகொடுக்க தகுதியானவை என வேதத்தில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இவற்றில் முக்கியமானவை காளையும் பசுவும். சடங்குகளின்றி கடவுளுக்கு காணிக்கையை செலுத்திவிட முடியுமா? பார்ப்பனர்களின்றி சடங்குகள்தான் சாத்தியமா? “பசு, கன்று, குதிரை மற்றும் எறுமையை உண்ணுவது இந்திரனின் வழக்கம்'' என்றும் (6/17/1) “பெண்ணின் மண விழாவில் காளையும், பசுவும் வெட்டப்படுகின்றன'' என்றும் குறிப்பிடுகிறது ரிக் வேதம்.

  யாகம் என்ற பெயரில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான விலங்குகளை பலி கொடுத்து, அதைப் பங்கிட்டு ருசித்து உண்ட பார்ப்பனர்களுக்கு இன்று ரத்த நெடியும், மாமிசத் துண்டமும் குமட்டலை உண்டாக்கித் தீண்டத்தகாதவையாக அவற்றை மாற்றியதற்கு காரணம் – பவுத்தத்தின் தீவிரமும் புத்தரின் அறிவுரைகளும்தான்!

  ReplyDelete
 7. கணேஷ்வேல் மணிகாந்தி5 March 2015 at 11:49

  மாடுக்கறி சாப்பிடாத பார்ப்பான் அறிவால் உயர்ந்தவனா ?அறிவால் உயர்ந்தவன் என்றால் அவன் கண்டு பிடித்த அறிவியல் சாதனம் என்ன?
  மாட்டுக்கறி உண்ணும் வெள்ளைக்காரன் தான் உலகில் பல விஞ்ஞான கண்டுபிடுப்புகளைச் செய்துள்ளான்.

  ReplyDelete
 8. திரு கணேஷ் வேல் தாங்கள் தான் அறிவால் உயர்ந்தவர்கள் என நிருப்பிக்கதான் வேத காலத்திலே விமானம் இருந்துச்சு ,உறுப்பு மாற்று சிகிச்சை இருந்துச்சு ,ராக்கெட்டு உட்டோம்னு புதுசு ,புதுசா ?கதை கட்டுவது எல்லாம் .

  ReplyDelete
 9. பசுவதையைப்பற்றி விவாதிப்பதை விட[எப்போதும் போல]ஒரு ஜாதியை விமர்சிப்பதே உங்களின் எண்ணமாக உள்ளது.அது உங்களுக்கே உள்ள மனநோய் அது போகட்டும்,நாம் இன்று பின்பற்றுவது இந்நாட்டின் அரசியல் சாசனமாகும்.மனுதர்மமோ,வருணாசிரமோ, வேதமோ அல்ல.அந்த அரசியல் சாசனத்தின் Directive principles of governanceல் பசுவதைத் தடைச்சட்டம் கொண்டுவரவேண்டும் என்று கூறியுள்ளது,அதை மகாராஷ்ட்ரா அரசு(Unfortunately&sadly till now not by Indian or Tamil Nadu government)பொறுப்போடு நிறைவற்றி அதன் கடமையைச் செய்துள்ளது.அதனால் அரசியல் சாசனம் கூறிய பசுவதைத் தடைச்சட்டத்தை கொண்டுவந்ததை குறை கூற யாருக்கும் உரிமை இல்லை.அச்சட்டம் தவறு என்றால் இது ஜனநாயக நாடு நீதிமன்றம் செல்லுங்களேன் பார்ப்போம்.வேண்டும் என்றால் ஆடு,எருமை....முதலிய உயிரினங்களையும் சேர்க்க வேண்டும் எனக் குரல் கொடுங்கள் அது நியாயமானது, அதை தீவிரமாக ஆதரிக்கிறோம்(அது திருவள்ளுவர், வள்ளலாருக்குச் நீங்கள் செய்யும் நன்றிக் கடனாகும்). எருமை கருப்பு என்பதால் இழிவானது என்றால் கருப்பாக இருக்கும் யானை புனிதமாகவும்,அதோடு கோயிலின் முக்கிய அங்கமாகவும்,விநாயகரின் உருவமாகவும் எப்படிக் ஹிந்துக்களால் கருதுப்படும்?. நீங்கள்தான் அறிவால் எங்களைவிட உயர்ந்தவர்கள் நாங்கள் இல்லை என்றால் மகிழ்ச்சியே.இந்தியாவின் அதுவும் தமிழகத்தில் அறிவியல் நோபல் பரிசு வாங்கிய பெரும்பாலோனர்(C V Raman in1930,not only first Indian but also first Asian and first non-white to receive Nobel Prize in the sciences,S Chandrasekar in1983,V Ramakrishnan in2009, Economist Amarthya sen in1998&mathematician Ramanujam) எந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள்?

  ReplyDelete
  Replies
  1. கணேஷ்வேல்10 March 2015 at 13:05

   'வெள்ளை' நிறத்திலும் யானை இருந்திருந்தால், 'கருப்பு' யானையின் நிலை இன்றைய 'எருமை மாட்டின்' நிலையாகத்தானிருந்திருக்கும் என்பதை நீங்கள் மறுக்க முடியுமா?

   அறிவில் உயர்ந்தவர்கள் 'யார்' என்பது முக்கியமில்லை. அந்த 'அறிவால்' மக்கள் பெற்ற பயன் என்ன என்பதுதான் முக்கியம்.

   இந்த நாட்டில், 2000 வருடமாக பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை மறுத்ததன் பலன்தான் நம் நாட்டில் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் இல்லாமல் போனது.

   தாங்கள் குறிப்பிட்ட 'நோபல்' விருது பெற்றவர்களின் அறிவையோ, திறமையையோ குறை கூற வில்லை. ஆனால் அதனால் பெரும்பான்மை மக்களுக்கு கிடைத்த நன்மையென்ன? சூத்திரப்பட்டம் மாறிவிட்டதா?

   அந்த 'அறிவியல்' விஞ்ஞானிகளை விட, தந்தை பெரியாா் போன்ற 'சமூக' விஞ்ஞானிகளின் பங்களிப்பால்தான், இந்த நாட்டில் மனிதர்கள் 'மனிதர்களாக' நடத்தப்படுகிறார்கள் என்பதை எவறாவது மறுக்க முடியுமா?

   சமத்துவ சமூகம் அமையாமல், ஒரு நாடு அடையும் வளர்ச்சியோ, முன்னேற்றமோ கண்டிப்பாக 'நீர்க்குமிழி' தான்.

   இத்தகைய சமத்துவ சமூகம் அமைக்க 'அறிவியல்' விஞ்ஞானிகளை விட, 'சமூக' விஞ்ஞானிகளே தேவை என்பதே எனது கருத்து.

   Delete
  2. தமிழச்சி15 March 2015 at 22:32

   சமத்துவ சமூகம் அமையாமல்,ஒரு நாடு மட்டுமல்ல திராவிட அரசியல் கட்சிகள், திராவிட கட்சிகளால் தமிழ்நாடுஅடையும் வளர்ச்சியோ,முன்னேற்றமோ கண்டிப்பாக 'நீர்க்குமிழி'தான்.சாதி படிநிலையில் கீழ்நிலையில் வைக்கப்பட்டவர்களை ஓட்டுப் பொறுக்கும் திராவிட அரசியல் கட்சிகள் தங்கள் வளர்ச்சிக்காக எப்படி பயன்படுத்திக் கொள்கிறதோ அதைப்போலவே இன்றைய சூழலில் பெரியாரிய இயக்கங்களிலும்/திராவிட கட்சிகளிலும் அதன் பிரதிபலிப்புகள் வெளிப்படுகின்றன.தலைமைகளில் ஆதிக்க சாதியினர் இருப்பது!.ஒருவேளை சாதி அடையாளங்களை இழந்தவர்கள் தான் தலைமையிடங்களில் இருக்கிறார்கள் என்றால் பறையனோ,பள்ளனோ, அருந்ததியினனோ ஏன் இதுவரையில் தலைமைக்கு வரவில்லை?


   Delete
  3. கணேஷ்வேல்16 March 2015 at 21:35

   தோழர் தமிழச்சியின் ஒற்றை நோக்கம், தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றத்தை விட, திராவிட இயக்கத்தை எதிர்ப்பதுதான் என்பது வெளிப்படை.

   2000 வருட அடிமைத்தனத்தை கடந்த ஒரு நூற்றாண்டில் மாற்றியது எந்த இயக்கம்?

   இயக்கத்தின் செயல்பாடுகள் இன்னும் தீவிரமடையவேண்டும் எனக் கூறலாமே தவிர இயக்கத்தையே குறைகூறுவது கடைந்தெடுத்த பார்ப்பனியமே !

   Delete
  4. சகோதரியே சமுக முன்னேற்றமும் சமத்துவ சமூகமும் ஒருங்கிணைந்து செல்லக் கூடியவை என்பது எனது கருத்து. அப்படித்தான் நமது சுபவீ அவர்களும் கருதுவதாக எண்ணுகிறேன். திராவிடர் என்கிற சிந்தனை அதை சார்ந்த உணர்வு என்பது வேறு; ஓட்டு அரசியல் என்பது வேறு என்றும் கருதுகிறேன். தற்போது நாம் விரும்புகிற அளவுக்கு சமத்துவத்தை அடைய முடியாமல் நமது சகோதர சகோதிரிகள் பெரும் பாடு படுவதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பதாக நான் கருதுவது விழிப்புணர்வுடன் கூடிய தொடர் போராட்டம் இன்னும் இன்னும் அதிக அளவில் ஒடுக்கப்பட்ட மக்களால் நடத்தப்படாமல் இருப்பதும் அவ்வாறு அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டியவர்களுக்கே இன்னும் இன்னும் கூடுதலான அக்கறையுடன் கூடிய விழுப்புணர்வு தேவைப்படுவதும் தான். தொடர்ந்து சமுகத்தை அக்கறையுடன் நாம் அணுகினால் நாம் விரும்புகிற சமத்துவம் உறுதியாகும் என்பது எனது அனுமானம். என்னை கருத்து கூற தூண்டியதற்கு மிக்க நன்றி சகோதரியே.

   Delete
  5. தமிழச்சி19 March 2015 at 00:23

   பார்ப்பனியப் பூச்சாண்டி காண்பித்து பிழைப்புவாதம் செய்து, தமிழனை, தமிழ்நாட்டை சுரண்டுவது திராவிடக் கட்சிகளின் வாடிக்கை என்பது ஒன்றும் தமிழர்கள் அறியாதது அல்லவே!.2000 வருட அடிமைத்தனத்தை கடந்த ஒரு நூற்றாண்டில் மாற்றியது இங்கு மட்டுமல்ல இந்திய முழுவதும் நிகழ்ந்த நிகழ்வுதான்.இன்னும் சொல்லப் போனால் இன்று கேரளாவில்,மே வங்கத்தில் சாதி உணர்வு,சாதி வெறி தமிழ்நாட்டைவிட மிகமிகக் குறைவு.இன்று வேறு மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் சாதிச் சங்கங்கள் மிகப்பெரிய அளவில் அரசியலை, ஆட்சியை ஆட்டிப்படைக்கத் துடிக்கும் ஆபத்தைப் பார்க்கிறோம்.மேலும் சுயமரியாதை திருமணம் என்று அண்ணா முதல் கருணாநிதி வரை மகிழும் திருமணங்கள் புரோகிதர் இல்லாமல் நடப்பதேயன்றி சாதி மறுப்பிற்காக நடப்பதன்று(அதை திமுக/அதிமுகetc.. கட்சியினர் >90%திருமணங்களில்
   இன்றும் பார்க்கலாம்and almost100%தலித்தோடு சாதி மறுப்புத் திருமணாகயிருக்காது.அதை அவர்கள் வலியுறுத்தவும் மாட்டார்கள்). இதிலிருந்தே தாழ்த்தப்பட்டவர்களை வைத்து பிழைப்பு நடத்தும் பிழைப்புவாத திராவிட கூட்டங்களின்/கட்சிகளின் சாதி வெறி வெளிப்படும்.மேலும் நாடு சுதந்திரமடைந்து 67 ஆண்டுகளாயியும் தாழ்த்தப்பட்டவர்களை இன்று வரை தமிழக முதலமைச்சராக இருந்ததில்லை&முதலமைச்சர் வேட்பளாராக அறிவிக்க மனமில்லாத ஆதிக்க மனோபவமுடைய கூட்டம் இந்த திராவிடக்கட்சிகள்.அந்த அவல நிலையையை பெரியார் வழி நடக்கும் திக,திதபேயும் கண்டுகொள்ளாது,பேசாது,போராடாது!.கள்ள மௌனியாக நடிக்கும்!.

   Delete
  6. தேவசகாயம்21 March 2015 at 15:29

   இன்று தமிழகத்தில் ஆதிக்க சக்திகள் மாறினாலும்
   அடிமைகள் எப்பொழுதும் அடிமைகளே,
   அவர்களுக்கு எந்நாளும் நன்மை இல்லை!

   Delete
  7. ஓர் இனத்தாரின் மீது மறு இனத்தாரின் மேலாதிக்கம் எனப்படுவது வெறும் அரசியல் சார்ந்த பேச்சுக்கு உரிய பார்பனிய பூச்சாண்டி விஷயம் அல்ல சகோதரியே ! நமது தமிழ் முன்னோர்கள் தம்மை திராவிடர்களாக உணர்ந்து இருந்து இருந்தாலும் உணராமல் இருந்து இருந்தாலும் சமீப காலத்து சில நூறு ஆண்டுகால வரலாற்று ஆராய்ச்சிகள் நமக்கு நமது பூர்விக வரலாறுகளை திராவிடர் திராவிட நாடு என்கிற மரபு இனப்பெயரில் அடையாளம் காட்டி நமக்கு இன ரீதியாக உணர்வுகளை ஊட்டி நமக்குள் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை காட்டியது. நாம் நம்மை இன ரீதியாக அடையாளம் காண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால்தான் திராவிடர் என்கிற இன மரபு அடையாள பெயரை ஏற்றோம். இதில் உங்களைப்போல மாறுபட்ட கண்ணோட்டம் கொண்டிருந்தவர்கள் இன்று உள்ளதைப்போல முன்பும் இருந்தார்கள் இனியும் இருப்பார்கள் என்பது எல்லோரும் அறிந்து வைத்திருக்கும் சாதாரண உண்மை. உங்களுடைய கருத்துக்களை காணும்போது உங்களுக்கு தாழ்த்தப்பட்ட ஜாதி மக்களின் முன்னேற்றத்தில் அக்கறையா அல்லது "திராவிட" என்கிற கருத்தாக்கத்தில் முரண்பாடா என்பதில் உங்களுக்கு இன்னும் தெளிவான கண்ணோட்டம் தேவை என்று எண்ணுகிறேன். ஒருகாலும் திராவிட கோட்பாடு தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்தில் தடைக் கல்லாக இருந்திருக்கவில்லை என்றே கருதுகிறேன். மேலாதிக்க ஜாதி உணர்வாளர்கள் பலதுறைகளில் ஆதிக்க ஜாதிகளாக இருந்து வருவதாலும் அவர்கள் தமது ஜாதி மேலாதிக்க உணர்வுகளுக்கு பெரும் தீனி போட்டு அவ்வுணர்வை இன்னும் இன்னும் அதிகம் தூண்டிவருவதாலும் இந்த குழப்பம் உங்களுக்கு ஒரு வேலை ஏற்பட்டிருக்கலாம். சகோதரியே, இந்த சுதந்திரம் கிடைத்ததாக வருணிக்கப்படும் அதிகார மாற்றத்துக்கு பிறகுதான் இந்த நாடு முழுவதும் பரவலாக சமுக நீதியில் வரலாற்று மாற்றங்கள் நடந்ததாகவும் அதில் பத்தோடு இன்னொன்றாக தமிழ் நாட்டிலும் மாற்றம் ஏற்பட்டது அவ்வளவுதான் என்று மிக சாதாரணமாக நீங்கள் எண்ணுவது உங்களின் (மன்னிக்கவும்) முன்னேற்றி விட்டவர்களை புறக்கணிக்கும் மனோபாவத்தை காட்டி கொடுக்கிறது. அண்டை மாநிலங்களிலும்தான் மாற்றம் வந்தது இது ஒரு பெரிய சாதனையா என்று நீங்கள் இன்று அலட்சியமாக எண்ணி பேசுவதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிட்டியதற்கு மூல காரணமே திராவிட என்கிற கோட்பாடுதான் ! அந்த கோட்பாட்டில் போராடியவர்கள் போராடி பெற்றதுதான் உங்களுக்கும் எனக்கும் இன்று கிடைத்து இருக்கும் கருத்து சுதந்திரம். மாற்று மாநிலத்தில் திராவிட கோட்பாடு இல்லையே அங்கே மாற்றம் இல்லையா என்று நீங்கள் எண்ணுவது வரலாற்றை கேலி செய்வதாகும். நமக்காக போராடியவர்களை நாமே கேலி செய்யக்கூடாது சகோதரியே ! ஜாதி மறுப்பு திருமணங்களையும் அரசியல் தலைவர்கள் முன்னின்று நடத்திடும் திருமணங்களையும் ஒன்றாக கருதி குழப்பம் அடைந்துவிட்டீர்கள் சகோதரியே. நான் முன்பு சொன்னதுதான் "தற்போது நாம் விரும்புகிற அளவுக்கு சமத்துவத்தை அடைய முடியாமல் நமது சகோதர சகோதிரிகள் பெரும் பாடு படுவதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பதாக நான் கருதுவது விழிப்புணர்வுடன் கூடிய தொடர் போராட்டம் இன்னும் இன்னும் அதிக அளவில் ஒடுக்கப்பட்ட மக்களால் நடத்தப்படாமல் இருப்பதும் அவ்வாறு அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டியவர்களுக்கே இன்னும் இன்னும் கூடுதலான அக்கறையுடன் கூடிய விழுப்புணர்வு தேவைப்படுவதும் தான். தொடர்ந்து சமுகத்தை அக்கறையுடன் நாம் அணுகினால் நாம் விரும்புகிற சமத்துவம் உறுதியாகும் என்பது எனது அனுமானம்"

   Delete
 10. அனானிமஸ் அவர்களே தங்கள் கருத்தில் அடையாள பிழை இருக்கிறது. என்னவென்றால் ஆரியர்களான பார்ப்பனர்கள் மற்றவர்களிடமிருந்து ஜாதியாக வேறுபட்டு இருக்கவில்லை இனத்தால் வேறுபட்டு இருக்கிறார்கள். இனத்தால் வெறுபட்டவர்களாகிய பார்ப்பனர்கள் வேறுபட்ட இனத்தாரின் உணவு பழக்கத்தை தடை செய்ய முடிகிறது என்றால் இந்த நாடும் சட்டமும் நீங்கள் வளைத்தால் வளையும் அப்படித்தானே ! பெரும்பாலானவர்கள் நீங்கள் இல்லை ஆனால் நீங்கள்தான் இந்தியாவை ஹிந்துஸ்தான் என்றும் பாரதம் என்றும் உங்கள் மனம் போன போக்கில் அழைத்துக்கொண்டு சும்மா ஹாயாக உலாத்திக்கொண்டு வருகிறீர்கள் இது உங்கள் மணக்கண்ணொட்டத்தில் ஞாயமத்தான்.

  மாட்டுக்கறி உண்ணக்கூடாது என்று நீங்கள் போட்டுக்கொள்ளும் சட்டம் உங்களுக்கு சாதகமா அல்லது மாடு வளர்க்கும் மக்களுக்கு சாதகமா?

  உங்களுக்கு சாதகம் என்பதை விட அவர்களுக்கு பாதகமும் பாரமும்மாகும் அல்லவா ! அமெரிக்காவிலே கறிக்காகவே மாடுகள் வளர்க்கப்பட்டு ஆரோகியமாகவே உணவாக விற்கப்படுகிறது ஆனால் இங்கு அவ்வாறு மாடுகள் உணவுக்காக வளர்க்காமல் ஏதோ நானும் முடிந்தவரை கரந்தவரை மாடு வளர்த்தேன் பிறகு அதை விற்று பணம் பார்த்தேன் என்று இருக்கும் மக்களுக்குத்தான் உங்கள் போக்கு பாதகமாக உள்ளது.

  இந்த நாடு எங்களுக்கு சொந்தமா உங்களுக்கு சொந்தமா ?

  பெரும்பாலான மக்களாகிய நாங்கள் பார்ப்பனர்கள் இல்லை ஆனாலும் நாங்கள் ஜாதியால் பிளவுபட்டுள்ளதால் உங்கள் ஆளுமையில் நாங்கள் வாழவேண்டி உள்ளது !

  இந்திய அரசியலமைப்பு சட்டம் Part IV Directive Principles Of State Policy அதில் பிரிவு 46க்கு உங்கள் பசு மாட்டுக்கறி உண்ணக்கூடாது என்கிற சட்டம் நேரிடையாக தேவை இல்லாமல் தலை இடுகிறதே. பிரிவு 48இன் படி நீங்கள் கொண்டு வந்துள்ள தடை சட்டம் ஆனது ஷரத்துகளில் அடி வாங்குகிறதே அதை கண்டீர்களா ?

  உங்களுடைய சட்டமும் அதன் மூலம் நீங்கள் தடை செய்துள்ள விஷயங்களும் எந்த பிரிவின் கீழ் கொண்டு வந்தீர்களோ அந்த பிரிவில் மாட்டுக்கறி உண்பதையும் தடை செய்யவேண்டும் என்று குறிப்பிடாத போது எப்படி தடை போட்டீர்கள் ?

  உங்களுடைய பிரிவு 48 என்ன சொல்கிறது

  the State shall endeavor to organize agriculture and animal husbandry on modern and scientific lines and shall, in particular, take steps for preserving and improving the breeds, and prohibiting the slaughter, of cows and calves and other milch and draught cattle.

  இதில் improving the breeds என்பது வரை ஏதோ அர்த்தம் இருப்பதாக கருதினாலும் prohibiting the slaughter, of cows and calves and other milch and draught cattle என்பதற்கு தெளிவான காரணக்காரியங்களுடன் கூடிய விளக்கம் தேவைப்படுகிறதே. எதற்க்காக cow slaughter யை தடை செய்ய வேண்டும் ? பசு பால் தருகிறது அதனால் அதை வெட்ட தடை என்றால் water baffalo என்கிற குளம் குட்டையில் படுத்து கிடக்கும் எருமைகளும்தான் பால் தருகிறது அதை "நீங்கலாக" என்றல்லவா தடை சட்டம் போட்டுள்ளீர்கள். அப்படி என்றால் உங்கள் நோக்கம் ஐயப்பாடுடையதுதானே !

  மாடுகளை கறிக்காக வெட்டவும் கூடாது கரியாக வைத்திருக்கவும் கூடாது உணவாகவும் விற்கப்படவும் கூடாது என்று சட்டம் போட்டீர்களே, போட்டது போட்டீர்கள் மாடுகளை வளர்க்கவும் கூடாது என்றும் ஒரு வரி சொருகி இருந்தால் தெளிவாக இருந்திருக்குமே ! ஏன்னா அத வளர்த்துட்டு பராமரிக்க முடியாம யாரும் திண்டாடக்கூடது அல்லவா !

  ReplyDelete
 11. ஆரம்ப வரிகள் உங்களின் இனவெறுப்பு மனப்பான்மையைக் காட்டுகிறது.பசுவதைத் தடுப்பு எந்த ஒரு இனத்தின் விருப்பத்திற்காக கொண்டுவரப்பட்டதல்ல,அம்பேத்கார் தலைமையேற்று,கையெழுத்திட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் Directive Principles Of State Policyல் உள்ளது!. அது தவறென்றால் எந்த ஒரு இனத்தையும் குறை கூறுவதை விடுத்து அம்பேத்காரைக் குறை கூறுங்கள்!.ஹிந்துஸ்தான் என்றும் பாரதம் என்று சிலர் அழைப்பது திராவிடக் கட்சிகள் தனித் தமிழ்நாடு என்று கூறி மனத் திருப்தியடைவது,சும்மா ஹாயாகச் சொல்லி உலாத்திக்கொண்டிருப்பது போலத்தான்!.இந்தியா இந்தியாவாகத்தான் இருக்கும் ஒருபொழுதும் யாராலும் மாற்ற முடியாது[ஒருபொழுதும் தனித் தமிழ்நாடு அமையப் போவதில்லை அதுபோல]கவலைவேண்டாம் உங்களுக்கு.மீண்டும் சொல்கிறேன் ஆடு,எருமை.... முதலிய உயிரினங்களையும் சேர்க்க வேண்டும் எனக் குரல் கொடுங்கள்,போராடுங்களேன் அது நியாயமானது அதை தீவிரமாக ஆதரிக்கிறன்(அது திருவள்ளுவர்,வள்ளலாருக்குச் நீங்கள் செய்யும் நன்றிக் கடனாகும்).கறந்தவரை மாடு வளர்த்தேன் பிறகு கொன்றேன் என்பது சிறிதும் நன்றிகெட்ட சுயநலக் குணமாகும்.

  ReplyDelete
  Replies
  1. பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது! - அனானிமஸ் அவர்களே "அம்பேத்காரை குறை சொல்லுங்கள்" என்று என்னை ஏன் தூண்டுகிறீர்கள்? - சரீ அது இருக்கட்டும். "ஆரம்ப வரிகள் உங்களின் இனவெறுப்பு மனப்பான்மையைக் காட்டுகிறது." என்று குறிப்பிட்டுள்ளீர்களே, அதில் உங்கள் பொருள் திரிபல்லவா தெரிகிறது. - எப்படியோ நீங்கள் ஒரு ஜாதியாக குறிப்பிட்டவர்களை என்னுடைய பதிலுக்குப்பிறகு தனி இனம்தான் என்று தெளிவடைந்து விட்டீர்கள். "பசுவதைத் தடுப்பு எந்த ஓர் இனத்தின் விருப்பத்திற்காக கொண்டுவரப்பட்டதல்ல" என்று கூறி நீங்கள் தெளிவாக குழப்புகிறீர்கள்! பசு வதை தடுப்பு சட்டம் வேண்டும் என்பதில் ஆரியர்களுக்கு அந்த ஓர் இனத்தாருக்கு விருப்பமில்லையா?-நான் ஒன்றை சொல்லட்டுமா? அது என்னவென்றால், மனிதனின் பொறாமை வயிற்றெரிச்சல் காரணமாகத்தான் இந்த பசுவதை தடுப்பே போடப்பட்டுள்ளது! அதாவது தனக்கு கிட்டாதது வேறு எவனுக்கும் கிட்டக்கூடாது என்கிற மனப்பாண்மை! இன்னும் தெளிவாக சொல்லட்டுமா, புத்த மதம் பிரபலமாக ஆளுமையோடு இருந்த காலத்துல யாகம் வளர்த்து அதில் பசுவை போட்டுக்கொன்று தின்ற ஆரியர்கள் புத்தரின் போதனைகள் தமக்கு தமது மேலாண்மைக்கு பாதகமாக ஆகிவிடுமோ என்று அஞ்சியதால் தம்மையும் மாமிசம் உண்ணாதவர்களாக காட்டிக்கொண்டதொடு அவ்வாறு தாங்களே மோனோபோலி உரிமை கொண்டாடி வந்த பசுவை தாமும் தின்பதில்லை மற்றவர்களும் தின்ன விடுவதில்லை என்கிற முடிவை எடுத்துக் கொண்டார்கள். தாங்கள் வேண்டாம் வெறுப்பாக கைவிட்ட ஒரு மாபெரும் வேத கடமையை, தமது இனத்தவருக்கு பிரபலமாக இருந்த உணவை, அந்த பசுவை மாற்று இனத்தார்கள் சுவைக்க விட்டு வேடிக்கைப்பார்க்க ஆரியர்கள் தயாராக இல்லை. அதன் தொடர்ச்சி தான் இது போன்ற தடை சட்டங்கள். இப்போது சொல்லுங்கள் பசு வதை தடை என்பது ஓர் இனத்தாருக்காக அவர்களின் விருப்பத்துக்கு கொண்டுவரப்பட்டது தானே? - நீங்கள் சொல்லுவதைப்போலே ஆடு எருமைகளையும் இத்தடையில் உண்மையிலேயே சேர்க்க முடியுமா? அதை நீங்கள் எப்போது புனிதமானவைகளாக அறிவித்தீர்கள்? முதலில் அவைகளை புனிதமானா ஹிந்து வழிபாட்டுக்குரிய தெய்வங்களாக அறிவியுங்கள் பார்ப்போம்! - பசுவை ஓர் இனத்தார் புனிதமானதாக சொல்லிக்கொள்ள உரிமை உள்ளபோது அது அவ்வாறு புனிதமானது அல்ல என்று சொல்ல வேறு இனத்தாருக்கு உரிமை இல்லையா? - அப்புறம் என்னன்னா, "ஏதோ நானும் முடிந்தவரை கரந்தவரை மாடு வளர்த்தேன் பிறகு அதை விற்று பணம் பார்த்தேன்" என்றுதானே சொன்னேன். ஆனால் நீங்களோ "கறந்தவரை மாடு வளர்த்தேன் பிறகு கொன்றேன்" என்று நான் சொல்லாததை சொல்லி உங்கள் வசதிக்கு ஏற்ப வார்த்தையை மாற்றி கொண்டீர்களே.- இந்த ஒரு வார்த்தையையே நீங்கள் உங்கள் வசதிக்கு ஏற்ப மாற்றுகிறீர்கள், சட்டத்தையும் அவ்வாறே வளைக்கிறீர்கள், அதனால்தானே சொன்னேன் நீங்கள் வளைத்தால் வளையும் என்று!

   Delete
  2. பாவம் ஒரு இடம் பழி இன்னொரு இடம்! .Directive Principles Of State Policyல் பசுவதையைத் தடைசெய்ய வேண்டும் என்பதற்கு அம்பேத்கார் தலைமையேற்று, கையெழுத்திட்டுள்ளாரா, இல்லையா?.அதற்கு அவரைக் குற்றம் சொல்லாமல் ஒரு ஜாதியை (உங்கள் விருப்பப்படி ஒரு இனத்தை) குற்றம் சொல்லுவதே,விமர்சிப்பதே உங்களின் எண்ணமாக உள்ளது.நான் முன்பே கூறியது போல அது உங்களுக்கெல்லாம் உள்ள மனநோய்!. ஆரியர்களுக்கு ஆயிரம் விருப்பங்களிருக்கலாம், அதெயெல்லாம் நிறைவேற்றவா ஒரு அரசியலமைப்புச் சட்டம்,அதையா அம்பேத்கார் ஏற்றுக் கையெழுத்திட்டார்?.தனக்கு கிட்டாதது என்ற பொறாமை,வயிற்றெரிச்சல் தான் காரணமென்றால் ஆடு,எருமை... போன்றவற்றிக்கும் அந்த தடைச் சட்டத்தை நீடித்திருக்கலாமே!(சுவையில் என்ன பெரிய வேறுபாடு இருக்கப் போகிறது?).ஆடு,எருமை எங்களுக்குப் புனிதமானவை அல்ல,உங்களுக்குத் தேவையென்றால் அச்சட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றால் போராடுங்கள் அது நியாயமானது அதை தீவிரமாக ஆதரிக்கிறோம்.புத்தர் ஒருபோதும் மாட்டுக்கறி உண்ணக்கூடாது என்று கூறவில்லை, in factஅவரே மாமிசம் உண்டவர்.இப்படி கூறுவது உங்களுடைய அறியாமை.மற்றும் முன்பும்,இன்றும் (இலங்கை,பர்மா...)புத்தரின் வழி நடப்பவர்கள் மாட்டை அல்ல,பிற இன மனிதர்களையேக் கொடுரப் படுகொலைகள் செய்வதை கண்கூடாகக் காண்கிறோம்.மேலும் அன்பே கடவுளென்ற புத்தரை இன வெறுப்புணர்வு கொண்ட உங்களைப் போன்றோர் தேவைக்காகப் பயன்படுத்திக் கோள்ளுதலென்பது வெட்கக்கேடானது!. கறந்தவரை மாடு வளர்த்தேன் பிறகு அதை விற்று பணம் பார்த்தேன் என்பது எதற்காக?கொன்று திங்காமல் கொஞ்சுவதற்காகவா?!.பூனைக்குட்டியல்ல, பெருச்சாளியே வெளியே(உங்களின் உள்நோக்கம்) வந்து விட்டது!

   Delete
  3. கணேஷ்வேல்10 March 2015 at 11:57

   Anonymous:

   ”என் விருப்பத்திற்கெதிராக எதைச் செய்யக்கூடாதோ அதைச் செய்யுமாறு பணிக்கப்பட்டேன், அரசியல் சட்டம் எழுத அவர்களுக்குக் கிடைத்த ஒரு சவாரிக் குதிரைதான் நான்”

   என்று கூறிய அம்பேத்கர் பின்னாளில்

   ”அரசியல் சட்டத்தை எழுதிய நானே அதை எரிப்பதிலும் முதல் நபராய் இருப்பேன்”

   என்றார்.

   இந்துப் பெண்களுக்கான சமச் சொத்துரிமை தொடர்பான மசோதாவைத் திருத்தவும், தள்ளி வைக்கவும் முயன்ற நேரு அரசாங்கத்திற்கு எதிராக தன் சட்ட அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார் அம்பேத்கர்.

   இவ்வாறாக இந்துத்துவ பார்ப்பனியத்தை 'Directive Principle' ல் சேர்க்க வைத்தது அன்று கோலோச்சிய பார்ப்பனியமே !

   அன்றைய பார்ப்பனிய ஆதிக்கத்தையும் மீறி, அரசியல் சட்டத்தின் வாயிலாக அம்பேத்கர், தன்னால் முடிந்த அளவு மக்களுக்கு நன்மைகளைச் செய்தார் என்பதுதான் உண்மை. ஆத்திரப்பட்டு அவர் அப்போது வெளியேறியிருந்தால் அந்த கொஞ்சம் நஞ்சம் நன்மை கூட கிடைத்திருக்காது என்பதும் உண்மை.

   அரசியல் சட்டம் பார்ப்பனியத்தின் இன்னொரு முகம் என்பதால்தான், தந்தை பெரியார் 'அரசியல் சட்ட எரிப்பு' போராட்டம் நடத்தினார். சாகும் தருவாயில் 'உங்களையல்லாம் சூத்திரர்களாக விட்டு விட்டு போகப்போகிறேனே' என கண்ணீர் விட்டார்.

   நீங்கள் என்னவோ, அம்பேத்கர் சொன்னால் அனைத்தையும் செய்பவர் போல் பாசாங்கு செய்கிறீர்களே, எப்போதிருந்து வந்தது தங்களின் 'அம்பேத்கர் பாசம்'?

   'ஆடு நனைகிறதே என ஓநாய் அழுவது' போல் உள்ளது தங்கள் நிலை.

   Delete
  4. அனானிமஸ் அவர்களே நான் எனது உள்நோக்கங்களை மூடி மறைத்துக்கொண்டு கருத்துக்களை சொல்லிக்கொண்டு இருக்கவில்லை.சொல்லப்போனால் ஆரிய இனத்தவரான நீங்கள்தான் உங்களை உங்கள் பெயரை மறைத்துக்கொண்டு அனானிமசாகவும் ஏதோ ஒரு ஜாதியாக சொல்லிக்கொண்டு என் பதிலுக்கு பிறகுதான் நீங்கள் ஜாதியாக இல்லை இனமாக இருக்கிறீர்கள் என்று தெளிவடைந்து இருக்கிறீர்கள். மாட்டை வளர்ப்பவர்கள் அதைவிற்று விடுவது அது மாமிசமாக ஆகட்டும் உணவாக ஆகட்டும் என்று கருதி விற்ப்பது இல்லை. பராமரிக்க முடியாத போதோ அதனால் பலன் இல்லாத போதோ அதை விற்று பணமாக மாற்றிகொள்கிறார்கள். இதுதான் உங்களுக்கு பதில். அடுத்தது, புத்தர் மாமிசம் உட்கொண்டார் என்பது அல்ல இங்கு பிரச்சனை. தற்போது பசுவதை தடை வேண்டும் என்று விரும்புகிறார்களே அவர்களின் முன்னோர்களான ஆரியர்கள் யாகம் வளர்த்து அதில் பசுவை தள்ளி கொன்று பிறகு அதை புசித்தவர்கள்தான் என்பதுதான் இங்கு குறிப்பிடத்தகுந்தது. ஆடும் எருமையும் ஆரியர்களான உங்களுக்கு புனிதாமானது இல்லை என்று குறிப்பிட்டீர்களே அது எங்களுக்கு நன்றாகவே தெரியும், இருந்தாலும் மீண்டும் ஒருமுறை நீங்களே வாக்குமூலம் தந்ததுக்கு நன்றி. இன்னொன்று என்னவென்றால் பொதுவான ஜீவகாருன்யத்தில் உங்களுக்கு மாறுபட்ட கணோட்டம் உள்ளது என்பது தெளிவாகிறது. ஆடும் எருமையும் கொல்லப்பட்டால் என்ன பராமரிக்கப்பட்டால் என்ன? அதாவது ஆடு எருமை பொருத்தவரையில் ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்கிற கதைதானே உங்களின் அலட்சியமான கருத்துபோக்கில் தெரிகிறது. எங்களின் உணவு விஷயத்தில், கைபர் போலான் கணவாய் வழியாக எங்கள் நிலத்துக்குள் உட்புகுந்த ஆரியர்களான நீங்கள் தலையிடுவது எங்களின் இயலாமை. ஆனாலும் உங்களை, எங்களுக்கு எதிரான உங்களின் செயல்களை தடுக்க இன்றும் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம். பசுவதை தடுப்பு சட்டம் ஞாயமானது என்பது உங்களுக்கு ஞாயம் எங்களுக்கு அநியாம். நீங்கள் எங்களை சக இந்தியன் அல்லது சக மனிதன் என்றும் பாராமல் எங்களின் முன்னெற்ற பாதையில் தடைகளாக இருந்துக்கொண்டும் முடிந்த மட்டும் வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் எங்களை தாக்கிக்கொண்டும் இருந்து வருகிறீர்களே, சக மனிதனுக்கு நீங்கள் அன்பை காட்டுவதில்லை. ஆனால் உங்களுக்காக நாங்கள் பசுவை புனித தெய்வமாக கொண்டாடவேண்டும் அல்லவா? பசு ஆடு எருமை இவற்றின் சுவையை பற்றி சொல்கிறீர்கள். அது எங்களை விட உங்களுக்குத்தான் நன்றாக தெரியும் என்று உங்களின் கருத்தொட்டதிலிருந்து எண்ணுகிறேன். இந்திய அரசியலமைப்பில் பசு வதை தடுப்பு மசோதாவை திடிரென்று பின்பக்க கதவு வழியாக உள்ளே வருவதை போல அறிமுகப்படுத்தியது பண்டிட் தாகூர் தாஸ் பார்கவா என்பவர். அதை அவர் அடிப்படை உரிமையாக கொண்டுவரவேண்டும் என்று துடித்துள்ளார். நாம் அவரைப்பற்றி குறைசொல்லுவோம். எங்களை பொருத்தவரையில் எங்களின் உணவு அது நல்லதோ கேட்டதோ அதை நாங்களே பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் சட்டம் போட வேண்டாம். நீங்கள் உங்கள் ஆரியக்கூட்டத்தாருடன் உங்களின் வெளிநாட்டு பயணத்தை எங்கள் நாட்டிலிருந்து எப்போது தொடங்கப்போறீங்க அனானிமஸ் அவர்களே?

   Delete
 12. செல்வமுத்துக்குமார்24 March 2015 at 13:32

  பார்போற்றும் சோழ சாம்ராஜ்ஜியத்திலே இப்படி பசுக் கொலையை ஆதரித்திருந்தால்(+இந்த மண்ணின் தர்மமான மனுதர்மத்தை இப்போது போல நீ கேலி செய்து பேசியிருந்தால்)உன் நாக்கை இழுத்து வைத்து நறுக்கியிருப்பார்கள்+எழுதிய கையையும் வெட்டியிருப்பார்கள்!.அதற்கு மேலும் உன் காலித்தனம் தொடர்ந்தால் உன்னை சுக்குமாந்தடியால் அடித்து,சூடு போட்டு,துருப்பிடித்த அணிகலங்கள் அணிவித்து, பிணத்திற்கு போத்திய துணிகளைப் போத்தி மலx xள்ள, சாவுக்கு சேதி சொல்ல,பிணத்தை புதைக்க+எரிக்க, செத்த மிருகங்களின் தோலுரிக்க வைத்திருப்பார்கள். இன்று ஜனநாயகம்,பேச்சுரிமை,எழுத்துரிமை இருக்கிறது என்ற திமிரில்,கொழுப்பில் உன்னைப் போன்ற தடிப்பசங்களால் இப்படியெல்லாம் பேச,எழுத முடிகிறது!.

  ReplyDelete
  Replies
  1. அடேங்கப்பா செல்வமுத்துகுமார்

   தீர்க்கமான தெளிவான பதிலுரைகளை எதிர்பார்த்து காத்திருந்தால் என்னை ஏமாற்றி விட்டீர்களே செல்வமுத்துகுமார் வார்த்தை வீச்சில் உங்கள் கவனம் சிதறி விட்டதாக எண்ணுகின்றேன். அதனால்தான் உங்களுடைய சொல்லோட்டத்தில் கருத்து பிழை மலிந்து காணப்படுகின்றன செல்வமுத்துக்குமார் அவர்களே !

   1.சோழர்கள் என்றுமே சனாதன தர்மத்தை ஏற்றவர்கள் அல்ல ஆகையால் ஆரியர்களின் மனுதர்மத்தை இந்த மண்ணின் தர்மமாக அவர்கள் ஒருநாளும் பறைசாற்றிடவில்லை.

   2.உங்கள் மனுதர்மத்தில் சொல்லப்பட்ட தண்டனைகள் எதையும் எங்கள் மன்னர்கள் நீங்கள் சொன்ன காரணத்துக்காகவும் மற்ற வேறு எந்த காரணத்துக்காகவும் பயன்படுத்தியது கிடையாது.

   3. உங்களுக்கு சகிப்பு இல்லை என்பதால் எங்கள் மன்னர்களுக்கு சகிப்பு கிடையாது என்று கருதிவிட்டீர்களா? உண்மையில் எங்கள் மன்னர்கள் சகிப்பு இல்லாதவர்களாக இருந்திருந்தால் இன்று ஆரியர்கள் எங்கள் மண்ணில் இருத்திருக்கவே முடியாது. எங்கள் மன்னர்கள் சகிப்புடன் இருந்தார்கள் என்பதை விட ஆரியர்களிடம் ஏமாளிகளாக இருந்து இருக்கிறார்கள்.

   4. ஜனநாயகம் பேச்சுரிமை எழுத்துரிமை இவை அனைத்தும் எங்கள் மன்னர்களின் காலத்திலும் இருந்துள்ளன. அதற்கு அடையாளம் தான் ஆரியர்களின் பரம்பரை வாரிசான நீங்கள் இன்று இவ்வாறு இருக்கிறீர்கள். உண்மை இப்படி இருக்க எங்கள் மன்னர்களை கொலைக்கார மன்னர்களாக சித்தரிக்க முயன்று ஆனாலும் தோற்றுவிட்டீர்கள்.

   5. ஜனநாயகம் பேச்சுரிமை எழுத்துரிமை இருப்பதால்தான் நீங்களும் இவ்வாறு எழுத முடிகிறது என்பதை எண்ணிப்பாருங்கள். இருக்க இடத்தை கொடுத்தால் அவன் மடத்தையே பிடித்தானாம் அவன் கதை போல் உள்ளது உங்கள் கதை. அண்டி பிழைக்க வந்த உங்கள் முன்னோர்களுக்கு எங்கள் மன்னர்கள் இங்கே இருங்கள் என்று இடத்தை கொடுத்தார்கள் இருக்க இடம் கிடைத்ததும் எங்கள் நாட்டையே உங்கள் முன்னோர்கள் பிடித்துக்கொண்டார்கள் அதனால்தான் நீங்கள் எங்கள் நாட்டுக்குள்ளேயே இருந்துக்கொண்டு எங்களையே ஏறி மிதிக்கிறீர்கள் !

   6. என் மீது இந்த அளவுக்கு வெறுப்பை கட்டும் நீங்கள் உண்மையில் ஜீவகாருண்யம் கொண்டவராக தெரியவில்லை. உணர்ச்சி வசப்பட்டு உங்கள் முகத்திரையை நீங்களே கிழித்துக்கொண்டீர்களே.

   நான் முன்பு சொன்னதை மீண்டும் சொல்கிறேன் :-

   "சக மனிதனுக்கு நீங்கள் அன்பை காட்டுவதில்லை. ஆனால் உங்களுக்காக நாங்கள் பசுவை புனித தெய்வமாக கொண்டாடவேண்டும் அல்லவா?"

   Delete
  2. This shows your mind set.

   Delete
 13. கோ மடத்தில்
  வயதாகி வதைபடும்
  மாடுகள்
  புலம்பிகொண்டிருந்தன
  எனக்கு எப்ப
  காலம் வருமோ

  ஆடுகள் ஆயிரம் ஆயிரமாய்
  ஆர்பாட்டம் செய்தன
  ஆடுவதை தடுப்பு சட்டத்தை
  அமுல்படுத்த கோரி

  அசைவம் அழிப்பது
  அவாளின் இலட்சியம்
  புலி பசித்தாலும்
  புல்லை திண்ணாதாம்
  புலிகள் கொலைகள்…
  புதிய தகவல்கள்.

  ஆய்வக விலங்குகள்
  கட்டுபாடு குறித்த
  அறினர்களின் ஆலொசனைக் கூட்டத்தில்
  “அவசரப்பட்டு யாரையும் எதிர்த்து
  அறிக்கை விடாதிர்கள்
  அட்டை படம் அறுத்து
  உறுப்புகள் உற்றூ நோக்கி
  அறிவியல் வளர்க்கும்
  அதிசயம் பற்றிய
  இரகசியம் அம்மையிடம்
  இருந்தாலும் இருக்கலாம்.”

  என்ன நடக்கிறது
  இங்கு
  ஏகலைவர்களின் கட்டைவிரல்
  வெட்டும் வேலையோ
  எல்லாம் அந்த
  தலையில் பிறந்தவர்கலுக்கே வெளிச்சம்….

  —- பா.எழில் அறிவன்.

  ReplyDelete
 14. கண்ணப்பன்3 April 2015 at 00:34

  1.பொற்காலம் என்று கொண்டாடும் தமிழினவாதிகள் தமது தமிழ்ப் பெருமிதத்தினுள்ளே,வெள்ளாளப் பார்ப்பனக் கூட்டு ஆதிக்கத்தையும் தீண்டாச் சேரியையும் கூச்சமின்றி மறைத்துக் கொள்கிறார்கள்.உலகின் மிக உயரமான கோபுரங்களைக் கொண்ட, பழமையான பெருங்கோவில்களில் தஞ்சைப் பெரியகோவிலும் ஒன்று. இன்றிருப்பதைப் போன்ற துரிதக் கட்டுமானப் பொறி நுட்பங்கள் ஏதும் வளர்ந்திராத, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கட்டிடப் பொறியியலில் மாபெரும் சாதனையாகக் கட்டப்பட்டதுதான் இந்தக் கோவில். மழைபெய்தால் நீர்க்கசிவு ஏற்படாதிருக்கப் பதிக்கப்பட்டிருக்கும் நுண்குழாய்கள், ஒரே கல்லினால் ஆன மிகப் பெரும் நந்தி எனப் பல்வேறு பிரம்மாண்டமான பொறியியல் சாதனைகளை எல்லாம் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே சாதித்துக் காட்டிய மாமன்னன் ராஜராஜன் போற்றிக் கொண்டாடப்படுகிறான். கூடவே அவனது ஆட்சியும் ’தமிழகத்தின் பொற்கால ஆட்சி’என்று புகழப்படுகிறது.தஞ்சைப் பெரியகோவிலின் கலைநுட்பமும், பொறியியல் சாதனையும் மனிதகுல வரலாற்றில் மகத்தான படைப்புகள்தான். அதே போல எகிப்தின் பாரோக்கள் கட்டிய பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும்கூட மனித வரலாற்றின் பெரும் சாதனைகள்தான். எனினும் அவை பொற்காலங்களாகக் கொண்டாடப்படுவதில்லை. கலைத்திறனைப் போற்றுவது என்பது வேறு. அரசாட்சியைக் கொண்டாடுவதென்பது வேறு.பெரியகோவிலை எழுப்பிய ராஜராஜனின் ஆட்சியில்தான் குடவோலை முறை எனும் ஜனநாயகமுறை செழித்திருந்ததாகவும், வேந்தன் முன்னெப்போதும் இல்லாத வகையில் நிலங்களை அளந்து முறைப்படுத்தி ’உலகளந்தான்’ எனும் பெயர் பெற்றதாகவும் கூறி ’தமிழனின் பொற்கால ஆட்சி’ என கருணாநிதி முதல் தமிழினவாதிகள் வரை பலராலும் போற்றப்படுகிறது, ராஜராஜனின் ஆட்சி.
  அன்றாடங்காச்சிகளாக வாழும் அப்பாவித் தமிழர்கள் கூட இப்பெருமிதக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ’கடாரம் கொண்டான்’ என்றும் ’சோழ சாம்ராச்சியம்’ என்றும் காதில் கேட்டமாத்திரத்தில் ’நம் தமிழனின் பெருமை’ என்று பெருமிதத்துள் வீழ்கின்றனர்.அடிமை உழைப்பிலும் போர்க் கொள்ளையிலும் உருவான பெரிய கோவில்!.

  ReplyDelete
 15. கோமாமிசம் உண்ணுமாறு வேதங்கள் சொல்லவில்லை
  http://agniveer.com/no-beef-in-vedas-ta/

  ReplyDelete
 16. Fabrication of aryan invasion theory
  https://www.youtube.com/watch?v=xhp3aDcV1AY

  ReplyDelete
 17. Aryan Invasion Theory used for Divide and Convert : Exposed by fresh Genetic research
  http://www.ibtl.in/news/exclusive/1625/aryan-invasion-theory-used-for-divide-and-convert-:-exposed-by-fresh-genetic-research/

  http://www.thehindu.com/news/national/article2704716.ece

  ReplyDelete