தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday 9 April 2015

20 தமிழர் படுகொலை.. "காட்டு விலங்காண்டித்தன" ஆந்திரா போலீசாரை கைது செய்க

சென்னை: ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆந்திரா காவல்துறை, வனத்துறை அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும் என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.



இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள், செம்மரங்களை வெட்டியதாகக் கூறி, ஆந்திர அரசின் காவல்துறையும், வனத்துறையும் அவர்களைச் சுட்டுக் கொன்றிருக்கும் செய்தி நம் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டுவதாக இருக்கிறது. மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் இந்தக் காட்டு விலங்காண்டித்தனத்தைத் திராவிட இயக்கத் தமிழர் பேரவை மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாகத் தலையிட்டு இக்கொடுமையைத் தட்டிக் கேட்க வேண்டும். உச்ச நீதிமன்றம் தானாகவே இரு மாநிலங்களுக்கு இடையிலான வழக்காக இதனை எடுத்து விசாரிக்க வேண்டும்.

தமிழ்நாட்டு மக்களின் உணர்ச்சிகளைக் கிளறும் செயலாக இது அமைந்திருக்கிறது. தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெற்றிருக்கும் சாலை மறியல்கள், கொடும்பாவி கொளுத்துதல் போன்ற போராட்டங்கள் நூற்றுக்குநூறு நியாயமானவை.

திராவிட இயக்கத் தமிழர் பேரவையினரும் இந்த கொடுஞ்செயலுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தில் இப்போது அரசு இருக்கிறதா?, தமிழக முதலமைச்சர் என்று ஒருவர் இருக்கிறாரா? என்று ஐயப்படும் நிலைதான் இன்று உள்ளது. தமிழர்களை கொன்ற துப்பாக்கி வேட்டு சத்தமாவது, தமிழக அரசை உலுக்கி எழுப்பும் என்று நம்புகிறோம்.

உரிய மேல்நடவடிக்கை ஏதும் இல்லை எனில், தமிழர்களை சுட்டுக் கொன்ற காவல்துறையினரும், வனத்துறையினரும் இடைநீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்படவில்லை எனில், தமிழகம் முழுவதும் அனைத்து கட்சிகளும் போராட்டத்தில் இறங்குவதை தவிர வேறுவழியில்லை என்னும் நிலை உருவாகும்.

இவ்வாறு சுப.வீரபாண்டியன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

5 comments:

  1. விலங்கினும் கீழான செயல் ஐயா
    உரியவர்கள் தண்டிக்கப் பட்டே ஆக வேண்டும்

    ReplyDelete
  2. Criminals & Wicked people always support other Criminals & Wicked people!.

    ReplyDelete
  3. இளம்வழுதி12 April 2015 at 00:10

    ரெட்டி மற்றும் கம்மா நாயுடு சாதியைச் சேர்ந்த கும்பல்களே ஆந்திராவின் அரசியல் செல்வாக்கைக் கைப்பற்றுவதற்கான கழுத்தறுப்புப் போட்டியில் இறங்கியுள்ளன.பலமான சமூக பொருளாதார செல்வாக்கு மிக்க பழைய நிலபிரபுக்களான இவர்கள்,ரியல் எஸ்டேட் முதல் கணிம வளக் கொள்ளை வரை அனைத்து விதமான மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு தமக்கென சொந்தமாக ஆயுமேந்திய குற்ற கும்பல்களையும் பராமரித்து வருகின்றனர்.இயற்கை வளத்தைச் சூறையாட அரசியல் குற்ற கும்பல்களுக்கு இடையே நடக்கும் போட்டியின் விளைவே இப்படுகொலைகள். இங்கே மணற் கொள்ளையர்களும்,வைகுண்டராசனும், பி.ஆர்.பி.யும் எப்படி தமிழகத்தை காயடித்து கோடிகள் பலவற்றை சுருட்டி அதிகாரத்துடன் உலா வருகிறார்களோ அது போலவே ஆந்திரத்து கம்மா நாயுடு,ரெட்டி முதலாளிகள் உலா வருகின்றனர். இவர்கள் போட்டிக்கு தமிழக தொழிலாளிகள் பலிகடா ஆக்கப்பட்டிருக்கின்றன.தமிழகத்தின் ஆறுகளுக்கும், ஆற்று மணலுக்கும்,கிரானைட் மலைகளுக்கும் மத்திய இந்தியாவின் தாது மலைகளுக்கும் நேர்ந்தது என்னவோ அதுவே சேஷாச்சலம் காட்டிற்கும் நடக்கிறது.இந்த இறப்புகள் ஏற்படுத்தியிருக்கும் மனிதாபிமானத்தின் ஆயுசு சொற்பமானது–நாம் இதன் பின் உள்ள அரசியலைப் புரிந்து கொள்வதோடு இச்சாவுகளுக்கான ஆணிவேரைப் பிடுங்கியெறிய வேண்டும்.வேலூர்,தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களின் மலைப் பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் உள்ளூர் பிரமுர்களில் பலர் செம்மரக் கடத்தல் கும்பல் படியளந்த இரத்தப்பணத்தை ருசித்தவர்கள் தான். மக்களைக் காப்பாற்றுவதைத் தனது கடமையாகச் சொல்லிக் கொள்ளும் காவல் துறை தனக்கென விதிக்கப்பட்ட கடமையை ஆற்றாததோடு மாஃபியா கும்பலின் அங்கமாக மாறி மக்களைக் கொல்லும் கொலைக் கருவியாக சீரழிந்துள்ளது. அதுபோல சுபவீ,வீரமணி போன்ற தேங்காய் மூடி பாகவதர்கள் பெரிதும் பொருட்படுத்தத் தக்கவர்கள் இல்லையென்றாலும்,வரும் தேர்தலை மனதில் கொண்டு திமுகவிற்கு சில வோட்டுகள் வாங்கிவிடலாம் என்ற நப்பாசையில் எழவு வீட்டிலும்(ஓட்டை)பொறுக்கித்தின்ன முயலும் அவர்களது சமூக/அரசியல் கழிசடைத்தனம் காறித் துப்பத் தகுந்தது என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.ஒடுக்கப்பட்ட தொழிலாளிகள் உயிரையும்,நாட்டின் இயற்கை வளத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று இவர்களுக்கு உண்மையில் அக்கறை இருக்குமானால் இங்கு மேடை முழக்கம் செய்வதோடு நில்லாமல் சேஷாச்சலம் காட்டிற்குச் சென்று (ரெட்டி,கம்மா நாயுடுக்களின் மாஃபியா&போலீஸ் தோட்டாக்களுக்கு அஞ்சாமல்)போராடத் தயாரா?

    ReplyDelete
    Replies
    1. இளம்வழுதி ஏதோ ஒரு மாபெரும் ஆய்ந்தறியும் அறிஞரை போல கருத்து கூறத்தொடங்கி முடிக்கும்போது சாதாரண ஆண்டியைப்போல முடித்துக்கொண்டார். வருத்தமாக இருக்கிறது. சுபவீ வீரமணி ஆந்திர கொலைகளத்துக்கு போக வேண்டும் என்று விரும்புகிறாரே முதலில் இவருக்கு மனம்கவர்ந்த தலைவர்களோ தலைவியோ போவார்களா என்று எண்ணவேண்டும். அவ்வாறு எண்ணாமல் அதற்கு அக்கறை காட்டாமல் திராவிடர்களை தூற்றுகிறார். திராவிடர்களை தூற்றுகிறாரே அப்படிஎன்றால் நிச்சயம் இவர் ஆரியராக இருக்கவேண்டும் அல்லது ஆரியர்களுக்கு பாத பூஜை செய்யும் அடிமையாகத்தான் இருக்கவேண்டும் என்பது திண்ணம். திராவிடத்தலைவர்களை சேஷாச்சலம் காட்டிற்குச் சென்று (ரெட்டி,கம்மா நாயுடுக்களின் மாஃபியா&போலீஸ் தோட்டாக்களுக்கு அஞ்சாமல்)போராடத் தயாரா? என்று கேட்கிறாரே. அவர்கள் ஏன் போகவேண்டும்? அங்கு போய் எந்தமாதிரியான போராட்டத்தை நடத்தவேண்டும் என்று இவர் விரும்புகிறார்? வெறும் கையை வீசிக்கொண்டு போக வேண்டுமா துப்பாக்கி என்று ஏதாவது எடுத்து கொண்டு போகவேண்டுமா? இவர்கள் இருவர்மட்டும் போனால் போதுமா உடன் ஒரு படையும் போகவேண்டுமா? பத்தோடு பதினொன்று அத்தோடு நானும் ஒன்று என்று அவர்களுடன் இளம்வழுதியும் வருவாரா? இவர் வருவாரா அல்லது இவர்சார்பாக வேறு எவரையாவது இளம்வழுதி அனுப்பிவைப்பாரா? இவர்கள் காட்டுக்குப்போய் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கும்போது இளம்வழுதி மக்களிடம் விழிப்புணர்ச்சி பிரச்சாரம் செய்யும் மேடையை பார்த்துக்கொள்வாரா? இளம்வழுதி யாரையோ திருப்தி செய்வதற்கு இப்படி வசை பாடும்போது திராவிட தலைவர்களான எங்கள் சுபவீயும் வீரமணியும் தி மு க விற்கு ஓட்டு விழவேண்டும் என்று எண்ணக்கூடாதா? தி மு க விற்கு ஓட்டு கேட்பது தவறா? நாட்டை ஆள்பவர்கள் நேர்மையாகவும் நேர்த்தியாகவும் ஆளாததால்தான் அவ்வாறு ஓரளவுக்கேனும் தி மு க நல்லாட்சி தரும் மக்களுக்கு பாதுகாப்பை தரும் என்று எண்ணி உழைக்கக்கூடாதா? அவ்வாறு உழைப்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அங்கிகரித்துள்ளதே, அதற்கு இளம்வழுதியின் பதில் என்ன? சுபவீ,வீரமணிபெரிதும் பொருட்படுத்தத் தக்கவர்கள் இல்லை என்று சொன்னபின்னரும் அவர்களை வசைபாடுவது ஏன்? ஆனாலும் இளம்வழுதி அவர்களை வசை படுகிறார் என்றால் இளம்வழுதிக்கு உளப்பூர்வமாகவே தெரிகிறது அந்த திராவிடத்தலைவர்கள் இருவரும் பொருப்படுத்ததக்கவர்கள்தான் என்று! இளம்வழுதி ஆந்திர கொலைகளத்துக்கு போய் போராடுங்கள் என்று யாருக்கு சொல்லவேண்டுமோ அவர்களுக்கு சொல்லவேண்டும் அவர்களை விட்டுவிட்டு திராவிடத்தலைவர்களை ஏளனம் செய்வது நியாமாகாது. அவ்வாறு யாரை அழைக்கவேண்டுமோ அவர்கள் ஸ்ரீரங்கத்தில் 1500 ஒட்டுக்களைமட்டும் வாங்கி ஏமாற்றம் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் பொறுப்பில்லாமல். புரட்சியே ஒரே வழி என்பவர்கள் புரட்டர்களாகிப்போனதால்தான் ஆந்திரத்திலே தொழிலாளர்கள் சர்வ சாதாரணமாக கொல்லப்பட்டார்கள் என்பதை இளம்வழுதி நினைவில் கொள்ளவேண்டும். ஆந்திரா அரசு அனுமதி கொடுத்தபின்தான் சுட்டோம் என்று ஒரு செய்தி. அந்த அரசு போல் ஒட்டுமொத்த இந்திய அரசுகளும் ஏதோ ஒவ்வொரு காலத்திலும் அதைப்போன்று அனுமதியை போலிசுக்கு கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது என்பதை தமிழ் நாட்டு மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். ஆகவே மக்கள் இன்னும் இன்னும் அதிகம் விழிப்படைந்து கேள்வி மேல் கேள்வி கேட்டு அவர்களை ஆளும் அரசுகளை நன்றாக நடத்திக்கொள்ளவேண்டும். அது மூலம்தான் மக்கள் இதுபோன்ற இன்னல்களுக்கு ஆளாகாமல் அமைதியாக வாழ்ந்திட முடியும். அதற்குத்தான் எங்கள் திராவிடத்தலைவர்கள் மேடையில் முழங்குகிறார்கள் என்பதை நாட்டு மக்கள் அறிந்துக்கொண்டு அவர்களின் தலைவர்களின் கருத்துக்களை ஊன்றி கவனித்து அவர்களின் வழிகாட்டுதலோடு வாழ்வை அமைத்துக்கொள்ளவேண்டும் என்று இதன்மூலம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

      Delete
  4. உழைப்பவர்கள்தான் உதைபடுகிறார்கள் வதைபடுகிறார்கள் கொல்லப்படுகிறார்கள். உழைப்பவர்களுக்கான கட்சியை நடத்துகிறோம் என்கிறவர்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். என்ன செய்வது? எப்படி செய்வது? எங்கிருந்து செய்வது? அதை எவ்வாறு பொருந்த செய்வது? - என்று இன்றுவரை அவர்கள் ஆராய்ச்சி செய்துகொண்டு இருக்கிறார்கள்! அவர்கள் ஆராய்ச்சி செய்வது உண்மையென்றால் இந்நேரம் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகளைப்போல உழைப்பவர்கள் கிளம்பி ஆட்சி அமைத்திருப்பார்களே! உழைப்பவர்கள் ஆட்சி அமைந்திருந்தால் இப்படி கொல்லப்பட்டு சிதறிகிடக்கும் காட்சியை காண நேரிட்டு இருக்குமா? சொக்கன் வரமாட்டான் ஆயிரம் பொற்காசு எனக்கில்லை என்று புலம்பிய தருமியைப்போலத்தான் உழைப்பவர்கள் அவர்களின் நிலையை எண்ணி எண்ணி புலம்புகிறார்கள் ! சரியான வழிகாட்டல் இல்லைப்பா சரியான பாதை அதனால் தெரியலைப்பா அதான் பாவி கொன்னுப்போட்டான். அவர்கள நம்பி குடும்பம் இருக்கே அவர்களுக்கு யார் ஆறுதல் சொல்லமுடியும்? ஆறுதல் யாரும் சொல்லலாம். ஆனா உண்மையாகவே ஆறுதலாக இருந்தவர்கள்தான் செத்தார்களே. இனி உண்மை ஆறுதல் எங்கே எங்கே !!

    ReplyDelete