மேலே
உள்ள மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவைதாம். ஆனால் இவை மூன்று குறித்துத்தான்
இன்று நாடே பேசிக் கொண்டிருக்கிறது.
1982
ஆம் ஆண்டு, இரண்டே நிமிடங்களில் தயாரித்து விடலாம் என்ற கவர்ச்சியான விளம்பர
வரிகளோடு இந்தியாவிற்குள் வந்தது மேகி நூடுல்ஸ். ஒரு தலைமுறை முழுவதும் தின்று
தீர்த்தபின், 33 ஆண்டுகள் ஓடி விட்ட நிலையில், இன்று அதில் கலந்திருக்கும் ரசாயணக்
கலவை குறித்தெல்லாம் கண்டுபிடித்து அரசு அதனைத் தடை செய்துள்ளது. அவற்றை முழுவதுமாக அழிக்க ஆறு மாதம் ஆகலாம்
என்கின்றனர். இரண்டே நிமிடங்களில் தயாரிக்கலாம் என்றனர். இப்போது அழிப்பதற்கு ஆறு
மாதம் கேட்கின்றனர்.
உடல்
நலம் குறித்து இன்றைய அரசு நிறையவேதான் கவலைப்படுகிறது. நூடுல்சை ஒழித்த கையோடு,
மக்கள் உடல் நலம், மன நலம் கருதி யோகா பயிற்சியை நாடு முழுவதும் தொடங்கி விட்டனர்.
ஜூன் 21 - யோகா நாள் என்று அறிவித்து, வெளிநாட்டுப் பயணத்தைக் கூட ஒத்திவைத்து
விட்டு, பிரதமர் மோடியே நேரடியாக வந்து கலந்து கொண்டுள்ளார். நாடெங்கும் இப்போது
யோகா பயிற்சிதான். இனிமேல் மருத்துவமனைகளை எல்லாம் கூட மூடி விடலாம். யாருக்கும்
உடம்புக்கு இனி எதுவும் வராது. 'சகல ரோக நிவாரணி' யோகா இருக்கும்போது (முத்தூட்
பைனான்ஸ் மாதிரி)
இனி என்ன 'டென்ஷன்?'.
யோகாவை
நாம் கேலி செய்யவில்லை. அது நல்லது என்றுதான் மருத்துவர்கள் உட்பட அனைவரும்
கூறுகின்றனர். ஆனாலும் அதற்கு அரசே கொடுக்கும் அளவற்ற விளம்பரமும், அதனை
வணிகமயமாக்கிக் கொண்டே போவதும், பல்வேறு ஐயங்களை எழுப்புகின்றது. இந்து மதத்தின் ஓர் அங்கம் போலக் காட்டப்பட்ட யோகா, இப்போது
அதிலிருந்து விலக்கிக் காட்டப்படுகிறது.
யோகாவைப்
பற்றிப் பல ஆய்வுகள் உள்ளன. தமிழர்களின் பழைய 'ஓகக் கலைதான்' ஆரியர்களால் திருடப்பட்டு, இன்று யோகாவாக அறிமுகப் படுத்தப் படுகிறது என்பது ஒரு கூற்று. தமிழ் நாட்டில்
வாழ்ந்த சித்தர்கள் 18 பேரில் 11ஆவதாகக் கருதப்படும் பதஞ்சலிச் சித்தர் யோகம் பற்றி
நிறையக் குறிப்பிட்டுள்ளார். அதற்குப் பதஞ்சலி யோகம் என்று பெயர். அவர் எட்டு வகை
யோகங்களைப் பற்றிக் கூறுகின்றார்.
இமயம்,
நியமம் என்று தொடங்கும் அந்த எட்டு வகைகளில் மூன்றாவதாக இடம் பெற்றுள்ளது ஆசனம்.
நான்காவது பிராண யாமம், ஏழாவது தியானம். இறுதி நிலை சமாதி.
ஆசனங்களில்
பல வகைகள் உள்ளன. மொத்தம் 20 வகை என்று சிலரும், 34 வகை என்று சிலரும், இன்னும்
கூடுதல் என்று சிலரும் கூறுகின்றனர். எல்லா ஆசனங்களையும் எல்லோரும் செய்துவிட
முடியாது. அவரவர் உடல் தன்மை, மன நிலை பொருத்து, தேர்ந்தவர்களின் வழிகாட்டுதலோடு
செய்வதுதான் சரியானது. ஆனால் இன்று அதற்குக் கொடுக்கப்படும் அதிக விளம்பரம், அது
மெதுவாக வணிக மயமாகிக் கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகின்றது. இன்றைய பா.ஜ.க.
அரசுக்கு அதனை இந்து மதத்தோடு பிற்காலத்தில் கொண்டு வந்து சேர்த்து விடும்
நோக்கமும் கண்டிப்பாக இருக்கும். பாபா ராம்தேவ் போன்றவர்கள் இன்னும் பல
கோடிகளுக்கு அதிபதி ஆக வேண்டாமா என்ன?
எட்டாவதாக
அமைந்துள்ள சமாதி நிலை என்பது ஜீவ முக்தி நிலை என்கின்றனர். ஆனால் இன்றுவரையில் எந்த சாமியாரும், தங்களுக்கு உடல் நலிவு
ஏற்படும்போது, அட்டமா சித்திகளால் குணம் பெறவில்லை. ICUவில்தான் மருத்துவமனைகளில்
அனுமதிக்கப் படுகின்றனர். ரமண மகரிஷி, புட்டபர்த்தி சாய்பாபா, குன்றக்குடி
அடிகளார் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றது ஏன்? யோகம், தியானம்
எல்லாவற்றிலும் வல்லவரான விவேகானந்தர் 39 வயதில் இறந்துபோய் விட்டாரே, எதனால்?
நம்
நாட்டில் ஏழ்மையிலும், வறுமையிலும் இருப்பவர்கள்தான் மிகுதி. அவர்கள் அனைவரும்
உடல் உழைப்பாளிகள். அவர்களுக்கெல்லாம் யோகம், பிராண யாமம் போன்றவைகளை விட, உணவும்,
ஊட்டச் சத்தும்தான் முதல் தேவைகள். அவற்றைக் கொடுக்க முடியாத அரசு, பேசாமல் யோகம்
செய்யுங்கள் என்கிறது. மௌன விரதத்தையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்து விடலாம்.
எதனையும் கேட்காமலேயே செத்துப் போய்விடுவார்கள்.
இவைகளைப்
பற்றியெல்லாம் அரசு கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வதற்கு வேறு அரசியல் காரணங்களும்
இருக்கலாம். லலித் குமார் கோடிக்கு, மத்திய அமைச்சர் சுஷ்மா காட்டிய
'மனிதாபிமானம்' இருக்கிறதே,
அது பற்றி அதிகம் பேசாமல், நூடுல்ஸ், யோகா பற்றி மக்கள் மிகுதியாகப் பேசட்டும்
என்னும் நோக்கமும் இருக்கலாம்.
லலித்
மோடி எவ்வளவு நல்லவர்! 1700
கோடி அளவுக்கு அன்னியச் செலவாணியில் குற்றம் இழைத்தவர். இங்கே வழக்கு
நடக்கும்போது, இங்கிலாந்துக்குப் போய்த் தங்கிவிட்டு இங்கே வர மறுப்பவர்.
அவருக்குப் போர்ச்சுகல் போய்வர நம் அமைச்சர் கருணை காட்டுகின்றார்.
தற்கொலை
செய்துகொள்ளும் விவசாயிகளுக்கும், பட்டினிச் சாவில் இறந்து போகும்
குழந்தைகளுக்கும், தீண்டாமைக் கொடுமையால் அன்றாடம் சாகும் மனிதர்களுக்கும் கருணை
காட்ட நம் அரசுக்கும், அமைச்சர்களுக்கும், பாவம் நேரமில்லை.
பாவம் நம் மக்கள்
ReplyDeleteNews cycle will kill anything or make anything. but all are short lived. so we are distracted by many things and opponent are not healthy enough to fight back for right thing. they all look for some gain politically , not in people spirit. so we are very pavam.
ReplyDeleteயோகம், தியானம் எல்லாவற்றிலும் வல்லவரான விவேகானந்தர் 39 வயதில் இறந்துபோய் விட்டாரே, எதனால்?
ReplyDeleteயோகா வை அரசே விளம்பரப்படுத்துவதில் ஏதேனும் உள்நோக்கம் இருக்குமென்றே தோன்றுகின்றது.
ReplyDeleteஅன்புள்ள சுபவீ ஐயா,
ReplyDeleteமிக அருமையான பதிப்பு.
32 ஆண்டுகள் என்ன செய்தார்கள்? இப்போது அவர்கள் (Nestle company) யாரும் பணம் கொடுக்க வில்லையா ?
யோகா இப்பொழுதே வணிகமாகிவிட்டது. "யோகா பாய்" (Yoga Mat) கேள்விப்பட்டதில்லையா?
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் மட்டும் அல்ல அரசும் இல்லை என்பது அனைவருக்கும் தெரியாதா ?
Long live good people.
Long live humanities.
Long live Tamil.
அன்புடன்,
விரு
சிந்திக்கத் தூண்டும் கட்டுரை. ஐயாவுக்கு நன்றியும் பாராட்டுகளும்.
ReplyDeleteமாட்டுக்கறியுண்ணும் புலையன் நீ,யார் எதைத் தின்னால்{நூடுல்ஸ்,பீஸ்டா,பாஸ்டா,பஹூதி....)என்ன நஷ்டம் உனக்கு?.நீ தின்னும் மாட்டுக்கறியைவிட ஒண்ணும் இழிவான உணவல்லவே நூடுல்ஸ்!.
ReplyDeleteMr. Veerapandian, what's the correlation between Yoga & longevity. I don't think any one is saying that yoga increases the life span of a person. It just makes one to live a peaceful and harmonious life. For your information Ramana maharishi did not seek medical treatment for his cancer. Please get your facts right before blindly bashing Hindus and Hinduism.
ReplyDeletemaggi noodles mattum udambukku keduthal appo matha noodles ellam udambukku romba nallathu nu eduthukalama???& thangal meendum oru thodar sorpozhivu nadathalamey my request...
ReplyDeleteதிராவிடர்களின் பழைய 'ஓகக் கலைதான்'ஆரியர்களால் திருடப்பட்டு விரிவுபடுத்தி மக்கள் நன்மைக்காக 'யோகா'வாகப் மத்திய அரசாங்கத்தால் பரப்பப்படுகிறது (மத்திய அரசாங்கம் விற்கவில்லை),மாறாக ஆரியர்களின் ?சோம,சுர பானங்கள் திராவிடர்களால் திருடப்பட்டு விரிவுபடுத்தி டாஸ்மார்க் கடைகளில் பலவகைகளாகத் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் மக்களின் நன்மைக்காக?! பரப்பப்பட்டு அரசாங்கமே விற்கிறது!.இதிலிருந்தே யார் எப்பேர் பட்டவர்களென்று புரிந்து கொள்ளலாம்,மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.சுபவீயின்/திராவிடக் கட்சிகளின்/அவர்களின் ஆட்சியில் திராவிடர்களின் மனநிலை/செயல்நிலை 40 வருடங்கள் முன்பு எனது தமிழாசிரியர் சொன்ன ஆடு,ஓட்டைக்குடம்,பண்ணாடை போன்ற உவமைகள் தான் நியாபகம் வருகிறது.(ஆடு»நிலையாக ஒரிடத்தில் முழுமையாக மேயாமல் இங்கும் கொஞ்சம் அங்கும் கொஞ்சம் என அரைகுறையாக மேயும், ஓட்டைக்குடம்»உள்ளே உள்ள அனைத்து நல்ல விஷயங்களையும் வெளியே விட்டுவிடும், பண்ணாடை»நல்ல விஷயங்களை வெளியே விட்டுவிட்டு கெட்ட விஷயங்களை பத்திரமாக உள்ளே வைத்துக் கொள்ளும்.)
ReplyDeleteடாஸ்மாக் கடைகள் மட்டும்தான் கண்ணுக்குத் தெரிகிறது போலும். மதுவும் மாமிசமும் உலகம் முழுவதும் நிறைந்தேதான் இருக்கிறது.
Deleteஆரியம் புகுத்திய சாதியம் இந்தியாவைத் தவிர வேறு எங்கு இருக்கிறது?
திராவிட இயக்கத்தாலும், திராவிடக் கட்சிகளாலும் தான் இன்று தமிழன் 'மனிதனாக' வாவது நடத்தப்படுகிறான்.
உச்சாணியில் இருந்தோரை கீழே இறக்கி விட்ட இயக்கம்தானே திராவிட இயக்கம். அதன் எதிர் வினை தான் டாஸ்மாக் வடிவத்தில் தற்போது கருத்தாடியுள்ளது.
வரலாற்றுக்கு வெகு முற்ப்பட்ட காலத்தில் இதர விலங்குகளின் நாக்குகளைப் போல மனிதரின் நாக்கும் பேரளவில் உடற்கூற்றுச் செயலில் [ Physiological ] இயங்கின. பச்சையான இரையை மெல்ல நாக்கு புரட்டிக் கொடுத்தது. செரிமானத்திற்கு உரிய உமிழ் நீரை வழங்கியது. வேட்டைக்கு உதவும் சீழ்க்கை ஒலி எழுப்பியது. " மடி வாய் எயினர் " , " மடிவாய்த் துடியர் " என்று சங்கப் பாடல்களிலும் இதற்க்கு சான்றுண்டு. நெருப்பின் பயன் மனித வசப்பட்ட பின் நாக்கிற்கு சற்று ஓய்வு கிட்டியது. சமைத்த உணவு பச்சை உணவை விட மேம்பட்டதானது.
ReplyDeleteகால்நடை வளர்ப்பும் வேளாண்மையும் ஓங்கிய காலத்தில் நா, சொல், உணவு, குடி போன்றவற்றின் மீது நன்மை x தீமை மதிப்பீடுகள் ஏற்றப்பட்டன. இவையே ஒழுக்க விதிகளாகவும் அறமாகவும் போற்றப்பட்டன. இந்த ஒழுக்க விதிகளின் அடிப்படையில் முந்தைய கலாச்சாரங்களின் உணவும் பேச்சும் தீமையானவையாக கண்டிக்கப்பட்டன.
சங்க கால வேடரின் வேட்டைத் தொழில் புலவர் மரபால் " உயிர் கொலை " என்றும், இறைச்சி உணவு இழிந்தது என்றும் சொல்லப்பட்டது. " எயினரே இழிந்தவர் " என்றும் " அறம் சாரா மறவர் " என்றும் பழிக்கப்பட்டனர். அவர்களது பேச்சு " கல்லா மொழி " என்றும் தீமையோடும் இணைக்கப் பட்டன.
புலாலும் கள்ளும் முந்தைய கலாச்சாரத்தில் இயற்கையாக கிடைத்த உணவு. சங்க கால முடிவில் அவை இழிந்த " வல்சி " உணவாக பழித்து ஒதுக்கப்பட்டன.
உடைமை நாகரிகத்திற்கு எல்லாவற்றிலும் ஏற்றத் தாழ்வு அவசியமாகிறது. சங்க காலத்தில் திணைநிலைக் குடிகளின் இறைச்சி உணவு, மீன் உணவு, நறவு என்ற குடி, களவு வாழ்வின் சுதந்திரக் காதல் போன்ற அனைத்தும் வைதீகம் சமணம் மேலோங்கிய வேந்தர் கால உடைமை சமூகத்தில் எதிர்மறைக் குறியீட்டு மதிப்பை பெற்றன. சான்றை பரிபாடலில் காணலாம்.
உண்ணுதல், குடித்தல் , கலவி போன்றவற்றின் பௌதீக செயல்பாடுகள் கொச்சையாக கருதப்பட்ட யதார்த்தத்தில் இருந்து துண்டிக்கப்பட்டன. கரடு முரடான யதார்தத்தில் இருந்து அவை கழட்டி விடப்பட்ட பின் , உடைமை சமூகத்தின் அற மதிப்பீட்டின் படி மீள் பொருள்கோடலுக்கு உள்ளாயின.
அதன்படி, இறைச்சி உணவு x மரக்கறி உணவு , களவுக் காமம் x கற்புடைக் கலவி போன்ற இருமை எதிரினைகள் உருவாக்கப்பட்டன.
மரக்கறி உணவு உயர்ந்தது. அதை உண்ணும் மக்கள் உயர்ந்தவர். இறைச்சி உணவு தாழ்ந்தது. அதை உண்ணும் மக்கள் தாழ்ந்தவர். கற்புடைக் கலவியில் இல்லறம் நடத்துவோர் உயர்ந்தவர். களவுக் காமம் செய்பவர் தாழ்ந்தவர்.
இந்த அற மதிப்பு உருவாக்கத்தில் மூன்று செயல்களை காணலாம்
1. கரடு முரடான யதார்த்தத்தில் இருந்து கழட்டி விடல்.
2. ஏறுவரிசைகிரமத்தில் பொருள் கொள்ளுதல்.
3. எதிர்மறை இணைகளாக பாகு படுத்துதல். [ மிஷைல் பக்தின் ]
இவையே மேலெழும் ஆதிக்க சக்திகளின் கலாச்சார கருத்தாயுதங்கள்.
காட்டு மிராண்டித் தனத்தில் இருந்து " மேம்பட்ட " நாகரிகத்தை நோக்கிய ஒரு பயணத்தில் மேற்படியான அழித்தொழிப்பு தவிர்க்க முடியாததாக வலது மற்றும் இடது சாரிகள் நியாயப் படுத்துகின்றனர்.
இந்த " தவிர்க்க " முடியாத வரலாற்று வளர்ச்சியில் ஓரப் பகுதி மக்களும், இயற்க்கை வளங்களும், விளை நிலங்களும் , கனிம வளங்களும் சூறையாடப் பட்டதை எளிதில் நியாயப் படுத்தி விடலாம்.
இந்த " நாகரிக " வளர்ச்சியில் தலித்துகளும் , உடைமையற்ற பெண்களும், சிறுவர்களும் வன் கொடுமைக்கு உட்படுவது பெரிதாக யாரையும் உறுத்துவதில்லை. அவை வெறும் அன்றாட செய்திகளாக கேட்கப்பட்டு மறக்கப் படுகின்றன.
தகவல்: அறமும் ஆற்றலும்: பேராசிரியர் ராஜ் கௌதமன்