தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday 10 July 2015

சாதி வாரி கணக்கெடுப்பு எடுப்பதால் என்ன பலன்?

07-07-2015 அன்று இமயம் தொலைக்காட்சி விவாத அரங்கம் நிகழ்ச்சியில் "சாதி வாரி கணக்கெடுப்பு எடுப்பதால் என்ன பலன்?" பற்றிய விவாதத்தில் சுபவீ

5 comments:

  1. கணேஷ்வேல்10 July 2015 at 18:29

    சாதியில்லா சமூகம் அமைப்பதற்கு, சுபவீ அய்யா முன்வைக்கும் தீர்வு நிச்சயமாக நடைமுறைப் படுத்தக்கூடியதே !

    5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு ஒதுக்குவதன் மூலம் சாதி ஒழிப்பிற்கு முன்னுரை எழுதலாம்.

    வருடத்துக்கு 1 விழுக்காட்டை அதிகரிப்பதின் மூலம் , அடுத்த 95 வருடங்களில் 100 விழுக்காட்டை சாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் பெற்று விடுவார்கள்.

    சாதியை இம்மண்ணை விட்டு விரட்ட இது நல்ல வழியாகவே தெரிகிறது.

    நன்றி அய்யா!

    ReplyDelete
  2. ரவிக்குமார்17 July 2015 at 22:53

    இன்றைக்கு தமிழ்நாட்டில் ஆதிக்க சமூகத்தினர் நிலை எப்படியென்றால் தங்களை கீழ் ஜாதியாக மாற்றுங்கள்
    (BC யை MBC ஆகவும்,MBC யை அதற்குக் கீழாகவும்) என்று இடஒதுக்கீட்டிற்காக அரசிடம் கோரிக்கை வைத்து கெஞ்சுவது,ஆனால் உள்ளூருக்குள் போனால் நான் தான் மேல் ஜாதி என்று மீசை முறுக்குவது,நாங்கள் ஆண்ட பரம்பரை என்று புலகாங்கிதப்படுவது,தலித்துகளை அடித்து உதைப்பது,மாதாரிப்பய,நாதாரிப்பய..... என்று கேவலப்படுத்தி இழிவாகப் பேசுவது.என்ன போலியான, கேவலமான,வெட்கக்கேடான சமுதாயம் இந்த தமிழ்ச் சமுதாயம்.தமிழ்ச் சமுதாயத்தின் ஆதிக்க சாதிகளின் மனநிலை,குணாம்சம் இப்படியிருக்கையில் சாதி வாரிக் கணக்கெடுப்பு எடுப்பதால் அதிகம் மக்கள் தொகை கொண்ட ஆதிக்க/இடைநிலை சாதிகளால் தலித்களுக்கு எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படுமென்பதை உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.

    ReplyDelete
  3. சாதீயம் ஆணிவேரோடு தழைப்பதற்கு அடிப்படை காரணம் ஒவ்வொருவனும் தனக்கு கீழ் இன்னொரு சாதிக்காரன் இருக்கிறான் என்ற எண்ணம் தான் இது ஒழிய கலப்பு மணம் வேண்டும் சாதியை தூக்கி பிடிக்கும் இந்து மதத்தையும் விட்டு வெளியே வர வேண்டும்
    கலப்பு மணம் புரிவோரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவராக இருந்தால் அவருக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கும் திட்டத்தை முன்னெடுத்தால் நலம்

    ReplyDelete
  4. சாதி வாரி கணக்கை வெளியிட்டால் கலகம் வரும் என்ற வாதத்திற்கு நீங்கள் சொன்ன படி எத்தனை சதவீதம் உள்ளார்களோ அதற்கு ஏற்றபடி இட ஒதுக்கீடு அளித்தால் என்ன ? ஏன் கிளர்ச்சி வரப் போகிறது என்ற கூற்றும்
    இவர்கள் சாதி வாரி கணக்கீட்டை தான் ஒளித்து வைக்கீறார்கள் சாதியை ஒழிக்க முயலவில்லை என்ற கருத்தும் உண்மையே

    ReplyDelete