தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday, 8 July 2015

சாதிய வன்மக் கொலைகள் நடப்பதற்கு அடிப்படை காரணம் என்ன ?

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்படப் பேசு  நிகழ்ச்சியில் 04-07-2015 அன்று " சாதிய வன்மக் கொலைகள் நடப்பதற்கு அடிப்படை காரணம் என்ன ?" பற்றிய விவாதத்தில் சுபவீ


9 comments:

 1. கணேஷ்வேல்8 July 2015 at 21:40

  "சாதி வெறியர்களா - சாதி எதிர்ப்பாளர்களா" என போராட்டக்களத்தை சுபவீ அய்யா ஏற்படுத்தியது இன்றைய உடனடி தேவை.

  இதற்கு மேல் சாதி வெறியர்களுக்கு சவுக்கடி கொடுக்க முடியாது.

  "நிகழ்ச்சியிலேயே" சுபவீ அய்யா கொடுத்த இந்த சவுக்கடி சாதி வெறியர்களுக்கு உரைத்திருக்கும் என நம்புகிறேன்.

  அய்யா கூறியது போல், நமக்கு அறிவியல் வளர்ச்சி எதுவும் தேவையில்லை. தேவையெல்லாம் மனிதனை மனிதனாகப் பார்க்கும் சாதாரண அறிவு தான் .

  ReplyDelete
 2. காளிங்கராயன்10 July 2015 at 01:11

  அய்யா 2016 தேர்தலில் நீங்கள் சார்ந்த கட்சி வெற்றிபெறவேண்டும் என்ற உள்நோக்கத்தோடு ஜாதிகளைத் தூண்டிவிடாதீர்கள்!அது தமிழ் நாட்டில் கடுமையான பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். உங்களைப் போன்றோர்களால் அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ் நாடு (ஜாதிக்)கலவர பூமியாகும்.நீங்கள் என்ன தோட்டீச்சி,குறத்தியையா உங்கள் மகன்களுக்குக் கட்டிக் கொடுத்திர்கள்?.பிறகு ஊருக்கென்ன உபதேசம்?. அப்படியே காதலித்தே ஆகவேண்டுமென்றால் ஜாதிக்குள் காதலித்து விட்டு போகட்டுமே தமிழகம் அமைதிப் பூங்காவாக தொடருமே,உங்களைப் போன்றோர்களுக்கும் கேவல (அரசியல்)பிழைப்பிற்கு வாய்ப்பில்லாமல் போகுமே.இந்த அவலங்கள் ஒழிய ஜாதிக்கு வெளியில் திருமணம் செய்யக்கூடாது என்று சட்டமியற்ற வேண்டும்.அதுவரை அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும்.அப்போது தான் இங்கு ஒவ்வொரு சமுதாயத்தின் தன்மானம்,சுயமரியாதை காப்பாற்றப்படும்.மேலும் தற்கொலைகளை படுகொலையென்று பிரச்சாரம் செய்வது தற்போது பேஷன் ஆகிவிட்டது!அதுவும் 2016 தேர்தலுக்காகதான், கேவல(அரசியல்)பிழைப்பு.

  ReplyDelete
  Replies
  1. கணேஷ்வேல்10 July 2015 at 16:00

   தோட்டீச்சி, குறத்தி யெல்லாம் நண்பருக்கு மனிதர்களாகவே தெரியவில்லை போலும் !

   சொந்த சாதிக்குள் எப்படிக் காதலிப்பது? அனைவரும் சாதிப் பெயரை நெற்றியில் பச்சை குத்திக் கொண்டா திரிகிறார்கள்?

   எங்கே இருக்கிறது சாதி?

   ரத்தத்திலா அல்லது சதையிலா ?

   அது இருப்பது சாதிச் சான்றிதழில் மட்டும் தான்!!!

   சாதி வெறியர்களின் சாதிப்பற்று, மருத்துமனையில் ரத்தம் தேவைப்படும் போது மட்டும் எங்கோ சென்று மறைந்து கொள்கிறது. எவனாவது, எனக்கு இந்த சாதி ரத்தம்தான் வேனும்னு கேட்ருக்கானா இந்த நாட்டுல?

   Delete
  2. கிருஷ்ணசாமி11 July 2015 at 17:24

   அய்யா உங்கள் வாதம் 100%உண்மையானது. உங்கள் வாதத்தை ஆழமாக ஆராய்ந்தாலும் (உங்களைப் போல நுனிப்புல் மேயாமல்)ஒரு உண்மை புலப்படும்!.இரத்தத்திலும் 4 பிரிவுகள்தான் உள்ளது.அவை ஒன்றோடு ஒன்று ஒருபோதும் சேராது,மீறி சேர்த்தால் சங்குதான்/சாவுதான்(அறிவியல்/உயிரியல் அறிவை வளர்த்துக் கொள்ளவும்) ஏற்படும். இயற்கை உணர்த்தும் இந்த உண்மையை புரிந்து கொண்டு ஒவ்வொருவரும் வாழ்ந்தால் இந்த சம்பவங்கள் நடந்திருக்க 100%வாய்ப்பே இல்லை என அடித்துக் கூறலாம்.இங்கு இளைஞர்கள் வாழ வகை தெரிந்து கொள்ள வேண்டும்.அவரவருக்கு விதிக்கப்பட்டதை இன்றைய இளைஞர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.அப்படி புத்திசாலித்தனமாக இன்றைய இளைஞர்கள் வாழ்ந்து இங்கு இதைப் போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.அதை பார்த்துக்கொள்வது,நடைமுறைப்படுத்துவது நம் அனைத்து சமுதாயத்தினரின் தலையாய கடமையாகும்.

   Delete
  3. கணேஷ்வேல்14 July 2015 at 16:01

   அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ளாமல் அறிவியல் அறிவை வளர்த்துக்கொண்டு என்ன பயன் நண்பரே?

   ரத்தப் பிரிவுகளை சாதியோடு ஒப்பிடுவதிலிருந்தே தங்களுடைய "அறிவியல்" அறிவு நன்கு புலப்படுகிறது.

   "அவரவர்க்கு விதிக்கப்பட்டது" என்றால் அணைவரும் அம்மணமாகத்தான் திரிய வேண்டும், பிறக்கும் போது உடையுடனா குழந்தை பிறக்கிறது?

   பிறக்கும் போது "விதிக்கப்பட்டது" எப்படியோ அப்படியே வாழ்நாள் முழுவதும் நிர்வாணமாக திரியலாமே?

   குறுகிய வட்டத்தை விட்டு வெளியெ வாருங்கள் முதலில், உலகம் மிகப் பெரியது. "சாதி" என்றால் என்ன என்று கூடத் தெரியாத மக்கள் தொகை உலகில் 800 கோடிக்கும் மேல்.

   800 கோடி பேருக்கு விதிக்கப்படாததை வெறும் 100 கோடி பேருக்கு யாரய்யா விதித்தது? இதிலிருந்தே தெரியவில்லை "சாதி" ஒரு மாயச் சுவர் என்று.

   ரொம்ப எளிமையாக கூற வேண்டுமானால், ஒரு இயற்கை பேரழிவு வந்து நாட்டிலுள்ள பேப்பர் முழுவதும் அழிந்து விட்டால், அப்போ தெரியும் எவனெவனுக்கு என்னதான் விதிக்கப்பட்டுள்ளது என்று.

   அப்போ சொல்லுங்கடா எவன் என்ன சாதின்னு பார்ப்போம். அப்போ ஒவ்வொறுத்தனும் எதக் காட்றான்னு பார்ப்போம் என்னா 'விதிக்கப்பட்ருக்குன்னு' அரசாங்கத்துக்கு கணக்கு காட்ட.

   நான் முதலில் கேட்ட கேள்விதான் மீண்டும் வரும்.

   எங்கே இருக்கிறது சாதி? 

   ரத்தத்திலா அல்லது சதையிலா ?

   அது இருப்பது சாதிச் சான்றிதழில் மட்டும் தான்!!! 

   Delete
  4. கிருஷ்ணசாமி17 July 2015 at 01:34

   யாரும் உங்களை அம்மணமாக இருக்கச் சொல்லவில்லை,வேண்டுமென்றால் ஜீன்ஸ் பேண்ட்டு&கூலிங்கிளாஸ் அணித்து அசத்துங்கள்,(உங்கள் சாதி) பெண்களை மயக்குங்கள்,காதலியுங்கள் யார் வேண்டமென்று கூறப்போகிறார்கள்!.நல்ல சாதி என்ற சொல்ல மனிதனுக்கு மட்டும் உரியதன்று,மாட்டில் இல்லையா நல்ல சாதி மாடு என்ற பிரிவு,நாயில் இல்லையா நல்ல சாதி நாய் என்ற பிரிவு(நீங்களென்ன தெரு நாயையா வீட்டில் வளர்க்கிறிர்கள்?).என்னமோ ஒண்ணும் தெரியாதது போல மனிதனிடம் மட்டும் தான் சாதி இருப்பது போல பாசாங்கு செய்து விவாதம் செய்து நேரத்தை வீணடிக்காதிர்கள்.20வருடங்கள் சிராட்டி வளர்த்த பெண்ணின் தாய்,தகப்பனுக்கு தான் தெரியும் அந்த வலி(எவனோ ஒரு போக்கத்தபய ஜீன்ஸ் பேண்ட்டு&கூலிங்கிளாஸ் அணித்து வந்து அவர்களின் விவரமறியா பெண்ணை மயக்கி களவாட நினைக்கும் ஈனச்செயலைச் சொல்கிறேன்).நான் வாழ்வதை பற்றி, நிம்மதியாக வாழ்வதை பற்றி யோசிக்கிறேன், நீங்கள் இயற்கை பேரழிவு வந்து நாட்டிலுள்ளவர்கள் அழிவதைப் பற்றி,சாவதைப்பற்றி யோசிக்கிறிர்கள்.அப்படி நடந்தால் கல்லும், மண்ணும் தான் மிஞ்சும், நானும் நீங்களும் இருக்க மாட்டோம் இதைப்பற்றிப் பேச!.சாதிச் சான்றிதழ் வருவதற்கு ஆயிரம் வருடங்கள் முன்பே இருப்பது சாதி,ஆனால் சாதிகளை இறுகச் செய்தது,சாதிகளை வைத்து அரசியல் பிழைப்பு செய்ய வைத்தது இந்த சாதிச் சான்றிதழ் என்று வேண்டுமானால் கூறுங்கள், அது நியாயமான வாதம்.

   Delete
  5. கணேஷ்வேல்17 July 2015 at 15:43

   நாய்களுக்கும், மாடுகளுக்கும் கூட சாதியை புகுத்தியது மனிதர்களே தவிர அந்த நாய்களோ மாடுகளோ அல்ல நண்பரே !!!

   நாய் மாடு மட்டுமல்ல, கண்ணில் பட்ட அனைத்திலும் ஏற்றத்தாழ்வு பார்ப்பது இந்த பாழாய்ப் போன மனிதன்தான், அதற்கு நாயும் மாடும் என்ன செய்ய முடியும் நண்பரே !!!

   சொந்த சாதிக்குள் எப்படிக் காதலிப்பது என சொல்லவே இல்லையே தாங்கள் இன்னும்! அனைவரும் சாதிப் பெயரை நெற்றியில் பச்சை குத்திக் கொண்டா திரிகிறார்கள்? 

   800 கோடி பேருக்கு என்னவென்றே தெரியாத சாதியை வெறும் 100 கோடி பேருக்கு யாரால், எதனால் புகுத்தப்பட்டது எனவும் பேச மறுக்கிறீர்களே!

   சாதியம் மனிதநேயத்துக்கே எதிரானது எனப் புரிந்துகொள்ளமுடியாதபடி இங்குள்ள மக்களை இரண்டாயிரம் ஆண்டு சாதி பாடாய்ப்படுத்துகிறது என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது !!!

   Delete
 3. நீங்கள் சொன்னது உண்மையே காதல் செய்யும் இருவரில் ஆண் தலித் சமூகத்தை சார்ந்தவராக இருந்தால் வன் கொலைகள் நடக்கின்றன ஆனால் பெண் தாழ்த்தப்பட்ட சாதியாக இருந்தால் அவள் உயர் சாதி ஆணால் கைவிட படுகிறால் இதிலிருந்தே தெரிகிறது தமிழகத்தில் சாதி வெறியும் பெண் அடிமைத்தனமும் தலைவிரித்து ஆடுகிறது
  சாதி திமிரோடு பணத் திமிரும் இணையும் போது ஏற்படும் விளைவு நாகரிக சமூதாயத்திற்கு மிகவும் கேடு பயக்கிறது. எனவே முற்போக்கு வாதிகள் அனைவரும் இணைந்து சாதி திமிர் ஒழிய போராட வேண்டும்

  ReplyDelete