நாம் எளிமையைப்
பாராட்டுகின்றோம். எளிமையாய் இருக்க
வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஆனால், மிக எளிமையாய், மக்களோடு மக்களாய்
வாழும் தலைவர்களுக்குத் தேர்தலில் வாக்களிக்கிறோம் என்று சொல்ல முடியவில்லை.
வன்முறை கூடாது என்கிறோம். வன்முறையை வெறுக்கிறோம். ஆனால் ஒரு தலைவர் கைது
செய்யப்பட்ட பின், அங்கு வன்முறை ஏதும்
நிகழவில்லை என்றால், அந்தத் தலைவருக்குச் செல்வாக்கே இல்லை என்று முடிவெடுத்து
விடுகிறோம். லஞ்சம் வாங்குவது குற்றம் என்கிறோம். லஞ்சம் வாங்குவது அவமானம் என்று
பேசுகிறோம். . ஆனால் லஞ்சம்
கொடுக்காமல் இனி யாராலும் வாழமுடியாது என்பது உண்மைதான் என்கிறோம்.
இந்த
முரண்களுக்கிடையில்தான் தீமைகள் செழித்து வளர்கின்றன.தீமையும்,தீயவர்களும்
வளர்வதற்கு அவர்கள் மட்டும் காரணமில்லை. மக்களாகிய நாமும் ஒரு விதத்தில்
காரணமாகத்தான் இருக்கிறோம்.
உண்மைதான் ஐயா
ReplyDeleteNapolean kooriyathaga engeyo padicha nyabagam aiya.. "The world suffers a lot. Not because the violence of bad people. But because of the silence of the good people".
ReplyDelete