உங்கள்
கருத்துக்களில் பெரும்பாலும் ஏற்புடைய எனக்கு இந்த மொழி எதிர்ப்பு போன்ற
கொள்கைகளில் மட்டும் மாற்று கருத்து உண்டு. ஆதிக்கம் செலுத்திய பார்ப்பணர்களை
வெறுத்ததில் நியாயம் இருக்கலாம். அவர்கள் உபயோகப்படுத்தியதாலேயே ஒரு மொழியை
வெறுக்கும் போக்கை என்னால் விளங்கி கொள்ள முடியவில்லை. இதுநாள் வரை ஜெர்மன் மொழி
பயின்ற பிள்ளைகள் இனி சமஸ்கிருதம் படிப்பதால் என்ன இழப்பு நேரிட வாய்ப்புள்ளது
என்றும் விளங்கவில்லை. நடப்பு ஆண்டில் இந்த மொழி திணிப்பு நிகழாமல் அடுத்த ஆண்டு
முதல் தொடங்கி இருந்தாலும் அதை திராவிட இயக்கத்தை சார்ந்தவர்கள் ஏற்று கொள்ள
போவதில்லை. பெரும்பான்மையான இந்திய மொழிகளில் சமஸ்கிருத கலப்பு இருப்பதால் வேற்று
இந்திய மொழிகளை கற்பதற்கு இது ஏதுவாக இருக்க வாய்ப்பு உள்ளது. சமஸ்கிருதம் குறைவான
மக்கள் தொகையினரால் பின்பற்ற படுவதால் எதிர்ப்பதாக கூறும் நீங்கள் பெரும்பான்மை மக்கள்
பேசும் ஹிந்தியையும் எதிர்ப்பதற்கு பின்னால் இருக்கும் அரசியல் இலாபத்தை தாண்டிய
உண்மையை விளக்கினால் என்போன்றோர் பயன்பெற எதுவாக இருக்கும்." - அபிலாஷ்
விடை: எந்த மொழியின் மீதும் நமக்கு
வெறுப்பில்லை. இருக்க வேண்டியதுமில்லை. சில வேளைகளில் நம் மீது ஆதிக்கம் செலுத்த
முயலும் நாடு, இனம். மொழி, தனி மனிதர் என யாராக இருந்தாலும் அவர்கள் மீது அல்லது
அதன் மீது எதிர்ப்பும், சினமும் எழுவது இயற்கைதானே. அந்த வகையில் இந்தி,
சமற்கிருதம் ஆகிய மொழிகள் மீது நமக்கு ஏற்பட்ட கோபமே அது.
சமகிருதம் என்பது
ஒரு மொழி மட்டுமன்று. அது ஒரு பண்பாட்டு வல்லாண்மை. அம்மொழியில் உள்ள வேதங்கள்,
இதிகாசங்கள், புராணங்கள் அனைத்தும் அவர்கள் மொழி, பண்பாட்டை உயர்வாகவும், தமிழ்
உள்ளிட்ட பிற மொழிகள் அனைத்தும் நீச மொழிகள்என்றும், பிற பண்பாடுகள் யாவும் இழிவானவை
என்றும் கூறும்போது யார்
அதனை ஏற்பார்கள்? பிராகிருதம், சமற்கிருதம், இந்தி ஆகிய அனைத்து மொழிகளும் ஒரே
குடும்பத்தைச் சார்ந்தவை. அதனால் நம் எதிர்ப்பும் இந்தி வரை நீள்கிறது.
மேலும் உலகப்
பயன்பாட்டின் அடிப்படையிலும் சமற்கிருதம் உதவியாய் இருக்காது.இந்தி மொழி
இந்தியாவிற்கு வெளியே பயன்படாது. சமற்கிருதமோ இந்தியாவிற்குள்ளேயே பயன்படாது.
அவற்றுள் ஒன்றை இரண்டாவது மொழியாகக் கற்றுக் கொள்வதை விட, டொய்ட்ச் மொழி, ஸ்பானிஷ்
மொழி ஆகியனவைகளைக் கற்றுக் கொண்டால் வெளி நாடுகளுக்காவது வேலைக்குச் செல்ல
முடியுமே!
உண்மை ஐயா
ReplyDeleteசரியான விளக்கமான பதில்.
ReplyDeleteதங்களின் இடையறாத பணிகளுக்கு நடுவே என் கேள்விக்கு மதிப்பளித்து பதில் தந்தமைக்கு நன்றி அய்யா. தங்களை போன்ற சிறந்த சிந்தனையாளர்கள் மொழியை வெறும் கருத்து பரிமாற்றும் கருவியாக கொண்டு அது சார்ந்த பிரச்சினைகளுக்கு முக்கியத்துவத்தை குறைத்து அழிக்கப்பட வேண்டிய சாதி, மதம், கடவுள், சுரண்டல் போன்றவைகளுக்கு எதிராக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட அவா.
ReplyDeleteபணிவன்புடன்,
-அபிலாஷ்
மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளம். மொழி அழிந்தால் இனத்தின் அடையாளமும் அழிந்து விடும். எனவேதான் பேராசிரியர் சுப.வீ. அவர்கள் நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரச்சினைகளுடன், மொழிசார்ந்த பிரச்சினைகளுக்கும் முகாமை அளிக்கிறார்.
ReplyDeleteஅருமை பதிவு.
ReplyDelete