தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday 1 September 2015

பகிர்வு - 3

மோடி - ஜெயலலிதா சந்திப்பு குறித்து இளங்கோவன் பேசிய முறை நாகரிகமானதா?
தி. தமிழ்ச்செல்வன் 

விடை : நாகரிகக் குறைவானதுதான். ஆனால் அ.தி.மு.க. நடத்திய எதிர்ப்புப் போராட்டங்கள் அதனை விட நாகரிகக் குறைவானவை..எனினும், மோடி ஜெயலலிதா சந்திப்பு ஒரு மரபு மீறல் என்பதை இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. 

அவர்கள் இருவரும் அரசு முறையில் சந்தித்திருந்தால், அரசு அதிகாரிகளை உடன் வைத்திருக்க வேண்டும். கட்சித் தலைவர்களாகச் சந்தித்திருந்தால், கட்சிப் பொறுப்பாளர்களை உடன் வைத்திருக்க வேண்டும். இரண்டும் இல்லை, அது நட்பு அடிப்படையிலான சந்திப்பு என்கின்றனர். அப்படியானால், நட்பு முறையிலான சந்திப்பில், கோரிக்கை மனு கொடுக்கும் காட்சி ஏன் இடையில் வந்தது? நண்பர்கள் சந்திக்கும்போது, கோரிக்கை மனு கொடுப்பார்களா என்ன?


No comments:

Post a Comment