தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday 27 September 2015

குமுதத்தின் ஆடை விலகுகிறது



தங்கள் கால்களை ஒட்டிப் பெண்கள் அணியும் 'லெகின்ஸ் ' உடை ஆபாசம் என்று கூறி, அதனை எதிர்க்கப் புறப்பட்ட  'குமுதம்' , அந்த  உடை  அணிந்துள்ள  பெண்களின்  பின்னாலேயே போய், காற்றிலோ, அவர்கள் அமரும்போதோ உடை  விலகும்வரை காத்துக் கிடந்து, அவர்களைப் படம் பிடித்து, 'குமுதம் ரிப்போர்டர்' வார இதழின்   அட்டைப்படத்தில் வெளியிட்டுள்ளது.  இப்படியெல்லாம் படம் போட்டுத்தான் பிழைக்க வேண்டும் என்கிற அளவுக்கு அதன் விற்பனை குறைந்து போயிருக்கிறதா  என்பது  நமக்குத் தெரியவில்லை. ஆனாலும் ஆபாச எதிர்ப்பு எனும் பெயரில், இப்படிப் படங்களை வெளியிடுவது மிகப் பெரிய ஆபாசம், அநாகரிகம், அருவெறுப்பு. எப்படியாவது பிழைப்பு நடத்தினால் போதும் என்று நினைக்கிரவர்களைப் பற்றி, பாரதியார் மிகக் கடுமையாக ஒரு பாட்டில் எழுதியுள்ளார். 'சீச்சீ....' என்று அந்தப் பாட்டின் வரி தொடங்கும்!  




10 comments:

  1. உண்மை ஐயா
    குமுதத்தின் மனதும் தெரிந்துவிட்டது

    ReplyDelete
  2. மாற்றம் அவசியம் - உடைகளிலும். இது ஏன் புரியவில்லை "குமுதம் Reporter" இதழுக்கு.

    எல்லாம் கடைசியில் பணத்திற்குத்தானா? அடடா!!

    ReplyDelete
  3. "குமுதம்" இதழ் செய்தது சரியா தவறா என்பது ஒருபுறம் இருக்கட்டும். இதை எதிர்த்து போராடும் பெண்கள் அமைப்பினருக்கு ஒரு கேள்வி. இதை விட மோசமாக பெண்கள் பற்றி விளம்பரங்கள் குறிப்பாக உள்ளாடைகள் பற்றியும் அழகு சாதனப் பொருள்கள் பற்றியும் நாளிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் நாள் தோறும் வருகின்றனவே. திரைப் படங்களில் பெண்கள் எவ்வாறு காட்டப் படுகின்றனர்? கணவன் மனைவி பற்றிய இல்லற வாழ்வுக்கு உடல் உறவு சார்ந்த மருந்துகள் பற்றிய தொலைகாட்சி விளம்பரங்கள் எந்த நேரமும் ஓடிக் கொண்டே இருக்கின்றதே? இவை பற்றியெல்லாம் அவர்கள் ஏன் கொதித்து எழவில்லை? ஒருவேளை குமுதம் இதனை அட்டையில் போடாமல் உள் பக்கம் போட்டிருந்தால் இந்த அளவு எதிர்ப்பு இருந்திருக்காதோ? பெண்களுக்காவே உள்ள தனிப்பட்ட பெண்கள் இதழ்களில் கூட பெண்களின் கவர்ச்சிப் படங்கள் போடுகின்றனரே. ஒரு தனி அறைக்குள் இருவருக்கிடையே நிகழும் காட்சிகளையும் உரையாடல்களும் பொது வெளிக்குக் கொண்டு வந்து விவாதப் பொருளாகிக் கொண்டு வரும் இக்காலத்தில், மூன்று பெண்கள் பொது இடத்தில் செல்லும் படத்தை போட்டதில் என்ன தவறு? நான் எப்படி வேண்டுமானாலும் உடை உடுத்தி வருவேன். அது என் விருப்பம் சார்ந்தது. ஆனால் அதனை படம் எடுத்துப் போட்டால் எதிர்ப்பேன் என்பது என்ன நியாயம்? உங்கள் வீட்டிலோ அல்லது ஒரு அறையினுள்ளோ நடக்கும் காட்சியை படம் எடுத்தால் அது அத்து மீறல். பொது இடத்தில் உங்கள் செய்கைகளையும் ஆடைகளையும் படம் எடுப்பது எப்படிக் குற்றமாகும்?
    பத்திரிகைகள் தங்கள் வருவாய் பெருக பல உத்திகளைக் கையாளுகின்றனர். வாங்கிப் படிப்போரும் இது போன்ற செய்திகளை ஆர்வமாகப் படிக்கின்றனர். பெண்ணுரிமை என்ற பெயரில் பெண்கள் எப்படி வேண்டுமானாலும் உடை அணியலாம் என்ற நோக்கில் நீச்சல் குளத்துக்கு செல்லும் ஆடையில் தெருவுக்கு வருமளவு சென்று கொண்டிருக்கின்றனர் என்பது கவலைக்குரிய விஷயம். நமக்கு உடல் முழுதும் மறையும் பர்தாவும் வேண்டாம். நீச்சல் உடையும் வேண்டாம். கண்ணியமான உடை போதும்.மேற்கு மாம்பலத்தில் டாஸ்மாக் கடையில் மூன்று கல்லூரிப் பெண்கள் சரக்கு வாங்கி தங்கள் பைகளில் நிரப்பிக் கொண்டு செல்லும் பதிவு 40 வினாடிகள் ஓடுவது முக நூலில் இப்போதும் இருக்கிறது..இதுதான் இன்றைய பெண் விடுதலையா?

    ReplyDelete
    Replies
    1. பெண்கள் டாஸ்மாக்கில் சரக்கு வாங்குவதில் என்ன தவறு? அது ஒரு சட்டப்படி நடக்கும் வியாபாரம்.அந்த பெண்ணும் அரசுக்கு வரி கட்டுகிறார். கண்ணியமான உடை அணிந்த போதும் என்று வேற சொல்கிறீர்கள்.ஒருவேளை அதுதான் உமக்கு பிரச்சனையா?

      Delete
    2. இங்கு பாண்டி என்பவர் கருத்து சுதந்திர மழையில் நனைந்தவாறு தமது வயிற்றில் புரையோடி புளித்து போனதை கீழ்வழி தள்ளாமல் வாய் வழியாக தள்ளி இருக்கிறார். சாக்கடையை சுத்தம் செய்வதாக எண்ணிக்கொண்டு தம்மீதே சாக்கடையை வாரி வாரி இறைத்துக்கொண்டு எமது பனி சாக்கடையை சுத்தம் செய்துகிடப்பதே என்று பிதற்றிதிறிகிறார்.

      அவசரமாக வந்துடுத்து என்று இவர் பொது சாலை ஓரத்தில் உச்சா போவதை யாராவது படம் எடுத்து பத்திரிகையில் போட்டால் இப்படித்தான் "அதில் என்ன தவறு?" என்று கேட்பாருபோலும்.

      இவருடைய குடும்பத்து பெண்களின் படத்தை போடாதவரையில் இவருக்கு ஷேமம்போலும்.

      சுதந்திரம் என்றால் என்ன? அந்த சுதந்திரம் இந்த நாட்டில் ஆண்களுக்குத்தான் பெரும்பாலும் பயன் படுகிறது. அவன் நினைத்தால் வெட்டவெளியில் ஆடை உடுத்தியோ உடுத்தாமலோ உலா வரலாம். ஆனால் அந்த சுதந்திரம் பெண்கள் என்றால் எட்டிக்காயாக இந்த பாண்டிக்கு கசக்கிறதுபோலும்.

      அந்த தாளிகையில் வெளிவந்த தமது படங்களை பார்த்தகணத்தில் அந்த பெண்கள் அந்த சகோதரிகளின் மனது என்னபாடுபட்டு இருக்கும்.

      ஒரு பிரச்சனையை சரியாக புரிந்துகொள்ளவேண்டும் என்றால் அந்த பிரச்சனை யாருக்கு இருக்கிறதோ அவர்களின் பார்வையில் இருந்து பார்த்தால் ஓரளவுக்கு சரியாக புரிந்து கொள்ளமுடியும். நான் இந்த பாண்டி நிலையில் இருந்து பார்த்தால் அவர் அதை அந்த படங்களை கொச்சையான கண்ணோட்டத்தோடுதான் பார்த்திருப்பார் என்று அனுமானிக்க முடிகிறது. அந்த பெண்களை தமது சகோதரிகளாக மகள்களாக உற்றார் உறவினர்களாக அவர் பார்க்காமல் கருத்து துப்பி இருக்கிறார் என்று கருதமுடிகிறது. அரை ஆடைக்கு விளம்பரம் செய்யும் அழகிகளோடு நமது சகோதரிகளை ஒப்பிடும் பாண்டி ஒரு வெறுப்பாண்டி.

      அந்த குமுதத் தாளிகை நடத்துபவன் கலங்கிய குட்டையில் எவ்வளவு மீன்களை பிடிக்கலாம் என்று கணக்கு போடுபவன்போலும். அவனுக்கு தமது தாளிகையை இப்படி நடத்தியாவது விற்று தீர்த்து விடலாம் இந்த வாரத்தை இப்படியாவது ஓட்டிவிடலாம் என்று ஆசைபோலும்.

      பத்திரிகைக்கு சமுக பொறுப்புணர்ச்சி இல்லை என்று கவலைப்படுகிறார்களே அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். அப்படிப்பட்ட பொறுப்பு எப்போது வெளிப்படும்? அந்த தாளிகை சமுக அக்கறை கொண்டவர்களிடம் இருந்து வெளிவரும்போதுதான்.

      கத்தியின் செயல் என்ன? அது வெட்டினால் வெட்டும். அவ்வாறு வெட்டும் கத்தி யாரிடம் உள்ளதோ அவர்களின் எண்ணப்படி தமது வேலைகளை செய்து தரும். அது வெட்டும் போது உயிர் பிழைக்கவும் செய்யலாம் சாகவும் செய்யலாம். அதை போல பாண்டியின் கையில் உள்ள கத்தி சமுக விரோத கத்தியாக உள்ளது. அதையும் பாண்டி தாமரை மலானுக்கு (குமுதம் ரிப்போர்ட்டர்) சாமரம் வீச பயன்படுத்திருக்கிறார்.

      பேரன்புமிக்கத் திராவிடர்களே தன்மானப்புலிகளே அன்புக்குரிய தமிழர்களே கேளுங்கள் சுதந்திரம் என்பது நமது பிறப்புரிமை. அது ஆண் பெண் என்று வேறுபாடு இல்லாமல் இருக்கும் பிறப்புரிமை. அந்த சுதந்திரத்தில் ஒரு பகுதிதான் தம்மை யாரும் தமது அனுமதி இல்லாமல் படம் எடுக்கக்கூடாது என்று எண்ணுகிற அதற்காக போராடுகிற சுதந்திரம். விலை மாதர்களுக்கும் தமது அனுமதி இல்லாமல் தம்மை யாரும் தொடக்கூடாது என்று எண்ணுகின்ற தடுக்கின்ற சுதந்திரம் உள்ளது. சுதந்திரம் அப்பேர்பட்டது. அதை நமது சமுதாயத்தில் நம்மில் பலர் புரிந்துகொள்ளாமல் சுகவாசியாக சுற்றிதிரிகிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு வெகுண்டு ஒடுக்கவேண்டும்.

      Delete
    3. இரா. உமா29 September 2015 at 03:56

      குமுதம் ரிப்போர்ட்டர் உள்ளிட்டக் கலாசார காவலர்களின் 'மிஸ்டர் கிளீன்' மனநிலையை நன்கறிவோம், அதைப் பற்றிப் பேசுவதற்கு முன், திரு பாண்டி, உங்களிடம் சில விளக்கங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ரிப்போர்ட்டர் உள்ளிட்ட உங்களின் பார்வையில், ஆபாசம் என்பதற்கு என்ன வரையறை? இது ஆபாசம், இது ஆபாசம் இல்லை என்று வரையறை செய்வது யார்? எனில், அவர்களுக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தவர் யார் அல்லது கொடுத்தது எது? மது அருந்துவதே கலாச்சார சீர்கேடா அல்லது பெண்கள் மது அருந்துவது கலாச்சார சீர்கேடா? இவற்றிக்குத் தங்களின் விளக்கத்தைத் தெரிந்து கொண்டால், மேற்கொண்டு விவாதிக்க வசதியாக இருக்கும்.


      என்றும் தோழமையுடன,
      இரா. உமா

      Delete
    4. இவ்விவாதத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் முதலில் என் நன்றி. அடுத்தவரைக் காயப்படுத்திவிடாமல் சொற்களைக் கையாளுமாறு ராஜேந்திரன் பஞ்சலிங்கம் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். திரு பாண்டி அவர்களின் பார்வை குறித்து என் கருத்தையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

      1. பெண்களை அவமானப்படுத்தும் சில விளம்பரங்களை எதிர்த்துப் பெண்கள் அமைப்புகள் ஏன் கொதித்து எழவில்லை என்று கேட்டிருக்கிறீர்கள். அந்தப் பொறுப்பு, பெண்கள் அமைப்புகளுக்கு மட்டும்தான் உள்ளதா? ஆண்கள் அது பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லையா?

      2. பொது இடங்களில் படம் எடுத்து வெளியிடுவதில் என்ன தவறு என்பதும் உங்களின் கேள்வி. பொது இடம் என்றாலும் தனிப்பட்ட ஒருவரின் அனுமதி இல்லாமல் படம் எடுப்பது சரியா? மேலும் அந்தப் படங்கள் இயல்பாக எடுக்கப்பட்டவையும் இல்லை. வண்டியில் அமரும்போது உடை விலகுவதைக் காத்திருந்து படம் எடுப்பது கேவலமான செயல் இல்லையா?

      3. மது அருந்துதல் உடல்நலக் கேடு என்றால், அது ஆண் , பெண் இருவருக்கும் பொதுவானதுதானே?

      4. திரு பாண்டி அவர்கள், நேரம் கிடைக்கும்போது, இதே வலைப்பூவில் உள்ள 'மீசை' என்னும் குறும்படத்தைப் பார்க்க வேண்டுகிறேன்.

      நன்றி.

      --
      அன்புடன்
      சுப.வீரபாண்டியன்

      Delete
    5. அய்யா சுபவீ அவர்களுக்கு.. வணக்கம். மீசை படம் பார்த்தேன். பெண்களாலும் அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பரிமளிக்க முடியும் என்பதையே தந்தை பெரியாரின் பெண் விடுதலை சிந்தனை என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்தப் படமும் இன்று மதுக் கடைகளில் பெண்கள் மது வாங்குவதும் கூட பெண் விடுதலை தான் என்ற நிலைக்குக் கொண்டு போவதாக உணர்கிறேன். நல்லதோ கெட்டதோ ஆண்கள் எதையெல்லாம் செய்தார்களோ அதையெல்லாம் பெண்களும் செய்ய வேண்டும் என்பது தான் பெரியார் சொன்ன பெண் விடுதலையா? மதுவும் புகைப்பதும் ஆண்களுக்கு மட்டும் சொந்தமில்லை. பெண்களுக்கும் உரிமை உண்டு என்பது இன்றைய மகளிரின் பெண்ணுரிமைச் சித்தாந்தம் என்றால், இதில் நான் மேற்கொண்டு சொல்ல ஒன்றுமில்லை. இந்த இரண்டையும் எவர் செய்தாலும் தவறுதான். நான் இரண்டையுமே செய்வதில்லை.

      இப்போதைய கால கட்டத்தில் தொழில் நுட்ப வளர்ச்சியால் ஒவ்வொருவர் கையிலும் நவீன கைப்பேசிக் கருவிகள் மூலம் பொது இடங்களில் நடக்கும் காட்சிகள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் விடப்பட்டு உடனுக்குடன் அதன் எதிர் விளைவு உணரப்படுகிறது. அப்படி இருக்கும் சூழலில் பத்திரிக்கையாளர்கள் பற்றிக் கேட்கவே வேண்டாம். நீங்கள் செய்யும் செயல்கள் உங்களுக்குத் தெரியாமல் பதிவு செய்யப்படத்தான் செய்யும். அதனால் பல நல்ல விளைவுகள் கிடைத்திருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது. சம்பந்தப்பட்டவரை பாதித்தால் மட்டும் பெரும் கூப்பாடு எழுப்புவது சரியா? இதில் கூட அந்த மூன்று பெண்களின் முகங்கள் காட்டப்படவில்லை என்று தான் நினைக்கிறேன். இரு மாதங்களுக்கு முன் ஒரு கல்லூரி மாணவி குடிபோதையில் ரகளை செய்து சாலையில் விழுந்து கிடந்த காட்சி ஊடகங்களில் வந்தது. மாணவியிடம் கேட்டா படம் எடுத்தார்கள்?

      நான் ஒன்றும் கலாச்சாரக் காவலாளிகளில் ஒருவன் அன்று. அவர்களை ஆதரிப்பவனும் அல்லன். நீங்கள் விருப்பப்பட்ட வசதியான ஆடை என்று கருதுவதை உடுத்திச் செல்லுகிறீர்கள். அதனை ஒருவன் படம் எடுத்துப் போட்டால் அது பற்றி நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? அதனைத் தூசுக்குச் சமம் என்று ஒதுக்கித் தள்ளி விட்டுச் செல்ல வேண்டியதுதானே.
      அந்தப் படம் உங்களை இழிவு படுத்துகிறது என்று கருதினால் அதனை விட இழிவான படங்களும் செய்திகளும் அன்றாடம் நிகழ்கின்றனவே.

      இந்த விஷயத்தில் பெண்கள் அமைப்புக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் கூடுதல் பொறுப்பு உள்ளது என்பதை நான் ஆதரிக்கிறேன். ஆபாசம் என்பதற்கு எது வரையறை யார் தீர்மானிக்கிறார்கள் என்பதற்கு இன்று நீதிமன்றங்களே கூட தீர்வு சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை. கும்பமேளாவில் உடல் முழுவதும் சாம்பலைப் பூசிக் கொண்டு ஆடையின்றி ஆற்றில் இறங்கும் சாமியார்களுக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. போகிற போக்கில் இதே போல் பெண் சாமியாரிணிகளூம் பெண்ணுரிமை என்று பெயரில் வந்து விடக்கூடுமோ என்று தெரியவில்லை. மேலை நாடுகளில் பெண்கள் எந்தவித ஆடைகள் அணிந்து சென்றாலும் யாரும் அதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. அது அவர்கள் கலாச்சாரம். கல்வி நிலை. அதை இங்கு ஒப்பிடுதல் சரியில்லை என்பது எனது கருத்து. இப்போது விமரிசனத்துக்கு உரிய ஆடைகளை நாம் நம் குடும்பத்தினர் அணிய தடை சொல்ல மாட்டோம் என்று எத்தனை பேர் சொல்வார்கள் என்று தெரியவில்லை.

      இறுதியாக, நான் முகநூலில் வெளியிட்டிருந்த எனது பதிவினை அப்படியே இங்கு பதிவிட்டிருந்தேன். எனது வயது 63. ஒருவேளை 36 ஆக இருந்த காலத்தில் இந்த விமரிசனம் எழுந்திருந்தால் இதே போல் பதிவு செய்திருப்பேனா என்று சொல்ல முடியாது.

      நன்றி..

      Delete
  4. திராவிடர்களே காணுங்கள். இதோ நம் அண்ணன் வழி காட்ட நாமெல்லாம் அவர் வழி ஏற்று விழி திறந்து நடையை மாற்றி வார்த்தை பார்த்து வாதாடல் நலம் என்று அறிந்தோம். அதனால் திருத்து குட்டு ஏற்றோம்.

    நமது சொல்லில் பிழையோ அதை போட்டுவிட்டபோது ஏற்பட்ட தவறோ எதுவோ. சரி ஆனது ஆகிவிட்டது. கனி இருக்க காய் எதற்கு என்றார் அண்ணன். ஆம் கனி இருக்க காய் எதற்கு? ஆம் கனியே போதுமே இனியே அதில் திராவிடர் நலம் உண்டு என்று நம்பி. அதை ஏற்றான் தம்பி.

    நமது தமிழில் இல்லாத களி தரும் வாதங்களா அதில் வரும் கனி தரும் வார்த்தைகளா. வியக்க அதில் என்ன இருக்கு. அதுதானே நமது தமிழ். ஆம் கனி இருக்க காய் எதற்கு? அதை ஏற்றான் தம்பி.

    ஆயிரம் ஆயிரம் கார் மேகங்கள் கூடி கூடி கொட்டிய பின்னரும் தண்ணீருக்கு பஞ்சம் என்றால் அதை களைய இங்கு கனி சொல்மிக்க பதமோ பதம் இருந்தும் நான் போதாது போதாது என்று பொறுக்காமல் போட்ட பதமெல்லாம் பஞ்சத்தில் வந்த பதம்தானோ என்று வியந்தேன். சாக்காக அல்ல. ஆயினும் பதத்துக்கு பஞ்சம்போல பரிதவித்து பங்களித்துவிட்டேன். ஆம் கனி இருக்க காய் எதற்கு? அதை ஏற்றான் தம்பி.

    பாரெல்லாம் பார்க்க பதம் பார்த்து போடு என்றார் அண்ணன். தவித்த தவிப்பில் பதமான பதம் இதுவே அதுவே போதுமே என்று எண்ணித்துனிந்த கருமத்தால் போட்டுவிட்டான் தம்பி. ஆம் கனி இருக்க காய் எதற்கு? அதை ஏற்றான் தம்பி.

    பஞ்சத்தில் வந்து உதவிய லிங்கமாக வந்தார் அண்ணன். கெட்டியாக கட்டிகொண்டான் தம்பி. என் அண்ணன் எமது திராவிடத்தலைவன். பிச்சலிங்கமே, ஏனப்பா உனக்கு பதத்துக்கு பஞ்சமா? நீ என்ன பிச்சலிங்கம் ராஜேந்திரனா இல்லை பஞ்சலிங்கம் ராஜேந்திரனா என்று கேட்டாரே அண்ணன். ஆம் பதமோ பதம் இருந்தும் அதிலிருந்து தமிழ் அன்னையிடமிருந்து பிச்சை பெற்று போடாமல் பதத்துக்கு பஞ்சம்போல பதம் போட்டேன் அதனால் அண்ணனின் அழைப்பில் அவரின் குறிப்பில் பொசுக்கென்று போட்ட குட்டில் "பிச்ச - லிங்கம்" ராஜேந்திரன் ஆகிய நான் ராஜேந்திரன் "பஞ்ச - லிங்கம் " ஆனேன். இம், என்ன சிரிப்பு வேண்டி இருக்கிறது! அவையோரே கேளுங்கள். உங்களுக்கு ஏன் கவலை. அவர் என்னைத்தானே சொன்னார். குழப்பம் வேண்டாம் பதட்டப்படாதீர்கள் அதை என் அண்ணன் அறிவார். அவர் பொறுப்பில் அது அப்படியே மாறும்.

    ஆயினும் இவ்வளவு பேசினும் பேரன்புமிக்க திராவிடர்களே தன்மானப் புலிகளே அன்புக்குரிய தமிழர்களே கேளுங்கள் திரு. பாண்டி அவர்களின் கருத்து ஒவ்வாமை தரும் நிலை கண்டதால் அதை ஒப்புக்குக்கூட ஏற்காமல் கடிந்துகொண்டோம். ஆயினும் அண்ணனின் திருத்து குட்டு பெற்றோம். ஆம் கனி இருக்க காய் எதற்கு? அதை ஏற்றான் தம்பி.

    ReplyDelete
  5. திரு பிச்சலிங்கம் ராஜேந்திரன் அவர்களின் பெயரைத் தவறாகக் குறிப்பிட்டமைக்கு வருந்துகிறேன். என் அன்பு வேண்டுகோளை ஏ ற்றமைக்காக அவருக்கு நன்றி கூறுகின்றேன்.

    திரு பாண்டி அவர்கள் 'மீசை' குறும்படம் தரும் செய்தியைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளதாகவே கருதுகிறேன். பெண்களும், ஆண்களைப் போலவே குடிப்பதும், புகைப்பதும்தான் பெண் விடுதலை என்று அப்படம் கூறவில்லை. இருபாலினரும், அவ்விரு பழக்கங்களிலிருந்தும் விடுபட வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமும் ஆகும். ஆனால் ஆண்கள் குடிக்கும்போதும், புகைக்கும்போதும் அவற்றை உடல்நலக் கேடாக மட்டுமே பார்க்கும் சமூகம், பெண்கள் என்றால் உடனே அவற்றை ஒழுக்கக் கேடாகப் பார்ப்பது ஏன் என்பதுதான், அப்படம் எழுப்பும் வினா.

    ReplyDelete